Numbers–what they say–chapter–4

Posted on Sep 20 2016 - 5:54am by srikainkaryasriadmin

எண்கள் ——அவை சொல்வது என்ன?—4
——————————————————————

பகவான் அலகிலா விளையாட்டு உடையவன் —அலகிலா விளையாட்டுடையான் அவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே என்கிறார் கம்பநாட்டாழ்வார் . பகவானின் திருவிளையாடல்களை
அளவிட்டுச் சொல்ல இயலாது.
இதே கம்பநாட்டாழ்வார், ஸ்ரீ ராமபிரானின் வடிவழகு அழியா வடிவழகு என்கிறார்.
அதுமட்டுமல்ல—-கதிரவனின் வெள்ளை ஒளியானது, ஸ்ரீ ராமனின் மீது பட்டு,
பற்பல வண்ணங்களாக விரிவதையும் சொல்கிறார்
கம்பராமாயணம்—கங்கைப் படலத்திலிருந்து ஒரு பாடல்

வெய்யோன் ஒளிதன் மேனியின் விரிசோதியின் மறைய ,
பொய்யே எனும் இடையாளொடும் , இளையானொடும் போனான் —
மையோ ,மரகதமோ , மறி கடலோ, மழை முகிலோ ,
ஐயோ , இவன் வடிவென்பது,ஓர் அழியா அழகு உடையான்

பிரபஞ்சத்தத்துக்கு மூலம் —மூலமான ஆதாரம் –சூர்யன்—– அவனுடைய வெள்ளை ஒளி .
இந்த ஒளி, ஸ்ரீ ராமபிரானின் மீது பட்டு,பற்பல வண்ணங்களாக விரிகிறது.
இந்த வண்ணங்கள், பொய்யே எனும் இடையாளான—அதாவது இடை-இடுப்பு
இருப்பது பொய் என்றும், இல்லையோ என்றும் ஊகிக்கும் சீதாப் பிராட்டியின்மீதும் ,
இளையானான லக்ஷ்மணன்மீதும் பட்டு, அங்கு மறைந்து, அவன்மீது,
நீல நிறமாக வெளிப்படுகிறதாம்.
முதலில், மையோ என்று கருப்பு வர்ணத்தைச் சொல்கிறார். கருப்பு , சுயமாக ஒளி விடாது.
ஆனால், இராமபிரான் அப்படி அல்ல; சுயமாக சிந்திப்பவன்.
அடுத்து மரகதமோ—பச்சை நிறம்;
இது நன்கு பிரகாசிக்கும்; மதிப்பும் மிக அதிகம்; ஆனால் இராமன் ஸர்வஜன வாத்ஸல்யன்
;ஏழை எளியவர் எல்லாருக்கும் மிகச் சுலபமாக அணுகக் கூடியவன்.
மறி கடலோ –உப்பு சமுத்ரமோ —இந்த உப்பு மிகக் கரிக்கும்; ஆனால் இராமபிரான் அப்படியல்ல.
இனிமையானவன் ;மனத்துக் கினியான் ( ஸ்ரீ ஆண்டாள் சொல்வதைப்போல)
தேடிப்போய் உதவுபவன்.
அடுத்து மழைமுகிலோ என்கிறான் , கம்பன் . மேகம் நீரைச் சுமந்து இருக்கும்போது ,
கறுத்து இருக்கும்; நீரை மழையாகப் பெய்தபின், வெளுத்து விடும். ஆனால் இராமபிரான்
அப்படியல்ல; ஸ்திரமான எண்ணமுடையவன்;
முதலில் சூர்ய ஒளியில் பிரியும் வர்ண ஜாலங்கள்—அவை யாவும் இராமனே என்கிறார்.
விண்ணும் நீ
அடுத்து, பொருள்கள்–பூமியில் உள்ள பொருள்களும் நீயே என்கிறார்.
இந்த இராமனின் அழகு, அழியாத அழகு—இதை எப்படி எடுத்துச் சொல்வேன்
ஐயோ—அழியா அழகுடையான் என்கிறான் , கம்பன்.

இவ்விதமாக, அளவில்லாத என்று சொல்லி –எண்கள் பேசப்படுகின்றன.
நிறங்களைச் சொல்லி, வர்ணங்களின் விவரமும், எண்ணும் சொல்லப்படுகின்றன.

எண்களைப்பற்றிச் சொல்லும்போது, கம்பனின் கங்கைப்படலப் பாடலையும்
அனுபவிக்க முடிந்தது.

எண்கள் —-கணிதம்—கணக்கு—
எல்லாமே ஒரு கணக்கின்படிதான் நடக்கிறது.
குழந்தையின் கர்ப்ப வாஸம் —ஒரு கணக்கு. இந்தக் கணக்கு, அதாவது, கர்ப்ப வாஸமும்
பிறப்பும், எல்லா ஜீவராசிகளிலும் உள்ளது. பகவானுடைய படைப்பில், கர்ப்ப வாஸமும்,
பிறப்பும் –கணக்குக்கு உட்பட்டவைதான்.
2. சூர்யன், சந்திரன் உதயம், அஸ்தமனம் , பருவ காலங்கள் அதாவது வஸந்த காலம்,
பனிக்காலம், இலையுதிர் காலம் போன்றவையும் கணக்காக நடை பெறுகின்றன.
3. நிலத்தில் பலவகையான உற்பத்திகள், உணவுக்கான தான்யங்களின் , கறிகாய்களின் ,
பழங்களின் உற்பத்திகள் கணக்குகளில் அடக்கம். உழவு செய்வதற்கான காலம்,
நீர் பாய்ச்சுவதற்கான காலம், களை எடுக்கும் காலம், அறுவடை செய்யும் காலம்,
எல்லாமே கணக்குக்கு உட்பட்டவை.

4. புஷ்பங்கள், பூப்பதும் மலர்வதும் வாடுவதும் –கணக்கின்படிதான் நடக்கிறது.

5. பலவகையான வியாபாரங்கள், வரிவிதிப்பு, வசூல், செலவழிப்பது, எல்லாவற்றுக்குமே
கணக்கு உண்டு.

6. பயணங்கள், நடைப்பயணம் ,காரில் பயணம், ரயில் பயணம், விமானப் பயணம் –
-இவற்றின் நேரம், தூரம் எல்லாமே கணக்கில் அடங்கும்.

7. அலுவலக வேலை நேரம், ஊதியம், இவை எல்லாவற்றுக்குமே கணிதமே அடிப்படை.

8. பலவகையான அளவுமுறைகள், லிட்டர் , மீட்டர், என்று எல்லாமே கணிதத்தின்
அடிப்படையில் செயற்படுகின்றன.

9. விக்ஞானத்தில், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஆளில்லா ஏவுகணைகள்,ஏவுகணைகளை
எதிர்கொண்டு அழிக்கும் கணைகள், அவற்றின் எடை, செல்லும் நேரம், கடக்கும் தூரம்,
எல்லாமே கணக்குதான்.

10. லௌகிக, வைதீக கார்யங்கள்——-பெயரிடுவது, பள்ளியில் சேர்ப்பது, உபநயனம்,
படிப்பதற்கான வருஷங்கள்,( வேதம் பயில, லூகிகத்தில் பத்தாவது, பன்னிரண்டாவது
காலேஜ் படிப்பு, தொழில் சார்ந்த படிப்புகள் ), விவாஹம், பூச்சூட்டல், ஸீமந்தம் ,
கருவுறுவது , கர்ப்ப வாஸம் (மறுபடியும் )—–எல்லாமே கணக்கின் அடிப்படையில் தான்
நடக்கிறது.

11. இறப்பு—–மனிதன் முதல்—-எல்லா ஜீவராசிகளுக்கும், பகவான் நிர்ணயித்தபடி
கணக்காக நடைபெறுகிறது.

