viyappathaa—?

Posted on Jun 14 2016 - 7:22am by srikainkaryasriadmin

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

அடியேன் , உத்யோகத்தில்  கிளார்க் முதல், மாவட்ட கலெக்டர் வரை

வந்து, தமிழ்நாடு அரசாங்கத்தில் பற்பல உயர் பதவிகள் வகித்து,

எண்ண  இயலாத விழாக்களுக்குத் தலைமை வகித்தும், தீவிரப்

பங்கு கொண்டும் –இப்போதுள்ள ஜனாதிபதி வரை வரவேற்றும்,
அவற்றுக்கான போட்டோக்கள், பராமரிக்க இயலாமல் பாழாகும்

அளவுக்கு இருந்தும்,  சமீப காலமாகச் சில சந்தர்ப்பங்களில்,
சொல்லடி படுகிறேன்.
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

2.அடியேன், ”வருவாய்த் துறையும் நானும்” என்று எழுதிவருகிறேன்.
அது,  முடியும் தருவாயில் உள்ளது.  40 ஆண்டுகால உத்யோக வாழ்வில்
நேர்ந்த  அனுபவம், இப்போதுள்ள நிலை, இவற்றை எப்படி சீர்திருத்தவேண்டும்
என்பதை எல்லாம் அந்தப் புத்தகத்தில்,எழுதியுள்ளேன். சில முக்கிய
போட்டோக்களையும் இணைக்க இருக்கிறேன்.

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

3. உருப்பட்டூர் ஆச்சான் வம்ஸத்தில் பிறந்து  , திருவஹீந்த்ரபுரம்
அடியவர்க்கு மெய்யன் திவ்ய தம்பதியர்க்கும் ,பரமாசார்யன்
ஸ்வாமி தேசிகனுக்கும், வேதபாராயண கைங்கர்யம் , புஷ்ப கைங்கர்யம்
செய்தவர்களை முன்னோர்களாக அடைந்து, ஔஷதகிரியில் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கு

மஹா மண்டபம் எழுப்பி, இவை போதாது என்கிற தாபத்தில் இருக்கிறேன்.

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

4. ஸ்ரீரங்கம் அருகே கோபுரப் பட்டி கிராமத்தில், ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கு,
ஒரு சந்நிதி கட்டி , ஸ்ரீ உ.வே. முரளி பட்டர் மூலமாகச் ஸமர்ப்பித்தேன்.

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

5. திருக்கோவிலூரை  அடுத்த ஆவியூரில் (முன்னோர்களின் ப்ராசீன கிராமம்)
ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவிலில் ,  புதிதாகக் காட்டப்படும் மூன்று நிலை(3tier)
கோபுரங்களில் ,ஒரு நிலையை ( one tier ) ஏற்றுக் கட்டி வருகிறோம்.இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?
6. நமது வைணவம், ஸ்ரீ தேசிக ஸம்ப்ரதாயம், ஆசாரம் ,ஆரோக்ய வாழ்வுக்குத்
தேவை என்பதாகப் பற்பல சின்னச் சின்ன விஷயங்கள், இக்கால சந்ததியினர்
நிலை—  எப்படி வாழ்க்கையை நடத்தவேண்டும், பகவானை ஏன் அடையவேண்டும்
108 திவ்ய தேச வைபவம் , என்பன போன்றவைகளுக்கு எல்லாம் 20க்கும் மேலாகப்
புத்தகங்களை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

7.தசமஸ்கந்தத்தில் , ஹே—கிருஷ்ணா என்று நேரிடையாகப் பேசி இருக்கிறேன்.
பகவானுக்கு, ”மற்றவை நேரில் ” என்று 108 முறை எழுதி இருக்கிறேன்.
”கேட்பதும், சொல்வதும் ” என்று 1008 முக்ய விஷயங்களை எழுதி இருக்கிறேன்.
 ”கதம்ப மாலா ”என்று ஸ்ரீ ஹயக்ரீவன் விஷயமாக—ஸமர்ப்பித்து இருக்கிறேன்.
துயரில் துன்புற்றவர்கட்கு, அடியேனுக்குத் தெரிந்த மந்த்ரங்களைச் சொல்லி,
அவர்கள் அத் துயரத்திலிருந்து விடுபட , அச்சுதனை வேண்டி இருக்கிறேன்.
”தீட்டு”, பிதுர் கர்மாக்கள், நவக்ரஹங்கள் கொடுக்கும் துன்பத்தைத் தடுக்க,
நமது ஸம்ப்ரதாயமான முறைகள் –”கோவிந்தன் துணை இருக்கக் கோள்

என் செயும் ? ” இப்படியெல்லாம் எழுதி இருக்கிறேன்.

