ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —15
மந்திபாய்வட வேங்கட மாமலை ,வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத் தரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோரெழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே
திருப்பாணாழ்வார் , அமலனாதி பிரானில் ரங்கநாதனை மங்களாசாஸனம்
செய்யும்போது, வடவேங்கட மாமலை என்கிறார்; வானவர்கள் சந்தி செய்ய
நின்றான் என்றார்
திருவேங்கட மாமலையில், வானத்திலிருந்து தேவ, கந்தர்வ , இந்த்ராதிகளையும்,
மாமலைக்குக் கீழே பூமிவாஸிகளான நம்மையும் தன்னுடைய
திருவோலக்கத்தில் சந்திக்க வைக்க நின்றான்.
திருவோலக்கத்தில் சந்திக்க வைக்க நின்றான்.
அவர்களை, மலைக்கு இறங்கச் சொன்னான்;நம்மை மலைக்கு ஏறச் சொன்னான்.
சந்திக்கச் செய்ய, மாமலை மீது நிற்கிறான்.
இந்த மாமலை, மந்திபாய் வடவேங்கடம். குரங்குகள், அங்குமிங்கும் குதித்தாடும்
பாய்ந்து ஓடும் மாமலை. சப்தகிரி-ஏழுமலை –ஒன்று சேர்ந்து மாமலை—
இவன் ஏழுமலையான். இந்த ஏழில் ஒன்று—வ்ருஷபாசலம் –
வ்ருஷபாசலம்
ரிஷபாசுரன் –பெரிய அசுரன். சாமான்யமானவன் இல்லை; மூன்று நேத்ரங்களை
உடைய ந்ருஸிம்ஹ சாளக்ராமத்தை ஆராதிப்பவன். ரொம்ப நிஷ்டன்; அசாத்யமாக
த்யானம் செய்தான். ந்ருஸிம்ஹனே நேரில் பிரத்யக்ஷமானான்.
பகவான் கேட்கிறான்—–
உனக்கு என்ன வேண்டும் ?
என்னதான் , த்ரிநேத்ர ந்ருஸிம்ஹ சாளக்ராமத்தை நிஷ்டையுடன் ஆராதித்து
வந்தாலும், அசுர குணம் வெளிப்படுகிறது—–பதில் சொல்கிறான்.
”உம்முடன் சண்டை போடணும் ”
”அப்படியா—சண்டை போடேன்— என்றார்.
ந்ருஸிம்ஹன் , அவன் தட்டுவதைஎல்லாம் தாங்கிக்கொண்டார். பிறகு அவனுக்கு,
ஒரே தட்டு; அவன் ப்ராணன் விடுகிற சமயம்—- அசுரன் பேசுகிறான்
”உம்மிடம் சண்டை போட வேண்டும் ,என்று ப்ரார்த்தித்துத் தப்பு பண்ணிவிட்டேன்;
அடியேனுக்கு, மோக்ஷமாகிய உம்முடைய திருவடி கிடைக்கப்போகிறது—
இந்தச் சமயத்தில் ,அடியேனுக்கு ஒரு வரம் அருள வேண்டும்—தேவரீருடன்
சண்டையிட்டு, இந்த இடத்தில் உயர்ந்த கதி அடைந்ததாலே, இந்த மலை
அடியேனுடைய பெயரில் விளங்க வேண்டும்—-“
ந்ருஸிம்ஹன் ”ததாஸ்து” என்றார்.
ஆதலால், இந்த மலை—- வ்ருஷபாத்ரி–வ்ருஷபாசுரன் , ந்ருஸிம்ஹ
உபாஸநம் பண்ணிய மலை.
இது மட்டுமா —!
மலைகுனிய நின்று கொண்டிருக்கிறானே—-திருவேங் கடமுடையான்— அவனும்
இந்த இடத்தில் ந்ருஸிம்ஹ உபாஸநம் செய்தானாம்.
இஞ்சிமேட்டு அழகியசிங்கர் சாமர்த்யமாகச் சொல்வாராம்.
இஞ்சிமேட்டு அழகியசிங்கர் சாமர்த்யமாகச் சொல்வாராம்.
”ராமன் , பட்டாபிஷேகத்துக்கு முன்பாக, அயோத்தி அரண்மனையில்,
இக்ஷ்வாகு குலதனமான ரங்கநாதனை ,சீதையோடு போய்ச் ஸேவித்துவிட்டு
வந்தான். ஆனாலும், பட்டாபிஷேகம் தடைப்பட்டது.
இக்ஷ்வாகு குலதனமான ரங்கநாதனை ,சீதையோடு போய்ச் ஸேவித்துவிட்டு
வந்தான். ஆனாலும், பட்டாபிஷேகம் தடைப்பட்டது.
