ஸ்ரீ ந்ருஸிம்ஹம் –பாகம் 5
நாராயண வல்லியில் ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரம்
தைத்திரீய உபநிஷத்தில் நாராயண வல்லியில் உள்ள ந்ருஸிம்ஹ மந்த்ரமாவது
இதுவே என்று ஆசார்ய புருஷர்கள் அறுதியிட்டுக் கூறி இருக்கிறார்கள்
ஸத்யோஜாதம் ப்ரபத்யாமி
ஸத்யோ ஜாதாய வை நம :
பவே பவே நாதிபவே பஜஸ்வமாம் பவோத்பவாய நம :
வாமதேவாய
நமோ ஜ்யேஷ்டாய
நமோ ருத்ராய
நம :காலாய
நம :கலவிகரணாய
நமோ பலவிகரணாய
நமோ பலாய
நமோ பலப்ரமதனாய
நமஸ் ஸர்வ பூத தமனாய
நமோ மனோன்மனாய நம :
அகோரேப்யோ
அதகோரேப்யோ
கோரகோர தரேப்யஸ் ஸர்வதஸ் ஸர்வ ஸர்வேப்யோ
நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய :
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீயோபநிஷத்தில் ,ந்ருஸிம்ஹனைப் பற்றியதானப்
பல மந்த்ரங்கள் உள்ளன.
மந்த்ரரத்ன மஹோததி , மந்த்ர ரத்னாகரம் —இவையெல்லாம் மந்த்ர சாஸ்த்ர
பொக்கிஷங்கள் —இவைகளில் ந்ருஸிம்ஹனைப் பற்றிய மந்த்ரங்களைக்
குறிக்கும் குறிப்புகளே அதிகமாக உள்ளன என்று யாகம், ஹோமம்
இவைகளைச் செய்யும் /செய்துவைக்கும் மஹான்கள் அக்காலத்தில் கூறுவர்
ஸ்வாமி தேசிகன் தன்னுடைய சரணாகதி கத்ய பாஷ்யத்தில், ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
77 வகைத் திருவுருவங்களாக ஸேவை ஸாதிப்பதாகச் சொல்கிறார். இந்த விவரங்கள்,
ஆகமங்களிலும், சிற்ப சாஸ்த்ரங்களிலும் மந்த்ர சாஸ்த்ரங்களிலும், த்யான
ச்லோகங்களிலும் தெரிவித்தவாறு இந்த 77 பிரிவுகளையும் அறியவேண்டும்
என்று ஸ்ரீ உ.வே. பையம்பாடி சேட்லூர் ஸ்ரீவத்ஸாங்காசார்யர் அருள்கிறார்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹனுக்கு 2 திருக்கைகள் முதல் அறுபத்து நான்கு திருக்கைகள்
வரையிலும் ஸேவை ஆகின்றன என்றும் சொல்வர்.
ந்ருஸிம்ஹம் —என்றால்–நவ ந்ருஸிம்ஹர்கள் எழுந்தருளி உள்ள ஸ்ரீ அஹோபில
க்ஷேத்ரம் மிக மிக முக்யத்வம் பெறுகிறது—
108 திவ்ய தேசங்களில், வடநாட்டு திவ்யதேசங்களில் பெருமை பெற்ற திவ்ய தேசம்
அஹோபிலம்—- சிங்கத்தின் குகை– 9 சிங்கங்களின் குகை
ஒன்பது ந்ருஸிம்ஹ மூர்த்திகள் —-
அஹோபில ந்ருஸிம்ஹன்
வராஹ ந்ருஸிம்ஹன்
மாலோல ந்ருஸிம்ஹன்
யோகானந்த ந்ருஸிம்ஹன்
பாவன ந்ருஸிம்ஹன்
காரஞ்ச ந்ருஸிம்ஹன்
சக்ரவட ந்ருஸிம்ஹன்
பார்க்கவ ந்ருஸிம்ஹன்
ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ள திவ்யதேசங்கள், ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்கள் என்று
மிகவும் பழைமையான கோவில்களில், நமது முன்னோருக்கும் முன்னோர்கள்
, திவ்யதேச எம்பிரான்கள் தவிர,ஸ்ரீ ந்ருஸிம்ஹனையும்ப்ரதிஷ்டை செய்து இருப்பார்கள்.
