Numbers –what they say—-

Posted on Jul 30 2016 - 5:42am by srikainkaryasriadmin

எண்கள் —அவை சொல்வது என்ன -?–20
——————————————————————-

FROM  3   TO  1

இப்போது , எண் 3 –இதைப் பார்ப்போம்

i .ஈஷணத்ரயம்
1. மண்
2. பெண்
3. பொன்

ii .தத்வத்ரயம்
1. சேதனன் ( ஆத்மா, ஜீவாத்மா அல்லது சித் என்றும் சொல்வர் )
2.அசேதனம் (அறிவில்லாதது )
3. ஈச்வரன் (பரமாத்மா,பகவான் )
அடியேனின் “ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயம் –சில முக்ய விஷயங்கள்
என்கிற புத்தகத்தில் (5ம் பதிப்பு ) எல்லா விவரங்களும் உள்ளன

iii .தூஷணத்ரயம்
1. அவ்யாப்தி—பசுக்கள் வெண்மையாக இருக்கும் என்கிறபோது
வேறு நிறமுள்ள பசுக்களும் இருப்பதால், இது அவ்யாப்தி என்கிற தோஷம்
2. அதிவ்யாப்தி—பசுவுக்குக் கொம்பு உண்டு என்கிறபோது, வேறு
மிருகங்களுக்கும் கொம்பு இருப்பதால் இது அதிவ்யாப்தி என்கிற தோஷம்
3. அஸம்பவம்—பசுவுக்கு ஒரு குளம்புதான் உண்டென்றால் ,இப்படிப்பட்ட
பசுவை எங்கிருந்து கொண்டுவருவது—

இப்படி 3 தோஷங்களும் இல்லாமல் விவரிக்கவேண்டும்

iv 3 அவஸ்தைகள்
1. விழித்து இருப்பது
2. தூங்குவது
3 ஸ்வப்னம்

v . உபதேசம் 3 வகை
1. பிரபுவைப்போல ஆணையிடுதல்
2. தோழனைப்போல ஹிதமாகச் சொல்வது
3. பிரியமான மனைவியைப் போல, ஆசையை உண்டாக்கி,
சொல்வதைச் செய்தால் ஒழிய தரிக்கமாட்டதபடி –தெரிவிப்பது

vi 3 முக்ய தோஷங்கள்
1. பொய் பேசுவது
2. பிறதாரத்திடம் நோக்கம்
3. பகை இன்றி இருக்கச் செய்தேயும், பிற ஹிம்ஸை
(பொய் பேசுவது தனக்குமட்டும் துன்பம் விளைவிப்பது. பிறன்மனை
விழைதல்–இருவருக்கும் பாபம்.3வது பலருக்குப் பாபம் )

vii 3 தலைமுறை வேத ஸம்பந்தம்
1. யஸ்ய வேதச்ச வேதீச விச்சித்யேதே த்ரி பூருஷம் |
ஸவை துர்ப்ராம்ஹணேஜேய : ஸர்வகர்ம பஹிஷ்க்ருதம் ||
மூன்று தலைமுறைகள் வேத சம்பந்தமும் (அத்யயனம் )
அத்யயனம் பண்ணியவர்கள் சம்பந்தமும் எவனுக்கு இல்லையோ,
அவன் துர்ப்ராஹ்மணன் என்று ஸ்ம்ருதி சொல்கிறது. ஒரு கர்மாவும்
செய்ய யோக்யதை இல்லாத ப்ராஹ்மணன் ஆகிறான்

viii 3வித வரவேற்பு
மரணத்தின்போது—
1. பாபாத்மாக்களுக்கு —-2 யமகிங்கரர்கள் வருவார்கள்
2. புண்யாத்மாக்களுக்கு—யமன் வருவான்
3. மோக்ஷம் அடைபவர்களுக்கு—பகவானே வருவான்

