ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —14
——————————
ஸஹஸ்ரநாமம் —முழுவதும் ந்ருஸிம்ஹனே
மஹாபரதம் ,எல்லாருக்கும் தெரியும். இதில் முக்கிமானது ”பகவத் கீதை ”
என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதிலும் முக்யமானது,
ஸ்ரீ ஸஹஸ்ர நாமம். இதில் ,பீஷ்மர் ,முதலில் ந்ருஸிம்ஹனை ஸ்தோத்ரம்
செய்கிறார்—–பகவான் கிருஷ்ணன் எதிரில்—பஞ்சபாண்டவர்கள் மத்தியில்.
3வது –ச்லோகம்-
யோகோ யோக விதாம் நேதா ப்ரதான புருஷேஸ்வர : |
நாரஸிம்ஹ வபு : ஸ்ரீமான் கேசவ புருஷோத்தம : ||
இவன் யார் ?
விச்வம் –யார் ?
விஷ்ணு—யார் ?
வஷட்கார :–யார் ?
பூதபவ்ய பவத்ப்ரபு —–யார் ?
பூதாத்மா—-யார் ?
பரமாத்மா—-யார் ?
முக்தானாம் பரமாகதி : —-யார் ?
அவ்யய : —-யார் ?
புருஷ : —-யார் ?
சாக்ஷி : —-யார் ?
க்ஷேத்ரக்ஞ : —-யார் /
அக்ஷரேவச —-யார் ?
யோகோ யோக விதாம்நேதா ப்ரதான புருஷேச்வரன் –யார் ?
எல்லாமும், நாரஸிம்ஹ வபு : ஸ்ரீமான் –எல்லா நாமாக்களுக்கும்
பொருளாக இருப்பவன்–ஸ்ரீ ந்ருஸிம்ஹன் .
எல்லாவற்றிலும் நிறைந்து இருப்பவன், நாரஸிம்ஹ வபு : ஸ்ரீமான்
ஒரு க்ரந்தத்தைக் கொடுத்து , அதைப் பற்றிக் கேள்வி கேட்டால்,
அதை உடனே ஆராய்ந்து, உபக்ரமம் –உபஸம்ஹாரம்—ஆரம்பம்—
நடு —கடைசி —என்று எல்லாவற்றையும் உற்று நோக்க வேண்டும்.
இப்படி ஸஹஸ்ர நாமத்தைப் பார்த்தோமானால், ஆரம்பத்திலும்
ந்ருஸிம்ஹன் சொல்லப்படுகிறான்;நடுவிலும், பல இடங்களிலும்,
ந்ருஸிம்ஹன் காக்ஷி அளிக்கிறான். ஆயிரம் திருநாமங்களும்,
அவன் பெருமையையே பேசுகின்றன.
ந்ருஸிம்ஹன் –அதியத்புதன் –த்ரிநேத்ரன்
ந்ருஸிம்ஹன், –ஸதஸத்பதி —சதஸ்ஸு க்கு அதிபதி , ஸதஸத்பதிம்
அத்புதம். நாராயணன்–அத்புதன் .ந்ருஸிம்ஹன் —அதியத்புதன்
எப்படி ?
ஸூர்யன் ,வலது நேத்ரம்; சந்த்ரன் , இடது நேத்ரம்; ந்ருஸிம்ஹன்,
மூன்றாவதாக நெற்றியிலே ஒரு நேத்ரம் வைத்துள்ளான்–அக்நி .
மூன்று பட்ட மஹிஷிகள் –அதனால் ”த்ரியம்பகன் ”.
ஸுர்யனுக்கு, ஐஸ்வர்யம் , ஆரோக்யம் , ஞானம் , அன்னம் —என்று
இப்படி எதை வேண்டினாலும் கொடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது.
இப்படி எதை வேண்டினாலும் கொடுக்கக்கூடிய சக்தி இருக்கிறது.
இந்த சக்தி ,சர்வேச்வரன் கொடுத்தது.ந்ருஸிம்ஹனை ஸேவித்தோமானால்,
அவன் நம்மைக் கடாக்ஷிக்கும் போது ,இவை எல்லாமே நமக்கு சங்கல்பிக்கும்
.
.
சந்த்ரன் –தன்னுடைய திவ்ய ரூபத்தாலே எல்லாரையும் ஆகர்ஷிக்கிறவன்.
