ஸ்ரீ ந்ருஸிம்ஹம் —16
ப்ரபஞ்ச ஸாரம் —-23 வது படலம் –ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரயோக விதானம்
என்பதைச் சொன்னேன்.
இதில் ,குறிப்பிடப்படும் மந்த்ரங்களை, தகுந்த ஆசார்யன் மூலமாக
உபதேசமாகப் பெற்று, ஆவ்ருத்தி செய்ய வேண்டும் என்றும்
ஹோமம் முதலியவற்றைத் தகுந்த ஆசார்யன் மூலமாகச்செய்யவேண்டும்
என்றும் இவற்றில் சிறு பிழை ஏற்பட்டாலும், விபரீதபலன்களைக்
கொடுக்குமென்றும் மிகுந்த நியமத்துடன் ,ஸர்வ ஜாக்ரதையாக
பக்தி, ச்ரத்தையுடன் செய்ய வேண்டும் என்றும் எழுதி
இருந்தேன்.
இப்போது, ஸ்லோகங்கள் சிலவும், அவை சொல்லும் விவரங்களையும்
தெரிந்து கொள்ளலாம். இந்த ஸ்லோகங்களில் ,ஜபிக்கவேண்டும்/
ஹோமம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படும் மந்த்ரங்களைத்
தகுந்த ஆசார்யன் மூலமாக அறிய வேண்டும்.
1.ச்லோகம் 16
யதோக்த மார்கேண ஸமர்ச்ய ஸாஷ்டகம்
ஸஹஸ்ர சங்க்யம் ப்ரஜபேன்மநும் தத : |
திருச்சரண் மந்த்ர மதாபிசேஷயேத்
யமேஷ ம்ருத்யோர் விநிவர்தயேந் முகாத் ||
ஸ்ரீ ந்ருஸிம்ஹ மந்த்ரத்தை இதில் சொல்லியபடி எண்ணாயிரம்
முறை ஜபிப்பவர் யமனிடம் அகப்பட்டாலும், உயிர் பெற்று
எழுந்து விடுவார் .
2.ச்லோகம் 18
ஸம்ப்ரீணவித்வா குரும் ஆத்மசக்த்யா
ஸம்போஜயேத் விப்ரவராண் யதாவத் |
ஸ த்வைஹிகீம் ஸித்திமவாப்ய சுத்தம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹ பீஜாக்ஷரத்தை ஜபித்து, ஸ்ரீ வைஷ்ணவ
ததீயாராதனம் செய்பவர், இவ்வுலகில் எல்லா ஸித்திகளையும்
3.ச்லோகம் 20
தூர்வா த்ரிகைரஷ்ட ஸஹஸ்ர ஸங்க்யை
ஆராத்ய மந்த்ரி ஜூஹூ யாததாப்ஸு
மூன்று வகையான அருகம் புல்லினால் ,எண்ணாயிரம் தடவை
அக்நியில் ஹோமம் செய்பவர், யாரால் தொல்லை ஏற்பட்டாலும்
4.ச்லோகம் 21
யத்வான்ய நிஜமனஸேப்ஸிதம் ச காமம்
தத் ச்யாச்சாப்யகில ந்ருணாம் ப்ரியச்ச பூயாத்
தேசத்துக்குக் கஷ்டங்களைக் கொடுக்கும் கெட்ட சகுனங்களை
5.ச்லோகம் 22.
வப்னேஷ்வபி த்ருஷ்டேஷ்வ வசிஷ்டா ஜாக்ரதா நிஷா நேயா
ஜபமான மந்த்ரசக்த்யா ஸு ஸ்வப்னோ பவதி தத்க்ஷணா தேவ
கெட்ட கனவுகளும்,நன்மைகளைச் செய்யும்—எப்போது ?
நீங்கள் கெட்ட கனவுகளைக் காண்கிறீர்கள் –உடனே விழித்துக்கொண்டு,
குறிப்பிட்ட மந்த்ரங்களை ஜபித்து , மீதி இரவைத் தூங்காமல்
போக்குங்கள். அந்த க்ஷணமே, அதே கெட்ட கனவுகள் , உங்களுக்கு
6. ச்லோகம் 23.
சரண் வனே துஷ்டம்ருகாஹி சோரவ்யாலாகுலே மந்த்ர மமும் ஜபேத் ய :
அஸாதிதம் ஸாதிதமேவ தஸ்ய ந வித்யதே பீர்பஹுரூப ஜாதா
துஷ்ட ம்ருகங்கள் வசிக்கும் காட்டுப் பாதையில் செல்ல நேர்ந்தால்,
இதில் சொல்லப்படும் மந்த்ரத்தை ஜபித்தால், மிருகங்கள் அருகில் வராது;
பிறரால் சாதிக்க இயலாத சாதனைகளையும் செய்வீர்கள்.
7.ச்லோகம் 24.
