Sri Nrusimham–

Posted on May 22 2016 - 11:07am by srikainkaryasriadmin

                ஸ்ரீ  ந்ருஸிம்ஹம்  —-part–6

ஸ்ரீமத் பாகவதத்தில் 7வது ஸ்கந்தத்தில்,9ம் 

அத்யாயத்தில், ப்ரஹ்லாத ஸ்தோத்ரம் சொல்லப்படுகிறது– 

”ப்ரஹ்லாத ஸ்தோத்ரம்”  என்கிற தலைப்பில்,  கோயம்பத்தூர் அட்வகேட்

ஸ்ரீ P .N .க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார் , 1965ம் ஆண்டில் முதல் பதிப்பு

( 1972ம் ஆண்டில் 5ம் பதிப்பு)  ஸம்ஸ்க்ருதம் ,ஆங்கிலம்

தமிழ் – மூன்று மொழிகளிலும், எழுதி வெளியிட்டு இருக்கிறார்.

இதற்கு, ஸ்ரீ உ.வே. -D .T .தாதாசார்யர், மதுராந்தகம் ஸ்வாமி  ஸ்ரீ உ.வே.வீரராகவாசார்யர் ,

உத்தமூர் ஸ்வாமி  ஸ்ரீ உ.வே. வீரராகவாசார்யர் ,ஸ்ரீ உ.வே. D .R . என்று புகழப்படும்

D .ராமஸ்வாமி அய்யங்கார்,வெளியீட்டாளர் ஸ்ரீ உ.வே. K .தேசிகாசார்யர் –என்று

யாவரும் முகவுரை ,அணிந்துரை அனைத்தும் அளித்துள்ளார்கள்.

உதாரணத்திற்கு இதோ—–இரண்டு

FORWORD to the (fourth edition )

ஸ்ரீ ப்ரஹ்லாதவத்ஸலாய நம :

தனித்தனியே திர்யக்காகவும்,மனித உருவுடனும் தோன்றிய ஏனைய அவதார

மூர்த்திகளிற் காட்டில் இரண்டும் கலந்த நரஸிம்ம மூர்த்திக்குப் பெருமையுண்டு .

அசுர வம்சத்திலே பிறந்தும் ஸாதுக்கள் அனைவருக்கும் மேம்பட்டே விளங்கின

ப்ரஹ்லாதாழ்வான் ஒருவனுக்காகவே     தோன்றிய அவதாரமாகும் இது.

மற்ற அவதாரங்களில் பிராட்டி புருஷகாரமாக வேண்டியதாயிருப்பினும்

இவ்வவதாரம் அது இல்லாமலே பக்தர்களே அணுகக்கூடியதாகு மென்பதை —

–யறிவிக்கவேண்டுமென்றேபோலும்  பெரிய பிராட்டியார்  ப்ரஹ்லாதனையே

முதலில்      அணுக அநுமதி செய்தது.இவனைக் கொண்டு ப்ரஹ்மாதிகள்

எல்லோரும் நெருங்கி வணங்கினார்கள் .சிறு பிராயத்தினின்றே  எம்பெருமானிடம்

பக்தியை எல்லோருக்கும் புகட்டின இம்மஹான் செய்த ஸ்தோத்ரமானது  எல்லா

ஸ்தோத்ரங்களுக்கும்  சிகரமாயிருக்கும் .ஜ்ஞான . பக்தி வைராக்யங்களை

விளக்கும் ஸ்ரீ பாகவதத்திலுள்ள இந்த ஸ்தோத்ரத்தைச் சிறு பிராயம் முதல்

சொல்லிவந்தால், ப்ரஹ்லாதனிடத்திற்போலே பகவான் கருணை கூர்ந்து

எத்தகைய விபத்தினின்றும்  தானாகவே விடுவிப்பான் .

சிலருக்குச் சிங்கமாயிருந்துகொண்டே மற்றவருக்கு மனிதனாகவேயிருக்கும்

பெருமானுக்கு  உள்ள வாத்ஸல்யச் சிறப்பை விளக்கும் இந்த ஸ்தோத்ரம் ,

ப்ரஹ்லாதனுக்குப்போலவே    இங்கும் பரிசுத்தமான வாழ்க்கையை நடத்தும்.