இவன் அனுக்ரஹத்தால் , பசுக்களும் பாலும், தயிரும், வெண்ணையும்
ஸம்ருத்தியாகக் கிடைக்கும்.நல்ல சத்புத்ரன் எற்படுவான். இப்படியெல்லாம்
அருளும் சோமன் ,ந்ருஸிம்ஹனின் இடது நேத்ரம். ந்ருஸிம்ஹனை
ஸேவித்தோமானால்,அவன் நம்மைக் கடாக்ஷிக்கும் போது ,
இவை எல்லாமே நமக்குக் கிடைக்கும் .
ஸேவித்தோமானால்,அவன் நம்மைக் கடாக்ஷிக்கும் போது ,
இவை எல்லாமே நமக்குக் கிடைக்கும் .
மூன்றாவது நேத்ரம் ”அக்நி ”. அக்னிக்கு, வழிகாட்டி, வித்வான் என்றும் பெயர்.
நல்வழிப்படுத்துபவன் ,இவன். அனைத்தையும் கொடுப்பவன்.
பாவங்களைப் போசுக்குபவன்;
இப்படி த்ரிநேத்ரங்களை உடைவயவன் ந்ருஸிம்ஹன் . அதனாலேயே,
”தபன இந்து அக்நி நயன :” என்று ஆராதிக்கப்படுகிறான்.
இன்னொன்று—ம்ருத்யுவுக்கு ம்ருத்யு ந்ருஸிம்ஹன் (யமனுக்கு யமன் )
அதனால்தான், ம்ருத்யு பயம் போக, சம்சார பயம் நீங்க, ந்ருஸிம்ஹனை
ஆராதிக்கச் சொல்கிறார்கள்.
மந்த்ர சாஸ்த்ரம் —- தந்த்ர சாஸ்த்ரம்—
மந்த்ர சாஸ்த்ரம் , ந்ருஸிம்ஹனைக் கொண்டாடுகிறது.
ஸ்தம்பத்திலிருந்து ஆவிர்பவித்தவன்—ஹிரண்ய ஸ்தம்பம்–
இரணியனால் கட்டப்பட்ட தூண்–ஸ்தம்பம். அந்த ந்ருஸிம்ஹன் ,
நமது ஆயுளுக்கும், அபிவிருத்திக்கும் காரணமாக இருப்பவன்.
முழுஸம்பத்தையும் கொடுப்பவன்—–இப்படி மந்த்ர சாஸ்த்ரம் சொல்கிறது.
தந்த்ர சாஸ்த்ரம், ஒரு படி மேலே போகிறது.
ந்ருஸிம்ஹ மந்த்ர பீஜாக்ஷர யந்த்ரத்தைப் ப்ரதிஷ்டை செய்துவிட்டோமானால்,
அதை சேதிக்கக்கூடிய / சேதனம் பண்ணக்கூடிய இன்னொரு யந்த்ரமோ
மந்த்ரமோ கிடையாது. ந்ருஸிம்ஹ யந்த்ரத்தை அவ்வளவு உயர்வாக,
தந்த்ர சாஸ்த்ரம் சொல்கிறது. இது, சர்வதோ பத்ரம்; சர்வத : பத்ரம்.
ந்ருஸிம்ஹ மந்த்ரம்–இதனால், திக் பந்தனம் பண்ணி, ந்ருஸிம்ஹ மந்த்ர
பீஜாக்ஷர யந்த்ரத்தைப் ப்ரதிஷ்டை செய்துவிட்டோமானால், அதனுள்ளே,
வேறு எதுவும் நுழைய முடியாது.
மந்த்ர ராஜம்
மந்த்ர ராஜம் இதுவே —-மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்
ஈச்வரனாலேயே விளக்கப்பட்ட ஸ்தோத்ரம். ஈச்வர சம்ஹிதையில், மிகவும்
விரிவாக, ஈச்வரன் சொல்கிறார். மூன்று மதாசார்யர்களும் அங்கீகரித்த
ஸ்தோத்ரம். வ்யாக்யானங்களிலே ,எடுத்தாளப்பட்ட ஸ்தோத்ரம்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் |
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம் ||
11 பதங்கள்—-9 பதங்கள் அவனுடைய அளப்பரிய பெருமையைப் பேசுகிறது.