12. இறந்த பிறகு, அதற்கான கார்யங்கள்—அதற்கும் கணக்குதான். இது கணிதம் அல்லது
“ஸங்க்யானம்’. ஸங்யானம் என்கிற கணிதம் இல்லாவிடில், ப்ரபஞ்சமே இல்லை.
ப்ரபஞ்சத்தில் தினந்தோறும் நடைபெறுவது, கணிதத்தின் அடிப்படையில் தான்.
இதெற்கெல்லாம் காரணம்—பகவானுடைய கணக்கு. ப்ரபஞ்சங்களை உண்டாக்குவது,
எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டிப்பது, காப்பாற்றுவது, ஸம்ஹரிப்பது, இப்படி,
எல்லாவற்றிலும் பகவானுடைய கணக்கு இருக்கிறது.
இதைப் பற்றி ஒரு ஸ்லோகம்
லௌகிகே வைதிகே வாபி ததா ஸாமயகே அபிய : |
வ்யாபாரஸ்தத்ர ஸர்வத்ர ஸம்க்யானம் உபயுஜ்யதே ||

பஹூபிர் விப்ர லாபை :சிம்த்ரைலோக்யே ஸசராசரே |
யத்கிம் சித் யஸ்து தத்ஸர்வ கணிதேன வினா நஹி ||

இதை , மஹரிஷிகள் , தங்கள் ஞான சக்தியால் அறிந்து உலகுக்குக் கொடுத்தார்கள்.

வேதம் சொல்கிறது:—

சூர்ய சந்த்ர மஸௌ தாதா யதாபூர்வமகல்பயது |

ஸூர்யனையும், சந்திரனையும் , ப்ரஹ்மா யதாபூர்வம் ( முன்போலவே) படைத்தான்.
ஸ்ருஷ்டித்தான் , என்கிறது வேதம். யுக ப்ரளயம் வந்து, உலகம் முழுவதும்
அழிந்து, மறுபடியும் ஸ்ருஷ்டியைத் தொடங்கியபோது, யதாபூர்வம் —அதாவது
முன்போலவே சிருஷ்டித்தான் . அழிப்பதற்கு முன்பு, எப்படி உலகம், சூர்ய சந்த்ர
நக்ஷத்ரங்கள் எல்லாம் இருந்தனவோ, அப்படியே அவை அவைகளைச் சிருஷ்டித்தான்.
ஒவ்வொன்றின் அளவு, தன்மை, செயற்படும் ஆற்றல், காலம் இவை எல்லாவற்றையும்,
முன்போலவே ஸ்ருஷ்டிப்பதற்கு , கணக்கு வேண்டும். அப்படியே கணக்கிட்டு,
ப்ரஹ்மா ஸ்ருஷ்டிக்கிறான்
இந்த யதாபூர்வம் (முன்போலவே) என்பதன் அர்த்தம் அல்லது கருத்து என்ன ?
இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது—-தொடர்ந்து பார்ப்போம்

Numbers—what they say —5

எண்கள் —-அவை சொல்வது என்ன ?—-5

யதா பூர்வம் என்பதன் அர்த்தம் என்ன ? இதை ஸ்ரீ விஷ்ணு புராணம் சொல்கிறது என்று சென்ற தடவை விஞ்ஜாபித்தேன். ஸ்ரீ விஷ்ணு புராணத்தை நமக்குக் கொடுத்தவர்
ஸ்ரீ பராசர மகரிஷி. தன்னுடைய சிஷ்யரான , மைத்ரேயருக்குச் சொல்கிறார்.
அதில் முதல் அம்சம், மூன்றாம் அத்யாயம் –“யதாபூர்வம்” என்ன என்பதைச் சொல்கிறது.
காலம் கணக்கிடப்படுகிறது.
1. நிமேஷம் —கண்ணைமூடித் திறக்கும் நேரம்.
2.இப்படி 15 நிமேஷங்கள் —–ஒரு காஷ்டை
3. 30 காஷ்டைகள்—-ஒரு கலை
4. முப்பது கலைகள் அல்லது முஹூர்த்தங்கள் —ஒரு நாள் ( ஒரு பகலும் இரவும் — இப்போதைய கணக்கில் 24 மணி )
5. 30 நாட்கள்—-ஒரு மாதம் ( 2 பக்ஷங்கள் கொண்டது–சுக்ல பக்ஷம் , க்ருஷ்ண பக்ஷம் )
6. 6 ஆறு மாதங்கள் —ஒரு அயநம் ( உத்தராயணம் , தக்ஷிணாயனம் )
7. 2 அயநம் —-ஒரு வருஷம் ( மனுஷ்ய வருஷம் )
8. இந்த மனுஷ்ய வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள் ( உத்தராயணம் –பகல். தக்ஷிணாயனம் –இரவு)
9. இப்படி தேவர்களின் நாட்களான 365 நாட்கள்–தேவர்களுக்கு ஒரு வருஷம்.
10. இப்படி, 12,000 வருஷங்கள்–ஒரு சதுர் யுகம்
அதாவது,
கிருதயுகம்—4000 தேவ வருஷங்கள்
த்ரேதாயுகம் —3000 ” ”
த்வாபரயுகம் –2000 ” ”
கலியுகம் —1000 ” ”

ஒரு யுகம் முடிந்து, அடுத்த யுகம் தொடங்கும் வரை இடைப்பட்ட காலம் ,
யுகசந்தி எனப்படும்
க்ருதயுகத்துக்கும், த்ரேதாயுகத்துக்கும் நடுவே இப்படி 400 தேவ வருஷம்
த்ரேதாயுகத்துக்கும் , த்வாபரயுகத்துக்கும் நடுவே இப்படி 300 தேவ வருஷம்
த்வாபரயுகத்துக்கும், கலியுகத்துக்கும் நடுவே இப்படி 200 தேவ வருஷம்
கலியுகத்துக்கும், மறுபடியும் க்ருதயுகத்துக்கும் நடுவே 100 தேவ வருஷம்.
இவற்றை, ஒவ்வொரு யுகத்தின் ஆரம்பத்தில் சொன்னோமானால், இப்படியே
ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் யுகசந்தி இதே கணக்கில் உண்டு .ஆக ,
யுக சாந்தி 2000 தேவ வருஷங்கள். மொத்தம் 12,000 தேவ வருஷங்கள்,
ஒரு சதுர் யுகம்.
இந்தமாதிரி 1000 சதுர் யுகம், ப்ரஹ்மாவுக்குப்பகல் நேரம். இந்த நேரத்தில்,14 மன்வந்த்ரங்கள் வருகின்றன. மன்வந்த்ரம் என்பது, ஒரு மனு தோன்றி அடுத்த மனு வரும் வரை உள்ள காலம்.ப்ரஹ்மாவின் பகல்நேரத்தில் இப்படி 14 மனுக்கள் தோன்றி மறைகின்றனர்.
இப்போது நடப்பது–த்விதீய பரார்த்தம் (இரண்டாவது பரார்த்தம் )இதில்
ச்வேத வராஹ கல்பம் இப்போது .இந்தக் கல்பத்தில் 14 மன்வந்த்ரங்கள்
இந்தப் பதினான்கில், இப்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரம்
இவற்றையெல்லாம் ” ஹரி வம்சத்”தில் பார்க்கலாம் .
( இவை இந்தத் தலைப்புக்குத் தேவையானதல்ல. வாசகர்கள் கேட்டால்,வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகச் சொல்லலாம் )
மனிதர்களின் கால அளவு—சாதாரணக் கணக்கு
தேவர்களின் கால அளவு—அதைவிடச் சிறந்த கணக்கு
பிரம்மனின் கால அளவு–மேற்கூறிய இரண்டையும்விட மிகச் சிறந்த கணக்கு.
இப்படி, கால அளவு —கணக்கு சொல்லப்படுகிறது.