ix .போக்யத்வம் –3
1. போக்தா—அனுபவிப்பவன்
2. போக்யம் —அனுபவிக்கப்படும் பொருள் (போக்யத்வம் )
3. பிரேரிதா —-அந்தப்பொருளை அனுபவிக்கும்படியாக
நம்மை ஆக்குகிறவன் (நியம்க்ருத்வம் )

x . தீக்ஷைகள் —3
1. ஸ்பர்ச தீக்ஷை —-மழைக்காலத்தில், உணவைக் கொண்டுவந்து,
குஞ்சுகளுக்குக் கொடுக்க இயலாத தாய்ப்பறவை ,பசியால் கத்தும்
தன்னுடைய குஞ்சுகளைத் தன் இறக்கைகளால் அணைத்துக்
கொள்கிறது. குஞ்சுகளுக்குப் பசி தீர்ந்துபோய் ஆனந்தமாகக்
கத்துகிறது
2. நயன தீக்ஷை (த்ருக் தீக்ஷை )—தாய் மீன் , தன்னுடைய குட்டி
மீனைப் பார்த்தவுடனே , குட்டி மீனுக்குப் பசி தீருகிறது
3. ஸ்மரண தீக்ஷை—ஆமை எங்கேயோ ஓரிடத்திலும் , அதன்குட்டி
வேறு ஒரு இடத்திலும் இருந்தபோதிலும், தாய் ஆமை ,தன குட்டியை
நினைத்தவுடனேயே ,குட்டிக்குப் பசி தீருகிறது

xi . ரத்னங்கள் –3
1. புராண ரத்னம் —ஸ்ரீ விஷ்ணு புராணம்
2. ஸ்தோத்ர ரத்னம்—ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரம்
3.மந்த்ர ரத்னம் –த்வய மந்த்ரம்

xii . கத்ய த்ரயம்
1. சரணாகதி கத்யம்
2. ஸ்ரீ ரங்க கத்யம்
3.ஸ்ரீ வைகுண்ட கத்யம்
ஸ்ரீ பாஷ்யகாரர் அருளியது

xiii . மந்த்ர ஸித்தி ஏற்பட 3 இடத்தில் பக்தியும் ,ச்ரத்தையும் வேண்டும்
1. மந்த்ரத்தின் இடத்தில்
2. உபதேசம் செய்யும் ஆசார்யன் இடத்தில்
3. மந்த்ர தேவதை இடத்தில்
குறிப்பு—மந்த்ரம் என்றால்—யார் பிழை இல்லாமல் உச்சரிக்கிறார்களோ
சொல்கிறார்களோ–அவர்களை—ரக்ஷிப்பதாலே ,அதற்கு மந்த்ரம் என்று பெயர்

xiv .விஷ்ணு காயத்ரியில் 3 நாமாக்கள்

1. நாராயணன்
2. வாஸுதேவன்
3. விஷ்ணு

xvi .ஏற்றமுடையது –3
1. அக்ரூராயணம்
2.அர்ச்சிராதி மார்க்கம்
3. திருவேங்கட யாத்ரை

xvii .எப்போது பார்த்தாலும் சலிக்காத புதுசு –3
1. யானை
2. சந்திரன்
3. சமுத்ரம்

xviii பகவன் நாம சங்கீர்த்தனம் 3 விதமாக உதவும்
1.த்ருஷ்ட பலம்—-அஜாமிளன் சரித்ரம்—கடைசி பிள்ளையான நாராயணன்
பெயரை உயிர் போகும் தருணத்தில் சொன்னான்
2. அத்ருஷ்ட பலம்—-த்ரௌபதிக்கு புடவை சுரந்தது
3. த்ருஷ்டா அத்ருஷ்ட பலம்—-கஜேந்திரன்காப்பற்றப்பட்டு மோக்ஷம் கிடைத்தது

