Ketpathum solvathum-2 (101 to 200 )

Posted on Jul 3 2016 - 9:08am by srikainkaryasriadmin
கேட்பதும் சொல்வதும்—-1008–பகுதி–2(101 முதல் 200 வரை )

 

2006ம் ஆண்டு   ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை.
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

101. பகவான், ஜீவனுக்குச் செய்யும் நான்கு உபகாரங்கள்
( முக்கிய உபகாரங்கள்–4)எவை ?

102. இந்த ஜீவனைச் சூழ்ந்து இருக்கும் நான்கு வகை நோய்கள் எவை ?
103. ஜீவன் (சேதனன் )ப்ரபத்திக்கு முன்பு உள்ள நான்கு நிலைகள் எவை ?

104.ஜீவன் (சேதனன் )ப்ரபத்திக்குப் பிறகு, அடையும் நான்கு நிலைகள் எவை ?

105.பகவானை ஆச்ரயிப்பவர்கள் நான்கு வகைகள் என்கிறார்களே ?
106.பகவானின் நான்கு லீலைகள் என்கிறார்களே ?
107.பகவானை அநுபவிக்கும்போது நான்கு கேட்ட எண்ணங்கள் தொலைய
      வேண்டும் என்கிறார்களே  ?
108. பகவானது திருமேனி, நான்கு யுகங்களிலும் நால்வகை நிறமாக
மிளிர்வதாகச் சொல்கிறார்களே  ?
109. ”குருடன்” யார்  ?

110.”நொண்டி” யார்  ?

111. வைராக்யம்  என்றால் என்ன  ?
112.”கின்னரர்”என்று ,இதிஹாஸ புராணங்களில்;சொல்லப்படுகிறவர்கள் யார் ?
113.”கந்தர்வர்” யார்  ?
114.”த்ரிதண்டம்” விளக்க முடியுமா  ?
115. ”துளஸி”யின் மஹிமையைச் சொல்லுங்களேன்  !
116.தேஹத்துக்கு வலிமையைக் கொடுப்பவை எவை  ?
117.தேஹ பலத்தை அளிப்பவை எவை  ?
118. எந்த ”மூன்றை”த் தவிர்க்க வேண்டும்  ?
119. எந்த மூன்றில் குறைவைத் தவிர்க்க வேண்டும்  ?
120.மூன்று, மூன்றாகச் சொல்கிறீர்களே–இன்னும் இதேமாதிரி

சிலவற்றைச் சொல்லுங்களேன்  !

121. ”அக்நி ” க்கு இரு பத்நிகள் என்கிறார்களே  ?
122. ”வசீகார்ய ” பரம்பரை  என்றால் என்ன  ?
123. அவதாரப் பரிணாமம் –சொல்ல முடியுமா  ?
124. ”ஜல்பம் ”என்றால் என்ன ?”விதண்டை” என்றால் என்ன  ?
125. ”அவதாரங்கள்”–எந்த ப்ரயோஜனத்துக்கு  ?
126. உபாஸகனுக்கு ,நான்கு நிலைகள் என்கிறார்களே  ?
127.பகவானைப் ”பக்தி” செய்வதற்கும், ப்ரபத்தி தேவையா   ?
128. வேதத்தில் எதிரிகளை அழிக்கும் ”அபிசார ” ஹோமம் போன்றவைகள்
        வருகிறதே—வேதத்தில், இது சரியா ?
129. பகவானை—ஸ்ரீமந் நாராயணனைத் தவிர, மீதி தெய்வங்களை
வணங்கக்கூடாது  என்கிறார்களே  ?
130. ஆழ்வார்களும், ஆசார்யர்களும் தங்களுடைய ஸ்ரீ ஸுக்திகளில்,
தங்களுக்கு எந்தவிதத் தோஷமும் இல்லாதபோது, தோஷங்களை

எல்லாம் கல்பித்து, பகவானைப் பற்றி ஸ்தோத்ரங்கள் அருளியிருக்கிறார்களே ?

