1பேசித் தீர்வடைவோம் .
பேசாமல் தீர்வல்ல .
2 ஊரெல்லாம் பேசாமல் ,
தூர விலகிடுவோம்
3 நடக்கப்போவது நல்லதே
நடந்ததை மறந்திடுவோம்
4 உறுதியாய் இருந்திடுவோம் .
இறுதிவரை இருந்திடுவோம்
5 எதிர்வாதம் மனக்கசப்பு,
பிடிவாதம் பேரிழப்பு .
6 விவரங்கள் பகிர்ந்திடுவோம் .
வீண்வார்த்தை விலக்கிடுவோம் .
7 தீர்வை அடைந்திடுவோம் .
தர்க்கம் தொலைத்திடுவோம் .
8 விவாதம் தெளிவாக்கும் .
விவகாரம் குழப்பிவிடும் .
9 விளக்கம் பெற்றிடுவோம் .
விரோதம் ஒழித்திடுவோம் .
10 பரிசீலனை செய்யுங்கால் .
பணிவதாய்ப் பொருள் அல்ல .
11 சங்கடங்கள் நேர்ந்தாலும்
இங்கிதமாய் நடந்திடுவோம் .
12 செல்வாக்கு இருந்தாலும்
சொல்வாக்கு பணிவாக்கும் .
13.தனங்கள் பல இருந்தாலும்
இணக்கம் இனிமைதரும்.
14.மனம் திறந்த பேச்சுக்கள்
இனம்புரியா வசந்தங்கள்
15.ஒதுக்குவதை ஒதுக்கிடுவோம்
ஒடுக்குவதை ஒழித்திடுவோம்
16. உள்ளத்தில் உளதென்னும்
கள்ளத்தை அழித்திடுவோம்
17.நேரிடையாய் புகழ்ந்தாலும்
நமக்கில்லை என்றிருப்போம்
18. காணாமல் தூற்றுவதைக்
காணாமல் ஒதுக்கிடுவோம்
19. உறவுக்கு உயிர் கொடுப்போம்
உயிருக்கு உறவளிப்போம்
20. இறைவன் எழுதியதை
இனிதாக ஏற்றிடுவோம்