கண்ணன் கழலே இனிது! இனிது !
———————————————————
———————————————————
1. இனிது, இனிது, மழலை இனிது !
2அதனினும் இனிது, இளமையில் மழலை !
3மழலை என்பது மயக்கும் ஒலிகள்
4. ஒலிகளோ காற்றின் உருவகம் ,
5.உருவகம் என்பதோ, உயர்வுறு கற்பனை ,
6.உயர்வுறு என்பதோ, அயர்விலாக் கிளர்ச்சி ,
7. அயர்விலாக் கிளர்ச்சி, அவனே கண்ணன் !
8.கண்ணனின் இனிது, கைக்குழல் கானம் !
9.கானத்தில் இனியது கோபிகா கானம் !
1`0.கோபிகைகள் கண்ணுக்கு இனியவர் !
11. இனியதில் ,இனிது கண்ணனின் நாமம் !
12. இனியதில் இனிது, கண்ணனின் அழகு !
13. இனியது கேட்பின் கண்ணனே இனியவன் !
14. இனி எது வேண்டும், கண்ணன் இருக்க ?
15. கண்ணன் கழலே இனியதில் , இனிது !
16. மழலை வேண்டாம்; கழலே போதும் !
17. கழலைப் பிடித்தோர் ,கண்ணனைப் பிடித்தோர் !
18.பிடித்தவர் கையைப் பிடித்துத் தூக்கி,
18. பிடித்த வண்ணம், பேரருள் அருளும்,
20. கண்ணன் கழலே, இனிது ! இனிது !