கண் இமைக்கும் நேரம் என்பது, அதாவது கண் இமை மூடித் திறக்கும் நேரம் என்பது, எந்தத் தேசத்தில் உள்ளவர்களாக இருந்தாலும், இது பொதுவான கணக்கு. அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலும், ஆர்டிக்கிலிருந்து அண்டார்ட்டிகா வரையிலும், ஜனங்கள் , எந்த பிரதேசத்தில் இருந்தாலும், கண்கொட்டும் நேரம் என்பது , மாறுபடாது. மஹரிஷிகள் , கண் இமைக்கும் நேரத்தை ஆதாரமாக/ அடிப்படையாக வைத்து, அதன்மீது, மற்றக்கால
அளவுக்கணக்குகளைச் சொல்லிஇருக்கிறார்கள். இவை, வேதமும், மஹரிஷிகளும் நமக்குக் கொடுத்த தனம். இதை யாருக்கோ தாரை வார்த்துவிட்டு, அவர்கள்தான் இவற்றைக் கண்டுபிடித்ததாகச் சொல்வதை நாமும் திருப்பிச் சொல்கிறோம். நம்முடன் கூடவே இருக்கும் “அநுகூல சத்ரு”க்களும் நாமெல்லாம் முட்டாள்கள் என்று சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்தப் பெருமை, வேதத்துக்கும் ,மஹரிஷிகளுக்கும் போய்விடக்கூடாது ; பார்ப்பனப் பெருமையாகிவிடும் …என்பதில் முனைப்பாகப்பல நூறு ஆண்டுகளாக மறைத்து, நசுக்கிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,
வெளிநாட்டவர்களையும், அவர்கள் மதங்களையும் வரவேற்று, வாழவைக்கத் துடிக்கிறார்கள்.

ஸ்ரீ பராசரர் நாலைந்து ச்லோகங்களில், கண் இமைக்கும் காலம் முதல், ப்ரஹ்மாவின் ஆயுட்காலமாகிய “பரம்” வரை, சொல்லியிருக்கிறார்.
இது, அனுஷ்டுப் சந்தஸ் ஸில் உள்ளது. ஐன்ஸ்டீன்
கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்கள். இதையும் ஸ்ரீ பராசரர், ஸ்ரீ விஷ்ணு புராண ச்லோகங்களில் சொல்லியிருக்கிறார். ( ஆதாரம்–வேத விஜ்ஞானம் —நாவல்பாக்கம் ஸ்ரீ உ.வே. தேவநாதாசார்யர் )
கண் இமைக்கும் ஒரு நொடி என்பது கணக்கு. இதைப் பத்தாயிரமாகப் பிரித்து, மேற்கத்திய விஜ்ஞானிகள்
கணக்கிடுவதை, முன்பே, ஸ்ரீ பராசரர், வானஜோதிட வல்லுனர்கள், ஆர்யபடர், வராஹமிஹிரர் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பத்துப்பத்தாக எண்ணுவது மிக எளிது என்று சொல்லி, அரசு, நாணயங்களில், மற்ற துறைகளில் , இதைப் புகுத்தியதே , இதுவும் ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்தானாத் ஸ்தானம் தச குணம் ஏகஸ்மாத் கண்யதேத்விஜ |
ஸ்ரீ விஷ்ணுபுராணம் 6–3–4
தைத்ரீய சம்ஹிதையும் இதைப்பற்றிக் கூறுகிறது. (அக்னி சயனத்தில் இஷ்டகைகள்) வேதத்தில், கூட்டல், கழித்தில், பெருக்கல்,வகுத்தல் –இந்த நான்கும் சொல்லப்படுகின்றன பின்னங்கள் சொல்லப்படுகின்றன.
பிதாகோரஸ் கண்டுபிடிப்பு என்று பெருமையாக , மேல்நாட்டவர் சொல்ல, —அவர்களுடைய புகழ் பரப்பிகள் இந்த தேசத்தில்
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் . இதை ஆபஸ்தம்பர் தன்னுடைய கல்ப ஸூதரத்தில் ,பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லியிருக்கிறார்.
——————-தொடருகிறது————-

Numbers—what they say —6

எண்கள் —அவை சொல்வது என்ன ?—6
– —————————————————————–

பிதாகோரஸ் தீரம் –இதைச் சொல்வதற்கு முன்பாக, ஒன்றைச்
சொல்லியாக வேண்டும்
பின்னங்கள்—-இதைப் பற்றியும் வேதத்தில் உள்ளதா என்று கேட்கிறார்கள். ஆமாம்—நிறையவே உள்ளது.
வேதங்களிலும், கல்ப ஸூத்ரங்களிலும்,
அர்த்தம் (1/2–பாதி ), த்ருதீயம் (1/3), பாதம் ( 1/4 ), த்ரிபாதம் ( 3/4 )
சதுர்பாகோன (1 – 1/4 =3/4 ) அர்த்தாஷ்டமி ( 7 1/2 ), அர்த்ததசம (9 1/2 ), அர்த்தநவம ( 8 1/2 ) . சதுரத்த-ஸவி-சேஷார்த்த
{ 1/2 ( 1/4 /` 2) }
இப்படிப் பல விஹிதங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. விஹிதங்கள் என்றால், பின்னங்கள்.

பிதாகோரஸ் தீரத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தோம்.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்கமானது,
மற்ற இருபக்கங்களின் வர்கங்களின் கூடுதலுக்குச் சமானமாகும். —-இதுவே பிதாகோரஸ் தீரம்
இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஆபஸ்தம்பர், தான் இயற்றிய கல்ப ஸுத்ரத்தில்,
தீர்க்கஸ்யா க்ஷ்ணயா ரஜ்ஜு :பார்ஸ்வமானி திர்யங்மானி ச யத்ப்ருதக்பூதே குருதஸ்ததுபயம் கரோதி | என்று சொல்கிறார்.
போதாயனரும்,
ப்ரமாணம் த்ரிதீயேன வர்த யேத்தச்ச சதுர் தேனாத்ம சதுஸ்த்ரிம் யோனேன சவிஷேஷ : |
என்கிறார்.
1 1
/`2 = 1+3 + ———— — ——————–= 1.4142156
3 . 4 3.4.34

இப்போதைய கணிதம் இதையே 1.4142135 என்கிறது.
( அடியேனுக்கு சில சங்கேதங்களை டைப் செய்யத் தெரியவில்லை- மன்னிப்பீர்களாக )

சுமார் 1500 வருஷங்களுக்கு முன்பு தோன்றியது, ப்ருஹத் சம்ஹிதை இதில், க்ரஹ யுத்தம், க்ரஹ மைத்ரீ , என்றெல்லாம் சொல்லப்படுகிறது.
ஸ்ரீ வராஹமிஹிரர்,வானசாஸ்த்ரம், ஜோஸ்யம் , இதிலெல்லாம் கரைகண்டவர். அவர் இந்த சம்ஹிதையில் கூறுகிறார். செவ்வாய் க்ரஹமும் , குரு க்ரஹமும் யுத்தம் செய்வது, க்ரஹ யுத்தம். இவை இரண்டும் ஸ்நேகமாக இருப்பது, க்ரஹ மைத்ரீ க்ரஹங்கள் அவ்வப்போது, தோற்றத்தில் மாறுபடுகின்றன. அப்படி, அவற்றின் தோற்றம் மாறும்போது, சில க்ரஹங்கள் ,ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. சண்டைஎன்றால், ரத,கஜ, துரக, பதாதிகள்,அணுகுண்டுகள் இவற்றைக்கொண்டு யுத்தம் என்பதல்ல ஒவ்வாமை—இதனால் ஏற்படும் உட்புற மாறுதல்கள் .இதைப்போலவே நட்பாக இருக்கும்போது, ஏற்படும் மாறுதல்கள் . இவையெல்லாம் இக்கால விஞ்ஞான சாதனங்கள் எதுவுமில்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அறிந்து, சம்ஸ்க்ருதத்தில் –மேற்சொன்ன சம்ஹிதை போன்றவைகளில் சொல்லியிருக்கிறார்கள்.
சம்ஸ்க்ருதம் ,அடியோடு அழியவேண்டும், என்று சுமார் 80 வருடங்களாக சொல்கிறத் துரோகிகளுடன் கூடவே வாழ்ந்து வருகிறோம். பாம்புடன் ஒரே கூரையின் அடியில் வாழ்ந்து வருகிறோம். இப்போதைய தலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரியாது. சொன்னாலும் “பிதற்றல்” என்று ஒதுக்கி விடுவார்கள்.வெட்கப்பட வேண்டிய நிலை.

