Ketpathum, solvathum–1008

Posted on Jun 30 2016 - 11:07am by srikainkaryasriadmin

கேட்பதும், சொல்வதும் —-1008 தலைப்புகள்

கேட்பதும், சொல்வதும்

2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச் சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப் புத்தகமாக வெளியிடவில்லை.இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

1நைச்யாநுஸந்தானம்
2. களை எடுத்தானே தவிர, முளை வைக்கவில்லை
3. கங்கையைப் புனிதம் என்று சொல்கிறோம் ;அதைபோலக் கங்கையைப் போலப் புனிதமானவன் இருக்கிறானா /
4.அஞ்ஜலி என்றால் என்ன ?
5.பலன்—இதை விளக்க முடியுமா ?
6. விடாய் தீர, கங்கா தீர்த்தம் அருந்த, பாபம் போமாப்போலே —இது எதைக் குறிக்கிறது ?
7. பகவான், சரணாகதனைக் காப்பது, ஏழு விதத்தில் என்று சொல்கிறார்களே,அவை எவை ?
8. ”ஷடங்க யோகம் ” என்றால் என்ன ?
9. பெருமாளும், பிராட்டியும் விளக்கும் ஒளியும் போலே —என்கிறார்களே, இதன் அர்த்தம் என்ன ?
10. புத்திக்குச் சிறப்பு யாவை ?
11.பகவானை ஆராதிக்க இரண்டு ஆகம முறைகள் உள்ளதாகச் சொல்கிறார்களே, விளக்க முடியுமா /
12. ஒரு மந்த்ரத்தை ஜபித்துவிட்டு,வீட்டைவிட்டுப் புறப்பட்டால் , எந்தக் காரியமும் ”ஜயம்”.ஆகும் என்று சொல்கிறார்களே , அந்த மந்த்ரம் என்ன என்று சொல்லமுடியுமா ?
13.”ஸுர்ப்பநகை மான பங்கக் கதையை –யார் பயபக்தியுடன் கேட்கிறார்களோஅவர்களுக்கு வாழ்நாள் முழுவதும், ”மானபங்கம் ”எங்கேயும் ,எப்போதும்
ஏற்படாது என்று சொல்கிறார்களே—-?
14. நாம், க்ருஹஸ்தனாக இருந்துகொண்டு ,மனைவி மக்களுக்காகச்சிலவற்றைக் ”காம்யார்த்த”மாகச் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.
சில கோரிக்கைகளை, குடும்ப ரக்ஷணமாகப் பகவானிடம் காம்யமாகச் செய்யவேண்டியிருக்கிறது. இதற்கான ”வழி”இருக்கிறதா ?
15. ஒரு பாபத்தைப் பண்ணிவிடுகிறோம்; அதற்காக மிகவும் வருத்தப்பட்டு,”ப்ராயச்சித்தம் ”சாஸ்த்ரரீதியாகச் செய்கிறோம்; அந்தப் பாவம் கழியுமா ?
16. காம்யார்த்தமாகச் செய்யும் சிலவற்றைச் சொல்ல முடியுமா ?
17. உபதேசம் —மூன்று வகை என்று சொல்கிறார்களே, அவை என்ன ?
18.”இதிஹாஸம் ” என்றால் என்ன ?
19.புராணம் ஐந்து விஷயங்களை முக்யமாகச் சொல்கிறது என்கிறார்களே,அவை என்ன ?
20. வித்யா ஸ்தானங்கள் எவ்வளவு ? அவை என்னென்ன ?
21. தர்மம் எத்தனை வகைப்படும்? அவை யாவை ?
22. ”ப்ரியம் ” என்றால் என்ன ? ஹிதம் இதையும் சொல்லுங்கள்
23.அஸூயை —விளக்க முடியுமா ?
24. ”ஆத்மவான் ” யார் ?
25. ”தர்மம்” ஒன்பது வகை என்று 21வது கேள்வியில் சொன்னீர்கள்;இரண்டு வகைதான் என்று சொல்கிறார்களே ?
26.யஜ்ஞம் , யாகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, இவற்றைச் செய்யும்முறையைச் சொல்ல முடியுமா ?
27. 4–3–2007 அன்று, சந்த்ர க்ரஹணமும், 19–3–2007 அன்று ஸூர்ய க்ரஹணமும் ஸம்பவிக்கிறதே –இதனால் ஏதாவது கெடுதலா ?
28.”நமகம்” என்றால் என்ன ? ”சமகம் ”’ என்றால் என்ன ?