xiv .அன்ன ஸுக்தம் 3 விஷயங்களைச் சொல்கிறது
1. மிதம் புக்த்வா —–மிதமாகப் பாதி வயிறு நிறையுமாறு சாப்பிட வேண்டும்
2. சதம் கதவா —சாப்பிட்டபிறகு, நூறு அடியாவது நடக்கவேண்டும்
3. வாமபாகே சயநாஞ்ச –இடதுபக்கம் சாய்ந்து 10 நிமிஷம் படுக்கவேண்டும்
இப்படி இருந்தால், வைத்யனிடம் ,இவன் போகவேண்டாம் என்கிறது அன்னஸுக்தம்

xx . வ்யாபக மந்த்ரங்கள் –3
1. அஷ்டாக்ஷரம்
2.ஷடக்ஷரம்
3.த்வாதசாக்ஷரம்

xxi .மூன்று விஷயங்கள் ப்ரமாணம்
1. ப்ரத்யக்ஷ ப்ரமாணம்
2. சப்த ப்ரமாணம்
3. அநுமான ப்ரமாணம்

xxii . பித்ரு தேவதைகள் —3
1. வஸு
2.ருத்ர
3.ஆதித்ய

xxiii .ரிஷிகள் 3 வகை
1. ராஜ ரிஷிகள் —உதாரணம்—விச்வாமித்ரர்
2. தேவ ரிஷிகள்—-உதாரணம்—நாரதர்
3. ப்ரஹ்ம ரிஷிகள் —உதாரணம்—வசிஷ்டர், அத்ரி பிருகு முதலியோர்

xxiv .விசிஷ்டாத்வைதம்–த்ரிவேணி வைஷ்ணவம்
1.உபநிஷத்தும்,வேதமும்—-கங்கை
2.பாஞ்சராத்ர நூல் —யமுனை
3.ஆழ்வார் அருளிச் செயல்கள்–சரஸ்வதி
ஆக , விசிஷ்டாத்வைதம் , த்ரிவேணி வைஷ்ணவம் எனப்படுகிறது.

xxv .கைங்கர்யம் 3 வகை
1. வாசிக —-வாசித்தல், ஸ்தோத்தரித்தல்
2.காயிக—-கைகளால் அர்ச்சித்தல்
3.மானஸீக —-மனத்தால் ஸ்மரித்தல்

xxvi . கேட்பது 3 வகை
1. வாயால் கேட்பது—-உதாரணம்–ஒரு பஞ்சாதி சொல் என்று மாணவனை
ஆசிரியர் கேட்பது–இது வாயால் கேட்பது
2. காதால் கேட்பது—-மாணவன் சொல்லும் பஞ்சாதியைக் காதால் கேட்பது
3. சொன்னபடி கேட்பது—-அந்த மாணவன் ,ஆசிரியர் சொன்னபடி கேட்டது

xxvii .3 விஷயங்களைத் தவிர்க்க வேண்டும்
1. அதிகமாகப் பேசுவது
2. அதிகமாக செலவழிப்பது
3.அதிகமாக எதிர்பார்ப்பது

xxviii . 3 விஷயங்களில் குறைவு கூடாது
1. மிகச் சொற்பமாக அறிவது
2. மிகச் சொற்பமாகக் கையிருப்பு
3. மிகச் சொற்பமான தகுதி

xxiv . மனிதனுக்கு 3 கடன்கள் முக்கியம்
1. ருஷிக்கடன் –ருஷிகளுக்கான கடன்–இது வாக்குக்கு அதிஷ்டான தேவதை
2. பித்ரு கடன்—-மூதாதையர்களுக்கான கடன்—இது உடலுக்கு
3. தேவர் கடன்—-தேவர்களுக்குச் ன்செஇவது—இது பாவத்தைப் போக்கும்
ஆக , மனிதனுக்கு மூன்று கடன்கள் முக்கியம்