9 என்பது,” மூலாங்கம்’ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது. ‘ மூலம்’ என்பது ‘ வேர்” –‘அடி வேர்’—“ஆணி வேர்” என்று பொருளாகும். கஜேந்த்ரன் , “ஆதி மூலமே ” என்று கதறிற்று அல்லவா ! மூலாங்கம் என்றால், எண்களுக்கு வேர்–அடி வேர்–ஆணிவேர் போன்றது என்று சொல்வர். இந்த மூலாங்கம் “9” என்று மகரிஷிகள் கண்டறிந்து சொன்னார்கள். ஒன்பதை எப்படி வைத்துக் கூட்டினாலும் பெருக்கினாலும், மூலாங்கமான “9” என்கிற எண் வரும் என்று
1+8==9, 9 x 2= 18, 9x 3=27
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
க்ஷேத்ர கணிதம் என்பது, இந்த நாட்டில் வழக்கத்தில் இருந்தது. வடிவியல் சாஸ்த்ரத்தில் , ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் விட்டமும் (பை ) என்கிற விகிதத்தில் இருக்கும் என்றும், )~( –இதன் மதிப்பு 3.1416 என்று சொல்வதை, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆர்யபடர் சொல்லியிருக்கிறார் ( பார்க்க–வேத விஜ்ஞானம் –நாவல்பாக்கம் ஸ்ரீ. உ. வே. தேவநாதாசார்யர் )

———————தொடருகிறது———–
“Numbers—what they say —6 எண்கள் —அவை சொல்வது என்ன ?—6 – —————————————————————– பிதாகோரஸ் தீரம் –இதைச் சொல்வதற்கு முன்பாக, ஒன்றைச் சொல்லியாக வேண்டும் பின்னங்கள்—-இதைப் பற்றியும் வேதத்தில் உள்ளதா என்று கேட்கிறார்கள். ஆமாம்—நிறையவே உள்ளது. வேதங்களிலும், கல்ப ஸூத்ரங்களிலும், அர்த்தம் (1/2–பாதி ), த்ருதீயம் (1/3), பாதம் ( 1/4 ), த்ரிபாதம் ( 3/4 ) சதுர்பாகோன (1 – 1/4 =3/4 ) அர்த்தாஷ்டமி ( 7 1/2 ), அர்த்ததசம (9 1/2 ), அர்த்தநவம ( 8 1/2 ) . சதுரத்த-ஸவி-சேஷார்த்த { 1/2 ( 1/4 / 2) } இப்படிப் பல விஹிதங்கள் கூறப்பட்டு இருக்கின்றன. விஹிதங்கள் என்றால், பின்னங்கள். பிதாகோரஸ் தீரத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தோம். ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்கமானது, மற்ற இருபக்கங்களின் வர்கங்களின் கூடுதலுக்குச் சமானமாகும். —-இதுவே பிதாகோரஸ் தீரம் இதைப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, ஆபஸ்தம்பர், தான் இயற்றிய கல்ப ஸுத்ரத்தில், தீர்க்கஸ்யா க்ஷ்ணயா ரஜ்ஜு :பார்ஸ்வமானி திர்யங்மானி ச யத்ப்ருதக்பூதே குருதஸ்ததுபயம் கரோதி | என்று சொல்கிறார். போதாயனரும், ப்ரமாணம் த்ரிதீயேன வர்த யேத்தச்ச சதுர் தேனாத்ம சதுஸ்த்ரிம் யோனேன சவிஷேஷ : | என்கிறார். 1 1 /2 = 1+3 + ———— — ——————–= 1.4142156 3 . 4 3.4.34 இப்போதைய கணிதம் இதையே 1.4142135 என்கிறது. ( அடியேனுக்கு சில சங்கேதங்களை டைப் செய்யத் தெரியவில்லை- மன்னிப்பீர்களாக ) சுமார் 1500 வருஷங்களுக்கு முன்பு தோன்றியது, ப்ருஹத் சம்ஹிதை இதில், க்ரஹ யுத்தம், க்ரஹ மைத்ரீ , என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஸ்ரீ வராஹமிஹிரர்,வானசாஸ்த்ரம், ஜோஸ்யம் , இதிலெல்லாம் கரைகண்டவர். அவர் இந்த சம்ஹிதையில் கூறுகிறார். செவ்வாய் க்ரஹமும் , குரு க்ரஹமும் யுத்தம் செய்வது, க்ரஹ யுத்தம். இவை இரண்டும் ஸ்நேகமாக இருப்பது, க்ரஹ மைத்ரீ க்ரஹங்கள் அவ்வப்போது, தோற்றத்தில் மாறுபடுகின்றன. அப்படி, அவற்றின் தோற்றம் மாறும்போது, சில க்ரஹங்கள் ,ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. சண்டைஎன்றால், ரத,கஜ, துரக, பதாதிகள்,அணுகுண்டுகள் இவற்றைக்கொண்டு யுத்தம் என்பதல்ல ஒவ்வாமை—இதனால் ஏற்படும் உட்புற மாறுதல்கள் .இதைப்போலவே நட்பாக இருக்கும்போது, ஏற்படும் மாறுதல்கள் . இவையெல்லாம் இக்கால விஞ்ஞான சாதனங்கள் எதுவுமில்லாமல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, அறிந்து, சம்ஸ்க்ருதத்தில் –மேற்சொன்ன சம்ஹிதை போன்றவைகளில் சொல்லியிருக்கிறார்கள். சம்ஸ்க்ருதம் ,அடியோடு அழியவேண்டும், என்று சுமார் 80 வருடங்களாக சொல்கிறத் துரோகிகளுடன் கூடவே வாழ்ந்து வருகிறோம். பாம்புடன் ஒரே கூரையின் அடியில் வாழ்ந்து வருகிறோம். இப்போதைய தலைமுறையினருக்கு இவையெல்லாம் தெரியாது. சொன்னாலும் “பிதற்றல்” என்று ஒதுக்கி விடுவார்கள்.வெட்கப்பட வேண்டிய நிலை. 9 என்பது,” மூலாங்கம்’ என்று சம்ஸ்க்ருதத்தில் சொல்லப்படுகிறது. ‘ மூலம்’ என்பது ‘ வேர்” –‘அடி வேர்’—“ஆணி வேர்” என்று பொருளாகும். கஜேந்த்ரன் , “ஆதி மூலமே ” என்று கதறிற்று அல்லவா ! மூலாங்கம் என்றால், எண்களுக்கு வேர்–அடி வேர்–ஆணிவேர் போன்றது என்று சொல்வர். இந்த மூலாங்கம் “9” என்று மகரிஷிகள் கண்டறிந்து சொன்னார்கள். ஒன்பதை எப்படி வைத்துக் கூட்டினாலும் பெருக்கினாலும், மூலாங்கமான “9” என்கிற எண் வரும் என்று 1+8==9, 9 x 2= 18, 9x 3=27 இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். க்ஷேத்ர கணிதம் என்பது, இந்த நாட்டில் வழக்கத்தில் இருந்தது. வடிவியல் சாஸ்த்ரத்தில் , ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் விட்டமும் (பை ) என்கிற விகிதத்தில் இருக்கும் என்றும், )~( –இதன் மதிப்பு 3.1416 என்று சொல்வதை, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஆர்யபடர் சொல்லியிருக்கிறார் ( பார்க்க–வேத விஜ்ஞானம் –நாவல்பாக்கம் ஸ்ரீ. உ. வே. தேவநாதாசார்யர் ) ———————தொடருகிறது———–”

Numbers—what they say —- 7—–

எண்கள் —அவை சொல்வது என்ன—7
—————————————————————-

மூலாங்கத்தைப் பற்றி ஆர்ய படர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சொல்லியிருப்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது.

வேதம் அநாதியானது. முதலும் முடிவும் இல்லாதது . இது ,பல
மஹரிஷிகளால்,அவர்களுடைய திவ்ய–சக்ஷுஸ் ஸால் காணப்பட்டது அதனால்தான், மஹரிஷிகள் “மந்த்ரத்ரஷ்டா”என்று புகழப்பட்டார்கள் . ஒவ்வொரு மஹரிஷியும், இந்தமாதிரி வேதத்தில் ஒருபாகத்தைக் கண்டு, உலகுக்குக் கொடுத்தார்கள்.

