Ketpathum Solvathum–8

Posted on Jul 16 2016 - 10:11am by srikainkaryasriadmin
கேட்பதும் சொல்வதும்–8  ( 701  முதல் 800  வரை )

அடியேன் 2006ம் ஆண்டு   ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை. 
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

701. ”ஜகந்மங்கள ஸ்தோத்ரம்” என்று எதைக் குறிப்பிடுகிறார்கள் ?

702. பகவானின் ”தசாவதாரங்களை”யும் ஸேவித்தவர்  யார் ?

703. பகவானை, ஷாட்குண்ய பரிபூர்ணன் என்கிறார்கள்;மற்றும் அநந்த

கல்யாண குணங்களை உடையவன் என்கிறார்கள், எது சரி ?

704.கலிபுருஷனால் ஏற்படும் கஷ்டத்தைப் போக்க என்ன செய்யலாம் ?

705.”சரு ” என்கிறார்களே , அது என்ன ?

706.மனிதனுக்கு எப்போது துக்கம் வருகிறது ?

707.”க்ருச்ரம் ” என்றால் என்ன /

708. தர்மபுத்ரருக்கு, பாண்டவர்களின் புரோஹிதர் ,ஸூர்யனைத் துதிக்கின்ற

நாமாக்களை உபதேசித்தாராமே  ?

709.இந்த ஸூர்யனைத் துதிக்கின்ற நாமாக்கள் , ரொம்பவும் விசேஷமானவையா ?

710.”மோஹன பிஞ்சிகை ” என்றால் என்ன ?

711.”ப்ரவாஹ நித்யம்” என்றால் ?
712.”ஸ்வரூப நித்யம் ” —-/
713.”ஜல்பம் ” என்பதன் பொருள் என்ன  ?
714.”விதாண்டாவாதம் ” என்பதற்கு , வேறு அர்த்தமா ?
715.”ஸப்தார்த்த சிந்தனை”என்கிற ஏழு என்ன /
716.அவதார ரஹஸ்யம் ஆறு என்கிறார்களே  /
717. பகவானைத் தியானிப்பது எப்படி  ?
718.”ஸ்வரூப”த்தியானத்தை எப்படிப் பிரித்திருக்கிறார்கள் ?
719.இரண்டு என்று விளக்கினீர்கள்;இவை மிகமிகக் கடினம் அல்லவா  ?

720. இந்த இரண்டைத் தவிர வேறு வகை இருக்கிறதா  ?

721. கேள்வி 709க்கு ஸூர்யநாமாக்களைப் பற்றிச் சொன்னீர்கள்; இப்போது ஸூர்ய
         பக்தன்  —— பிறகு ?
722.”தத்க்ரது  ந்யாயம் ” என்பதைப்பற்றிச் சொல்ல முடியுமா ?
723.” அநுவாதம் ” என்பது  என்ன ?
724.வ்யாதியால் படுத்த படுக்கையாக இருப்பவன், ஸ்நானம் செய்யமுடியாத
நிலையில், ”சுத்தி”தேவை. இதற்கு வழி  ?
725.ப்ரஸவத் தீட்டு, ரஜஸ்வலைத் தீட்டு மற்றும் வியாதியால் படுத்த படுக்கையாக
       இருக்கும் மாது (ஸ்த்ரீ ) விஷயத்தில் சுத்தி எப்படி ஏற்படுகிறது ?
726.”விஷ்ணுஹஸ்த ப்ரதானம் ”  என்றால் என்ன  ?
727.”மஹா பாகவத ஸ்பர்சம் ” என்று இதைச் சொல்கிறார்கள்  ?
728.இதற்கு ஏதாவது உதாரணம் இருக்கிறதா ?
729.”ஹவிஸ் ஸமர்ப்பண  ந்யாயம் ”—-இது என்ன ந்யாயம்  ?

730.பகவானிடம் ஸமர்ப்பிக்கப்படும் ”ஆத்மா”வும் ”ஹவிஸ்” தானே  ?

