nrusimham–9

Posted on Jun 6 2016 - 9:29am by srikainkaryasriadmin

ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —9

ஏழாவது பாகத்தில், ஸ்வாமி தேசிகன் அருளிய தசாவதார ஸ்தோத்ரத்தில் ,
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் —–என்பதை அனுபவித்தோம்.

ஸ்வாமி தேசிகன் ,தன்னுடைய ஸ்ரீஸுக்திகளில், பல ச்லோகங்களில்,ஸ்ரீ ந்ருஸிம்ஹனைத் துதிக்கிறார். அவற்றில் சிலவற்றையே இங்கு ொடுத்திருக்கிறேன்

1. அபீதிஸ்தவம்

கயாதுஸூத வாயஸ த்விரத புங்கவ த்ரௌபதீ
விபீஷண புஜங்கம வ்ரஜகணாம் பரீஷாதய : |
பவத்பத சமாச்ரிதா பயவிமுக்தி மாபூர் யதா
லபேமஹி ததா வயம் ஸபதி ரங்கநாத த்வயா ||
————- ச்லோகம் 19
ஹே—ரங்க ப்ரபோ —– நாங்களும் அச்சத்திலிருந்து உடனே விடுபட்டுவிடுவோம். உனது திருவடியை ஆச்ரயித்தவர்கள், பயத்திலிருந்து
உடனே காப்பாற்றப்பட்டனர்.ஒருவரா —இருவரா—நிறையப் பேர் —

கயாதுவின் பிள்ளை சிறு குழந்தை ப்ரஹ்லாதன் , தந்தையாலும் கைவிடப்பட்ட காகம்( காகாஸுரன் ), ஆதிமூலமே என்று அழைத்த கஜேந்த்ரன் ,
கணவன்மார் இருந்தாலும் அனாதையாகி , எல்லோருக்கும் உண்மையான பதியை அழைத்த த்ரௌபதி, துஷ்டனால் விடப்பட்டு, சரணம் என்று வந்த
விபீஷணன் ,காளியன் என்கிற ஸர்ப்பம், இடக்கை வலக்கை அறியாத கோபிகைகள்,சக்ரவர்த்தி அம்பரீஷன் இப்படிப் பல பக்தர்கள்
உன்னால் அபயம் அளிக்கப்பட்டார்கள்

2. ஸ்ரீ தேவநாயக பஞ்சாஸத்

எம்பெருமானின் திவ்யாயுதங்கள்,அவருடைய அவதாரங்களில் ,இவையும்
அவதாரமெடுக்கின்றன.
நீலாசலோதித நிசாகர பாஸ்கராபே சாந்தாஹிதே ஸுரபதே ! தவ சங்க சக்ரே |
பாணேரமுஷ்ய பஜதாம் அபயப்ரதஸ்ய ப்ரத்யாயனம் ஜகதி பாவயத : ஸ்வபூம்நா ||

——————-ச்லோகம் 30
ஹே ஸுரபதே —தேவநாதா —இந்த்ரநீல மலை போன்ற தேவருடைய திருமேனியில்,ஒரே சமயத்தில் சந்த்ர ஸுர்யர்களைப் போன்றும் , பக்தர்களின் விரோதிகளை
அழிப்பதில் வலிமை உடையதுமான சங்க சக்ரங்கள், தேவரீர் , திருக்கைகளால் அபயம் அளிக்கும்போது, கவலை வேண்டாம்—உங்களைக் காகவே இப்படி
சங்க சக்ரங்களை, எப்போதும் தாங்கி இருக்கிறேன் என்று நம்பிக்கை கொடுப்பதாக உள்ளது.
இந்த திவ்ய ஆயுதங்கள், பகவானின் ரூபங்களுக்குத் தகுந்தமாதிரித் தாமும் மாறுகின்றன
ஸ்ரீ வாமன அவதாரத்தில் பவித்ரமாகவும், வராஹ அவதாரத்தில் தெற்றுப் பற்களாகவும் ,
பரசு ராமாவதாரத்தில் கோடாலி யாகவும் ஸ்ரீ ராமாவதாரத்தில், வில்லும் அம்புமாகவும்,
ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரத்திலேகைவிரல்களின் நகங்களாகவும் அமைந்தது —-என்பது
ஆசார்யர்களின் வியாக்யானம்.