இதன் பெருமையறிந்து ஸ்ரீமான் கோயம்புத்தூர் அட்வொகேட்

P .N .கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் ,இந்த ஸ்தோத்ரத்தை தமிழ் ஆங்கில

மொழி பெயர்ப்புடன்  அச்சிட்டு இனாமாக  வழங்கி வருகிறார் . அதில் , இது

நான்காம் பதிப்பாகும் .இந்தப் புத்தகத்தைப் பெறுகிறவர்கள் ,தாங்களும்

படித்துத்  தங்கள் சிறுவர் சிறுமிகளுக்கும் இதனைப் போதித்து ஆஸுராம்சமின்றி

தைவாம்சம்  வளர வழி செய்தார்களாகில்  பதிப்பித்துப் ப்ரசுரம்செய்கின்ற

மஹானின்  நோக்கம் பலிக்கும்

உத்தமூர் தி.வீரராகவாசாரியர்

———————–

F O R E W O R D

 

வாத்ஸல்யாத்  அபயப்ரதானஸமயாத் ,ஆர்த்தார்த்தி நிர்வாபணாத்

ஔதார்யாத் அகஸோஷ்ணாத், அகணித ச்ரேய  ப்ராணாத்  |

ஸேவ்ய  :  ஸ்ரீபதிரேக ஏவ ஜகதாம் ஏதேச ஷட்ஸாக்ஷிண :

ப்ரஹ்லாதச்ச விபீஷணச்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ :  ||

Prahlada,the boy–devotee, has ever been reckoned as the premier bhakta or devotee

of the Lord.His steadfast faith in the supremacy of Narayana  the Consort of Sri ,

and his unshakable trust in His protecting Grace have rightly earned for him the first

and foremost place among baktas . He was the earliest among the teachers of the world

who postulated God–love  as the most efficacious means (upaya) for God–realisation.

When Prahlada was obliged ,nay compelled, to ask for a boon from the great God, Who had

saved him from many a grave peril , he only asked for God–love.

யா ப்ரீதிர்ரவிவேகாநாம் விஷயேஷ்வ நபாயிநோ  |

த்வா  மநுஸ்மரதஸ்ஸா  மே  ஹ்ருதயாந்  மா ப ஸர்பது  ||

( let not the undiminishing love that the un–learned evince towards earthly pleasures

ever slip from my heart that incessantly thinks of Thee )

If Prahlada is the premier devotee , the God whom he loved so intensly and Who came

to his rescue at a most critical  time is the Premier God . The Lord has taken several avatars

but there is no Avatar  of His to equal His Narasimhavatara .” என் சிங்கப்பிரான்

பெருமை ஆராயும் சீர்மைத்தே ”   is Nammalwar’s way of expressing the unique

greatness of this avatar. Not  only was there a lion –man combination  but there was also

a fury–love demonstration at one and the same time. The selfsame face that struck terror

into the heart of Hiranya simultaneously showered mercy and ambrosia on young Prahlada.

A touch of this Man–lion ( Nara–Simha )gives a strange sweetness to His other avatars too.

Rama is Raghava–Simha. Rukmini Devi addresses  Her Krishna as kaale Nrisimha| 

Prahlada stotram can thus be seen to be a hymn of praise sung by a premier Devotee extolling

the  greatness of a premier God. It contains the quintessence of the Visishtadvaita philosophy

and the vaishnavite religion.  The stotra , emanating  as it does from the God–love–soaked

heart of Prahlada has,  so to say , set the standard for a devotional lyric. If finds a place

in canto No 9 of the 7th Skanda of Srimad Bhagavata Puranam, and has been devoutly read,

recited and expounded for several years by several generations of scholars and devotees.

The late Sri P.N. Krishnaswami Iyengar , a legal luminary of Coimbatore Town ,was so stuck

with this poem that he made it the subject of his special study and particular enjoyment.

He had the stotram published    together  with tamil and english translations so that

a large circle of men and women can read the stotram ,understand it’s meaning  and

thereby obtain great spiritual benefit. The book was freely distributed to all asthikas and

when the first edition was exhausted ,with great alacrity  he had a second edition

brouht out and freely distributed. Seeing that  copies of  second edition  too ceased  to be

available, his son Sri K.Desikacharya( Advocate Coimbatore) has with commendable

ardour brought out this third edition ; and in this he has  had  the help and cooperation

of his elder brother  Sri K. Narasimha Iyengar  and his cousin and brother–in–law

Sri  P.S. Narayana Iyengar . It is the desire of this cultured and devoted family that this handy

and attractive book  must  be   put to the best use by the members of the asthika public

who are requested to study its contents and reflect on it’s great spiritual import , so that

they may thereby secure the blessings of the Deity  and the Devotee.