xxv சாப நிவ்ருத்தி–3
1. ப்ரஹ்ம சாபம், மார்பின் வியர்வையாலே போக்கலாம்
2. துர்வாசரின் சாபம், மார்பில் இருப்பவளின் கடாக்ஷத்தாலே போக்கலாம்
3. கௌதம சாபம், ஒரு தடாகத்தில் முழுக்கிட்டுப் போக்கலாம்

xxvi .புத்தி விழிப்புடன் இருக்க 3 செயல்கள் முக்யம்
1.இயல்பு உணர்ச்சி —INSTINCT
2. அறிவு —-INTELLIGENT
3. உள்ளுணர்வு —-INTUTION

xxvii. தாமஸ குணம் 3 வகை
1. உண்மையை அறியாமல் உளறுவது
2. உண்மையை வேறாக மருண்டு எண்ணுவது
3. இது உண்மையோ இல்லையோ என்று மயங்குவது

xxviii ஜீவன் அனுபவிக்கும் சுகங்கள்–3
1. அசேதானுபவம்
2. சேதனானுபவம் —கைவல்யம்
3. பரமாத்ம அனுபவம்—மோக்ஷம்

xxiv . மூன்றுகள்
1. பொய் சொல்பவனைப் பரீக்ஷிப்பது
2. சுத்யந்தமாக தீர்த்த ஸ்வீகாரம்
3. தர்ப்பணத்தில் தில தானம்
4. வரப்ரேஷணம்
5. மருந்தும், விருந்தும்
6. விளையாட்டிலும்
7. பரீக்ஷை எழுதுவதும்

குறிப்பு— அடியேன் ஸ்ரீ காஞ்சி பேரருளாளன் ஆன்மிக மாதப் பத்திரிகையில்,
இவை போன்ற பற்பல நுட்பமான விஷயங்களை “கேட்பதும், சொல்வதும் ”
என்கிற தலைப்பில், 2006ம் ஆண்டு ஆகஸ்ட் முதல், 2013 ஏப்ரல் வரை
1008 கேள்வி—பதிலாக எழுதி இருக்கிறேன். அவற்றிலிருந்து, சிறிதளவே
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, அடியேனுக்கு
எழுதலாம்
————————————————————–

இப்போது எண் 2
———————-

i . கருணை 2 வகை
1. நித்யமான கருணை—- எல்லா ஜீவன்களையும், இருத்தி,
காத்து முதலான செய்யும் பகவானின் கருணை நித்யமானது
2.அநித்ய கருணை—அவரவர் செய்த அஜ்ஞாத ஸுஹ்ருதம்
முதலான கர்மாணு குணமாக விசேஷ பலன்களைக் கொடுப்பது,

ii . சரணாகதர் 2 வகை
1. ஆர்த்தர்—உடனே மோக்ஷம் வேண்டுபவர்
2. த்ருப்தர்—-சரீரம் விடுபட்ட பிறகு, மோக்ஷம் வேண்டுபவர்

iii . தர்மம் 2 வகை
1. ப்ரவ்ருத்தி தர்மம்—வேறு பலனுக்கான தர்மம்
1. நிவ்ருத்தி தர்மம்—-மோக்ஷத்துக்கான தர்மம்

iv . பகவானை ஆராதிக்க 2 முறைகள்
1. வைகானஸம்
2. பாஞ்சராத்ரம்

v . உபாஸிப்பவர்களுக்கு, பகவான் 2 விதமாக அருள்கிறான்
1. உபாயம்—-பகவானை அடைய, அவன் திருவடியை ஸ்மரிப்பது–
அவன் திருவடி உபாயம்
2. உபேயம் —பகவானின் திருவடியை எதற்காகப் பற்றுகிறோம் ?
பகவானை அடைவதற்கு—ஆதலால் பகவான் உபேயம்

vi . அக்னிக்குப் பாதணிகள் இருவர்
1. ஸ்வாஹா—
2. ஸ்வதா

vi i . கின்னர, கந்தர்வர்

1. கின்னரர்—மனித முகம், குதிரை உடல்
2. கந்தர்வர்—குதிரை முகம், மனித உடல்

viii . த்வயம்

இது இரண்டு என்று பொருள் படும் மந்த்ரம் –இரட்டை—
ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம :

——————————————————–

இப்போது எண் 1

பிரணவத்தைத் தவிர “ஏகம் ” என்பதற்கு வேறு எதுவும் பொருத்தமாக இருக்காது.
எண்கள் –அவை சொல்வது என்ன ? என்கிற இந்தத் தொடரை , ஊன்றிப்
படித்தவர்க்கு, எண் ஒன்று என்பது என்னவென்றும் ,அதன் மஹோன்னத
முக்யத்வமும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.
ப்ரணவத்தின் பொருளை, காலக்ஷேபமாகக் கேட்கவேண்டும் என்பதால்,
இங்கு விரித்துரைக்கவில்லை

பூஜ்யம் –இது பூர்ணம் –இந்த பூஜ்யத்தை மஹரிஷிகள் ,தபோபலத்தால்,
கண்டு உலகுக்குக் கொடுத்தார்கள் . அந்த மஹ ரிஷிகளையும் அவர்களின்
வழித் தோன்றல்களையும், சிரஸ் ஸாலும் , மனஸ்ஸாலும் நமஸ்கரித்து,
உபநிஷத் வாக்யத்தைச் சொல்லி நிறைவு செய்கிறேன்

ப்ருஹதாரண்ய உபநிஷத் சொல்லும் சத்யமான பூர்ணத்வத்தை ,இப்போது
பார்க்கலாம்
ஓம் பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே ||

ஓம்—-அது பூர்ணம் இதுவும் பூர்ணம்—-பூர்ணத்திலிருந்து , பூர்ணம்
தோன்றுகிறது. பூர்ணத்திலிருந்து , பூர்ணத்தை எடுத்தாலும்,
பூர்ணமே மிஞ்சுகிறது

ஓம் சாந்தி, சாந்தி , சாந்தி :

கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலினே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :

————————————————————————————————–

Abstract
It commences with 72 Melakarthaa ragams
Then, the importance of Sanskrit & Science with sanskritic mathematics
Then about Sri Vishnu SahasraNama
Chapter 4—-describes countless thiruvilaiyadal of Bagvhan; all movements

are according to some arithmetic
Chapter 5—Time-from seconds to Yugas
Chapter 6—Pithakaras theeram etc
Chapter 7–Moolaangam
Chapter 8—Arithmetics in Azhwaar pasurams, countless, 1008, 108, 96,
74, 72, 64, 63, 60,39, 32
Chapter 9– about 30, 27, 26, 24,
Chapter10–about 18
Chapter 11—about 16, 15, 14
Chapter–12—-about 12 and 11
Chapter 13—-About 10
Chapter 14—about 9
Chapter 15—about 8
Chapter 16– about 7
Chapter 17—about 6
Chapter 18—about 5
Chapter 19—-about 4
Chapter 20—about 3, 2, 1, 0
——————————————————–

குறிப்பு :—

2015ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், “எண்கள் —அவை சொல்வது என்ன”
என்கிற தொடரில், மிக நுட்பமான, வாசகர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய
விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் .
வாசகர்கள் , இவற்றை எந்த அளவுக்கு விரும்பினார்கள் என்பது
சரிவரத் தெரியவில்லை, ஒரு சில வாசகர்களின் உற்சாகமூட்டும்
மெயில்களைத் தவிர !

சொல்வதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் —
இது ஸ்ரீ ஹயக்ரீவனின் கட்டளை —
Sarvam Sree Hayagreeva preeyathaam

Soundararajan Desikan's photo.
Soundararajan Desikan's photo.

book publication 10407160_260471030822559_1433101365633704206_n

About the Author

Leave A Response