Ketpathum solvathum–10 ( 991 to 1008)

Posted on Jul 24 2016 - 6:59am by srikainkaryasriadmin
கேட்பதும் சொல்வதும்—10 (901  to 1008 )
அடியேன் 2006ம் ஆண்டு   ஆகஸ்ட் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் வரை,
ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில் ,
”கேட்பதும் , சொல்வதும் ” என்கிற தலைப்பில், 1008 விஷயங்களைச்
சொல்லி இருக்கிறேன் .
அந்த விஷயங்களின் ,தலைப்பைப் படித்தால், விஷயங்களை
பொதுவாக ஊகித்துக் கொள்வீர்கள். விவரமாகப் படிப்பதற்கு, இதைப்
புத்தகமாக வெளியிடவில்லை. 
இப்போது, அந்த 1008 விஷயங்களின் தலைப்பை மட்டும் சொல்கிறேன்

901,”க்ருஹதர்மிணி ” ,  உண்மையிலேயே அந்தச் சொல்லுக்கு ஏற்றவளா

என்பதை எப்படித் தெரிந்து கொள்வது ?

902. ஸ்ரீமஹாலக்ஷ்மி நித்யவாஸம் செய்யும் இடங்கள்என்று ,கோயில்களைத்

தவிர ,வேறு இடங்கள் இருக்கின்றனவா ?

903.உலக ஜனத்தொகையில்,”ஹிந்துக்கள்”,நான்காவது இடத்தில் ( வரிசையில் )

இருக்கிறார்களாமே   ?

904. ”பரமைகாந்திகள்”நதியிலோ புஷ்கரணியிலோ தீர்த்தமாடும் விதம்பற்றி,

ஸ்ரீ பாஷ்யகாரர், ”நித்யக்ரந்தத்”தில்  அருளி இருக்கிறாராமே   ?

905. இதைச் சுருக்கமாக, அடியேனுக்குப் புரியுமாறு, சொல்லமுடியுமா ?

906. ஏழுதலைமுறைக்கணக்கு, 84 என்கிற கணக்கு —?

907.”அசித்விசிஷ்டஜீவசரீரக பரமாத்மா  ?

908.”வேள்வி” எத்தனை வகை ? விவரியுங்கள் —

909. சாப்பிடுவது என்பதும் வேள்வி என்கிறார்களே ?

910. நாம் எல்லோரும் ஹிந்துக்கள் என்பதற்கு என்ன அத்தாக்ஷி ?

911. மதம் வேண்டும், அதற்கு ஆதாரமான வேதம் வேண்டாம்;சாஸ்த்ரம் வேண்டாம்;

என்கிற நிலைமை நிலவுகிறதே  ?

912. ”ராஸபஞ்சாத்யாயி ” என்பது என்ன ?

913. ”ஒக்கப் பரிமாறுகிறவன் ”யார்  ?

914. ”கிழிச்சீரை ” என்பது என்ன  ?

915. ”குவாஸனை ” என்றால்  ?

916. ”குபுத்தி ” என்றால் என்ன ?

917. ”குதர்க்கநிசயம்  ” என்பது என்ன ?

918. ”குஹேது” என்றால் ?

919. ”குபாவம் ” என்றால்  ?

920. பகவானுக்கு மிகவும் வேண்டியவர்கள் யார் ?

921. வாயால் செய்யப்படும் பாவம் , நான்கு என்கிறார்களே  ?

922.யமன், ப்ராம்மணர்களைக் கொல்ல  எண்ணலாமா ?

923.ஸுக்ருதப்ரணாமம்  என்றால் என்ன  ?

924.யார் பதிதன்  ?

925.சிறுமானிசர் யார் ?

926.ஸ்ரீ பாஷ்யகாரர், ஊர்த்வபுண்ட்ரம் தரித்தலைப் பற்றி,அருளியிருக்கிறாராமே ?

927.”ஸ்ரீ சூர்ணம் ”தரித்துக்கொள்வதைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லலாமே ?

928. ”ப்ராஹ்ம முஹூர்த்தம் ”எப்போது என்று சொன்னீர்கள். அச்சமயத்தில் ,விழித்து

எழுவதால்  என்ன நன்மை என்று இப்போது  சொல்லுங்கள்  !

929. அப்போது தூங்கினால்   ?

930. இரவு டூட்டி என்று இரவில் கண்விழிப்பவர்கள், இரவு மிகத்  தாமதமாகத்

தூங்கினால், எப்போது எழுந்து கொள்வது ?

931. ”தேஹ மலங்கள்” பன்னிரண்டு என்கிறார்களே  ?

932.”கண்டூஷம்” என்றால் என்ன  ?

933.”பவித்ரம்”–இப்போதெல்லாம்,வெள்ளி அல்லது தங்கத்தால் செய்ததை அணிகிறார்களே ?

934.க்ரஹணங்களில் ” சூடாமணி புண்ய காலம்”என்கிறார்களே ,அது என்ன ?