ஆனால் , ஸ்ரீநிவாஸனோ ,இங்கு மலைகளிலும், வனத்திலும் குதிரையில்
அமர்ந்து, அங்குமிங்கும் திரிந்து, ந்ருஸிம்ஹனை ஆராதித்தான்;
இங்கு ஏழுமலையானாக , திருமார்பில் ஸ்ரீயைத் தாங்கிய வண்ணம், நித்ய ஸ்ரீயுடன்
இங்கு ஏழுமலையானாக , திருமார்பில் ஸ்ரீயைத் தாங்கிய வண்ணம், நித்ய ஸ்ரீயுடன்
கொண்டாடப்படுகிறான்—”
ஸ்ரீநிவாஸ விவாஹத்தில் , ஏகப்பட்ட தளிகைகள்—அக்னியே வந்து தளிகை
செய்தானாம். தளிகைஎல்லாம் ஆகி, முதல் நிவேதனம் யாருக்கு என்று ,பிரம்மா,
திருக்கல்யாண மணவறையில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீநிவாஸனைக் கேட்டாராம்;
திருக்கல்யாண மணவறையில் அமர்ந்து இருக்கும் ஸ்ரீநிவாஸனைக் கேட்டாராம்;
”அஹோபில ஸ்ரீ லக்ஷ்மிந்ருஸிம்ஹனுக்கு, நிவேதனம் ஆகட்டும்” என்றாராம்.
யதாவிதியாக ஆகட்டும் என்றாராம் —-அதாவது–முறையாக–க்ரமமாக —
ஒரு கோவிலில், ராமன், கிருஷ்ணன். ந்ருஸிம்ஹன் என்று தனித் தனி
சந்நிதிகள் இருந்தால், முதலில் நிவேதனம் ந்ருஸிம்ஹனுக்குத்தான் என்று
வைகுண்டவாஸி முக்கூர் லக்ஷ்மிந்ருஸிம்ஹாசார்யர் சொல்வார்.
இதேதான், திருவேங்கடமுடையான் திருக்கல்யாணத்திலும் நடந்தது.
ந்ருஸிம்ஹன் —பெரிய பெரிய பெருமாள்
திருவரங்கத்து ரங்கநாதன் ,பெரிய பெருமாள். ராமபிரானால் வணங்கப்பட்டதால்
பெரிய பெருமாள் ஆனார்.
ந்ருஸிம்ஹனோ , திருப்பதி எம்பெருமானாலும் ஆராதிக்கப்பட்டவர்.
ராமபிரானாலும், அஹோபிலத்தில் ,ஸேவிக்கப்பட்டவர். ( ராவணனை ஜெயிக்க
ந்ருஸிம்ஹனோ , திருப்பதி எம்பெருமானாலும் ஆராதிக்கப்பட்டவர்.
ராமபிரானாலும், அஹோபிலத்தில் ,ஸேவிக்கப்பட்டவர். ( ராவணனை ஜெயிக்க
வேண்டியதான பலத்தை,மாலோலனை ஸேவித்துப் பெற்றார் ) ஆக ,
இரண்டு எம்பெருமான்களாலும் ஸேவிக்கப்பட்டவர்—ஆதலால்,
பெரிய பெரிய பெருமாள் என்று கொண்டாடப்படுகிறார்.
பெரிய பெரிய பெருமாள் என்று கொண்டாடப்படுகிறார்.
விஷ்ணு புராணம் சொல்கிறது—–
ஹே—-விஷ்ணு—-ஹே—நாராயணா– -நீ எங்கும் பரவி இருக்கிறாய்’ எப்போதும்
பரவி இருக்கிறாய். இது தர்ம சூக்ஷ்மம் ; ஆனால், நீ என்ன செய்தாய்—
அப்படி நீ பரவி இருக்கிறாய் என்பதை எல்லோரும் உணரவேண்டும்
என்பதாலேயே ந்ருஸிம்ஹனாக அவதாரம் செய்தாய்—–
ஸ்வாமி தேசிகன் வரதராஜ பஞ்சாஸத்தில் சொல்கிறார்—-
பக்தஸ்ய தாநவ ஸிஸோ :பரிபாலநாய
பத்ராம் ந்ருஸிம்ஹ குஹநாமதிஜக்முஷஸ்தே |
பத்ராம் ந்ருஸிம்ஹ குஹநாமதிஜக்முஷஸ்தே |
ஸ்தம்பைக வர்ஜமதுநாபி கரீஸநூநம்
த்ரைலோக்யமேததகிலம் நரஸிம்ஹகர்பம் ||
ஹே—தேவாதிராஜா—உம்முடைய பக்தனாகிய ஓர் குழந்தையைக்
காப்பாற்ற, அழகான நரங்கலந்தவனாகத் தூணிலிருந்து தோன்றினாய்.
அந்தத் தூண் தவிர, மற்ற எல்லாப் பொருள்களும், இன்றைக்கும் உன்
ந்ருஸிம்ஹ ரூபத்தைத் தனக்குள்ளே தாங்கிக் கொண்டே இருக்கின்றன
போலும்.