யோக ந்ருஸிம்ஹன் , உக்ர ந்ருஸிம்ஹன் , லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் , ந்ருஸிம்ஹனில்
இரு திருக்கரங்கள், 4 ,6 8, 10, 12 என்று பற்பல திருக்கைகளுடன் ,அந்தந்தத் திருக்கைகளில்
அடுத்தடுத்து ஆயுதங்களுடன் ஸேவை ஸாதிப்பார்
ஸ்ரீரங்கம்—மேட்டழகியசிங்கர்
காட்டழகிய சிங்கர்
திருக்கச்சியில் ,திருமலையடியில் ஸ்ரீ ந்ருஸிம்ஹர் ,
கீழத் திருப்பதியில் புஷ்கரணிக் கரையில் மிகவும் பழைமையான ந்ருஸிம்ஹர்
திருக்கோஷ்டியூர், திருமாலிருஞ்சோலை , திருவாலி–திருநகரி , ஆழ்வார் திருநகரி
இங்கெல்லாம் மிகப் ப்ராசீனமான திருக்கோயில்களில், ஸ்ரீ ந்ருஸிம்ஹனை ஸேவிக்கலாம்.
அங்கங்கு ஆகம விதிப்படி , மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ள ஸ்ரீ ந்ருஸிம்ஹனுக்குப்
பின்புறம் கிழக்கு நோக்கிஸ்ரீ சுதர்ஸநரையும் பிரதிஷ்டை செய்து இருப்பர்
ந்ருஸிம்ஹ த்யானத்தில், முதலில் ந்ருஸிம்ஹனையும் , அவருக்குக் கீழே
ஸ்ரீ வராஹனின் தெற்றுப்பல்லின் ஒளிப்பிழம்பால் ந்ருஸிம்ஹனின் அட்டகாசச் சிரிப்பையும்
த்யாநிக்கவேண்டும் என்று ஸ்ரீ ஸுதர்சன சதகம் சொல்கிறது
ந்ருஸிம்ஹனின் அளவிலடங்காப் பெருமைகள், ப்ரபஞ்சஸாரத்தில் மிகவும் விளக்கமாகச்
சொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீ உ. வே.ஸ்ரீவத்ஸாங்காச்சார்யர் அருள்வார்.
அடியேனுடைய சிறு வயதில், பரமைகாந்திகள், மிகவும் வைதீகர்கள், ஆஹ்நிகப்படி
அநுஷ்டானம் செய்து, ஊர்த்வபுண்டரம் தரிக்கும்போது, தீர்த்த பாத்ரத்திலிருந்து
உத்தரிணியால் தீர்த்தம் எடுத்து, இடது உள்ளங்கையில் சேர்த்து ,உள்ளங்கையை
பவித்ரமாக்கி (சுத்தப்படுத்தி) ”உத்த்ருதாஸி வராஹேண க்ருஷ்ணேந சதபாஹுநா ”
என்று சொல்லி, திருமண் கட்டியைக் கையில் எடுத்து, “பூமிர் தேநுர்தரணீ லோகதாரிணீ ” என்றும்
“ப்ரதிஷ்டிதம் ” என்றும் மனத்துக்குள் சொல்லி, உடனே ப்ரணவத்தையும் சொல்லி,
திருமண் கட்டியை இடது உள்ளங்கையில் வைத்து, வலது கையால் தீர்த்தபாத்ரத்திளிருந்து
உத்தரணியால் தீர்த்தம் எடுத்து, திருமண்கட்டியில் சேர்த்து,
”கந்தத் த்வாராம் ——–ச்ரியம் ” வரை சொல்லி, திருமண்ணைக் குழைத்து,பிறகு ரக்ஷை செய்து,
ப்ரணவத்தைஉச்சரித்து, திருமண்ணைத் திரட்டி ,அபிமந்த்ரணம் செய்து, திருமண்ணின் நடுவில்
ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை வலது மோதிர விரலால் எழுதிப் பிறகும் ஒரு மந்தரத்தால்
இன்னும் கொஞ்சம் தீர்த்தம் சேர்த்து ஆள்காட்டி விரலால் மறுபடியும் நன்கு குழைத்து,
பஞ்சோபநிஷத் மந்த்ரங்கள்,அஷ்டாக்ஷரம்,முதலியவற்றால் அபிமந்த்ரணம் செய்து , வலது
மோதிர விரலால் திருமண் இட்டுக்கொள்வர். எந்த ஆபத்தும் .இந்த மஹான்களை நெருங்கியதில்லை ;
அவர்களுக்கு எந்த வியாதியும் வந்ததில்லை ; இடம் ,நேரம் எல்லாவற்றையும் முன்கூட்டியே
மிக அந்தரங்கர்களுக்குச் சொன்னார்கள் , அப்படியேஅநாயாசமாக ஆசார்யன் திருவடி அடைந்தார்கள்,
இப்படியாக, ஸ்ரீ ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தைத் தினமும் அனுசந்தித்து வந்தார்கள்.