3.ஸ்வாமி தேசிகன் ”அபயப்ரதான ஸாரத் ” தில் 6வது சரண்ய —வைபவ –ப்ரகாச :
அதிகாரத்தில் விபீஷணனைப் பார்த்துச் சொல்கிறார்—-

பிஸாசாத் தாநவான் யக்ஷாந் ப்ருதிவ்யாம் யேச ராக்ஷஸா :
அங்குள்யக்ரேண தாந் ஹத்யாம் இச்சந் ஹரி–கணேஸ்வர ||

ஹே—விபீஷணா —நான் நினைத்தேனேயானால், பிசாசங்கள், தானவர்கள்,யக்ஷர்கள், உலகிலுள்ள ராக்ஷஸர்கள் எல்லாரையும் விரல் நுனியாலேயே
கொன்று விடுவேன்—–

எதிரிகள் விரல் கவ்வும்படி காணும் நம்முடைய ஒரு அங்குள்யக்ர வ்யாபாரம் . நகங்களிறே
பெருமாளுக்கு நரசிம்ஹ –தசையில் ஸ்ரீ பஞ்சாயுதங்கள் —-என்று வ்யாக்யானமிடுகிறார்கள்.

3. ஸ்ரீ தேவநாயக பஞ்சாஸத்

ஸ்த்ரீரத்னகாரணம் உபாத்த த்ருதீயவர்ணம் தைத்யேந்த்ர வீர சயனம் தயிதோபதானம் |
தேவேச ! யௌவன கஜேந்த்ர கராபிராமம் ஊரிகரோதி பவதூரு யுகம் மநோ மே ||
————————————- ச்லோகம் 38
ஹே–தேவனாதா—ஸ்த்ரீரத்னமான ஊர்வசியின் பிறப்புக்கு காரணமாயும், வைச்யர்
படைப்புக் காரணமாயும், அசுரர் தலைவர்களுக்கு வீரப் படுக்கையாயும் ,பிராட்டிமார்களுக்குத்
தலையணையாயும்,வாலிப வயதுக் கஜேந்த்ரனின் துதிக்கைபோல அழகியதாயும்
உள்ள தேவரீரின் திருத் தொடைகள், அடியேனின் மனத்தைக் கவர்ந்து விட்டது.

இரணியனைத் தொடையில் தாங்கிப் பிளந்தெறிந்தார் என்று இதற்கு வ்யாக்யானம் .திருமங்கை மன்னன், அடியவர்க்கு மெய்யனை, மங்களாசாசனம் செய்யும்போது,”மாறு கொண்டுடன்றெதிர்த்த வல்லவுணன் தன் மார்பகம் இரு பிளவா
கூறுகொண்டு அவன் குலமகற்கு இன்னருள் கொடுத்தவனிடம் —–”’ என்கிறார்.
4. ஸ்ரீ தேவநாயக பஞ்சாஸத்

ப்ரஹ்லாத கோகுல கஜேந்த்ர பரீக்ஷிதாத்யா : த்ராதா :த்வயா நநு விபத்திஷு தாத்ரு சீஷு |
ஸர்வம் ததேகம் அபரம் மம ரக்ஷணம் தே ஸந்தோல்யதாம் த்ரிதச நாயக !கிம் கரீய : ? ||

—————————–ச்லோகம் 50
ஹே—தெய்வ நாயகா—பெரிய ஆபத்துக்களிலிருந்து ப்ரஹ்லாதனையும் , பசுக்கூட்டத்தையும்
கஜேந்த்ரனையும் பரீக்ஷித்தையும் தேவரீர் அப்போது காத்தீர்கள். இங்ஙனம், அவர்கள்
எல்லோரையும் காத்ததையும், இப்போது அடியேனைக் காக்க வேண்டியதையும் ,
ஒரு தராசின் இரு தட்டுக்களிலும் வைத்து எடை போட்டால், எது கனம் அதிகமாக
உள்ளது என்பதைத் தேவரீரே அறியலாம். இதற்கு வ்யாக்யானம் செய்தவர்கள்,
தகப்பனாரிடமிருந்து வந்த ஆபத்திலிருந்து ப்ரஹ்லாதனைக் காப்பாற்றியதைவிட,
அடியேனைக் காப்பது சுலபமானது—- என்று சொல்லிப் போந்தார்கள்.

