உயிருள்ளபோதே ,உயிர் கொடுத்தவனைச் சரணடை !
—————————— —————————— ————————-
——————————
1. அக்நி , என்னை விட்டு அகலான்— —வயிற்றில் நெருப்பாக
2. வாயு, எப்போதும் பிடித்துள்ளான்—–மூட்டுப்பிடி
3. நிலம்—-காலடியில் இருந்தாலும், காலை வாரிவிடும் —விழுவோம்
4. நீர்—–தலையில் குடியிருந்து, கனத்திருக்கும்-தலைவலி ,சளியோடு
5. ஆகாயம்—-உடல் கூட்டுக்குள் வெட்டவெளி-நீர்,நெருப்பு, காற்றுக்கு உறைவிடம்
இப்படிப் பூதங்கள் ஐந்தும், பிடித்து இறுக்கி,
பொல்லாத்தனம் செய்தாலும்,
எல்லாமும் வாழ்வில் பெறவேண்டும்
என்று ஏங்கும் மானிடர்காள் !
பொல்லாங்கைத் தவிர்ப்பீரோ ?
போதும் என்ற மனம் உண்டோ ?
கள்ளத்தனம் செய்து, கடுகளவும் தெரியாமல்,
உள்ளத்தில் வைத்தாலும், உதிரம் உறையாதோ ?
இதயத்தில் இருப்பவனும் இன்னும் பல சாட்சிகளும்
பதியமிட்டுச் சொன்னாலும்,பதைபதைக்க வேண்டாமோ ?
என்ன பிறப்பென்று, எதிர்ப்போர் துப்புமுன்பு,
அன்னவனை, அச்சதனை அடிபணிய வேண்டாமோ ?