29.மனிதனுக்கு மூன்று அவஸ்தைகள் என்கிறார்களே,அவை என்ன ?
30.”தீக்ஷை ”மூன்று விதம் என்கிறார்களே, சரியா ?சரியென்றால்,அவை யாவை ?
31.பகவானின் ஐந்து விபூதிகளை —அதாவது, நிலைகளைச் சொல்ல முடியுமா ?
32.”யோகக்ஷேமம் ” என்றால் என்ன ?
33.ஏகாதசி அன்று ”துளசி” சாப்பிடலாமா ?
34. ”நிர்வேதம்” என்றால் என்ன ?
35.”சந்தோஷ ஹேதுக்கள் ”என்கிறார்களே, அப்படி என்றால் என்ன ?
36. ,அப்படியென்றால் ”சந்தோஷ ஹேது ” வேறு எது ?
37.”த்வனி” என்பதை விளக்க முடியுமா ?
38.நமது ”ஸம்ப்ரதாயத்”துக்குப் பலம், இரண்டு என்று சொல்கிறார்களே இதைச் சுருக்கமாகச் சொல்லமுடியுமா ?
39.”தர்ப்பணம் ” முதலியன செய்யும்போது, நாம் கொடுக்கும் எள்ளும் ஜலமும், நமது மூதாதையருக்கு –அவர்கள் எந்த இடத்தில், எப்படி, எந்தக் கோலத்தில் இருந்தாலும் அவர்களுக்குத் தகுந்தபடி மாறி,
அவை சென்றடைகின்றன; உதாரணத்திற்கு ,அமெரிக்காவில்இருக்கும் ஒருவருக்கு நாம், நமது பணத்தை மணியார்டரில் அனுப்பினால், அந்த இந்தியப்பணம் ,அமெரிக்க டாலராக மாற்றிக்
கொடுக்கப்படுவதைப் போல என்கிறார்களே ?
40. ”உஞ்சவ்ருத்தி ”, ”அஜகர வ்ருத்தி ” என்கிறார்களே ,இவை என்ன ?
41. பாபங்கள் ஏற்பட நான்கு காரணங்கள் உள்ளனவாமே –?
42.சொற்கள் நான்கு வகையாமே –?
43. ப்ரபத்தி நான்கு வகை என்கிறார்களே–அவை என்ன ?
44.ஸந்யாஸிகள் நான்கு வகைகள் –இவை என்ன ?
45.சுத்தம் நான்கு வகையாமே–அவை யாவை ?
46.அர்ச்சாவதாரம் நான்கு வகை என்கிறார்களே –என்னவென்று சொல்லுங்கள் ?
47.யார் யாருக்கு எதில் எதில் பிரியம் –இப்படி நான்கு சொல்கிறார்களே ?
48.வேதங்கள் நான்கு –சொல்லுங்கள் ?
49.”இல்லை” என்பதற்கு நான்கு விதமான விளக்கம் உள்ளதாமே –?
50. ”புருஷ” என்கிற சப்தத்திற்கு நான்கு வித அர்த்தங்கள் சொல்கிறார்களே ?
51. வேதத்துக்கு நான்கு குணங்கள் இருக்கிறதாமே —?
52. வேதத்தில் நான்கு பிரிவுகள் சொல்கிறார்களே ?
53.ஸ்ரீமத் ராமாயணம் ,நான்கு விஷயங்களைச் சொல்கிறதாமே ?
54.வேதத்துக்கு, நான்கு உப வேதங்கள் இருக்கிறதாமே ?
55.யுகங்கள் நான்கு என்கிறார்கள்–அவை யாவை ?
56.ஞான பாகங்கள் நான்கு என்கிறார்கள்–அவை என்ன ?
57.பலன்கள் நான்கு என்கிறார்கள்–விளக்குங்கள்
58. பேச்சுக்கள் நான்கு என்கிறார்கள்–அவை யாவை ?
59.51ன் இரட்டிப்பு
60. ”வ்யாஹ்ருத் ” உபாஸனை நான்கு என்கிறார்களே அவை எவை ?
61.வ்யூஹாந்த்ரங்கள் நான்கு என்று சொல்கிறார்கள்–அவை யாவை ?
62.புருஷார்த்தங்கள் நான்கு என்கிறார்கள்–அவை யாவை ?
63.ஜீவன் செய்யவேண்டியவை நான்கு என்கிறார்கள்—அவை என்ன ?
64.ஒருவன்–பூரணன் ஆக நான்கு விஷயங்கள் தேவை என்கிறார்கள்–அவை யாவை ?
65.”வாக் ” எனப்படும் வேதத்தை, ”பசு”வாகப் பாவித்து, உபாஸிக்கவேண்டும் இந்த வேதப்பசுவுக்கும் நான்கு மடிகள் என்கிறார்களே, விளக்குங்கள் ?
66. பகவானைத் த்யானம் செய்யத் ொடங்கும்போது,நான்கு கேள்விகள்
எழுகின்றன என்கிறார்கள்—அவை யாவை ?
67 . ப்ரணவத்துக்கு நான்கு பாதங்கள் என்கிறார்கள்–அவை யாவை ?
