ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —10
———————————————————————————————————————
மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம்
அஹோபில க்ஷேத்ரத்தில் ஒரு குகையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனுக்கு
நேர் எதிரே , ருத்ரன் லிங்க ரூபமாக இருக்கிறார் .ஸ்ரீ மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
ருத்ரனால் ,இவ்விடத்தில் சொல்லப்பட்டதாக ஐதிஹ்யம்
இதைப்பற்றி—–1960ம் வருஷத்திய தி. தி. தேவஸ்தான வெளியீடான ”திருப்பதி
மான்மியம் ”என்கிற திருவேங்கடத் தல புராணத்தில் ஆசிரியர்
பழனியப்பப் பிள்ளை B .O . L —-கூறுகிறார்-அத்யாயம் 51—-
பின்பு,சிவன் நரசிங்கப் பெருமானை அருச்சித்து விரும்பிய பேறு பெற்றதைக்
கூறுவார் ஆயினர்.அத் தீர்த்தகிரியின் வடக்குத் திசையில் முப்பது காதத்தில்
புலி முதலிய விலங்குகள் செறிந்த காடு ஒன்று உள்ளது. அதன் இடையில்,
மலர்ப் பொய்கை ஒன்று உண்டு. அதன் கரையில், அகிர்புத்தினி (அஹிர்புத்ந்யர்
என்பதைத் தூய தமிழில் இப்படிச் சொல்லி இருக்கிறார் —அடியேன் ) என்ற முனிவர்
இறைவனைத் தியானித்துத் புரிகின்றார். அதற்கு நேர் வடக்கில் உள்ள
மலைக்குகையின் அருகில் ஓர் ஆலமரத்தின் கீழாகப் பெரிய பாறை ஒன்று உண்டு.
அதின்மீது சூலபாணி ஆகிய சிவன் நரசிங்க மூர்த்தியைத் தரிசித்தற்கு விரும்பிப்
பாஞ்சராத்ர சாஸ்திர விதிப்படிப் புனிதனாய் அமைந்து தன் உள்ளத் தாமரை
மலரில் அப்பெருமானை இருத்தி அன்பு அடங்காத் தன்மையில் பூசனை
புரிந்து வைணவ மூல மந்திரத்தை உச்சரித்துத் தியானித்து யோகம் செய்யும்போது
அவன் அமர்ந்திருந்த அப்பாறையானது பிளக்க அதினின்றும் நரசிங்கப் பெருமான்
பேரொளி மிக்க திருமுடியும் தோளணியும் துளவமாலையும் மணிக்குழையும்
கவுத்தவமும் பொன்னாடையும்,கடகம் சூழ்ந்த கைகள் ஆயிரமும் விளங்க
மண்ணும் விண்ணும் மறுகும்படி வடவைத் தீயும்வாட்டம் உற அதிர்ந்து
எழுதலும் சிவன் கண்டு எழுந்து கைகுவித்து வணங்கி மெய்ம்மயிர்க் கூச்சம்
கொண்டு , அஷ்டாக்ஷரப் பொருளே ! ஆதி அமலா !சக்கரக் கரனே ! சகல காரணமே !
மறை முதலே ! என்று பலவாறு பரவி ” என்னையும் பிரமனையும் உலகுகளையும்
முதலில் படைத்தருளிக் காத்துப் பின்பு ஒரு வாயில் விழுங்குகின்றாய்.
பின்பு அவை எல்லாவற்றையும் கொப்பூழ் மலரின்கண் மீளத் தருகின்றாய்.
என் அப்பனே ! உயிர்களுள் ஒருவன் அல்லனோ ?என்னைத் தேடிப்
புரந்தருளிய திருவருளின் தன்மை வியப்பே ; நான் விதிப்படி பூசித்து அருச்சித்த
இம் மலை மீது உன் திருவுருவை யாவரும் கண்டு பணிந்து பேறு பெறுமாறு
என்றும் காட்சி தருதல் வேண்டும் ” என்று இறைஞ்சி வேண்டிப் புகழ்ந்து
பூசித்து அங்கு உறைகிறான்.ஆதலால், அம்மலைக்கு நீலகண்டமலை எனப்
பெயர் கூறுவர் . அகில் சந்தனம் செறிந்த தனி வனத்தை அகிர்புத்தினி வனம்
என்பர் .அங்கு உள்ள பொய்கையில் நீராடுவோர்களின் பாவங்கள் நீங்கி விடும்.