உபநிஷத்–மஹாந்மியம் சொல்கிறது—-
தொடக்கமே அலாதியாக இருக்கிறது.

ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய :

இதன் அர்த்தம்——

ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் , மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்டஆசார்யர்களுக்கு நமஸ்காரம்

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) ச
ப்ரஹிணோதி தஸ்மை |
த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை
சரணமஹம் ப்ரபத்யே ||

இதன் அர்த்தமாவது—

முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ, நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ, அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன்
சரணமடைகிறேன் ( இதை காயத்ரி என்று பொதுவாகச் சொன்னாலும், ஸ்ரீ ஹயக்ரீவனைக் குறிக்கிறது என்பர். இவர்தான், வேதங்களை மீட்டுத் திரும்பவும் ப்ரஹ்மாவுக்குக் கொடுத்தவர்;இவரை உபாசிப்பவர்களுக்கு, புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்து, எல்லா வித்யைகளையும் அருளுபவர் )

ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;–

1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : |
தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா ||
2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : |
நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ ||
3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப |
அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே ||
4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா |
மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே ||
ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட
5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : |
ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா ||
6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் |
ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் ||
7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன |
இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் ||

இவைகளின் சுருக்கமான பொருளாவது:–

1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன
2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109
3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன.
4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது. மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது. அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில், ஈசாவாஸ்ய ,கேன, கட ,ப்ரச்ன ,முண்டக, மாண்டூக்ய , தைத்திரீய , ஐதரேய, சாந்தோக்ய , ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும்,
ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும்.

( இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை.
அடியேன்”வேதோபாஸனா ” என்கிற வெளியீட்டில் மேலும்
8 உபநிஷத்துக்களைப் பற்றியும் விவரித்திருக்கிறேன் அவை–
11. ச்வேதாச்வதரோபநிஷத்
12.அதர்வசிர உபநிஷத்
13.அதர்வசிகோபநிஷத்
14.கௌஷீ தகி உபநிஷத்
15. மந்த்ரிகோபநிஷத்
16. ஸுபாலோபநிஷத்
17.அக்நி ரஹஸ்யம்
18. மஹோபநிஷத்
உபநிஷத் என்றால்
ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும். ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர். உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது என்பது உத்தமூர் ஸ்வாமி வ்யாக்யானம்)
6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108. இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும்.
7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது. இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது.

ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —–

ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே |
மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே ||

ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் |
ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : ||

இவற்றின் அர்த்தமாவது—-
ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு
உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும் நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும்.
இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை.

வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது. நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம். சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம். நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன

ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம
ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே
நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச

வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு
இருக்கின்றன என்பது வியக்க வைக்கும்