Books like these need no introduction , as pointed out by Sriman P.N. Krishnaswamy Iyengar

himself  in his preface  to the 1st edition. The publisher’s affection  towards me has given

me an opportunity to associate  myself  with  this publication ,  and I heartily thank them

for it

Madras—7                                                          D.RAMASWAMY

1–3–’65

—————————————————

Adiyen feels that these two prefaces are enough to introduce here ,this book. 

In the 60’s and 70’s  vaishnavite stalwarts like Sri D.R.   Sri V.V. Srinivasa Iyengar 

Prof Sri Srinivasaraghavan  Pudukottai,  Sri D.T.Thathachariyar etc 

contributed immensely to our  Vaishnavism—Visishtadvaitam  besides

  Uththamoor Swamy, Maduranthakam  Swamy etc  —.  The next and the next 

generation of   Vaishnava community  have to recognise the noble services 

done by those Mahans   by popularising their lectures, writings etc  which are the only way 

to submit our gratitude to them  ( there is no atonement  if we forget  this—-though there many

 atonements to other sins )

இந்த ப்ரஹ்லாத ஸ்தோத்ரத்தில் 55   ச்லோகங்கள் இருக்கின்றன.

முதலில் உள்ள  7 ச்லோகங்கள்  பூர்வ பீடிகையாக இருக்கின்றன. அடுத்த 5 ச்லோகங்கள்

8 முதல் 12 ச்லோகங்கள் வரை—தன்னுடைய தாழ்மையையும் பிறவற்றையும்

சொல்லிப் பிறகு 50 வது ச்லோகம் முடிய ஸ்தோத்ரங்கள் —அருமையான ஸ்தோத்ரங்கள்

கடைசி 5 ச்லோகங்கள், சரண்யன் ந்ருஸிம்ஹன் ,மிக சாந்தமாக ,ப்ரஹ்லாதனிடம்

ப்ரீதியைக்  கூறும்  ச்லோகங்கள்.     

முதல் ச்லோகம் —–

நதோஸ்ம்யநந்தா ய  துரந்த சக்தயே  விசித்ர வீர்யாய பவித்ர கர்மணே |

 விஸ்வஸ்ய ஸர்கஸ்திதிஸம்யமாந் குணை :ஸ்வலீலயா ஸந்ததே அவ்யயாத்மநே  ||

பொருள்—அளவில்லாதனவும் , வெல்ல முடியாதனவும்திறமையும் பலமும் 

உடையவனும் , இவ்வுலகத்தில் படைத்தல் காத்தல் அழித்தல் –கார்யங்களை 

  விளையாட்டாகச் செய்பவனும் மாறுதல் அற்றவனுமான பரமாத்மாவை 

வணங்குகிறேன் 

50வது ச்லோகம்—–

தத்தே மஹத்தம  ! நம ; ஸ்துதிகர்ம பூஜா  கர்ம ஸ்ம்ருதிச் சரணயோ : ச்ரவணம் கதாயாம் |

ஸம்ஸேவயா  த்வயி   விதேதி ஷடங்கயா  து பக்திஞ்ஜந : பரமஹம்ஸ கதௌ லபேத  ||

Meaning :–Oh—Lord—the Supreme –! there are six ways to attain that bakthi towards you , viz —

1. Prostration  2   Praising you  3. offering pooja to you  4.doing dharma   5. meditation of your Holy Feet

6.hearing stories about you

these are the ways of real devotees or bakthas  or sanyasis. Except by such seva , it is not possible

to reach the path of such sanyasis  or to become a baktha of yours

52வது ச்லோகம்—

ஸ்ரீ  பகவாநு வாச —

வத்ஸ  ப்ரஹ்லாத பத்ரம்தே  ப்ரீதோஹம்தே ஸுரோத்தம  |

வரம் வ்ருணீஷ்வா பிமதம் காமபூரோஸ்ம்யஹம்ந்ருணா  ||ம்

Sri Bhagavan   said —-O, child Prahlada ! all happiness to you ! Ask of me any boon . I am  immensely

pleased   with  thee. I am the fullfiller of all prayers of devotees of mine

55வது ச்லோகம் —–

ஏவம் ப்ரலோப்யமாநோபி வரைர்லோக ப்ரலோபனை  |

ஏகாந்தித்வாத்  பகவதி நைச்சத்தாநஸு ரோத்தம :  ||

That great one among Asuras i.e. Prahlada ,eventhough tempted by the Lord Himself with tempting boons

which will naturally entice ordinary commonfolk  did not desire for such boons since all his

concentration and meditation was upon Bhagavan Himself and no others

முக்யமாகத் தோன்றிய 4 ச்லோகங்களைக் கொடுத்திருக்கிறேன்

————————

 

ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத  ஸ்தோத்ரம்
 
சக்கரவர்த்தித் திருமகன், ராவணனை ஜெயிக்க இலங்கை செல்லும்
வழியில், ஸ்ரீ அஹோபில க்ஷேத்ரத்தில் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை  5 ச்லோகங்களால்
ஆராதித்து, ஸ்ரீ மாலோலன் அனுக்ரஹத்தாலே ராவணனை அழித்து
ஸீதாப் பிராட்டியை அடைந்தார் என்று, ஹரிவம்ஸம்(சேஷ தர்மம்–47வது
அத்யாயம்   ) சொல்கிறது. இதைத் தினமும் சொன்னால், ஸ்ரீ ந்ருஸிம்ஹன்
அவர்களுடன் கூடவே இருந்து ரக்ஷித்து , இக,பர சுகங்களை அருள்கிறான் .
கூடவே இருந்து  ரக்ஷிக்கிறான். த்ருஷ்டாத்ருஷ்ட  பலன்களை அளிக்கிறான்.
 

   அந்த அம்ருதம்  இதோ :—-

 

அஹோ  பிலம்  நாராஸிம்ஹம் கத்வாராம : ப்ரதாபவான்  |

நமஸ்க்ருத்வா ஸ்ரீ ந்ருஸிம்ஹம்  அஸ்தௌஷீத் கமலாபதிம் ||

 

1. கோவிந்த  கேசவ ஜநார்த்தன  வாஸுதேவ விச்வேச விச்வ மதுஸுதந விச்வ ரூப  |

ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம புஷ்கராக்ஷ நாராயணாச்யுத ந்ருஸிம்ஹ நமோ நமஸ்தே  ||

 

2.  தேவாஸ் ஸமஸ்தா : கலுயோகிமுக்யா : கந்தர்வ வித்யாதர கின்னராஸ்ச   |

யத்பாதமூலம் ஸததம்  நமந்தி  தம்நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி   ||

 

3. வேதாந் ஸமஸ்தாந்  கலுசாஸ்த்ர கர்ப்பாந்  வித்யாபலேகீர்திமதீஞ்ச லக்ஷ்மீம்  |

யஸ்ய ப்ரஸாதாத் ஸததம்  லபந்தே  தம் நாரஸிம்ஹம் சரணம் கதோஸ்மி  ||

 

4. ப்ரும்மா சிவஸ்தவம்  புருஷோத்தமஸ்ச  நாராயணாஸௌ மருதாம் பதிஸ்ச   |

சந்த்ரார்க்கவாய்வக்னி  மருத்கணாஸ்ச  த்வமேவ தம்த்வாம்  ஸததம்  நதோஸ்மி  ||

 

5. ஸ்வப்நேபி நித்யம்  ஜகதாம் த்ரயாணாம்  ஸ்ரஷ்டா ச ஹந்தா விபுரப்ரமேய  : |

த்ரா  தாத்வ மேகஸ்த்ரிவிதோவிபந்ந  : தம் த்வாம் ந்ருஸிம்ஹம்   ஸததம்  நதோஸ்மி  ||

 

இதிஸ்துவா  ரகுச்ரேஷ்ட  பூஜயாமாஸ  தம் விபும்  |

புஷ்ப வ்ருஷ்டி :பபாதாசு  தஸ்ய தேவஸ்ய மூர்த்தனி  ||

 

ஸாதுஸாத்விததம் ப்ரோசு :  தேவாரிஷி கணைஸ்ஸ ஹ |
” தேவா ஊசு  :  ”
ராகவேணக்ருதம்  ஸ்தோத்ரம்  பஞ்சாம்ருதமனுத்தமம்  |