731. புத்தியின் எட்டு குணங்களுக்கு ஒட்டு மொத்தமாய் ஒரு பெயர் இருக்கிறதாமே  ?
732.”ஸாங்க்ய காரிகை” என்றால்   ?
733.”காலபுருஷ தானம்”என்கிறார்களே, இது என்ன ?
734.”காமஸ்ய அஸ்த்ரம் ” என்றால் என்ன  ?
735. அர்ச்சாமூர்த்தியாக, ஸ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹனையும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவனையும்
        ஸ்ரீ லக்ஷ்மி வராஹனையும் ஸேவிப்பதில் அப்படி என்ன விசேஷம்  ?
736. விசேஷமென்று மனஸ் சம்மதித்தாலும், தாயாரின் திருவடிகள் ஸேவை
        ஆகாதபடி புடவையோ, பாவாடையோ சாத்தியிருந்தால், இது சாத்யமில்லை அல்லவா ?
737.தாயாரின் திருவடிகள், பகவானின் வலது திருவடி மட்டில் –ஆகிய ஸேவை
       எதைக் குறிக்கிறது  ?
738.வேதமும் சாஸ்த்ரமும் எதை எதை செய்யக்கூடாது என்று சொல்கிறதோ
       அதைச் செய்தால் பாபம். ஆனால், பிறர் செய்யும் பாபமும் இவனுக்கு
       இந்த ஜீவனுக்கு வந்து சேருமா  ?
739.கிடைக்கப்பெறாத ஒருவன் சிஷ்யனாகக் கிடைத்தால், அதனால் ஆசார்யனுக்குப்
       பெருமை வந்து சேருமா  ?
740.நாம் ஒருவரிடம் பேசுவதற்கு , அவரிடம் எந்தத் தகுதியும் இல்லை.க்ஞானம் ,
       அநுஷ்டானம் அத்யயநம் ,பகவத் கைங்கர்யத்தில் ஈடுபாடு –என்கிற எந்தத்
        தகுதியும் இல்லை.நாம் அவருடன் பேசத்தகாது. ஆனால், சந்தர்ப்பமும்

        கட்டாயமும் அந்த மாதிரி பேசும்படி நேர்ந்துவிட்டால்  என்ன செய்வது  ?

741. நித்யம், நைமித்திகம் காம்யம் –இந்த மூன்றிலும் வருவது எது  ?
742.  ஒரு வைஷ்ணவன் ,ஆசார்யனை அடையவேண்டும் என்கிற
உந்துதல்/உத்வேகம்/விருப்பம் ,அவனுக்கு எப்போது ஏற்படும்  ?
743. ”அப்ருதக்ஸித்த  விசேஷணங்கள்”  என்றால் என்ன ?
744.”நிரூபகம்”  என்றால்  என்ன ?
745.”ப்ரதிதந்த்ரம் ” என்றால் என்ன  /
746.ஸரீரத்தின்  லக்ஷணம் என்ன    ?
747.இந்த சரீர,  ஆத்ம பாவத்தை வேறுவிதத்தில் சொல்லலாமா ?
748.”தாஸத்வம் ”,  ”ஸேஷித்வம் ”  —?
749.”கானத்தை வெறுப்பவர், கண்ணனையே வெறுப்பவர் ” என்கிறார்களே ?
750.கர்மயோகத்தில் சதாசர்வகாலமும் ஈடுபட்டு, ராஜரிஷியாக ஆட்சியும்

        புரிந்து, மோக்ஷத்தை அடைந்தவர் ”ஜநகர் ” என்கிறார்களே  /

751.” ப்ரௌடபாதன்”  என்ற சொல்  யாரைக் குறிக்கும் ?
752.வலது கை விரல்களில், தீர்த்தத்துக்கு ”ஸ்தான பேதங்கள்” உண்டா ?
753.நதிகளில் ”மஹாநதி ” என்றால் என்ன ?
754.”ஸ்ரோதஸ்”  என்றால் என்ன ?
755.”ஸரஸ் ” என்றால் எதைக்குறிக்கும் ?
756.”தடாகம்” என்றால்   ?
757.”குணாதீத”னுக்கு லக்ஷணம் என்ன  ?
758.”வைராக்யம்”  இரண்டு விதம் என்கிறார்களே /
759.”பருத்தி” என்பது, சரி.பருத்திச் செடியிலிருந்து பஞ்சு வருகிறது.துணிகள்
        நெய்ய உபயோகப்படுகிறது. ஆனால், செம்பருத்தி—?

760. பருத்தியை ஸத்வ குணத்துக்கு ஒப்பிடலாமா ?