—————தொடருகிறது——————
“Numbers—what they say —- 7—– எண்கள் —அவை சொல்வது என்ன—7 —————————————————————- மூலாங்கத்தைப் பற்றி ஆர்ய படர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சொல்லியிருப்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. வேதம் அநாதியானது. முதலும் முடிவும் இல்லாதது . இது ,பல மஹரிஷிகளால்,அவர்களுடைய திவ்ய–சக்ஷுஸ் ஸால் காணப்பட்டது அதனால்தான், மஹரிஷிகள் “மந்த்ரத்ரஷ்டா”என்று புகழப்பட்டார்கள் . ஒவ்வொரு மஹரிஷியும், இந்தமாதிரி வேதத்தில் ஒருபாகத்தைக் கண்டு, உலகுக்குக் கொடுத்தார்கள். உபநிஷத்–மஹாந்மியம் சொல்கிறது—- தொடக்கமே அலாதியாக இருக்கிறது. ஓம் நமோ ப்ரஹ்மாதிப்யோ ,ப்ரஹ்மவித்யா ஸம்ப்ரதாய–கர்த்ருப்யோ வம்ச –ரிஷிப்யோ ,மஹத்ப்யோ நமோ குருப்ய : இதன் அர்த்தம்—— ப்ரஹ்மா போன்றவர்கள் ப்ரஹ்மவித்யா ஸம்பிரதாயத்தை அருளினார்கள் கோத்ர ப்ரவர்த்தகர்களான மஹரிஷிகள் , மஹான்கள் —-இவர்கள், இந்த ஸம்ப்ரதாயத்தை வளர்த்தார்கள். அப்படிப்பட்டஆசார்யர்களுக்கு நமஸ்காரம் யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதா (கும்) ச ப்ரஹிணோதி தஸ்மை | த (கும்)ஹ தேவ–மாத்ம –புத்தி–ப்ரகாஸம் முமூக்ஷூர்வை சரணமஹம் ப்ரபத்யே || இதன் அர்த்தமாவது— முதன் முதலில் ப்ரஹ்மாவைப் படைத்து, அவருக்கு வேதங்களைக் கொடுத்து, அருளியவர் எவரோ, நமது உள்ளத்திலே இருந்துகொண்டு நமது புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்பவர் எவரோ, அந்தத் தேவனை மோக்ஷத்தில் விருப்பமாக இருக்கிற முமுக்ஷூவான அடியேன் சரணமடைகிறேன் ( இதை காயத்ரி என்று பொதுவாகச் சொன்னாலும், ஸ்ரீ ஹயக்ரீவனைக் குறிக்கிறது என்பர். இவர்தான், வேதங்களை மீட்டுத் திரும்பவும் ப்ரஹ்மாவுக்குக் கொடுத்தவர்;இவரை உபாசிப்பவர்களுக்கு, புத்தியைப் ப்ரகாசிக்கச் செய்து, எல்லா வித்யைகளையும் அருளுபவர் ) ஸ்ரீராமபிரான், அநுமனுக்குச் சொல்கிறார்;– 1.ருக்வேதாதி –விபாகேன வேதாச்–சத்வார ஈரிதா : | தேஷாம் சாகா –ஹ்யனேகா : ஸ்யுஸ்தாஸூபநிஷதஸ்–ததா || 2. ருக்வேதஸ்ய து சாகா : ஸ்யு –ரேக விம்சதி சங்க்யகா : | நவா திகசதம் சாகா யஜூஷோ மாருதாத்மஜ || 3. சஹஸ்ர–சங்க்யயா ஜாதா :சாகா :ஸாம்ந : பரந்தப | அதர்வணஸ்ய சாகா :ஸ்யு :பஞ்சாசத்பேத தோஹரே || 4. ஏகைகஸ்யாஸ்து சாகாயா ஏகைகோபநிஷன் மதா | மாண்டூக்ய –மேக –மேவாலம் முமுக்ஷுணாம் விமுக்தயே || ததாப்–யஸித்தஞ்சேஜ்—ஜ்ஞானம் தசோபநிஷதம் பட 5. ஈச–கேன–கட–ப்ரச்ன -முண்ட மாண்டோக்ய தித்திரி : | ஐதரேயஞ்ச சாந்தோக்யம் ப்ருஹதாரண்யகம் ததா || 6. ஸர்வோப நிஷதாம் மத்யே ஸார மஷ்டோத்தரம் சதம் | ஸக்ருச் –ச்ரவண– மாத்ரேண ஸர்வா கௌக நிக்ருந்தனம் || 7. மயோபதிஷ்டம் சிஷ்யாய துப்யம் பவன நந்தன | இத –மஷ்டோத்தர சதம் நதேயம் யஸ்ய கஸ்யசித் || இவைகளின் சுருக்கமான பொருளாவது:– 1.ருக் வேதம் முதலிய வேதங்கள், வ்யாஸ பகவானால் நான்காகப் பிரிக்கப்பட்டது. அவற்றில் பல சாகைகள் (கிளைகள்) உள்ளன ; உபநிஷத்துக்கள் உள்ளன 2. மாருதி புத்ர ! —-அநுமனே !ருக் வேத சாகைகள் 21; யஜுர் வேத சாகைகள் 109 3. எதிரிகளைத் தகிப்பவனே !சாம வேதத்தில் சாகைகள் ஆயிரக்கணக்காக இருக்கின்றன. அதர்வண வேதத்தில் 50 சாகைகள் உள்ளன. 4. ஸ்லோகம் 4ம் 5ம் சொல்வதாவது—ஒவ்வொரு சாகையிலும் உபநிஷத் உள்ளது. மோக்ஷத்தை அபேக்ஷிக்கும் முமுக்ஷுக்களுக்கு மாண்டூக்ய உபநிஷத்தே போதுமானது. அப்படியும் ஜ்ஞானம் வரவில்லையெனில், ஈசாவாஸ்ய ,கேன, கட ,ப்ரச்ன ,முண்டக, மாண்டூக்ய , தைத்திரீய , ஐதரேய, சாந்தோக்ய , ப்ருஹதாரண்ய உபநிஷத்துக்களான இந்தப் பத்து உபநிஷத்துக்களையும், ஆசார்ய முகேன தெரிந்துகொள்ள வேண்டும். ( இவை தசோபநிஷத்என்று ப்ரஸித்தி பெற்றவை. அடியேன்”வேதோபாஸனா ” என்கிற வெளியீட்டில் மேலும் 8 உபநிஷத்துக்களைப் பற்றியும் விவரித்திருக்கிறேன் அவை– 11. ச்வேதாச்வதரோபநிஷத் 12.அதர்வசிர உபநிஷத் 13.அதர்வசிகோபநிஷத் 14.கௌஷீ தகி உபநிஷத் 15. மந்த்ரிகோபநிஷத் 16. ஸுபாலோபநிஷத் 17.அக்நி ரஹஸ்யம் 18. மஹோபநிஷத் உபநிஷத் என்றால் ஆசார்யனின் அருகில் சென்று உபதேசமாகக் கேட்பது. இதனால் துன்பங்கள் தொலைந்து பேரின்பம் நிலைக்கும். ஆதலால், உபநிஷத் எனப்பட்டது. இது லௌகிக வார்த்தை என்று சொல்வர். உபநிஷத்துக்கு வேதாந்தம் என்றும் பெயர். பரப்ரஹ்மத்திடம் நெருங்கி இருப்பதாலே உபநிஷத் எனப்பட்டது என்பது உத்தமூர் ஸ்வாமி வ்யாக்யானம்) 6. உபநிஷத்துக்கள் நிறைய உள்ளன. அவற்றுள் முக்ய ஸாரமாக இருப்பது—-108. இவற்றை ஒருமுறை ச்ரவணம் (கேட்பது) செய்த உடனேயே எல்லாப் பாவங்களும் நசித்துவிடும். 7. பவன நந்தன ! இந்த 108ம் , என்னுடைய சிஷ்யனான உனக்கு, உபதேசிக்கப்பட்டது. இதை ஆராயாமல் எவருக்கேனும் உபதேசிக்கக் கூடாது. ஸ்ரீ ராமபிரான் மேலும் சொல்கிறார் —– ஸேவாபராய சிஷ்யாய ஹித–புஷ்டாய மாருதே | மத்பக்தாய ஸுசீலாய குலீநாய ஸுமேத ஸே || ஸம்யக் பரீக்ஷ்ய தாதவ்ய –மேவ –மஷ்டோத்த்ரம் சதம் | ய: படேச் –ச்ருணுயாத் வாபி ஸ மாமேதி ந ஸம்சய : || இவற்றின் அர்த்தமாவது—- ஹே—-மாருதி ! கைங்கர்யத்தைச் செய்பவனும், பிறருக்கு உதவுவதில் விருப்பம் உள்ளவனும் என்னிடம் பக்தி உள்ளவனும் நல்ல குலத்தில் உதித்தவனும் நல்ல புத்தியும் உடைய சிஷ்யனுக்கு அவனை நன்கு பரீக்ஷை செய்தபிறகே இந்த 108 உபநிஷத்துக்களையும் உபதேசிக்கவேண்டும். இவற்றைப் படிப்பவன், கேட்பவன், அவன் என்னையே அடைகிறான். இதில் சந்தேகமில்லை. வேதத்தில், நமகம், சமகம் என்று இரண்டு இருக்கிறது. நமகம் என்பது,பகவானை ஸ்தோத்தரிக்கும்படியான மந்த்ரம். சமகம் என்பது நம்முடைய வேண்டுதல்களை பகவானிடம் சமர்ப்பிக்கும்படியான மந்த்ரம். நமக்கு வேண்டியவை எவை எவை என்று சமகம் சொல்லிக் கொடுக்கிறது. இவைகளில் எண்கள் வருகின்றன ஏகாச மே திஸ்ரச்ச மே பஞ்ச ச மே ஸப்த ச மே நவ ச ம ஏகாதச ச மே த்ரயோதச ச மே பஞ்சதச ச மே ஸப்ததச ச மே நவதச ச ம ஏக விகும்சதிச் ச மே த்ரயவிகும் சதிச் ச மே பஞ்சவிகும் சதிச் ச மே ஸப்தவிகும் சதிச்ச மே நவவிகும் சதிச்ச மே ஏகத்ரிகும் சச்ச மே த்ரயஸ்த்ரிகும் சச்ச மே சதஸ்ரச்ச மே –ஷ்டௌ ச மே த்வாதச மே ஷோடச ச மே விகும் சதிச் ச மே சதுர்விகும் சதிச் ச மே –ஷ்டாவிகும் சதிச் ச மே த்வாத்ரிகும் சச்ச மே ஷட்த்ரிகும் சாச்ச மே சத்வாரிகும் சச்ச மே சதுச்சத்வாரிகும் சச்ச மே –ஷ்டாசத் வாரிகும் சச்ச மே வாஜச்ச ப்ரஸவச்சா –விஜச்ச க்ரதுச்ச ஸுவச்ச மூர்த்தாச வ்யச்நியச்சா-ந்த்யாயநச்சா–ந்த்யச்ச பௌவநச்ச புவநச்சா –திபதிச்ச வேதங்களில் , எண்கள் எவ்வளவு விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன என்பது வியக்க வைக்கும் —————தொடருகிறது——————”

எண்கள் —அவை சொல்வது என்ன ?–8
————————————————

இதுவரை வேதங்கள், உபநிஷத்துக்கள் முதலியவற்றில், எண்களைப் பற்றிச் சொல்லியிருப்பதைக் கொஞ்சம் தெரிந்து கொண்டோம் .இவற்றில் அளவில்லாமல் பற்பல விவரங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள், மேலும் ஆழ்ந்து படித்தோ,
வித்வான்களை, பண்டிதர்களை அணுகியோ தெரிந்துகொள்ள, அவர்கள் ஆர்வத்தைத் தூண்ட, இந்தத் தொடர் உதவியாக இருக்கும். இவை யாவும் ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. இது ஒரு அருமையான பாஷை. இதைப்பற்றி, மொழி வல்லுனர்கள், மேனாட்டு மேதைகள் சொன்ன. எழுதியவைகள் ஏராளம்; ஏராளம். இவற்றை இங்கு விரிக்கின், தலைப்பு ,தடம் புரளும். ஆனால், விஷயம் சொல்லியாகவேண்டும்;அதையும், உப்பிலியப்பன் சந்நிதி ஸ்ரீ உ.வே. வங்கீபுரம் நவநீதம் வேதாந்த தேசிகன் ஸ்வாமி சொல்லி இருக்கிறார்.
அது, எதுவெனில் ,இதோ—–

“–தப்பான பாதையில், செல்லலான அரசு கட்சிகள் இவற்றின் போக்கால், தென்பிராந்தியத்தில், பள்ளிகளில் ஸம்ஸ்க்ருதம் வெளியேற்றப்பட்டது. இது,ஏதோ தேசீய சீர்திருத்தம் போலும் என்ற மாயை அரசியலாரைக் கவ்வியிருந்தது. பாடசாலைகள் (வேத, ஸம்ஸ்க்ருதாதிகளைப் போதிப்பவை )
பஹூகாலமாக தர்மஸ்தாபனங்களின் மேற்பார்வையில் நடந்தவை, மூடப்படலாயின. சிறுவர்கள், பள்ளியில் ஸம்ஸ்க்ருதம் கற்க வாய்ப்பில்லாமல் போயிற்று. விளைவு ? இரண்டு தலைமுறைகளுக்கு, தம் சொந்தமொழியான
ஆன்மீக மொழியான ஸம்ஸ்க்ருதம் , ஏதோ, க்ரீக் , ஜர்மன் , போன்ற வேற்று மொழியாயிற்று. —-”