131.பகவானுடைய ”பக்தர்” என்று யாரைச் சொல்லலாம்  ?
132.”சாஸ்த்ர தீபம் ” என்றால் என்ன ?
133.”சேஷத்வ ஞானம் ” சுருக்கமாகச் சொல்லுங்கள்  !
134.”பாரிப்லவம் ” என்றால்  என்ன ?
135.”ப்ரஹ்ம வித்யைகள் என்னென்ன ? சுருக்கமாகச் சொன்னால் போதும்  !
136. இப்படி, வித்யா உபாஸனம் செய்பவன் ,அவனவனுக்கு விதிக்கப்பட்ட
        நித்ய கர்மாக்களை செய்யவேண்டுமா  ?
137.”பாபகர்ம சக்தி”மூன்று வகை என்கிறார்களே  ?
138. த்யானத்துக்கு ,எது முக்கியம்  ?
139.த்யானத்துக்கு ,ஆஹார சுத்தி முக்கியம் என்கிறீர்களே, ஆஹாரம்
       இல்லாமல் ப்ராணனே போய்விடும் என்கிற சமயத்தில்,
இந்த ஆஹார நியமம் எடுபடுமா ? அப்போதும் ஆஹார சுத்தி முக்யமா ?
140.நினைப்பு–படிப்பில் இருக்கவேண்டும்  !
தானம் செய்வதில் எப்படி இருக்கவேண்டும் ?
141.உதவியை மறப்பவர்களைப் பற்றிச் சொல்ல முடியுமா ?
142.”நெல் செய்யப் புல் தேயுமாப்போலே”–விளக்க முடியுமா  ?
143.மோத : ப்ரமோத :ஆனந்த :   என்கிறது வேதம்.இவை என்ன ?
144.”சாஸ்த்ர பாண்டித்யம்”உள்ளவர்களும் கஷ்டத்தை அநுபவிக்கிறார்களே ?
       பாண்டித்யத்தால், கஷ்டத்தை விலக்க முடியாதா ?
145.பக்தியைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்  ?
146.”ப்ரஹ்மா”மும் மூர்த்திகளில் (த்ரிமூர்த்தி  ) ஒருவர் என்கிறார்களே ,
       இவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லையே ?
       நீங்களாவது சுருக்கமாகச் சொல்லமுடியுமா  ?
147. ”நாரதரை”ப்பற்றிச் சொல்ல முடியுமா ?
148. முக்யமான நீதி சாஸ்த்ரங்களை சொல்ல முடியுமா  ?
149.”தண்ட நீதி”யைத் தவிர——–?

150.”யோகபலம்” என்றால் என்ன  ?

151. ”ப்ரஹ்மா”வைப் பற்றிச் சொல்லும்போது, சுவேதவராஹ கல்பத்தில்,
         ”வைவஸ்வத”மென்கிற  ஏழாவது ‘மன்வந்த்ரத்தில் இருப்பதாகச்
சொல்கிறார்கள்–மன்வந்த்ரம் மொத்தம் எவ்வளவு ? அவை  யாவை  ?
152.மனிதனுடைய ”ஆயுஸ் ” என்பது ,எப்போதிலிருந்து கணக்கிடப்படுகிறது ?
153.”ப்ரஹ்மராக்ஷஸ்” என்கிறார்களே, அப்படி என்றால் என்ன  ?
154.”ரிஷிகள்” எத்தனை வகைப்படுவர்  ?
155.”நித்ய சத்ருக்கள்” எவை  ?
156.யாரிடமிருந்து எதைக் க்ரஹிக்க (கற்றுக்கொள்ள ) வேண்டும் ?
157.31வது கேள்விக்குப் , பதில் சொல்லும்போது, ,பகவானின் ஐந்து
      விபூதிகளை –அதாவது–நிலைகளை சொன்னீர்கள். அதில்,
       ”அந்தர்யாமித்வம்”என்று பகவானின் ஒரு நிலையைச்
சொல்லியிருக்கிறீர்கள். இதைச் சுருக்கமாக விளக்கமுடியுமா ?
158.  ”க்ருஷி பண்ணாதே உண்ண விரகுடையவன் ,க்ருஷி சிந்தையை
         விடுமாப்போலே –” என்கிறார்களே  ?
159. ”பரமாத்ம நீதி”—இது என்ன  ?

160. ”தர்ம வர்ஜிநம் பாண்டித்யம் அநர்த்தம் ”  என்கிறார்களே  ?

161. ”வயதுக்குத் தகுந்தமாதிரி நடந்து கொள் ”என்கிறார்களே? இது என்ன ?
162.” வெளியில் ஒரு ஸந்யாஸி ; உள்ளே ஒரு ஸந்யாஸி ”
        இதன் பொருள் என்ன ?
163. பகவானின் திவ்ய மஹிஷியான ”பிராட்டி”க்கு மூன்று ரூபங்கள்
        இருப்பதாகச் சொல்கிறார்களே  ?
164. ” வைச்வதேவம் ”—சுருக்கமாக விளக்குங்கள்  ?
165. ”குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப்போம்;வீராணத்தேரியில்
தேங்கினால் நாடு விளையும் ” என்று ஸ்ரீமந்நாதமுனிகள்  கூறுவாராமே ?
166. ”ருக் வேதம், யஜுர் வேதம், ஸாமவேதம் , அதர்வண வேதம் ”என்று
        சொல்வதைப்போல, ”அர்ச்சாவதார வேதம்  என்று சொல்கிறார்களே,
        அது என்ன ?
167. நல்ல ஆசார்யனை அடைய  எவை வேண்டும்  ?
168. ”விஷ்ணு தத்வம் ”பாரததேச ப்ராஹ்மணர்களிடம் –வித்யாசமின்றி–
        அவர்களை ஒன்றுபடுத்துவதாகக் கூறுகிறார்களே ? ஒரு உதாரணம்
         சொல்ல முடியுமா ?
169. ”கல்மாஷபாதன்” ஒரு மஹாராஜா என்கிறார்களே ! அவனுக்கு ஏன்
         ”கருமையான பாதத்தை உடையவன்” என்கிற அர்த்தத்தில் ,இந்தப்
          பெயர் வந்தது  ?
170. அஷ்டாக்ஷரத்தை ஜபிப்பதால், மூன்று ஸமர்ப்பணங்கள்,

        செய்யப்படுவதாகப் பெரியோர்கள் சொல்கிறார்களே  ?