என்ன பாக்யம்—-என்ன பாக்யம்—-!
ஸ்ரீ ந்ருஸிம்ஹ த்வாதசநாம ஸ்தோத்ரம்
ந்ருஸிம்ஹனைப் பற்றிய இந்தப் பன்னிரண்டு நாமாக்களைத் தினமும் பக்தியுடன் ஜபித்தால்,
எல்லா ஆபத்துக்களிளிருந்தும்,நிச்சயம் காப்பாற்றுகிறான்
ப்ரதமஸ்து மஹோஜ்வாலோ
த்விதீயஸ் தூக்ரகேஸரீ
த்ருதீய : க்ருஷ்ண பிங்காக்ஷ :
சதுர்த்தஸ்து விதாரண :
பஞ்சாஸ்ய : பஞ்சமைஸ் சைவ
ஷஷ்ட : கஸிபுமர்தந :
ஸப்தமோ தைத்யஹந்தாச
அஷ்டமோ தீநவல்லப :
நவம : ப்ரஹ்லாதவரதோ
தசமோ நந்தஹஸ்தக :
ஏகாதச மஹாரௌத்ரோ
த்வாதஸைதாநி நாமாநி ந்ருஸிம்ஹஸ்ய மஹாத்மந :
——————————————————————————————————-
ஸகலகார்ய ஸித்திக்கு ஸ்ரீலக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாமம்
அரக்கனிடம்( இரணியன் ) பெரும் சீற்றமும் , அடியவனிடம் ( ப்ரஹ்லாதன் ) பெருங்கருணையும்
ஒரே சமயத்தில் வெளிப்படுத்திய அவதாரம். ஸ்ரீ மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹனாக
வீற்றிருக்கும் திருக்கோலம்.
ஸ்ரீ ந்ருஸிம்ஹ புராணத்தில், ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரப் ப்ரகரணத்தில், இந்த ஸஹஸ்ரநாமம்
உள்ளது. இந்த ஸஹஸ்ரநாமத்துக்கு ஏற்றம் என்னவென்றால், ”ஸர்வார்த்த ஸாதனம் ” என்றும்
”திவ்யம் ” என்றும் இரண்டு அடைமொழிகள் உள்ளன.எல்லா வேண்டுதல்களையும் அளிக்கவல்லது
மற்றும் திவ்யமானது— சிறந்தது என்று பொருள். வேறு எந்த ஸஹஸ்ரநாமத்திலும் இந்த ஏற்றம்
சொல்லப்படவில்லை—அதனால், இந்த ஸஹஸ்ரநாமம் மிக உன்னதமானது. தவிரவும் இதைப்
படிக்கும்போதே / சொல்லும்போதே பயமும் பக்தியும் மயிர்க்கூச்சமும் உண்டாகும்—
இது அனுபவ உண்மை.
கடைசி ச்லோகம் —
ஸர்வார்த்த ஸாதனம் திவ்யம் கிம் பூயஸ் ஸ்ரோது மிச்சஸி என்று முடிகிறது—-
அவகாசம் உள்ளவர்கள் தினமும் இந்த ஸஹஸ்ரநாமத்தைப் படிக்கலாம். நேரம் கிடைக்காதவர்கள்,
அவரவர்கள் பிரார்த்தனைக்கு ஏற்ப சில ச்லோகங்களைத் தினமும் சொல்லலாம். (இங்கே உள்ளன)
நோயில்லாமல், ஆரோக்யமாக —–இருக்க-முதல் ச்லோகம்
ஓம் நமோ நாரஸிம்ஹாய வஜ்ரதம்ஷ்ட்ராய வஜ்ரிணே |
வஜ்ரதேஹாய வஜ்ராய நமோ வஜ்ரநகாயச ||
இதைத் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் 10 தடவை சொல்ல வேண்டும்.