இப்படியாக, அரும் பெரும் பொக்கிஷத்தை இழந்து இப்போது தவிக்கிறோம்.
—————————————-

இப்போது , ஆழ்வார்கள் பாசுரங்களில் ,எண்கள் எப்படி ஆச்சர்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பொய்கை ஆழ்வார்
—————————–

இவருடைய காலம், த்வாபர யுகம்—8 62 901 வது வருஷம் என்பர்.பாஞ்சஜன்ய அம்சம் ஐப்பசி மாத திருவோண நக்ஷத்ரம்–காஞ்சியை அடுத்த திருவெஹ்காவில்ஒரு பொய்கையில் ,
அயோநிஜராய் அவதாரம். இவரது அருளிச் செயல்கள்–இயற்பாவில்—முதல் திருவந்தாதி என்கிற100 பாசுரங்கள். இவற்றிலிருந்து ஓரிரண்டு பாசுரங்களைப் பார்ப்போம்

நெறிவாசல் தானேயாய் நின்றானை,ஐந்து
பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி—–அறிவானாம்
ஆலமர நீழல் அறம் நால்வர்க்கு அன்று உரைத்த
ஆலமமர் கண்டத்தரன்

இப்பாசுரத்தில் ஐம்பொறிகளைச் சொல்கிறார்; நால்வர்க்கு அன்று பகவான் அறம் உரைத்ததைச் சொல்கிறார்.

செவி வாய் கண் மூக்கு உடல் என்ற ஐம்புலனும் ,செந்தீ
புவிகால்நீர் விண் பூதம் ஐந்தும் —அவியாக
ஞானமும் வேள்வியும் நல்லறமும் என்பரே
ஏனமாய் நின்றார்க்கு இயல்வு

இப்பாசுரத்தில், ஐந்து புலன்கள், ஐந்து பூதங்கள் என்று எண் கணக்கு சொல்கிறார்.

முதலாவார் மூவர் என்று ஒரு பாசுரத்தில் சொல்கிறார். மூவடியால் ,சென்று திசையளந்த–
என்கிறார் இன்னொரு பாசுரத்தில். மராமரமேழ் சேற்று என்கிறார் பிறிதொரு பாசுரத்தில்.
இப்படிப் பலப் பாசுரங்களில், எண்கள்

பூதத்தாழ்வார்
—————-

இவர் , பொய்கை ஆழ்வார் அவதரித்த மறுதினம், அவிட்ட நக்ஷத்ரத்தில், திருக்கடன்மல்லையில், குருக்கத்தி மலரில் அயோநிஜராய் ,அவதரித்தார். கதையின் அம்சமாக அவதரித்தார் இரண்டாம் திருவந்தாதி என்கிற
100 பாசுரங்கள் , இவர் அருளியது.

அறிந்தைந்து முள்ளடக்கி ——என்கிற பாசுரத்தில் ஐம்புலன்களைச் சொல்கிறார்.
எண்திசையும் பேர்த்த கரம் நான்குடையான் —என்கிறார் இன்னொரு பாசுரத்தில்.
பகவான் பஞ்ச பூதங்களாக இருக்கிறான் என்று ஒரு பாசுரத்தில் சொல்கிறார்.
தோளிரண்டெட் டேழும் மூன்று முடி அனைத்தும்,
தாளிரண்டும் வீழச் சரந்துரந்தான் ——தாளிரண்டும்
ஆர்தொழுவார் பாதம்——-
என்று எண்களாகவே பாசுரமிடுகிறார்

பேயாழ்வார்
——————

இவர், பூதத்தாழ்வார் அவதரித்த மறுதினம், சதய நக்ஷத்ரத்தில், திருமயிலைக் (மைலாப்பூர்) கிணற்றில், செவ்வல்லிப் பூவிலே அயோநிஜராக ,நந்தகம் என்கிற வாளின் அம்சமாக அவதாரம். (இப்போது இந்த அவதார இடம் மைலாப்பூர் ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் உள்ள கிணறு என்று சொல்வர் )
இவர் அருளிய மூன்றாம் திருவந்தாதி என்கிற 100 பாசுரங்களில்,

மூவடிமண் நீ அளந்துகொண்ட நெடுமாலே —என்றும், இறையாய் ,நிலனாகி எண் திசையும் தானாய் ,மறையாய் ,மறைப் பொருளாய் —என்றும்,
பொருப்பிடையே நின்றும், புனல் குளித்தும், ஐந்துநெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா—–என்றும் எண்களைச் சொல்லிப் பாசுரமிடுகிறார்.

திருமழிசை ஆழ்வார்
———————————–

இவர், முதல் மூன்று ஆழ்வார்கள் அவதரித்த அதே ஆண்டில், தை மாத மக நக்ஷத்ரத்தில், ஸுதர்சனத்தின் அம்சமாக, திருமழிசையில் அவதரித்தார். இவர், நான்முகன் திருவந்தாதி (96),திருச்சந்த விருத்தம் (120)
ஆக , 216 பாசுரங்களை அருளி உள்ளார்.

திருச்சந்த விருத்தத்தில் ,
” பூநிலாய வைந்துமாய் புனற்கண் நின்ற நான்குமாய்
தீநிலாய மூன்றுமாய் சிறந்த காலிரண்டுமாய்
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே
என்பதாக, 5,4,3,2,1, என வரிசையாகச் சொல்கிறார்.
அடுத்த பாடல், ஆறும் ஆறும் என்று ஆரம்பிக்கிறது. அதற்கடுத்த பாடல், ஐந்து மைந்து மைந்துமாகி என்று தொடங்குகிறது. அடுத்தது, மூன்று முப்பதாறினோடு
ஐந்துமைந்து மைந்துமாய், மூன்று மூர்த்தியாகி என்று தொடர்கிறது.

நம்மாழ்வார்
——————–

கலியுகம் பிறந்த 43 வது நாள், திருக்குருகூரில், வைகாசி விசாக நக்ஷத்ரத்தில் விஷ்வக்ஸேனரின் (ஸேனை முதலியார்) அம்சமாக அவதாரம். ருக்வேத ஸாரமான
திருவிருத்தம் (100), யஜுர் வேதஸாரமான திருவாசிரியம் (7), அதர்வண ஸாரமான பெரிய திருவந்தாதி (87), ஸாம வேத ஸாரமான திருவாய்மொழி (1102) ,ஆக ,
1296 பாசுரங்களை அருளி இருக்கிறார்.இவற்றிலும் எண்கள் ,ஆங்காங்கு நிரவிக் கிடக்கின்றன.

இப்படி எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களிலும், எண்கள் கொட்டிக் கிடக்கின்றன.
இவை, இங்கு விரிக்கின் , இது திவ்ய பிரபந்தக் கட்டுரையாக ஆகிவிடும்.(4000 பாசுரங்கள் )

ஸ்வாமி தேசிகன், தன்னுடைய பரமபத ஸோபானம், சில்லறை ரஹஸ்யங்கள், மும்மணிக்கோவை, நவமணிமாலை போன்ற வற்றிலும், பிறவற்றிலும், எண்களைக்
கொட்டிக் கொடுத்துப் பாசுரங்களை இயற்றி இருக்கிறார்.மொத்தம், 455 பாசுரங்கள்.
இவற்றில் சில, கிடைக்கவில்லை. இவற்றைப் படிக்கப் படிக்கப் புதுப் புது அர்த்தங்கள் தோன்றும்.
ஆசார்யன் திருவடி தொழுது, இப்போது, கணக்கில் அடங்காதவை எவை என்று பார்ப்போம் /.