171. ப்ரபந்நனுக்கு, ஆறு விஷயங்கள் முக்யம் என்று சொல்கிறார்களே ?
172. ”தீர்த்த சதுர்த்தம் ” என்கிறார்களே, அவை என்ன  ?
173. ”ஸ்ரீமதே  வேதாந்த குருவே நம : , ஸ்ரீமதே ராமாநுஜாய நம :  ”
         என்றெல்லாம் பக்தியுடன் சொல்கிறோம்;இதில், ”ஸ்ரீமதே ”
         என்றால் என்ன  ?
174. குணங்கள் மூன்று வகை—அவை ஸத்வகுணம் ,ரஜோ குணம்,
       தமோ குணம்   என்பது தெரிகிறது. தமோ குணமும் ,மூன்று வகை
        என்கிறார்களே  ?
175. பதில் சொல்ல முடியாதது  எது  ?
176. ராமாயண ரஹஸ்யம்  என்ன  ?
177. ”ப்ரும்ம வர்ச்சஸ் ” என்கிறார்களே –இது என்ன  ?
178. எட்டு விஷயங்களை ,புத்திசாலியானவன் உணர்ந்து
ஒதுக்கவேண்டும்;இல்லாவிடில், ப்ராஹ்மணர்களால்
சாபம் ஏற்படும் என்று, விதுரர், த்ருதராஷ்டிரருக்குச் சொன்னாராமே ?
179. ”குத்தனம் ” என்றால்  என்ன  ?
180. ஆஸ்திகர் அறிந்துகொள்ள வேண்டிய எட்டு க்ரந்தங்கள்
        இருக்கின்றன  என்று சொல்கிறார்களே ?
181.” பாத்திரம் அறிந்து பிச்சையிடு” என்கிறார்களே–இதன் பொருள் என்ன ?
 182. மறுபிறவியே அற்றுப்போகும் சந்தர்ப்பம் மூன்று என்கிறார்களே –?
183. வீடுகளில் ஆசமனம் செய்யும்போது, இடது கையில் தீர்த்த பாத்ரம்
        இருக்கிறது. ஆனால், நதிகள், குளங்கள் இவற்றில், ஆசமனம்
        செய்யும்போது, இடதுகை வெறும்னேதானே இருக்கிறது. இடதுகைக்கு,
வேலையே இல்லையே !( இப்போதெல்லாம் நதிகளில், குளங்களில்
ஆசமனம் எப்படிச் செய்வது என்று தெரிவதில்லை. அதனால்,
        இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது )
184. ஸ்நானம் எத்தனை வகைப்படும் ?கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்கள் !
185.”வடவாக்னி” என்றால் என்ன ?
186. ”காளராத்ரி ” என்றால் என்ன ?
187. எவை சேர்ந்து இருப்பதில்லை  ?
188. ”யமம்”  என்றால் என்ன ?
189. ”யமகம்” என்றால்  என்ன ?
190. ஒரு இடத்தைத் தூய்மைப்படுத்தவேண்டியுள்ளது.புண்யாஹவாசனம்
       செய்ய நாழி இல்லை; அதற்கு வேண்டிய ”ஸாமக்ரியைகள் ” இல்லை;

       தகுந்த வாத்யார் இல்லை;அப்போது என்ன செய்வது  ?

191. வீட்டைவிட்டு வெளியே செல்பவன் ,நன்மதிப்பைப் பெற,ஐந்து
        விஷயங்கள் வேண்டும் என்கிறார்களே  ?
192. இல்லாத அபவாதத்தை ஒருவன்மீது சுமத்தி,அந்த அபவாதம் பரவும்போது
       வீண் அபவாதத்தைச் சுமத்தினானே அவனுக்கு ,இரண்டு பங்கு
       பாபம் வரும் என்கிறார்களே  ?
193.”சதக்ரது ”என்று சொல்கிறார்களே, அது என்ன ?
194. ”சிச்ருக்ஷை ”யில்,  இங்கித சிச்ருக்ஷை என்று இருக்கிறதா ?
195.”ஐச்வர்யம் ”வருவது தெரியாமல்  வரும்; போவது தெரியாமல் போய்விடும்
       என்கிறார்களே  ?
196. ”காம்பீர்யம்”—-என்றால்   ?
197. அணைக்க இயலாதது—–?
198. பொறுக்க முடியாதது—-?
199. ”பரசுராம க்ஷேத்ரம் ”–என்கிறார்களே ? அது என்ன  ?

200. ”பரீக்ஷித்”துக்கு , இயற்பெயர்  உண்டா ?

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு

ஈ –மெயில் அனுப்பலாம்

———————-தொடருகிறது—-மொத்தம் 1008 அல்லவா !
 –73260_1021559537891049_526316553254955728_n
About the Author

Leave A Response