———————–
2. அபம்ருத்யு தோஷம் போவதற்கு—-20வது ச்லோகம்
காலாந்தகாய கல்பாய கலநாய க்ருதே நம : |
காலசக்ராய சக்ராய வஷட்சக்ராய சக்ரிணே ||
தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பத்து தரமாவது சொல்லவும்.
————————
3.பயம் மறைய —-39வது ச்லோகம்
ஸஹஸ்ர பாஹவே துப்யம் ஸஹஸ்ரசரணாய ச |
ஸஹஸ்ரார்க்க ப்ரகாஸாய ஸஹஸ்ராயுத தாரிணே ||
85வது ச்லோகம்
அமீ ஹி த்வா ஸுர ஸங்கா விஸந்தி
கேசித் பீதா : ப்ராஞ்ஜலயோ க்ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா முநயஸ் ஸித்த ஸங்கா :
ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி : புஷ்கலாபி : ||
86வது
ருத்ராதித்யா வஸவோ யே ச ஸாத்யா :
விஸ்வே தேவா மருதஸ்சோஷ்மபாஸ்ச |
கந்தர்வ யக்ஷாஸுர ஸித்த ஸங்கா :
வீக்ஷந்தி த்வாம் விஸ்மிதாஸ் சைவ ஸர்வே ||
87வது
லேலிஹ்யஸே க்ரஸமாநஸ் ஸமந்தாத்
லோகாந் ஸமக்ராந் வதநைர் ஜ்வலத்பி : |
தேஜோபிராபூர்ய ஜகத்ஸமக்ரம்
பாஸஸ் தவோக்ரா : ப்ரதபந்தி விஷ்ணோ ||
இவற்றைக் காலையிலும், மாலையிலும் 10 தடவையாவது சொல்லவேண்டும்
அல்லது ஒரு சிறிய பாத்ரத்தில் சுத்தமான தீர்த்தத்தைச் சேர்த்து இதை மந்திரித்துச்
சாப்பிட விரைவில் பயம் நீங்கும். (விவரங்களுக்கு அடியேனைப் போனில்
4. துஷ்ட க்ரஹ ,பூத, ப்ரேத ,பிசாசங்கள் ஓட —43,44,மற்றும் 45வது ச்லோகங்கள்
சத்ருக்னாய ஹ்யவிக்நாய விக்நகோடி ஹராய ச |
ரக்ஷோக்நாய தமோக்நாய பூதக்நாய நமோ நம : ||
பூதபாலாய பூதாய பூதாவாஸாய பூதிநே |
பூதவேதாள காதாய பூதாதிபதயே நம : ||
பூதக்ரஹ விநாஸாய பூதஸம்யமிதே நம : |
மகாபூதாய ப்ருகவே ஸர்வபூதாத்மநே நம : ||
இந்த ச்லோகங்களை ஒரு மண்டலம் தினமும் காலை மாலையில்10 தடவையாவது
பாராயணம் செய்க
——————————————-
5. ஜ்வரம் ரோகங்கள் ,அபிசாரம் ,சூந்யம் அழிய (48 49 )
ஸர்வைஸ்வர்ய ப்ரதாத்ரே ச ஸர்வ கார்ய விதாயிநே |
ஸர்வஜ்ஞாயா ப்யநந்தாய ஸர்வ ஸக்தி தராய ச ||
ஸர்வாபிசார ஹந்த்ரே ச ஸர்வைஸ்வர்ய விதாயிநே |
பிங்காக்ஷாயைக ஸ்ருங்காய த்விஸ்ருங்காய மரீசயே ||
இந்த ச்லோகங்களைத் தினமும் இரு வேலையும் பத்துத் தடவையாவது
சொல்லிவந்தால், ந்ருஸிம்ஹனின் க்ருபையால் நன்மை ஏற்படும்
—————————–
6.அபஸ்மாரம் ( வலிப்பு நோய் )அகல ( 63 )
அபம்ருத்யு விநாஸாய ஹ்யபஸ்மார விகாதிநே |
அந்நதாயாந்ந ரூபாய ஹ்யந்நாயாந்த புஜே நம : ||
தினமும் காலைவேளையில் 108 தடவை பக்தியுடன் சொல்லி வந்தால்,
ஆறு மாதங்களில் நல்ல குணம் தெரியும்
—————————-
7. கண் வியாதிகள் விலகி, ப்ரகாசம் ஏற்பட (92 முன்பாதியும் 93 முன்பாதியும்)
ஸுஜ்யோதிஸ்வம் பரம்ஜ்யோதி :ஆத்மஜ்யோதி :ஸநாதந : |
ஜ்யோதிர் லோகஸ்வரூபஸ் த்வம் ஜ்யோதிர்ஜ்ஞோ ஜ்யோதிஷாம் பதி : ||
தினமும் பத்து தடவை காலை மாலை சொல்லவேண்டும்.