எண்களில் அடங்காதவை
———————————–

1. பகவானின்அநந்த கல்யாண குணங்கள்
2. பகவானின் படைப்புகள்
3. மனுஷ்யப் பிறவிகள்
4. மனுஷ்யர்களின் பாவங்கள்

———————————-

அடுத்ததான எண்கள் (1008 லிருந்து )

1. ஸஹஸ்ரநாமாக்கள் ——————————————————1008
2. அஷ்டோத்தர சத நாமாக்கள் ——————————————–108
3. ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த திவ்யதேசங்கள்—–108
4. தர்ப்பணங்கள் ——————————————————————- 96
5. ஸிம்ஹாஸநாதிபதிகள்————————————————— 74
6. மேளகர்த்தா ராகங்கள் ——————————————————72
7. கலைகள்————————————————————————–64
8. நாயன்மார்கள்——————————————————————–63
9. தமிழ் வருஷங்கள் ————————————————————60
10— பகவானின் விபவ அவதாரங்கள்—39 என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவையில், எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் என்கிறார். ஏழேழு –எனபது, மனுஷ்யப் பிறவியைச் சொல்லாது, பகவானின் ஏழேழு அவதாரங்களிலும் உற்றோமேயாவோம்
என்கிறாள் என்று, அடியேன் “திருப்பாவை” உபன்யாசங்களில்
சமர்ப்பித்துள்ளேன் ( விரிவுக்கு அஞ்சி இவைகளை இங்கு
சொல்லவில்லை—ஆனால், ஆஸ்திகர்ள் கேட்பின் தனியே
அவர்களுக்குச் சொல்கிறேன் )
இனி—-32 என்கிற எண்
———————————–
ஸ்ரீ ஆளவந்தார் அருளிய கீதார்த்த ஸங்க்ரஹத்தில் , 32ச்லோகங்கள் உள்ளன.
ஸ்ரீ உடையவர் , ப்ருஹ்ம ஸுத்ரத்துக்கு மங்கள ச்லோகம் அருளி இருக்கிறார்.
32 அக்ஷரங்கள் —32 ப்ருஹ்ம வித்யைகளைக் குறிக்கிறது. எல்லா வேதங்களும் இந்த 32ல் அடக்கம்.
அசேஷ சிதசித் விஷ்ணு
சேஷினே சேஷ சாயினே
நிர்மலானந்த கல்யாண
நிதயே விஷ்ணவே நாம:

இந்த மங்கள ச்லோகத்தை அனுதினமும் சொன்னோமானால், ஞானம் விருத்தியாகும்.
பரமாத்மா,ஹயக்ரீவ ஸ்வரூபியாக இருந்து, ப்ரஹ்மாவுக்கு வேதங்களை, உபஹரிக்கிறான் ஸ்ரீ ஹயக்ரீவன் வித்யா ஸ்வரூபன். ஸ்வாமி அருளியது ஸ்ரீ ஹயக்ரீவ ஸ்தோத்ரம்
இதன் ஒவ்வொரு ச்லோகத்திலும் ந்ருஸிம்ஹனுடைய பீஜாக்ஷரம் உள்ளது.
32 பீஜாக்ஷரங்கள் இந்த ஸ்தோத்ரத்தைச் சொன்னோமானால், ந்ருஸிம்ஹ அனுக்ரஹமும் சேர்ந்து , கிடைக்கும்.
இந்த எண் 32யைப் பற்றி, அடியேன், 2006ம் ஆண்டில், திருவஹீந்த்ரபுரம் ஔஷதகிரியில் ஸ்ரீ ஹயக்ரீவருக்கு மஹா மண்டபம் கட்டி அந்த சந்தர்ப்பத்தில் வெளியிட்ட
ஸ்ரீ ஹயக்ரீவனைப் பற்றிய எல்லா விவரங்களும்
அடங்கிய “கதம்ப மாலா ” என்கிற புத்தகத்தில் சொல்லி இருக்கிறேன் , அவ்வளவு உன்னதமான எண் 32.
32 வித்யைகள் என்பர் . அதாவது—
4 வேதங்கள்
4 உபவேதங்கள்
6 வேதாங்கங்கள்
5 தர்ஸனங்கள் ( மீமாம்ஸம், தர்க்கம், ஸாங்யம் , வேதாந்தம், யோகம் )
13. இதன் விவரம்
இதிஹாசங்கள்
புராணங்கள்
ஸ்ம்ருதிகள்
நாஸ்திக மதம்
அர்த்த சாஸ்த்ரம்
காம சாஸ்த்ரம்
சில்ப சாஸ்த்ரம்
அலங்கார சாஸ்த்ரம்
காவ்யம்
தேச பாஷை
சமயோசித வார்த்தைகள்
யவன மதம்
தேச தர்மம்

ஆக மொத்தம் 32.

ப்ருஹ்ம வித்யைகள் —32 ( இதற்கான விவரத்தை அடியேனின் “வேதோபாஸனா என்கிற புத்தகத்தில் எழுதி இருக்கிறேன். இதை, உப்பிலியப்பன்கோவில் டாக்டர் ஸ்ரீ. உ. வே. சடகோபன் ஸ்வாமி ( U .S ) தன்னுடைய e –புத்தக வரிசையில்
வெளியிட்டிருக்கிறார். 32 ப்ரஹ்ம வித்யைகளையும் “ப்ரஹ்ம ஸூத்ரம் ” சொல்கிறது.
இவை, சாந்தோக்ய உபநிஷத், முண்டகோபநிஷத், ப்ரஹதாரண்யக உபநிஷத் , தைத்திரீய உபநிஷத் , சுபாலோ உபநிஷத்,, ஸ்வேதாச்வரோ உபநிஷத் ,ஈசாவாஸ்ய உபநிஷத் , கேனோபநிஷத் –ஆகிய 8 உபநிஷத்துக்களில்
விளக்கப்படுகின்றன. இந்த 32 வித்யைகளும் ,32 அக்ஷரங்கள் கொண்ட ஸ்ரீ ந்ருஸிம்அனுஷ்டுப் மந்த்ரத்தில் அடங்கியுள்ளது.
இந்த32ம் இங்கு கொடுக்கப்படுகிறது :–

1.அக்னி வித்யை
2. அக்ஷர வித்யை
3. ஆனந்த வித்யை
4. அதிம்ருத்யுபாஸன வித்யை
5. பாலாகி வித்யை
6. பூம வித்யை
7. ப்ரஹ்ம வித்யை
8. சாண்டில்ய வித்யை
9. தஹர வித்யை
10. ஜ்யோதிர் வித்யை
11. கோச விஜ்ஞான வித்யை
12. மது வித்யை
13. மைத்ரேயி வித்யை
14. கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை
15.ந்யாஸ வித்யை
16. பஞ்சாக்னி வித்யை
17. பர வித்யை
18. பர்யங்க வித்யை
19. ப்ரஜாபதி வித்யை
20. ப்ராண வித்யை
21. ப்ரதர்ன வித்யை
22. புருஷ வித்யை
23. புருஷாத்ம வித்யை
24. ரைக்வ வித்யை
25. புருஷோத்தம வித்யை
26. ஸத் வித்யை
27. ஸர்வ பர வித்யை
28. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை
29. உத்கீத வித்யை
30. உபகோஸல வித்யை
31. வைஷ்ணவ வித்யை
32. வைச்வாநர வித்யை
( இவை பக்தி யோகத்தில் சொல்லப்படும் மிகக் கடினமான
உபாஸனா மார்க்கங்கள் —பகவானை அடைய —)
ஸ்ரீ ஹயக்ரீவ அனுஷ்டுப் மந்த்ரம் —32 அக்ஷரங்கள்
ஸ்ரீந்ருஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரம் 32 அக்ஷரங்கள்
ஸ்வாமி தேசிகன் அருளிய பாதுகா ஸஹஸ்ரத்தில்—32 பத்ததிகள்
ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —32 அதிகாரங்கள்
ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்தோத்ர பாடங்கள் —-32
அடியேன் , திருவஹீந்த்ரபுரத்தில் ,ஔஷதகிரியில் கட்டியுள்ள
மஹா மண்டபத்துக்கும் 32 தூண்கள்

——————–தொடர்கிறது———-

73260_1021559537891049_526316553254955728_n

About the Author

Leave A Response