முதல் ஸ்லோகம்
ப்ரணதஸுரகிரீட ப்ராந்த மந்தாரமாலா
விகலிதமகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த 😐
பஸுபதி விதி பூஜ்ய : பத்மபத்ராயதாக்ஷ :
பணிபதி புரநாத: பாதுமாம் தேவநாத : ||
கிரீடத்தில் மந்தார மாலையை அணிந்த தேவர்கள்,ஸ்ரீ தேவநாதனின் திருவடிகளில் தங்கள் தலைகளை வைத்துப் பணிந்து ஸேவிக்கிறார்கள் அப்போது, அந்த மந்தார மாலைகளிளிருந்து , தேன் தாரையாகப் பெருகி,ஸ்ரீ தேவநாதனின் திருவடிகளை நனைக்கிறது. இந்தப் பரமன்–ஸ்ரீ தேவநாதன், ப்ரஹ்மா சிவன் இருவராலும் வணங்கப்படுகிற
பத்மபத்ராய தாக்ஷன்; பணிபதி புரநாதன் .
இந்தத் தேவநாதன், அடியேனைக் காத்தருள வேண்டும் என்கிறார்.
அடுத்த ச்லோகத்தில் ,
தேவாதிநாத கமலா ப்ருதநேஸ பூர்வாம்
தீப்தாந்தராம் வகுலபூஷண நாதமுக்யை : |
ராமாநுஜ ப்ருப் ருதிபி : பரிபூஷிதாக்ராம்
கோப்த்ரீம் ஜகந்தி குருபங்க்திமஹம் ப்ரபத்யே ||
ஸ்ரீ தேவநாதன், ஸ்ரீ ஹேமாப்ஜவல்லித் தாயார், சேனைமுதளியார், ஸ்ரீ நம்மாழ்வார், ” நாத ” என்று ஸ்ரீமந்நாதமுனிகள்,
” முக்யை : தீப்தாந்தராம் ” —முதலானோர்களால் விளங்குகிற நடுப்பாகத்தை உடையதும், —என்று சொல்லி,
“ராமாநுஜ ப்ருப் ருதிபி : ” ஸ்ரீ ராமானுஜர் முதலானோரால் அணி செய்யப்பட, “குருபங்க்தி “ஆசார்ய பரம்பரையை
“அஹம் ப்ரபத்யே “அடியேன் சரண் அடைகிறேன் என்கிறார்
இது, அடியேன், 2013 மார்ச் மாத “ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ” பத்திரிகையில் ” கேட்பதும், சொல்வதும் ” என்கிற தலைப்பில் ,984வதாக, எழுதியது
இப்படிப்பட்ட குருபரம்பரா ப்ரவாஹம் உலகம் அனைத்தையும் பாவனமாக்குகிறது
—
Uruppattur Soundhararaajan
Srikainkarya