5. ஸ்ரீ வரதராஜ பஞ்சாஸத்

பக்தஸ்ய தாநவ சிஸோ : பரிபாலநாய பத்ராம் ந்ருஸிம்ஹ குஹநாமதிஜக்முஷஸ்தே |
ஸ்தம்பைக வர்ஜமதுநாபி கரீஸநூநம் த்ரைலோக்யமேததகிலம் நரசிம்ஹ கர்ப்பம் ||
———————ச்லோகம் 23
ஹே–அத்திகிரி வரதா–உம்முடைய பக்தனான ஓர் அசுரச் சிறுவனை, ஆபத்திலிருந்து காத்து அருள, அழகான அரியுருவம் தாங்கி, அசுரக் க்ருஹத்தில் தூணிலிருந்து புறப்பட்டீர். அந்த ஒரு தூண் தவிர, மற்ற எல்லாமும், இன்றைக்கும் அந்தத்
திருவுருவத்தைத் தமக்குள்ளே தாங்கி நிற்கின்றன போலும் !

6.தயா சதகம்

ஸடா படல பீஷணே ஸரபஸாட்ட ஹாஸோத்படே
ஸ்புரத்க்ருதி பரிஸ்புடத்ப்ருகுடிகேபி வக்த்ரே க்ருதே |
தயே வ்ருஷகிரீசிதுர்தநுஜ டிம்ப தத்த ஸ்தநா
ஸரோஜ ஸத்ருசா த்ருசா ஸமதிதாக்ருதிர் த்ருச்யதே ||
—————ச்லோகம் 84

வைகுண்டவாஸி ஸேவா ஸ்வாமியின் வ்யாக்யானத்தைப் பார்ப்போம்

நரஸிம்ஹாவதாரத்தில் தயா நிர்வாகத்தைப் பேசும் ச்லோகம் . அத்யத்புதமான அவதாரம்.அத்யத்புதமான கடனம் ,நரம் கலந்த சிங்கமாகத் தோற்றம்.
ஒரு பாகத்தினால் பயம், மற்றொரு பாகத்தினால் அபயம். ஒரு பாகம் கோபஸ்தானம் ஒரு பாகம் தயா ஸ்தானம் .முதல் பாகம் கோபம் , பிந்திய பாகம் அநுக்ரஹம் . சேராததெல்லாம் சேரும் சிறப்பு இவ்வவதாரத்திற்கு உண்டு.
இரண்டு விருத்தமான தர்மங்கள் எப்படி ஒன்றாக இணைந்து நிற்கும் என்றால் இந்த அவதாரம் விடையளிக்கும். ஹிரண்யகசிபு விஷயத்தில் கோபத்தீயைக் கக்கும் கண்கள் , அவையே அப்பொழுதே ப்ரஹ்லாதனுக்கு ஸ்ப்ருஹணீயமான
தாமரைப்பூ போன்ற நிலையில் . பிராட்டி க்ஷணம் விலகியிருந்தபோதிலும் விலகாமல் முலைப்பால் கொடுக்கும் தாயென மாற்றியது தயாதேவி ஒருத்தியன்றோ !
சத்ருவுக்கு ரக்தாக்ஷகனாக ஸேவை. ப்ரஹ்லாதனைக் கண்டதும் மாறிய திருமேனிதான்
தயா ஸ்வரூபம் என்கிறார். அங்கு தயாதேவிதான் காட்சியளிக்கிறாள் என்கிறார்
பூதனாதிகள் ஸ்தனம் கொடுக்க வந்தது போலன்றி அஸுர சிசுவுக்குப் பால் கொடுத்தாள் என்பதே ரஸம். தயே என்கிற சம்போதனம் ச்லோகத்தின்
உத்தரார்த்தத்தில் . ஸிம்ஹாசலத்திலே தோன்றிய சிங்கம் எனபது ரஸம் .
தர்கேஷு கர்கச திய :வயமேவ , காவ்யேஷு கோமளதிய :வயமேவ என்ற பாசுரத்தை கவிதார்கிக ஸிம்ஹமாயிருந்து மூதலித்ததை நினைக்க,
நரசிங்கத்திடம் அகடிதனமான விஷயங்கள் கடிதங்களாமாப்போலே ,கவி சிங்கத்திடம் தார்கிகத்வம் ,தார்கிக சிங்கத்திடம் கவித்வமும் கலந்த
அழகையும் இங்கு ரஸிக்க ப்ராப்தம் . பழரஸங்கள் . ஆராயும் சீர்மைத்து.
7.ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்