நமாமி—-அஹம் —இரண்டு பதங்களும், சேர்ந்து 11 பதங்கள்.32 அக்ஷரங்கள் .
32 வித்யைகள். நம்மால், ஒரு வித்யையைக் கூட உபாஸிக்கமுடியாது.
32 ப்ரம்ம வித்யைகளால் ,ந்ருஸிம்ஹனை பூஜை செய்த பலன்
வேண்டுமா ? இந்த மந்த்ர ராஜ பாராயணமே போதுமானது.
உக்ரம் நமாம்யஹம்
வீரம் நமாம்யஹம்
மஹாவிஷ்ணும் நமாம்யஹம்
ஜ்வலந்தம் நமாம்யஹம்
ஸர்வதோமுகம் நமாம்யஹம்
ந்ருஸிம்ஹம் நமாம்யஹம்
பீஷணம் நமாம்யஹம்
பத்ரம் நமாம்யஹம்
ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்
மிக மிக உயர்ந்ததான மந்த்ரம். ஜபம் பண்ணப்பண்ண , தேடிவரும் பலன்கள்
அளவிடமுடியாதவை. எல்லாத் தேவதைகளும், ப்ரம்மாவிடம் போய்
எம்பெருமானைப் ப்ரத்யக்ஷமாகத் தரிசிக்க வேண்டுமென்றால், எதைச்
சொல்லவேண்டும் ?—எதைச் சொன்னால், நேரில் வருவான் என்று கேட்டார்களாம்.
அதற்கு, ப்ரம்மா
ந்ருஸிம்ஹ பூர்வ தாபநீய உபநிஷத்
ந்ருஸிம்ஹ உத்தர தாபநீய உபநிஷத்
இவைகட்குச் சாரமாக இருப்பவன் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் . 32 அக்ஷரங்களோடு கூடிய
மந்த்ரராஜத்தைச் சொன்னீர்களானால், நேரில் வருவான் —-என்றாராம்.
32 அக்ஷரங்களையும் தனியாகப் பிரித்து, அந்தந்த அக்ஷரங்களுக்கு உள்ள
தேவதைகளைச் சொல்லி, அந்தந்த அக்ஷர தேவதைகளுக்கு அந்தர்யாமியாய்
ஸ்ரீ ந்ருஸிம்ஹன் இருக்கிறான் என்று உணர்ந்து, நித்யமே பாராயணம் செய்தால்,
அவர்கள் எல்லாக் கர்ம பந்தங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்; எல்ல யஜ்ஞங்களும்
செய்த பலன் கிடைக்கிறது. —இப்படி, பலச்ருதி கூறுகிறது
இந்த அக்ஷர மாலாவை, அடியேன் 11வது பாகத்தில் சொல்லியிருக்கிறேன்.
அடியேன் வேண்டுவதெல்லாம் இதுவே—
மந்த்ரராஜ பத ஸ்தோத்ரம் மற்றும் இந்த அக்ஷர மாலா –நித்யமும் பாராயணம்
செய்யுங்கள் —
ஸ்ரீ ந்ருஸிம்ஹனுடைய மகா அட்டஹாஸம் —இதற்கான மந்த்ரம் ஓரெழுத்து முதல்
32 எழுத்து மந்த்ரமாக, 132 எழுத்து மந்த்ரமாக, 1032 எழுத்து மந்த்ரமாக,10,032,
1, 00,132 —-என்று மிக விரிந்து போகிறது. யாவுமே பலன் தரக்கூடியது. ந்ருஸிம்ஹ
மந்த்ரத்தைக் காட்டிலும் சிறிய மந்த்ரம் இல்லை; மிகப் பெரிய மந்த்ரமும் இல்லை.
அணோரணீயான் மஹதோ மஹீயான் —-என்று உபநிஷத் சொல்கிறது.
மிகச் சிறிய மந்த்ரத்திலும் அவன் இருக்கிறான்; மிகப் பெரிய மந்த்ரத்திலும்
அவனே இருக்கிறான்.
விஷ்ணு தர்மம் சொல்கிறது—
”நாராயணேதி யஸ்யாஸ்யே வர்ததே நாம மங்களம் ”
”ஆஸ்யம் ” என்றால், வாய். மஹாஸ்ய : –என்றால் ந்ருஸிம்ஹன் . ”பில வாய் ”
அவனுடையது. வாயே குகை போல இருக்கும்.