68.ஸ்ரீ நம்மாழ்வார் அருளியது நான்கு ிரபந்தங்கள்–அவை என்ன ?
69.சாஸ்த்ரப்படி ,சாப்பிடுவதில் நான்கு லக்ஷணங்களைச் சொல்கிறார்கள்–அவை என்ன ?
70.நான்கு விஷயங்கள்–மழைக்காலத்தில் உஷ்ணமாகவும், கோடைக்காலத்தில்
சீதளமாகவும் இருக்குமாமே –விளக்க முடியுமா ?
71. பகவானுக்கு நான்கு விதமான உபசாரங்களைச் சொல்கிறார்கள்-அவை யாது ?
72. ஆத்மாவுக்கு நான்கு பதங்களாமே–அதாவது நிலைகள்–அவை யாவை ?
73.ப்ரஹ்மத்துக்கு நான்கு பாதங்கள் என்கிறார்கள்–அவை என்ன ?
74.சரீரத்தில், ப்ராணனுக்கு, நான்கு லய ஸ்தானங்கள் இருக்கிறதாம்–என்னென்ன ?
75.ஸத்யகாமனின் சரித்ரப்படி ப்ரஹ்மத்துக்கு உள்ள நான்கு பாதங்கள் எவை ?
76.ஸ்ரீவைஷ்ணவன், காலக்ஷேபம் மூலமாகக் கற்கவேண்டிய க்ரந்தங்கள்
நான்கு என்கிறார்களே, அவை யாவை ?
77.அக்னிகள் நான்கு என்கிறார்கள்–யாவை ?
78.ப்ரளயங்கள் நான்கு என்கிறார்கள்–அவை யாவை ?
79. முக்யமானவை நான்கு என்கிறார்கள் –அவை என்ன ?
80. நான்கு க்ஷேத்ரங்களில் ,நான்கு முக்கியமானவை–அவை என்ன ?
81.சகுனம் நான்கு வகையாமே –அப்படியா–அவை என்ன ?
82.தமிழ் இலக்கியத்தில், வெண்பாவுக்கு நான்கு அடிகள்–அவை யாவை ?
83. நாலும் தெரிந்தவர் என்கிறார்களே–இதன் அர்த்தம் என்ன ?
84.நாலுபேர்,நாலுவிதமாகச் சொல்வர் என்பது உலக வழக்கு –இதன் பொருள் என்ன ?
85. தமிழ் இலக்கியத்தில், நா–நாற்பது –என்கிறார்கள்–அது என்ன ?
86.அவிவிவேகம் நான்கு வகை என்கிறார்களே–அவை என்ன ?
87.நான்கு பக்தர்களுக்கு கிடைத்த மோக்ஷம் –என்று சொல்கிறார்கள்–
விளக்க முடியுமா ?
88.பகவான், ஐந்தாவது காரணமாக இருக்க, நான்கு காரணங்கள் இருப்பதாகச்
சொல்கிறார்கள் –அவை என்ன ?
89.நமது ஸம்ப்ரதாயத்தில் ”ரத்னங்கள்”நான்கு என்கிறார்கள்–அவை என்ன ?
90.சிறந்தவை நான்கு என்று வேறுவிதமாகச் சொல்கிறார்களே-என்னென்ன?
91.பாஞ்சராத்ர ஆகமத்தில், நான்கு வகை உள்ளதாமே –சொல்ல முடியுமா ?
92. ”மந்த்ர ஸித்தி ” ஏற்பட, நான்கு இடத்திலே,பக்தி, ஸ்ரத்தை இருக்கவேண்டும்
என்கிறார்களே–அவை என்ன ?
93. தைத்த்ரீய உபநிஷத்தில், முக்கியமான நான்கு பேரை நமஸ்கரிக்கச் சொல்லி இருக்கிறதாமே –அந்த நான்கு பேர் யார் ?
94.யார், யார் நான்கு பேர் சமம் ?
95. பகவான் சதுர்புஜன்–தெளிவாக்குங்கள் !
96. முக்கியமாக நான்கு விஷயங்கள் ”ஏகாதசி”அன்று கூடாது என்கிறார்கள்–
அவை என்ன ?
97.பசு கொடுப்பது நான்கு –என்கிறார்கள்–எவை ?
98.ப்ரமாண ,ப்ரமேயங்கள் –நான்கு என்கிறார்கள் –விளக்குங்கள் ?
99.நான்கு கட்டளைகளின்படி நடந்தால், வைத்யரை நாடவேண்டாம்
என்கிறார்கள்–அந்த நான்கு என்ன?
100. வேத வ்ரதங்கள் –நான்கு என்று சொல்கிறார்கள்–அவை என்ன ?

இன்னும் 908 இருக்கிறது–வெவ்வேறு தலைப்புகளில்–மிகக் கடினமான விஷயங்கள்—

இது இன்னும் -தொடருகிறது—-

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு
ஈ –மெயில் அனுப்பலாம்

vishnu-01

About the Author

Leave A Response