சிவன் பெருந்தவம் புரிந்து மாயவனைப் பணிந்த அப்பிலத்தின் பெயர்
அகோபிலம் என்பது ஆம். அதன் பெருமை அளவிடற்கு அரிது என்று கூறிப்
பின்னர் கோனேரியின் சிறப்பினைக் கூறத் தொடங்கினான் ”—
இப்படியாக எழுதிக்கொண்டே போகிறார் இத் தமிழ்ப் பண்டிதர்
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் சொல்கிறார்;–
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹனின் மந்த்ரங்கள் கணக்கில் அடங்காதவை .அவைகளை
மனத்தில் இருத்துவது சாத்தியமில்லை. அதனால், ஸர்வக்ஞனான ருத்ரன்
ஸ்ரீ ந்ருஸிம்ஹனிடம் பெற்ற அனுபவத்தை எல்லாம் மந்த்ரங்களுக்கு எல்லாம்
ராஜாவான ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரத்தை ஒவ்வொரு பதமாக
விவரித்து அருளி உள்ளான். இதுவே ஸ்ரீ மந்த்ர ராஜ பத ஸ்தோத்ரம் என்கிறார்
இது அஹிர்புத்ந்ய சம்ஹிதையில் இருக்கிறது. அஹிர்புத்ந்யன் என்று
ஈஸ்வரனுக்குப் பெயர். இந்த ஸ்தோத்ரம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்தில், ஸ்ரீ ந்ருஸிம்ஹ அநுஷ்டுப் மந்த்ரம்
சொல்லப்பட்டுள்ளது. இது, மிக மிக சக்தி வாய்ந்த மந்த்ரம் .அநுஷ்டுப் சந்தஸ்—
இவைகளைப் பற்றி ” கேட்பதும் சொல்வதும்” என்கிற தலைப்பில் ஸ்ரீ காஞ்சிப்
பேரருளாளன் மாதப் பத்ரிகையில் எழுதி இருக்கிறேன் ——-
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||
32 அக்ஷரங்கள்—-ஒவ்வொரு அக்ஷரமும், ஒரு ப்ரஹ்ம வித்யையைக் குறிக்கிறது . .
இப்படி 32 ப்ரஹ்ம வித்யைகளாலும் ஆராதிக்கப்படுகிறவன் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் .
11 பதங்கள் . இந்தப் பதினொன்று என்பது ஏகாதச ருத்ரர்களைக் குறிக்கிறது
என்றும், 11 ருத்ரர்களும் ந்ருஸிம்ஹனை ஸ்தோத்ரம் செய்வதாயும் சொல்வர்.
11 ச்லோகங்கள்—-12வதாக, பலச்ருதி—
ஈச்வர உ வாச ;—
வ்ருத்தோத்புல்ல விசாலாக்ஷம் விபக்ஷ க்ஷய தீக்ஷிதம் |
நிநாதத் ரஸ்த விஸ்வாண்டம் விஷ்ணும் உக்ரம் நமாம்யஹம் ||
2. ஸர்வைரவத்யதாம் ப்ராப்தம் ஸபலௌகம் திதே :ஸுதம் |
நகாக்ரை : ஸகலீசக்ரே யஸ்தம் வீரம் நமாம்யஹம் ||
3. பதாவஷ்டப்த பாதாளம் மூர்த்தாவிஷ்ட த்ரிவிஷ்டபம் |
புஜப்ரவிஷ்டாஷ்ட திஸம் மஹாவிஷ்ணும் நமாம்யஹம் ||
4.ஜ்யோதிம்ஷ்யர்க்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீந்யநுக்ரமாத் |
ஜ்வலந்தி தேஜஸா யஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம் ||
5. ஸர்வேந்த்ரியைரபி விநா ஸர்வம் ஸர்வத்ர ஸர்வதா |
யோ ஜாநாதி நமாம்யாத்யம் தமஹம் ஸர்வதோமுகம் ||