அஹோபில க்ஷேத்ர
ந்ருஸிம்ஹனை, திருமங்கை மன்னன் ”அலைத்த பேழ்வாய் வாள் எயிற்று
ஓர் கோளரி ஆய் அவுணன் ” என்கிறார் , ஸேவித்த தேவதைகள் எல்லாரும்,
அஹோபில க்ஷேத்ர
ந்ருஸிம்ஹனை, திருமங்கை மன்னன் ”அலைத்த பேழ்வாய் வாள் எயிற்று
ஓர் கோளரி ஆய் அவுணன் ” என்கிறார் , ஸேவித்த தேவதைகள் எல்லாரும்,
இந்த ந்ருஸிம்ஹனின் அசாத்ய பராக்ரமத்தைப் பார்த்து, இதை வர்ணிக்கவே
இயலாது என்றார்களாம்.
திருமங்கை மன்னன் , இந்த திவ்ய தேசத்துக்கு வந்து,
இந்த எம்பெருமானை மங்களாசாஸனம் செய்தபோது, சிங்கங்கள்,
இந்த எம்பெருமானை மங்களாசாஸனம் செய்தபோது, சிங்கங்கள்,
ஒவ்வொரு யானையாக அடித்துக் கொன்று தின்று விட்டு, மீதி இருக்குமே–தந்தங்கள்–
அவற்றை ஒவ்வொன்றாக , இந்த ந்ருஸிம்கனின் திருவடியில் சேர்த்து,
”ஓம் விச்வச்யை நம : ” என்று அர்ச்சனை செய்கின்றனவாம் .
மின்னல் போல —அவதாரம்
முப்பத்து முக்கோடி தேவர்கள் ப்ரார்த்தனையை ஏற்று, ராம, லக்ஷ்மண,பரத,
சத்ருக்னர்களாக –நான்கு உருவத்திலே வந்தான். இங்கு, ஒரு சின்னக்
குழந்தை பிரார்த்திக்க, சடாரென்று, ப்ரஸன்னமானான் ந்ருஸிம்ஹன்.
இவன் அழகியான்—
அழகியவன்–அழகே உருவெடுத்தவன்—ஸ்ரீ பராசர பட்டர் , மிகவும் உருகுகிறார்.
அந்தத் திருமேனியைப் பாருங்கள்—பாலும், சர்க்கரையும் சேர்ந்தாற்போல ,என்கிறார்.
பால் தனியாக அருந்தினால் ஒரு ருசி; சர்க்கரையைத்(நாட்டுச் ) தனியாக வாயில்
போட்டுக்கொண்டால், அது ஒரு ருசி. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அனுபவித்தால்,
அது நரமும், சிங்கமும் சேர்ந்த நேர்த்தியான தெவிட்டாத ருசி.
போட்டுக்கொண்டால், அது ஒரு ருசி. இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து அனுபவித்தால்,
அது நரமும், சிங்கமும் சேர்ந்த நேர்த்தியான தெவிட்டாத ருசி.
ந்ருஸிம்ஹனை ஸேவித்தபிறகு, மற்றொன்றிலே மனஸ் ஈடுபடுமா–படாது.
ருக்மிணிப் பிராட்டி, ந்ருஸிம்ஹனை ”பொய்யில்லாத பெருமாள் ” என்கிறாள்.
”அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கை வைத்து ” என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள்.
ந்ருஸிம்ஹ தாபநீய உபநிஷத்துக்கு, விசேஷமாக ஸ்ரீ ஆதி சங்கரர் ,பாஷ்யம்
எழுதியிருக்கிறார்.
