மறுபடியும், மற்றவை நேரில் —–1
ஹே–அச்யுதா —–!
மறுபடியும், மட்டற்ற வேதனையுடன், மற்றவை நேரில் —-
108 தடவை,” மற்றவை நேரில்” என்று எழுதி உனக்கு அனுப்பினேனே –வந்து சேர்ந்ததா ——வரும் வழியில் மறைத்துவிட்டார்களா ?நீ அவைகளைப் பார்க்கவில்லையா ? படிக்கவில்லையா ?
படிக்க நேரமில்லையா ?
1.அவதாரங்கள் பல எடுத்ததனால், அலுப்புடன் சயனித்து விட்டாயா ?
2.அயோத்தியிலிருந்து ,இலங்கை வரை நடந்தே சென்ற களைப்பில்அப்புறம் பார்க்கலாம் என்று ஒதுக்கி விட்டாயா ?
3.யசோதை, உன்னைத் தாம்பால் கட்டியதால், கோபப்பட்டு இருக்கிறாயா ?
4.கோபிகைகளின் கீதத்திலிருந்து, நீ, இன்னும் விடுபடவில்லையா ?
5.ஆழ்வார்களின் அருளிச் செயல்களைக் கேட்டுக் கேட்டு, அவற்றிலேயே திளைத்து இருக்கிறாயா ?
6.ஸ்ரீமந் நாதமுனிகளோடும் , குருகைக்காவலப்பனோடும்
”யோக ரஹஸ்யம் ”மறைந்துவிட்டதே என்று கவலையில் இருக்கிறாயா ?
7.ஸ்ரீ ஆளவந்தாரின் ,”சதுச்லோகி ” மற்றும் ”ஸ்தோத்ர ரத்னத்தில் ” அனவரதமும் மூழ்கி இருக்கிறாயா /
8.ஸம்ப்ரதாயத்துக்காகத் தன் நேத்ரங்களை இழந்த ஸ்ரீ கூரத்தாழ்வானின் ”பஞ்சஸ்த்வத்”திதைப் பலகாலமாக ,நினைத்துக்கொண்டே இருக்கிறாயா ?
9.ஸ்ரீ ராமானுஜரின் அதியற்புத கைங்கர்யங்களை நினைத்தும், உன் பரத்வத்தை உலகுக்குப் பறைசாற்றியதை நினைத்தும் , ”கத்யத்ரயம் ”சேவித்து உன்னைச் சரணாகதி அடைந்ததை நினைத்தும் , அடியேனுடைய ”மற்றவை நேரில். ” சமர்ப்பணங்களை ,மறந்துவிட்டாயா ?
10.ஸ்ரீ பட்டரின் , அஷ்டச்லோகி”, ”ஸ்ரீ ரங்கராஜஸ்த்வம்” ”குணரத்னகோசம்” முதலியவற்றில்,நீயும் பெரியபிராட்டியும் ஈடுபட்டு இருக்கிறீர்களா /
11. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் , ஸ்ரீஸூக்திகளிலும், பாசுரங்களிலும் ,மனதைப் பறிகொடுத்துவிட்டீர்களா ?
12. அடியேன் ”த்ருவன் ” இல்லை; அடியேன் ”ப்ரஹ்லாதன்”இல்லை;அடியேன் ”கல்லும் ”இல்லை, உன் திருவடி ஸ்பர்சத்தால் , உயிர் பெற்று எழுவதற்கு;
அடியேன், ”கோபிகை” இல்லை; ”அக்ரூரர்” இல்லை, ”உத்தவரும்” இல்லை;”குசேலரும்” இல்லை
13. ஆனால், ஹிரண்யகசிபு இருந்தானே, அவனைவிடப் பல்லாயிரம் மடங்கு கொடியவன். அடியேனைவிட , ராவணன் எவ்வளவோ தேவலை. கம்ஸனும் ,
சிசுபாலனும், அடியேனைவிட மிகக் கீழ்ப்பட்டவர்கள்.
14. இவ்வளவு இருந்தும், ஸர்வதா ரக்ஷகன், ஸர்வத்ர ரக்ஷகன்என்கிற உன்னுடைய பெயரைக் காப்பாற்றிக்கொள்ள , அடியேனை ரக்ஷிக்க வேண்டாமா ?