6. நரவத் ஸிம்ஹவச்சைவ யஸ்ய ரூபம் மஹாத்மந :
மஹாஸடம் மஹாதம்ஷ்ட்ரம் தம் ந்ருஸிம்ஹம் நமாம்யஹம் ||
7. யந்நாமஸ்மரணாத் பீதா:பூத வேதாள ராக்ஷஸா : |
ரோகாத்யாஸ்ய ப்ரணஸ்யந்தி பீஷணம் தம் நமாம்யஹம் ||
8. ஸர்வோபி யம் ஸமாஸ்ரித்ய ஸகலம் பத்ரமஸ்நுதே |
ஸ்ரியா ச பத்ரயா ஜூஷ்ட : யஸ்தம் பத்ரம் நமாம்யஹம் ||
9.சாக்ஷாத் ஸ்வகாலே ஸம்ப்ராப்தம் ம்ருத்யும் சத்ருகணான்விதம் |
பக்தாநாம் நாஸயேத் யஸ்து ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||
10. நமஸ்காராத்மகம் யஸ்மை விதாய ஆத்மநிவேதனம் |
த்யக்த துக்கோகிலாந் காமாந் அஸ்நந்தம் தம் நமாம்யஹம் ||
11. தாஸபூதா : ஸ்வத: ஸர்வே ஹ்யாத்மாந : பரமாத்மந : |
அதோஹமபி தே தாஸ : இதி மத்வா நமாம்யஹம் ||
12. ஸங்கரேணாதராத் ப்ரோக்தம் பதாநாம் தத்வ நிர்ணயம் |
த்ரிஸந்த்யம் ய : படேத் தஸ்ய ஸ்ரீர் வித்யாயுஸ்ய வர்ததே ||
சுருக்கமான அர்த்தம்–
ஈச்வரன் சொல்கிறான்:—
1.விசாலமான திருக்கண்களுடன், பக்தர்களைக் கடாக்ஷித்துக் கொண்டு,
அவர்களின் விரோதிகளை நடுநடுங்கச் செய்துகொண்டு , உக்ர ரூபமாக
விளங்கும் ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்
2. பகவானுடைய ஸ்ருஷ்டியில் அடங்கிய ஒருவராலும் ,சாகா வரம்பெற்ற
திதியின் பிள்ளையான ஹிரண்யகசிபுவை, தன்னுடைய நகங்களின் நுனியாலேயே
ஸம்ஹரித்த நிகரற்ற வீரனை நமஸ்கரிக்கிறேன்
3. பாதாள லோகத்தில் திருவடிகள்; தேவ லோகத்தில் கிரீடம் ;எட்டுத் திக்குகளிலும்
புஜங்கள்; இப்படி விச்வ ரூபமெடுத்த ஸ்ரீ மகாவிஷ்ணுவான ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
நமஸ்கரிக்கிறேன்
4.ஸுர்யன், சந்த்ரன் ,நக்ஷத்ரங்கள், அக்னி —இவைகளுக்கெல்லாம் ”ஜ்யோதிஸ் ” என்பதை
யார் அனுக்ரஹித்தாரோ ,அந்த ஜ்வலிக்கும் ஜ்யோதியான பரமாத்ம ஸ்வரூபமான
ஸர்வேச்வரனை நமஸ்கரிக்கிறேன்
5. இந்த்ரியங்கள் உதவி இல்லாமலேயே, ப்ரத்யக்ஷத்தாலே எல்லாவற்றையும்
எக்காலத்திலும் எல்லா இடங்களிலும் அறிபவனான ”ஸர்வதோமுகன் ” ஆகிய
ஜகத்துக்கெல்லாம் காரணமான பகவானை நமஸ்கரிக்கிறேன்
6. பக்தர்களைக் காக்கவும் , அவர்களின் விரோதிகள் அஞ்சவும், விரோதிகளை அப்போதே
அழிப்பவன் என்பதாக மனுஷ்ய சரீரத்துடன்,பயங்கர சிம்ஹ முகத்துடன், பிடரிக் கேசங்களுடன்,
கோரைப் பற்களுடன் ,தானே ஒரு அவதாரத்தைத் தேர்ந்தெடுத்து, பக்தர்களை அனுக்ரஹிக்க
அவதாரம் செய்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்
7. எந்தப் பகவானின் திருநாமத்தை ஸ்மரித்த மாத்திரத்திலேயே பூதங்கள், வேதாளங்கள்