( வரப்போகும் பாகங்களில்–இதில், முக்யமானதை எழுதவிருக்கிறேன் )
( வரப்போகும் பாகங்களில்–இதில், முக்யமானதை எழுதவிருக்கிறேன் )
ஐந்து ஞாநேந்த்ரியங்களாலே ,விசேஷமாக மனஸ்ஸை ஒருமுகப்படுத்தி,
யோகிகள் த்யானம் செய்கிறார்களே , அவர்களின் ஹ்ருதயத்திலே
அட்டகாசமாக அமருகிறான், ந்ருஸிம்ஹன்
அஷ்டாங்க யோகம் ( யம, நியம,ப்ராணாயாம ,ப்ரத்யாஹார, தாரண,
ஆஸன , ஸமாதி—-இவைகளைப் பற்றி விரிவாக ,”கேட்பதும்–சொல்வதும்—”
என்கிற தலைப்பில், ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் பத்ரிகையில்
அஷ்டாங்க யோகம் ( யம, நியம,ப்ராணாயாம ,ப்ரத்யாஹார, தாரண,
ஆஸன , ஸமாதி—-இவைகளைப் பற்றி விரிவாக ,”கேட்பதும்–சொல்வதும்—”
என்கிற தலைப்பில், ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் பத்ரிகையில்
எழுதி இருக்கிறேன் ) செய்யும் மஹா யோகிகளுக்கு தர்ஸனம் கொடுக்கிறான்.
மஹாயோகி
இவனுக்கே, மஹாயோகி என்கிற திருநாமம். சோளிங்கபுரத்திலே
”யோகாத்ருடா ” என்பதாக, யோக ந்ருஸிம்ஹனாக ஸேவை சாதிக்கிறான்.
திருமங்கை ஆழ்வார், இவனை, ”மிக்கான் ” என்கிறார்; ”தக்கான் ” என்கிறார்.
இவன் ”நரனா ?”—இல்லை; ”சிங்கமா?” —இல்லை . பிறகு–நரம் கலந்த சிங்கம்
நரசிங்கம்–நரசிம்மம்—ந்ருஸி ம்ஹன் —
ஸிம்ஹம், குகையில்தான் இருக்கும்;நீங்களும், இவனை உங்கள் ஹ்ருதய குகையிலே
இருத்துங்கள்—-
உங்கள் ஹ்ருதய குகைக்கு, நிச்சயம் வருவான்; குழந்தை ப்ரஹ்லாதன், இந்தத்
தூணிலும் இருக்கிறான் என்று, இரணியனுக்குச் சொன்ன மறுகணம், அவசரம்
அவசரமாக, அதிவேகமாக வந்து சேர்ந்தவன் அவன் !தாய் யார், தகப்பன் யார் என்று
ஏதாவது யோசனை செய்தானா ! ”வித்யுத்”—மின்னல் போல அவதாரம் செய்தவன்.
வேகமான திருக்கோலம்; அவசரத் திருக்கோலம்; ஆனாலும், என்ன அழகு ! என்ன அழகு!!
ந்ருஸிம்ஹ ஆவிர்பாவம்—-அத்யத்புதம்
இந்த ந்ருஸிம்ஹ ஆவிர்பாவம், ப்ரஹ்லாதனை ரக்ஷிப்பதற்காகவா ?
இல்லை, இல்லை–பின்பு எதற்காக ?நேரில் தோன்றாமலேயே எத்தனையோ தரம்
ப்ரஹ்லாதனைக் காப்பாற்றவில்லையா ? ஒரே காரணம்—ப்ரஹ்லாதனின் வார்த்தையைக்
காப்பாற்ற ,இந்த ஆவிர்பாவம்—– இந்த அவதாரம்—-
இது அத்யத்புதமான அவதாரம்—யார் சொல்வது ? ஸ்ரீ வ்யாஸர்.
ஸ்ரீ க்ருஷ்ணாவதாரத்தை ”தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்” என்று ஸ்ரீமத் பாகவதத்தில்
சொன்னவர், ஸ்ரீ ந்ருஸிம்ஹ அவதாரத்தை, ”அத்ருச்யத அத்புதம் ” என்கிறார்.
க்ருஷ்ணாவதாரம் , அத்புதம் என்றால் ந்ருஸிம்ஹாவதாரம் அத்யத்புதம் என்கிறார்.
க்ருஷ்ணாவதாரம் , அத்புதம் என்றால் ந்ருஸிம்ஹாவதாரம் அத்யத்புதம் என்கிறார்.
ந்ருஸிம்ஹன் ,ஸ்தம்பத்தைப் பிளந்துகொண்டு ஆவிர்பவித்தபோது, ஒரு ஸப்தம்
கேட்டதே ,அந்த ஸப்தம்தான் எல்ல மந்த்ர ஸப்தங்களிலும் , ஒருசேரக் கலந்து
ஒலிக்கிறது .
————————–இன் னும் தொடரும்———————– —