——————————
8. ஸுகப் ப்ரஸவத்துக்கு —(108 வது ச்லோகம் )
கவயே பத்ம கர்ப்பாய பூதகர்ப்ப க்ருணாநிதே |
ப்ரஹ்மகர்பாய கர்ப்பாய ப்ருஹத் கர்ப்பாய தூர்ஜடே ||
தினமும் காலை வேளையில் 108 முறை சொல்க
———————————
9.பைத்தியம் தெளிய——(140வது ச்லோகம் )
உன்மத்தாய ப்ரமத்தாய நமோ தைத்யாரயேநம : |
ரஸஜ்ஞாய ரஸேஸாய ஹ்யரக்த ரஸநாய ச ||
தினந்தோறும் 10 தடவையாவது சொல்லி வந்தால், ஒரு மண்டலத்தில்
குணம் தெரியும் அல்லது சுத்த தீர்த்தத்தில் ஜபித்தும் சாப்பிடலாம்
( விவரங்களுக்கு அடியேனைப் போனில் கேட்கலாம் )
————————-
10. விஷ ஜந்துக்கள் விலகி ஓட ( 127 வது ச்லோகம் )
நாக கேயூரஹாராய நாகேந்த்ராயாக மர்திநே |
நதீவாஸாய நக்நாய நாநாரூபதராய ச ||
விஷ ஜந்துக்கள் இருக்குமிடத்தில் இந்த ச்லோகத்தைச் சொல்லிக்கொண்டே
கைகளைத் தட்டினால், அவை விலகி ஓடிவிடும் ( அடியேன் அநுபவ உண்மை )
11. விவாஹம் ,தடையின்றி நடைபெற—( 143, 144 வது ச்லோகம் )
கதாபத்ம தராயைவ பஞ்சபாண தராய ச |
காமேஸ்வராய காமாய காமபாலாய காமிநே ||
நம : காமவிஹாராய காமரூப தராய ச |
ஸோமஸுர்யாக்நி நேத்ராய ஸோமபாய நமோ நம : ||
( 143 பின்பாதியும் 144முன்பாதியும் சொல்லலாம் என்று கூறினாலும்,
இரண்டு சலோகங்களையும் சேர்த்துச் சொல்வது நல்லது.–விவாஹம் முடியும் வரை
–சீக்ர பலனை அளிக்கும் )
—————————–
12. ஸர்வாபீஷ்ட ஸித்திக்கு ( 167ம் 168ம் )
தர்ம நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தே கருணாகர |
புண்ய நேத்ர நமஸ்தேஸ்து நமஸ்தேபீஷ்ட தாயக ||
நமோ நமஸ்தே ஜயஸிம்ஹரூப
நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப |
நமோ நமஸ்தே ரண ஸிம்ஹ ரூப
நமோ நமஸ்தே நரஸிம்ஹ ரூப ||
தினமும் காலையில் அனுசந்திக்க, எல்லா விருப்பங்களும் நிறைவேறும்
——————————————
ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ர நாமத்திலிருந்து ,சிலவற்றைத்தான்
மேலே கொடுத்திருக்கிறேன்.