ஜப்தே நாஷ்ட ஸஹஸ்ரம் கலசேநாப்யஹி விஷார் தமபி ஷிஞ்சேத்
அதி விஷமேண விஷேணாப்ய ஸௌ விமுக்த :ஸுகி பவதி
கொடுமையான விஷத்தால் மரணம் அடைந்துவிட்டானோ என்கிற
பயந்த சமயத்திலும், இந்த மந்த்ரத்தை எண்ணாயிரம் தடவை
தண்ணீரில் ஜபித்து, அந்த ஜலத்தால் அவனை நீராட்டினால் ,
அவன் உடனே பிழைத்து எழுவான்.
8.ச்லோகம் 25
மூஷிகலூதா வ்ருச்சிக பஹு பாதாத்யுத்திதம் விஷம் சமயேத்
அஷ்டோத்தர சத ஜாபான் மனுரயமபி மந்த்ரிதம் ச பஸ்மாத்யம்
எலி–எட்டுக்கால் பூச்சி—தேள் –ஜலமண்டலி முதலிய விஷ
ஜந்துக்களின் கடியால் ஏற்பட்ட விஷம் நீங்க, இந்த மந்த்ரத்தை
9. ச்லோகம் 26.
சசிரோக்ஷி கண்ட தத்கல குக்ஷிரு ஜாஜ்வரவி ஸர்ப வமிஹிக்கா :
மந்த்ர ஔஷத அபிசாரிக க்ருதான் விகாரானய மநு : சமயேத்
நாள்பட்ட தலைவலி —கண் வலி—கழுத்துச் சுளுக்கு–பல்வலி–
கழுத்து வீக்கம்—வயிறு அழற்சி —விஷ ஜ்வரம்–வயிற்றுப் போக்கு–
வாந்தி—அடுக்கு விக்கல்—பிறர் ஏவிய மந்தரத்தால் ஏற்பட்ட
கோளாறுகள்—பிறர் வைத்த மருந்து—பில்லி–சூன்யம்—ஏவல்–
இவை போன்ற எல்லாமே , இந்த மந்த்ர ஜபம் அகற்றி விடும்
10. ச்லோகம் 27
நரஹரி வபுஷாத்மனா க்ருஹீதம் ஹரிண சிசும் நிஜவைரிணம் விசிந்த்ய
க்ஷிபது ககனதா :க்ஷிதௌ ஸுதூரம் யமனுதினம் ப்ரதிசாடயதே ஸமாஸாத்
எதிரி விரைவில் அழிய, சிங்கத்தின் வாயில் அகப்பட்ட மானைப்போன்று
தன்னுடைய எதிரியை நினைத்து, இந்த மந்த்ரத்தை ஜபித்தால்,
11. ச்லோகம் 28
(ப்ரபஞ்ச ஸாரம் —ந்ருஸிம்ஹமந்த்ர ப்ரயோக விதானத்தில்
சொல்லப்படும் எல்லா மந்த்ரங்களும், மிகவும் சக்தி வாய்ந்தவை–
அவற்றில், இது மிக சக்தி வாய்ந்த மந்த்ரம் )
யாம் ச திசம் ப்ரதி மனுனா க்ஷிப்தோ ஸௌ தாம் திசம் ப்ரயாத்ய சிராத்
புத்ர களத்ர தநாதீன் த்யக்த்வாத்வ புநர் நிவ்ருத்தயே ஸஹஸா
இந்த மந்த்ரத்தை ஜபித்து, எந்த திக்கை நோக்கி ,மந்த்ரத்தை ஜபிப்பவன்
நீரைத் தெளிக்கிறானோ, அந்தத் திக்கில் இவன் எதிரி –பிள்ளை, மனைவி,
பணம் வீடு முதலியவற்றை எல்லாம் இழந்து ,சென்று மறைவான்
12. ச்லோகம் 32.
தினசோஷ்டோர்த்வ ஸஹஸ்ரம் ப்ரியதே ரிபுரஸ்ய நாத்ர ஸந்தேஹ :
மாரணகர்ம ந சஸ்த க்ரியதே யத்யயுதமத ஜபேச்சாந்த்யை
வஷ்யா க்ருஷ்டி த்வேஷண மோஹோச்சாடாதிகாணி யதி வாஞ்சேத்
ததர்ஹயா ப்ரதிபத்யா தத்தத் கர்ம ப்ரஸாதயேந் மந்த்ரி
ஒருவரைத் தன்வசப்படுத்துவது–ஒரு பொருளை அடைவது–
ஒருவருக்கும் , அவருக்கு வேண்டியவருக்கும் இடையில் சண்டையை
உண்டாக்குவது—அயலாரை மோஹிக்கச் செய்வது—பேய் பிசாசுகளை
விரட்டுவது— இவை போன்றவை சித்திக்க வேண்டுமானால்,
அது அதற்குத் தக்கவாறு இந்த மந்த்ரத்தை ஜபித்து ஸித்தி அடையலாம்.