15.நீ, சர்வஜ்ஞன் —எல்லாம் அறிந்தவன். ஒவ்வொருவர் ஹ்ருதயத்திலும் அந்தர்யாமியாக இருந்துகொண்டு ,அவரவர்கள் எண்ணங்களை செய்கைகளை அறிபவன். அவரவர் வினைகளுக்கு ஏற்ப, அவரவர்களுக்குத்
துன்பங்களையும், இன்பங்களையும் அனுபவிக்கக் கொடுப்பவன்.என்றெல்லாம், வேதங்களும், உபநிஷத்துக்களும், இதிஹாசங்களும் ,புராணங்களும் உன்னைப் புகழ்கின்றன. அடியேனுடைய 108 மற்றவை நேரில் , ஏதேனும் ஒன்றையாவது நீ அறிந்திருப்பாய் அல்லவா ? அடியேனின் கர்மாநுபவம் முடியட்டும்
என்று புன்னகையுடன் மெளனமாக இருக்கிறாயா ?
16.நீ எப்படி இருந்தாலும், உன்னையும் , பெரிய பிராட்டியையும் ,அடியேன் விடப்போவதில்லை. ”மற்றவற்றை நேரில் வந்து சொல் ” என்று
திவ்ய தம்பதியனரான நீங்கள் சங்கல்பிக்கும் வரை,” மறுபடியும் மற்றவை நேரில் ” தொடர்ந்துகொண்டே இருக்கும்.
—- மற்றவை நேரில்—மறுபடியும்–தொடர்கிறது——–
Devareerin list I p paarthaal , Neril Pesuvatharku ondrum irukkadhu! adhuvum sari thaan Avanaip PArtha pin vaayum pesumO?
Aho baghyam, swamin
மற்றவை நே ரில் இருக்கட்டும் கடுதாசியில் என்ன எழுதப்பட்டது அட்ரஸ் என்ன என்று தெ ரிந்தால் பெ ருமாளுக்கு நாங்களும் எழுதிப் பாே டு வாே மே
மற்றவை நேரில்—76
ஹே… சர்வ வாகேஸ்வரேஸ்வரா……
அஜ்ஞ: ஸுகம் ஆராத்ய : ஸு கதரம் ஆராத்யதே விஷேசஜ்ஞ : \
ஜ்ஞாநலவ துர்விதக்தம் ப்ரஹ்மாபி நரம் நரஞ்ஜயதி ||
இதன் அர்த்தம் உனக்குத் தெரியாதது அல்ல
அறிவில்லாத முட்டாளை எளிதாக சமாளிக்க முடியும். நல்ல அறிவுள்ளவனை , மிக சுலபமாக வழி நடத்த முடியும். சிறிதும் மூளையே இல்லாத, துஷ்டனை அவனைப் படைத்த பிரமன் கூட, சரிப்படுத்த முடியாது.
அடியேன் சிறிதும் மூளையே இல்லாத துஷ்டன் …
அடியேனைப் பிரமன் கைவிட்டாலும், அனைத்து தேவர்களும்
கைவிட்டாலும்,
அச்சுதா, உன்னால் முடியாததா !
நீ சங்கல்பித்தால், சகலமும் நடக்குமே….
அந்த எண்ணம் உனக்கு வந்தால், உருப்பட்டு விடுவேனே உருக்குலைந்து நடமாடும் அடியேனை
திருவுக்கும் திருவே …திருத்த மாட்டாயா …..
திருவடியில் சேர்த்துக் கொள்ளமாட்டாயா ?
மற்றவை நேரில்
மற்றவை நேரில் பதிவிற்குச் சொந்தக்காரரின் அனுபவம் வேணும் அடியேனுக்கு என நினைப்பதே துர்லபம்.
அதனை ஆசார்யாள் வழங்கப்ரார்த்தித்கிறேன்.
அட்மின் ஸ்வாமிக்கு மிகவும் நன்றி
தாஸன்
கிருஷ்ணன்
ஸ்ரீ ரங்கம்
swamin If you are not receiving ”SRIVATHSAM”monthly free magazine,kindly give your postal address with whats app number
adiyen