படந்தியேத்விஜ வரா : தேஷாம் ஸ்வர்கஸ்து சாச்வத  :  ||

—————————————————
கத்யம் 
                                 

ஸ்ரீ ந்ருஸிம்ஹ  கத்யமும்   உள்ளது. இது , ஸ்ரீ பொம்மரி போதன்னாவால்
  தெலுங்கு மொழியில்    எழுதப்பட்ட ஸ்ரீமத் பாகவதத்திலிருந்தும்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ சஹஸ்ரநாமத்திலிருந்தும்  பலவற்றை எடுத்துத் தொகுத்து
 வழங்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இத்தம்  தாநவேந்திர:ஹிரண்யகசிபு :பரிக்ருஹ்யமாண  வைர :—-
என்று தொடங்குகிறது
தன்யாசி ராகத்திலும், மத்யமாவதி ராகத்திலும் கத்யம் முடிகிறது
மத்யமாவதி –கடைசி வரிகள் —
அத்ருச்ய  தாத்யத்புதரூபமுத்வஹந்
ஸ்தம்பே ஸபாயாம் நம்ருகம் ந மாநுஷம்

அத்யத்புதமான கத்யம்—–

இன்னொரு கத்யமும் சொல்லப்படுகிறது —
இது பக்திமாத்ரப்ரதீத நமஸ்தே நமஸ்தே ——-என்று ஆரம்பித்து,
ப்ரணத ஜவத்ஸல ,நமஸ்தே நமஸ்தே என்று முடிகிறது.
இதுவும் அத்யத்புதமான கத்யம்

 

ஹரிபக்தி ஸுதோதயம் 

இதில் ஸ்ரீந்ருஸிம்ஹ  ஸ்துதி உள்ளது —இதைப் பார்ப்போம்

 

ப்ரஹ்லாத —-
ஸ்ரீ கோவிந்த முகுந்த கேஸவ ஸிவ ஸ்ரீ வல்லப ஸ்ரீ நிதே
ஸ்ரீ வைகுண்ட ஸுகண்ட குண்டிதகல ஸ்வாமின்
அகுண்டோதய ஸுத்தத்யேய விதூததூர்த  தவள ஸ்ரீ மாதவாதோக்ஷஜ

ஸ்ரத்தாபத்த  விதேஹி நஸ்த்வயி  தியம் தீராம் தரித்ரீதர

 

அச்யுத  குணாச்யுத கலேஸ ஸகலேஸ
ஸ்ரீதர தராதர விபுத்த ஜனபுத்த  |
ஆவரண வாரண  விநீல கனநீல
ஸ்ரீகர குணாகர  ஸுபத்ர பலபத்ர   ||
கர்ண ஸுக வர்ணன  ஸுகார்ணவ  முராரே
ஸுவர்ண ருசிராம்பர ஸுபர்ணரத விஷ்ணோ  |
அர்ண  வநிகேதன பவார்ணவபயம்  நோ

ஜீர்ணய லஸத்குணகணார்ணவ     நமஸ்தே  ||

 

இந்த ஸ்துதியைத் தினமும்  சொல்லிவந்தால், ந்ருஸிம்ஹன் க்ருபை

நிச்சயம் கிடைக்கும்

ஸ்ரீ  ந்ருஸிம்ஹனைப் பற்றிய பெருமைகளைச் சொல்பவற்றின்  விவரம்

 

ஸ்வாமி  தேசிகன் அருளியவை இந்தத் தொகுப்பில் இறுதியில் இடம் பெறுகிறது


1. நான்கு வேதங்களும் —

2. ஸ்ரீ ந்ருஸிம்ஹ  புராணம்
3.ஸ்ரீ விஷ்ணு புராணம்
4.ஸ்ரீமத் பாகவதம்
5.ஸ்ரீ ஹரி வம்சம்
6.அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை
7.ஸ்ரீ பகவத் குண தர்பணம்
8.ஸ்ரீ ஹரி பக்தி ஸுதோதயம்  (ஸ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்துதி )

9..ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீயோபநிஷத்
10. மந்த்ர ரத்ன மஹோததி
11..மந்த்ர ரத்நாகரம்
12.. ந்ருஸிம்ஹ மந்த்ர ப்ரயோக விதாநம்
13.ந்ருஸிம்ஹ மந்த்ர ப்ரயோக :
14.
ப்ரஹ்ம ஸம்ஹிதா (ந்ருஸிம்ஹ  கவசம் )
15..
ஸ்ரீ ந்ருஸிம்ஹ பஞ்சாம்ருத ஸ்தோத்ரம்( சேஷ தர்மம் )
16.விச்வ குணா தர்சம் –ஸ்ரீ ந்ருஸிம்ஹரைப் பற்றி (அரசாணிபாலை
                         ஸ்ரீ வேங்கடாத்ரி கவி )
17.லக்ஷ்மி ஸஹஸ்ரத்தில் — ஸ்ரீ ந்ருஸிம்ஹரைப் பற்றி (அரசாணிபாலை
                         ஸ்ரீ வேங்கடாத்ரி கவி