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

8. பரம ரசிகர்களின் உதவியால், ”ஸ்கைப்பி”ல்
பல உபன்யாசங்கள் செய்திருக்கிறேன்.  ஸ்ரீ பரவாக்கோட்டை ஆண்டவன்
ஆசியுடன், ”ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் ” காலக்ஷேபமாகச் சொல்லி இருக்கிறேன்

வீட்டு அகல் விளக்காக இருக்கிறேன்

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

9.முடிந்தது—-பிறந்து 80 ஆண்டுகள் முடிந்தது—மேலத் திருப்பதியில்,
யஜுர் வேத பாராயணம் 5 நாட்களுக்குமேல்  நடந்தது—திருவேங்கடமுடையான்
திருச் செவி சாத்தினான். பெரிய பிராட்டியின் திருவாபரணமான ”மெட்டி”
மஹா வாத்ஸல்ய வைபவமாக –ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டது
இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?
10.ஆயிற்று—- அடியவர்க்கு மெய்யன் மற்றும் ஆசார்யனுக்கு அனவரதமும்
வேதபாராயண கைங்கர்யம் செய்த வம்சத்தில் வந்தவளைக்  கைப்பிடித்து,
60 வருஷங்கள் ஆகிவிட்டது. ( 13–6–2016 )
ஆமாம்—-விவாஹமாகி, அறுபது ஆண்டுகள் —ஏற்றங்கள்—மாற்றங்கள்–
ஏமாற்றங்கள் —தாழ்வுகள்—உயர்வுகள்—-ஏச்சுக்கள், பாசங்கள்—-பசப்பு வார்த்தைகள்–
வேஷம் அணிந்தவர்கள்—வெறுப்பை உமிழ்ந்தவர்கள் —- !
என்ன செய்தேன்—-?

இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

11. அடியேனுடனேயே , தாயார் ஸ்ரீ ஹேமாப்ஜ வல்லி , ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவன்,
ஸ்ரீ நர்த்தன கிருஷ்ணன் —ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகவே எழுந்தருளி,
நித்யத் திருவாராதனமும், திருமஞ்சனங்களும் கண்டரளுகிறார்கள்.
தாயாரும், பரிமுகனும், வந்து ஸேவிப்பவர்களுக்கும், த்யாநிப்பவர்களுக்கும்
துயர் களைந்து, பிரார்த்தனைக்கு அருள்கிறார்கள் ( இந்த விவரங்களை
விரைவில் எழுதுகிறேன்)இதை வியப்பதா அல்லது வியர்த்தம் என்று தூரத் தள்ளுவதா  —-?

சொல்லுங்கள்—–

20141022_080905
About the Author

3 Comments so far. Feel free to join this conversation.

 1. வெ. ராஜகோபாலன் June 19, 2016 at 10:31 am - Reply

  ஓரளவு ஸ்வாமியின் கைங்கர்யங்கள் பற்றி அறிந்திருந்தேன். ஆனால்.. இதைப் படித்தபோது, இதை வியப்பட்தற்கும் புந்தியிற் கொண்டு போற்றியுகப்பதற்கும் கூட அருகதை இல்லையே என்ற சுயபச்சாதாபம்தான் ஏற்படுகிறது.
  ஆனால், ஒரு நிறைவு. ஸ்வாமி வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். நம்மைப் பார்த்தும் அவர் மந்தஸ்மிதராய் இருக்கிறார்.
  அது போதும்.

  • srikainkaryasriadmin June 19, 2016 at 11:00 am - Reply

   Dhanyosmi—

  • srikainkaryasriadmin October 27, 2016 at 2:51 pm - Reply

   dhanyosmi

Leave A Response