ஸ்வாமி தேசிகன் ஸ்ரீ பாதுகா சஹஸ்ரத்தில் ,ஸஞ்சார பத்ததியில்,
சொல்கிறார்

பாதாவநி ! க்வசந விக்ரமணே புஜாநாம் பஞ்சாயுதீ கருஹைர்பஜதே விகல்பம் |
நித்யம் த்வமேவ நியதா பதயோர் முராரே : தேநாஸி நூநம் அவிகல்பஸமாதியோக்யா ||

———————————-ச்லோகம் 288

பகவான் சத்ருக்களைத் தன்னுடைய ஸுதர்னம் போன்ற ஆயுதங்களால் அழிக்கிறான். ஒரு சமயத்தில், அந்த சமயத்துக்கு ஏற்றபடி, ஆயுதங்களை
எடுக்காமலேயே நகங்களாலேயே கொன்றுவிட்டான்
பகவான் சஞ்சரிக்கும்போது, திருவடிகளிலே பாதுகைகளைத் தவிர ,வேறொன்றைச்
சாத்திக்கொள்வதில்லை

முக்தாம்சுகேஸரவதீ ஸ்திரவஜ்ரதம்ஷ்டிரா
ப்ரஹ்லாதஸம்பதநுரூப ஹிரண்ய பேதா |
மூர்த்தி :ச்ரியோ பவஸி மாதவபாதரக்ஷே !
நாதஸ்ய நூநமுசிதா நரஸிம்ஹ மூர்த்தே : ||
———————————- ச்லோகம் 846

ஹே—பாதுகா தேவியே—-உன்மீது முத்துக்களும் வைரங்களும் , ஸ்வர்ணத்தில்
இழைத்து உள்ளன.அடியோங்களுக்கு ,இந்தத் தர்ஸநம் மிகவும் சந்தோஷத்தை உண்டாக்குகிறது.
இந்த முத்துக்களின் காந்தி, சிங்கத்தின் பிடரி மயிர் போல இருக்கிறது. வைரங்கள் , தெத்துப் பற்கள் போல இருக்கின்றன. பெரிய பெருமாள் உன்னைப் பார்த்தால், அவர் ந்ருஸிம்ஹாவதாரம் செய்தபோது, அதற்குத்
தக்கவாறுசிம்ஹ ரூபம் எடுத்துக்கொண்ட மஹாலக்ஷ்மி போல இருக்கிறது.

8.தேஹளீச ஸ்துதி

ஸ்வாமி தேசிகன் , முதல் மூன்று ஆழ்வார்கள் பெருமழை கொட்டும் பேரிரவில்,ஒரு வீட்டின் இடைகழியில் நின்றிருக்க ,அவர்களை வாமனன் நெருக்க, இந்தக் காரிருளில், இருவர் விளக்கேற்ற ஒரு ஆழ்வார் அந்த ஞான விளக்கொளியில்
” திருக்கண்டேன்—–” என்று பாசுரமிட, அந்த திருவிக்ரமனை ,திருக்கோவிலூரில்
இந்த ஸ்துதியால் ஸ்தோத்தரிக்கிறார்.
பிக்ஷோசிதம் பிரகடயந் ப்ரதமாஸ்ரமம் த்வம்
க்ருஷ்ணாஜினம் யவநிகாம் க்ருதவான் ப்ரியாயா : |
வ்யக்தாக்ருதேஸ்தவ ஸமீக்ஷ்ய புஜாந்தரே தாம்
த்வாமேவ கோபநகரீஸ ஜநா விதுஸ்த்வாம் ||