ராக்ஷஸர்கள் என்கிற வெளிப்புறப் பகைவர்களும், வியாதி போன்ற உட்புற விரோதிகளும்
இருக்குமிடம் தெரியாமல் அழிவார்களோ, அந்தப் பகவானான ,பயங்கரமான ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
நமஸ்கரிக்கிறேன்
8. உலகில் உள்ளோர் யாரை ஆச்ரயித்து, சகல க்ஷேமங்களையும் அடைகிறார்களோ
அப்படி க்ஷேமத்தை அருள்வதால், ”பத்ரை ” என்ற பெயருள்ள ஸ்ரீ மஹாலக்ஷ்மி
எந்த பகவானை ஆச்ரயித்து இருக்கிறாளோ, அப்படிப்பட்ட ”பத்ர ”என்கிற சப்தத்துக்கு
அர்த்தமாக இருக்கிற பகவானை நமஸ்கரிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன்
9. பகவானுடைய பக்தர்களை, யமன் நெருங்கமாட்டான் என்றாலும், இதை உணராத
யமன் ,சாமான்யர்களை நெருங்குவதுபோல , பக்தர்களின் மரண சமயத்தில்
நேரே போனாலும், அவனையும் காம, க்ரோத முதலான சத்ருக் கூட்டங்களையும்
களைந்து அருளுகிற யமனுக்கும் யமனான நமஸ்கரிக்கிறேன் நமஸ்கரிக்கிறேன்ஸ்ரீ ந்ருஸிம்ஹனை நமஸ்கரிக்கிறேன்
10. எந்தப் பகவானிடம் சரணாகத சமர்ப்பணத்தைச் செய்து, சகல துக்கங்களும்
அழிந்து, சகல புருஷார்த்தங்களையும் பெறுவேனோ , அந்த ஸ்ரீ ந்ருஸிம்ஹனை
சரணம் அடைகிறேன்
11. சேதனர்கள் எல்லாரும் , பகவானுக்குத் தாஸர்கள்.–ஹே–ந்ருஸிம்ஹா —
அடியேனும் உனக்குத் தாஸன் என்கிற சேஷ—சேஷி ஞான பூர்வமாக
உம்மைச் சரணமாக அடைகிறேன்
12. இப்படி, இந்த மந்த்ர ராஜ பதங்களின் உண்மையான அர்த்தங்கள் ஈச்வரனால்
மிகவும் கருணையுடன் உரைக்கப்பட்டது. இதை, காலையிலும், மத்யான்ன
வேளையிலும் ,சாயங்காலத்திலும் சொல்பவர்கள், ஸத்வித்யை , பக்தி ,ஆயுள்,
ஸம்பத்து , ஞானம் –இவற்றைப் பெற்று விளங்குவர்
இந்த மந்த்ரராஜ பத ஸ்தோத்ரத்தைத் தினமும் 11 தடவை,
சொல்லுங்கள்—-தினமும் மூன்று வேளையும் ஒரு தடவையாவது
சொல்லுங்கள். வியாதிகள் ,பீடைகள் ,பூதங்கள், பிசாசங்கள் , இவைகளின்
தொந்தரவுகள் தொலையும்; விரோதிகள் மறைவர்;கடன் தொல்லை
நீங்கும்;ஸம்பத்துகள் பெருகும்; எண்ணங்கள் ஈடேறும் —
ஸ்ரீ ந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ர அக்ஷரமாலா —மந்த்ரங்களும்
மிகவும் சக்தி வாய்ந்தவை —-
ஓம் உம் யோ வை ந்ருஸிம்ஹோ –தேவோ பகவான் யஸ்ச ப்ரஹ்மா
தஸ்மை வை நமோ நம :
என்று ஆரம்பித்து, 32வதாக,
ஓம் ஹம் ஓம் யோ வை ந்ருஸிம்ஹோ தேவோ பகவான் யஸ்ச ஸர்வம்
தஸ்மை வை நமோ நம
என்று முடியும் —மிக அருமையான அக்ஷர மாலா —
இவற்றை எல்லாம் விரிக்கின் பெருகும்—-வாசகர்கள், இப்போதே
முகம் சுளித்தாலும் சுளிக்கலாம்.