935.”ஸந்த்யாவந்தன”மந்த்ரங்களில், எந்த ஸூக்தம் ”ஸுரபீமதீ ”என்று சொல்லப்படுகிறது ?

936.”மந்த்ரம்”என்றால்  என்ன அர்த்தம்  ?

937.”ஜபம்” என்றால் என்ன  ?

938.”வஸு ”,  ”ருத்ர ”,  ஆதித்யர்கள்” என்று தர்ப்பணங்களில் சொல்கிறோமே,

இவர்களின் விவரம் சொல்லமுடியுமா ?

939. ”பர்க்ஷிக்ஷதர் ” என்று யாரைச் சொல்கிறார்கள் ?
940.  பர்க்ஷிக்ஷதருக்கும், இந்த்ரனுக்கும் என்ன சம்பந்தம்  ?

941. ஆசார்யனை அடைவதற்கு, ஒருவனுக்குத் தேவையானவை எவை ?

942.ஜீவாத்மா, ஒருவன் அல்லது ஒருத்தி என்று சொல்கிறோமே ,அவன்/அவள் யார் ?
943. அப்படியானால், பகவானாகிய பரமாத்மா /

944. இந்த்ரனும், கர்மவசப்பட்டவனா ?

945.”அநுஷங்கிகம் ” என்றால் என்ன ?

946. யாரிடமிருந்து, எந்தப் பொருளைப் பெறக்கூடாது ?

947. யாருக்குக் கொஞ்சங்கூடக் ”கௌரவம் ”கொடுக்கக்கூடாது ?

948.பக்தி செய்யும்போதும் ” விக்நம் ” ( தடை ) ஏற்படுமா ?

949.வேத வாக்யங்கள் ,பகவானைப்பற்றி மட்டும்தானே சொல்கின்றன ?

950. பெரிய பெருமாள் உயர்ந்தவரா? பெரிய பிராட்டி உயர்ந்தவளா ?

951. கலியுகத்தில் கவனிக்க வேண்டியதாக ”சாண்டில்ய”ஸ்ம்ருதி சொல்வது என்ன ?

952. சாஸ்த்ரத்தைப் பெறக்கூடாதவன் யார் ?

953.யார் யாருக்கு  எந்த சாஸ்த்ரத்தைச் சொல்லக்கூடாது ?

954. மந்த்ர உபதேசம் யார் யாருக்குச் செய்யக்கூடாது ?

955. யார் , யாருக்கு மந்த்ரோபதேசம் செய்யலாம் ?

956.இப்படிப்பட்டவர்கள், பிரார்த்தித்தவுடன் செய்யலாமா ?

957.வைதிக மந்த்ரம், தாந்த்ரீக மந்த்ரம் , வித்யாசம் உண்டா ?

958. வேதம் சம்பந்தமான விவரங்களை சொல்லுங்கள் !

959. ”பதம்” என்றால் என்ன ?

960. ”பதார்த்தம்” என்றால் ?

961. ப்ரத்யக்ஷத்தால் ,ஒரு பொருளை எப்படி அறிகிறோம் ?

962.இதற்கு உதாரணம் சொல்லுங்களேன் ?

963. திக்குகள் இருக்கின்றன–4 திக்குகள் —ஒரு திக்கை, வேறு திக்காக

எண்ண /நினைக்க  முடியுமா ?

964. ”வ்யாபகம்”,  ”வ்யாப்யம் ” இரண்டுக்கும் வித்யாசம் என்ன ?

965 ”வ்யாப்தி” என்றால் என்ன ?

966.”லக்ஷணம்”என்றால் என்ன ?

967. மந்த்ரங்களைச்  சொன்ன ரிஷிகள், அவற்றை அவர்களே உண்டாக்கி

அதற்குப் பிறகு, எல்லாருக்கும் சொன்னார்களா ?

968.”காம்ய பலன்”களை  அடைவதற்கு, வேதங்கள் சில யாகங்களைச்

செய்யச் சொல்கிறது. வேதங்கள் ,பகவானை அடையும் வழியைத் தானே

சொல்லவேண்டும் ?

969. ”ப்ரக்ருதி” அழிவு இல்லாதது என்கிறார்களே ?

970. ”ப்ரக்ருதி”க்கு , அவஸ்தை சொல்லப்படுகிறதே  ?

971. கோத்ரங்கள், ஸ்மார்த்த,வைஷ்ணவ,மாத்வர்களுக்குத் தனித்தனியே

இருக்கிறதா ?

972. ஒரே கோத்ரத்தைச் சேர்ந்தவர்களில், சிலருக்கு ”யஜுர் வேதத்”தில்

ஸ்வசாகை  என்றும், ”ருக்வேதம்”  ஸ்வசாகை” என்றும் பிரிந்து

இருக்கிறதே ?

973. ”அதிக்ருச்ரம் ”, என்று ஒரு ப்ராயச்சித்தம் இருக்கிறதா /

974. ”சாந்திராயணம்” என்பது ?