The stalwart and one of the exemplary of the yester year Sri D.Ramaswamy Ayyangar .advocate
in his vyakyana said —-
The Vamana roopa of the Lord is enjoyed in this sloka. The lord came to the Mahabali’s Yagnavatam (sacrificial Haal ) disguised as a short–statured Brahmachari, as He made up His mind to get back the worlds from that Asura by a trick. It may be remembered here that Mahabali was a descendant of Prahlada in the race of Asuras and out of consideration for the great devotion evinced by that young boy—devotee Prahlada, that Lord had promised
to him not to slay any of his descendants. The Brahmacharya ashramam came in handy , as it is bhikshochitam quite suited for begging . ——–
This vyakyana goes further and further

ஸ்ரீ ந்ருஸிம்ஹனை (நரசிங்கனை ) மங்களாசாஸனம் செய்யும் கவிதார்க்கிக ஸிம்ஹம்
108 திவ்ய தேசங்களில், சோழநாட்டுத் திருப்பதிகளில், மூன்று திருக்கோயில்கள்
ஒன்று சேர்ந்து அருள் பாலிப்பது—தஞ்சை மாமணிக்கோவில் —இந்த க்ஷேத்ரம்
வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. பூதத்தாழ்வார், திருமங்கை ஆழ்வார்
ஆகிய 2 ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்துள்ள திவ்ய தேசம்.
தஞ்சாவூரிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டருக்குள் உள்ளது.
1. ஸ்ரீ நீலமேகப் பெருமாள் ஸந்நிதி
2.ஸ்ரீ மணிக்குன்றப் பெருமாள் ஸந்நிதி
3.ஸ்ரீ நரசிங்கப் பிரான் ஸந்நிதி

ஒவ்வொரு வருடமும், புரட்டாசி ச்ரவணத்தன்று, ஸ்வாமி தேசிகன் காலை 8 மணிக்கெல்லாம் புறப்பாடாகி, ஸ்ரீ நீலமேகப் பெருமாள் மங்களாசாஸனம்
அங்கேயே ஸ்ரீ ஆண்டாள் மங்களாசாஸனம்
உடனே, விஷ்வக்ஸேநர், சக்கரத்தாழ்வார், பெரிய திருவடி —– மங்களாசாஸனம்

பிறகு, ஸ்ரீ ஹயக்ரீவன் ஸந்நிதிக்கு எழுந்தருளி, விசேஷ மங்களாசாஸனம்

பிறகு, தாயார் ஸந்நிதியில் மங்களாசாஸனம்—–

அதன்பிறகு, ப்ரகாரப் பிரதக்ஷணமாக எழுந்தருளி, அங்கு எழுந்தருளி இருக்கும் திவ்யதேச எம்பெருமான்களை மங்களாசாஸனம் செய்து, பிறகு தன்னுடைய ஸந்நிதியில்உள்ள ஆழ்வார்கள் ஆசார்யர்கள், ஸ்ரீ உடையவர் —இவர்கட்கு எல்லாம் மங்களாசாஸனம்
செய்து,பிறகு ,சுமார் ஒரு பர்லாங் தூரத்திலுள்ள, ஸ்ரீ வீர நரஸிம்ஹன் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.அங்கே ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்தோத்ரங்கள் மற்றும் பல ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரங்களை மங்களாசாஸன சமயத்தில் , ஸேவிக்கிறார்கள்.
இந்த ஸந்நிவேசம் , தேசிக பக்தர்களுக்கு முக்கிமானது.
அன்று சாயந்திரம்,வெண்ணாற்றில் , ஸ்வாமி தேசிகனுக்குத் திருமஞ்சனமும் , பிறகு
தீர்த்தவாரியும். நடைபெறுகிறது—-

ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் , வில்லிவாக்கம் மணிமண்டபத்தில், ஸ்வாமி தேசிகனின்
புரட்டாசி ச்ரவண உத்ஸவம் மிக பிரஸித்தம். ஸ்வாமியால் கார்யக் க்ரமத்தோடு
உபக்ரிமக்கப்பட்டு , பல வருடங்கள் , ஸ்ரீ ஸேவா ஸ்வாமியே , இந்த உத்ஸவத்தை
நடத்தினார். இப்போது ,அவரது குமாரர்கள் அதே ச்ரத்தையுடன் நடத்துகிறார்கள்
இங்கேயும் ,ஸ்ரீ காமாஸிகாஷ்டகம் சேவிக்கப்படுகிறது.

————இன்னும் தொடருகிறது——————–

11203092_670643286414983_8627866143240284390_n

About the Author

Leave A Response