761. ”மடைப்பள்ளி” எப்படி இருக்கவேண்டும் ?
762. ” தாமஸ சாஸ்த்ரங்கள் ” அஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டதாமே ?
763.”பகவான்”, ஸ்வதந்த்ரன் . அவன் பரதந்த்ரன் ஆவது உண்டா ?
764.குயிலின் குரல்  மாத்திரம் இனிமையாய் இருப்பது எப்படி ?
765. ”காக்கை”யைப்  பற்றி —–/
766.”உத்ஸவம் ” என்கிறார்களே அதன் பொருள் என்ன  /
767.”பவித்ரோத்ஸவம் ” என்றால்  /
768.”பவித்ரம் ” என்றால்  என்ன  ?
769.”பவித்ரோத்ஸ”வத்தை , யார் செய்வது  /

770. பவித்ரோத்ஸவத்தை ,ஆரம்பிப்பதற்கு முன்பு—-?

771. பகவான் ப்ரதம ஆச்சார்யனா   ?
772.அப்படியானால், எவ்விதம்   ?
773. பந்தங்கள் யாவையும் விட்டொழிக்க, உறவுமுறைகளை அறுத்தெறிய
        ”ஸந்யாஸம் ” சிறந்த சாதனம்  அல்லவா ?
774. ஸந்யாஸத்திலும்  விடாத பந்தம் எது ?
775.அழியும் பதவிகள் எவை ?அழியாத பதவி எது  ?
776. எவையெவை நறுமணங்கள்  ? எப்படிக் கிடைக்கின்றன  ?
777.”ஆலிங்கனம்”,  ”ஆலம்பனம்” இரண்டு வார்த்தைகளுக்கும் வித்யாசம் என்ன ?
778.அந்தப்”பிடிப்பு” என்கிறீர்களே–அந்த ஆலம்பனம் எது ?
779. இந்த ”மஹாயோகம்” எதற்காக  ?

780. ஆசாரம் என்பது பொதுவானதா ? இது எல்லோரையும் கட்டுப்படுத்துமா /

781. எந்தப் புஷ்பங்களைக் கொண்டு பகவானை ஆராதிக்கவேண்டும் என்று
        நியதி  இருக்கிறதா ?
782.மலைகளுக்கு–புஷ்பமாலைகளுக்கு, இப்படி நியதி —-?
783.”திவ்ய மங்கள  விக்ரஹம் ” என்பது அர்ச்சாவதாரம்  தானே  ?
784.இதைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்  ?
785.ப்ரம்மமானது, ”ஏதத் த்ரிவிதம் ”என்று சொல்லப்படுகிறதே ?
786.”காலம்” எங்கும் பரவியுள்ளதா ?
787.நமது பூமியிலேயே இந்தக் காலமானது இடத்துக்கு இடம் வேறுபடுகிறதே ?
788.”அச்வஸ்வரூப ஜ்ஞானம் ” என்றால் என்ன ?
789.”ஜீவ சரீரம்”, ஜீவனுக்கு  ஜீவன் வேறுபடுவது ஏன் ?

790. இந்த ஜீவ சரீரத்தின் ”அமைப்பு”, அப்படியே இருக்குமா ?

791.இந்த அமைப்பு குலைவது எப்போது  ?
792.அமைப்பு குலைவது எதனால் ஏற்படுகிறது ?
793.”தாபத்ரயத்”தைப் பற்றி சற்று விளக்க முடியுமா ?
794.”த்ரிவிதப்ரவர்த்தி ”என்றால் என்ன  ?
795.கைங்கர்யம்–எவை  ?
796.இந்தக் கைங்கர்யங்கள், அழியாததா ?
797. எந்தக் கைங்கர்யம் அழியாதது ?
798.எந்தக் கைங்கர்யத்தில் ”ருசி” வேண்டும் ?
799.ஜ்ஞானம் எங்கும் ப்ரகாசிக்கும்,எங்கும் பரவும் என்பது சரியா ?

800.ஒரே வஸ்து, அநுகூலமாகவும் ,ப்ரதிகூலமாகவும் இருப்பது சாத்யமா ?

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு 

ஈ –மெயில் அனுப்பலாம்—————-
—-———-தொடருகிறது—-மொத்தம் 1008 ——–

tirupati--moolavar
About the Author

Leave A Response