975. ஸ்வாமி தேசிகன், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளைப் பற்றி அருளிய

ஸ்தோத்திரங்கள்  எவை  ?

976. பகவானின் குணங்களையும் குற்றங்களையும் எண்ண இயலாது,

என்கிறார்களே, பகவானிடம் குற்றம் உண்டா ?

977. நல்ல கார்யங்கள் செய்யும்போது,இடைஞ்சல் வந்தால், அந்த இடைஞ்சலை

நீக்க, ஸாத்வீகமான வழியில், ஸத்யாக்ரஹம் என்பதைக் காட்டிக் கொடுத்தவர்

பகவான் என்று சொல்லலாமா ?

978. ஸ்வாமி தேசிகன், தான் அநுக்ரஹித்த ஸ்தோத்ரத்துக்குத் தானே ,வ்யாக்யானம்

அருளியிருக்கிறாராமே  ?

979.ஸ்ரீ வல்லபாசார்யர் , யார் என்று தெரிந்து கொள்ளலாமா ?

980. இந்த வல்லபாசார்யர், கீதைக்கு, ஒரே ஒரு ச்லோகத்தில், வ்யாக்யானம்

எழுதியிருக்கிறாராமே  ?

981. அவர் எழுதவில்லையெனில், யார் எழுதியது ?

982. அது என்ன ச்லோகம் ?

983. ”யதி”  என்றால், ”ப்ரபந்நன் ” என்கிற அர்த்தம் உண்டா ?

984.ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்ரங்களில், குருபரம்பரை உள்ள ஒரே   ஸ்தோத்ரம்

”ஸ்ரீ தேவநாயக பஞ்சாசத் ” என்கிறார்களே  ?

985. ”காரகத்வம்” என்றால்  ?

986.”நியந்த்ருத்வம் ” என்றால்  /

987. ” சேஷித்வம் ” என்றால்  ?

988. ”மோக்ஷம்” பெறுவதற்குத் தடையாக இருப்பது எது ?

989.”ப்ரக்ருதி”இதைப்பற்றி மறுபடியும் கொஞ்சம் சொல்லுங்களேன் ?

990. ”த்ரிவித அசேதநம் ” என்றால் என்ன ?

991. ”அயோகவ்யவச்சேதம் ” என்றால் என்ன ?

992. ”அன்யயோ கவ்யவச்சேதம் ” என்றால்  ?

993. ”சேதநத்வம் ” என்றால் என்ன  ?

994.”த்ரிவிதப்ரவ்ருத்தி ” என்றால் என்ன  ?
995. த்ரிவிதப்ரவ்ருத்தி—இது ஆத்மாவில் சேருமா  ?

996. ”தர்மபூத ஞானம் ”என்கிறார்களே, அது என்ன ?

997. ”விஷஸித்வம் ” என்றால்  ?

998. ”ஸ்வரூப ஞானம் ” என்றால்  ?

999. ”ப்ரத்யக்த்வம் ” என்கிறார்களே, அப்படியென்றால் ?

1000. ”காலம்” எங்கும் பரவியுள்ளதா ?

1001. ”புருடன் மணி வரமாக “‘ அர்த்தம்  என்ன  ?
1002. ”பொன்றாமூலப்ரக்ருதி –” மறு  ஆக —- இதன் அர்த்தம்  ?

1003. ”மான்தண்டாகத் தெருள் மருள்வாள் மறைவாக —இதன் பொருள் ?

1004. ஆங்காரங்கள் சார்ங்கம் ஆக , மனம் திகிரி ஆக  என்றால்  ?

1005. ”இருடிகங்கள் ஈர் ஐந்தும் சரங்களாக —“‘ என்றால் ?

1006. ”இருபூதமாலை ,வனமாலையாக” என்றால்  ?

1007. ”கருடன் உருவாம் மறையின் பொருளாம் கண்ணன் —” என்றால் ?

1008. ”கரிகிரிமேல் நின்று அனைத்தும் காக்கின்றானே —” என்றால் ?

அந்தக் கண்ணன்தான் ஸ்ரீ தேவப்பெருமாள். ஹஸ்தகிரியின் மேலே,எல்லாரும்

தரிசிக்கும்படி எழுந்தருளி எல்லாவற்றையும் ரக்ஷிக்கிறான்.

1001  முதல் 1008 வரை –8வித கேட்பதாக ,ஸ்வாமி தேசிகன்
”அதிகார ஸங்க்ரஹத்”தில்  அருளிய பாசுரத்தைப் பிரித்து,
அதற்கு அர்த்தம் சொல்வதாக , ”சொல்வதும்” என்பதில் இருத்தி

மிகமிகச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.

————–ஸுபம் ——————–

மேற்சொன்ன 100 தலைப்புகளில், எவருக்கேனும் ஒரு தலைப்பைப் பற்றித்
தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால், srikainkarya@gmail.com க்கு 

ஈ –மெயில் அனுப்பலாம்—————-book publication 10407160_260471030822559_1433101365633704206_n

About the Author

Leave A Response