ஆசார்யனே ஸ்ரீ தேவநாயக பஞ்சாஸத்திலும் சொல்கிறார்—
ப்ரஹ்லாத கோகுல கஜேந்த்ர பரிக்ஷிதாத்யா :
த்ராதாஸ்த்வயா நநு விபத்திஷு தாத்ருஸீஷு |
ஸர்வம் ததேகமபரம் மம ரக்ஷணம் தே
ஸந்தோல்யதாம் திரிதஸநாயக கிம் கரீய : ||
ப்ரஹ்லாதனை , பசுக்களை, கஜேந்த்ரனை, பரீக்ஷித்தை பெரிய பெரிய
ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றினாய் —-சரி-அது எல்லாம்
ஒருபுறம் இருக்கட்டும்— இன்னொருபுறம் நான் இருக்கிறேன்—என்னைக்
ஒருபுறம் இருக்கட்டும்— இன்னொருபுறம் நான் இருக்கிறேன்—என்னைக்
காப்பாற்று—இந்த இரண்டு செயலில் எது விசேஷமானது என்று நீயே
சீர்தூக்கிப் பார் ( என்னைக் காப்பாற்றுவது முக்கியம் என்று உணர்வீர்–
என்று , சொல்லாமல் சொல்கிறார் )
என்று , சொல்லாமல் சொல்கிறார் )
ச்லோகத்தின் தொடக்கத்திலேயே ப்ரஹ்லாதனைச் சொல்கிறார்.
துருவன் கூடத் தெரியவில்லை.
வித்யாரண்யர், வேதத்துக்கு ,பாஷ்யம் எழுத ஆரம்பித்தார்.
இது மிகவும் கஷ்டமான, சாகஸம் நிறைந்த கார்யம் , நன்கு
நடக்கவேண்டுமே என்று , லக்ஷ்மி ந்ருஸிம்ஹனின் ,அனுக்ரஹத்தைப்
நடக்கவேண்டுமே என்று , லக்ஷ்மி ந்ருஸிம்ஹனின் ,அனுக்ரஹத்தைப்
பிரார்த்தித்தார். ”பஜே நரஹரிம் ஹரிம் ” என்றார். அஹோபிலத்திலே
ந்ருஸிம்ஹன், மாலோலனாக இருக்கிறான். மஹாலக்ஷ்மி ,அவனுடைய
மடியில் அமர்ந்து இருக்கிறாள். ”லக்ஷ்மியா சமாலிங்கித வாமபாகம்”
அதனால்தான், நரஹரிம் ஹரிம் என்றார். இப்படிச் சொன்னவுடனேயே
பாஷ்யம் பூர்த்தியாகிவிட்டதாம்.
சிம்ஹ முகமும், மனித உடலும் —ஏன் ?
பகவான், ஏன் சிம்ஹ முகமும், மனித உடலும் கொண்டு அவதரிக்க
வேண்டும் ?கரடி (பல்லூக ) முகத்தோடு வரக்கூடாதா? புலி முகத்தோடு
வேண்டும் ?கரடி (பல்லூக ) முகத்தோடு வரக்கூடாதா? புலி முகத்தோடு
வரக்கூடாதா ?
இதக் கேள்விக்குப் பதிலை, நாம் கீதையில் தேட வேண்டும். அங்கே
பகவான் சொல்கிறான்—-என்னுடைய பக்தர்கள், என்னை, எப்படி எல்லாம்
ப்ரார்த்திக்கிறார்களோ , அவ்வண்ணமாகவே , நான் வருகிறேன்.
இரணியன், ப்ரஹலாதனைக் கேட்டான்–எது மிகவும் சாது —?
ப்ரஹ்லாதன் பதில் சொன்னான்—ஹரிதான் சாது–காட்டுக்குப் போகணும்;
ஏகாந்தமாய் பூஜிக்கணும் ;
இரணியன் திரும்பக் கேட்டான்—-ஹரி என்றால்—-?
ப்ரஹ்லாதன் சிரிக்கிறான்.
ஹரிஎன்றால் தெரியாதா? ஹரிஎன்றால்– நாராயணன்—ஹரி என்றால்
சிம்ஹம்
ஹரிஎன்றால் தெரியாதா? ஹரிஎன்றால்– நாராயணன்—ஹரி என்றால்
சிம்ஹம்
சிம்ஹம் காட்டிலேதானே இருக்கும்—
அதனாலேதான், குழந்தை ப்ரஹ்லாதன்—பக்தன் விருப்பத்துக்கு ஏற்ப
சிம்ஹ முகத்துடன் தோன்றினான் என்பர்.
இன்னொன்று—-மிருகத்தன்மை மிகவும் உடைய இரண்யனுக்காக —
சிம்ஹ முகம்.
ப்ரஹ்லாதனின் குணத்துக்காக —மனித உடல். –என்று இரண்டையும்
சேர்த்து, ந்ருஸிம்ஹனாக அவதரித்தான்.
சர்வப்ரஹரணாயுத:-—சஹஸ்ரநாமம் சொல்கிறது. இதற்குவியாக்யானம்
செய்த ஆதிசங்கரர் , -சர்வப்ரஹரணாயுத:ந்ருஸிம்ஹ —-என்றார்.
பகவானுக்கு எல்லாமே ஆயுதம் —-ந்ருஸிம்ஹனுக்கு ,நகங்களும்
ஆயுதம்.
இந்த அவதாரத்திலே சப்தமும் கேட்டது ;தேஜஸ்ஸும்
எங்கும் பரவியது.
————————-இன்னும் தொடரும்————————–