.18. ஸ்ரீ ந்ருஸிம்ஹ கத்யம்
19..ஸ்ரீ  ந்ருஸிம்ஹ அஷ்டகம் ( ஸ்ரீ அழகிய மணவாள ஜீயர் )
.20. ஸ்ரீ ந்ருஸிம்ஹ மங்களம்
21.ருணவிமோசன ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்
22.மாங்கள்யஸ்தவம் (ஸ்ரீ விஷ்ணு தர்மம் )
23.கத்யம்—2 விதமான கத்யம்
24.ஸ்ரீ ந்ருஸிம்ஹ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம்
25.                   ”                    ”                ”நாமாவளி
26.ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாமம்
27. ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹ ஸஹஸ்ரநாமாவளி
28.ஸ்ரீ கூரத்தாழ்வானின் ”பஞ்சஸ்த்வம் ”
29.ஸ்ரீ பராசர பட்டர் அருளியது
30.ஸ்ரீ யோக ந்ருஸிம்ஹ ஸுப்ரபாதம் (ஸ்ரீ தொட்டையாசார்யர் )
31.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் ( ஸ்ரீ ஆதி சங்கரர் )
32.ஸ்ரீ ந்ருஸிம்ஹ  மங்களம்  (24ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
33.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹஸ்தவம் (27ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
34.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மங்களம்  (27ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
35.ஸ்ரீ ந்ருஸிம்ஹ  மங்களாசாஸனம் (30ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
36.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸுப்ரபாதம்  (30ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
இப்போதும் ஸ்ரீ மடத்தில் அனுஸந்திக்கப்படுகிறது
37.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ப்ரபத்தி  (30ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
38.ஸ்ரீ ந்ருஸிம்ஹஷஷ்டிபாதவர்ணனம் (34ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
39.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன்  அடைக்கலப் பத்து (34ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
இது ஸ்ரீ ஸந்நிதியில் ஸேவாகாலத்தில் தினமும் அனுஸந்திக்கப்படுகிறது
40.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ த்யாந  ஸோபாநம் ( 41ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
41.பஞ்சாம்ருத ஸ்தோத்ரம் (44ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
42.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ கராவலம்ப ஸ்தோத்ரம் (44ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
43.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ப்ரபத்தி (44ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
44.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ மங்களம் (44ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் )
45.ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ பஞ்சாஸத் ( ஸேவா ஸ்வாமி  )
46. ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹாநுத்யாநம்  ( ஸேவா ஸ்வாமி  )
  அடியேன்,பல க்ரந்தங்களை    இங்கு குறிப்பிடவில்லைஎன்றால்,
சிற்றறிவினனான அடியேனுக்குத் தெரிந்தது இவ்வளவே என்று , கருதி

க்ஷமிக்கப் ப்ரார்த்திக்கிறேன்

திவ்ய ப்ரபந்தங்களில் ———
நம்மாழ்வார்—–பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
பொய்கை ஆழ்வார் —முதல் திருவந்தாதி
பூதத்தாழ்வார் —இரண்டாம் திருவந்தாதி
பேயாழ்வார் —-மூன்றாம் திருவந்தாதி
திருமங்கை  ஆழ்வார் —பெரிய திருமொழி,பெரிய திருமடல், சிறிய திருமடல்
                                            திருக்குறுந்தாண்டகம்
பெரியாழ்வார் —முதலாயிரம்
திருமழிசை ஆழ்வார்— திருச்சந்த விருத்தம்,நான்முகன் திருவந்தாதி
திருப்பாணாழ்வார் —-அமலனாதிபிரானில் ——
ஸ்ரீ ஆண்டாள்— திருப்பாவை, நாச்சியார் திருமொழி

இராமுநச  நூற்றந்தாதி

ஸ்வாமி தேசிகப் ப்ரபந்தம்  மற்றும் பல—–
—————————————————————————————————————————–11169197_670643523081626_3569992721003337648_n
About the Author

Leave A Response