அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் , ஸ்ரீ ஸுதர்ஸனர்
உலகில் வாழும் எல்லா ஜனங்களும் –முக்குணங்களுக்கு ஆட்பட்டவர்கள்.
ஸத்வ குணம் —- உயர்ந்த குணம் .ஸத்வ குணம் மேலோங்கி .கொஞ்சம் ராஜஸ
குணமும் ,கொஞ்சம் தாமஸ குணமும் கலந்து இருந்தாலும் அவர்கள் –ஸாத்விகர்கள் .
மஹான்கள் —முனிவர்களைக்கூட அதனால்தான் ,ஸாத்விகர்கள் என்று அழைக்கிறோம்.
இதைப்போலவே ,ரஜோ குணம் மேலோங்கி ,தாமஸ குணமும் கொஞ்சம் ஸத்வ குணமும்
உள்ளவர்களை ”ராஜஸர்கள் ” என்று அழைக்கிறோம்.
மற்றொருவர், —தாமஸ குணம் மேலோங்கி, ஸத்வ குணம் மிகக் கொஞ்சமாகவும் ,அதைவிட ரஜோகுணம் அதிகமாகவும் உள்ளவர்கள், ”தாமஸர்கள் ”. இவர்கள்,
பஞ்சமாபாதகங்கள் செய்ய அஞ்சமாட்டார்கள்.தீயச் செயல்களையே செய்வர்.
மத்யமத்தில்—அதாவது நடுவில் உள்ள ராஜஸர்கள் ,மிக அதிக எண்ணிக்கையில்இருக்கிறார்கள். இவர்கள், தேவதாந்த்ரங்களை வழிபடுவதில் ஆவலாக இருப்பார்கள்.ஸ்ரீமந் நாராயணனையும் தேவதாந்த்ரங்களுக்குச் சமமாக நினைப்பார்கள்.
பகவானின் பெருமைகளை அறிய முற்படாதவர்கள் அல்லது, அறிய விரும்பமாட்டார்கள்.
இவர்கள் ”அந்ய யாஜீ ” என்று சொல்லப்படுவர்.வேறு தெய்வங்களையும் ,, விநாயகர்,காளி போன்ற பரிவார தேவதைகளையும் வணங்குபவர் .
இதற்கு, மாறானவர் அல்லது இதிலிருந்து வேறுபட்டவர் –அநந்ய யாஜீ –இவர்கள் பகவான் ஸ்ரீமந்நாராயணனையே வணங்குபவர். வேறு தெய்வங்களை வணங்கமாட்டார்.
ஸ்ரீ ஸஹஸ்ரநாமம் சொல்கிறது——
கோ தர்ம : ஸர்வ தர்மாணாம் பவத : பரமோ மத : ?
கிம் ஜபந் முச்யதே ஜந்துர் : ஜந்ம ஸம்ஸார பந்தநாத் ?
எந்த தர்ம வழி —உபாயம்—சிறந்தது ? யாரை ஸ்மரித்தால்,இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து
விடுபடலாம் என்று யுதிஷ்டிரர் கேட்க, அதற்கு பீஷ்மர் பதில் சொல்கிறார்.
யத : ஸர்வாணி பூதாநி பவந்த்யாதி யுகாகமே |
யஸ்மிந் ச ப்ரளயம் யாந்தி புனரேவ யுகக்ஷயே ||
தஸ்யலோக ப்ரதாநஸ்ய ஜகந்நாதஸ்ய பூபதே |
விஷ்ணோர் நாம ஸஹஸ்ரம் மே ஸ்ருணு பாபபயாபஹம் ||
எல்ல உலகங்களும் இவரிடமிருந்து உண்டாகியதோ , எவரிடம் கடைசியில் ஒடுங்குகிறதோ ,
அப்படிப்பட்ட ஸ்ரீமந் நாராயணனின் ஆயிரம் நாமாக்களைச் சொல்கிறேன்,கேட்பாயாக —
என்கிறார்.
ஸ்ரீ விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம், போன்றவையும் பகவானையே அறுதியிட்டுச் சொல்கின்றன.
பகவானாகிய ஸ்ரீ விஷ்ணு , ஸ்ரீ ஸுதர்ஸன சக்ர ரூபியாக இருக்கிறார், .என்று
அஹிர்புத்ந்யன் ( சங்கரன் ) சொல்கிறார்.
த்யான ச்லோகம்
——————————-
பஹிரந்தஸ்ய மஸ்சேதி ஜ்யோதிர் வந்தே ஸுதர்ஸனம் |
யேனா வ்யாஹத ஸங்கல்பம் பாதிலக்ஷ்மிதரம் மஹ : |\
வெளிப்புறமும் ,மனஸின் உட்புறமும் இருக்கும் , இருளைப்போக்க வல்லமையுடைய
ஸுதர்ஸனம் என்கிற ஜ்யோதியை நமஸ்கரிக்கிறேன் .
ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருமார்பில் உறைகின்ற , மஹா ஜ்யோதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவும்
—இச் சக்கரத்தாழ்வார் மூலமாகவே தன்னுடைய ஸங்கல்பங்களை நிறைவேற்றிக் கொள்கிறார்.
அப்படிப்பட்ட ஸ்ரீ ஸுதர்ஸநரை நமஸ்கரிக்கிறேன்
த்யாதம் ஸக்ருத் பவாநேக கோட்யகௌகம் ஹரத் யரம் |
ஸுதர்ஸநஸ்ய தத் திவ்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி ||
ஒரு முறை த்யானம் செய்தாலும் ,கோடிக்கணக்கான ஜன்மங்களில் செய்த பாவக்குவியல்கள் எல்லாமும் ,உடனே அழியுமோ , அந்த ஸ்ரீ ஸுதர்ஸந பகவானின்
தேஜஸ்ஸை ,எப்போதும் த்யானம் செய்வோம்.
இனி மூன்று வகையான 5 பீஜங்கள் , மூன்று வகையான 6 பீஜங்கள் –இந்த மந்த்ரங்கள்,மற்றும் சக்ர காயத்ரி என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் அஹிர்புத்ந்யன் அருளியிருப்பதைப் பார்ப்போம்
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் –ஸ்ரீ ஸுதர்ஸனர்—தொடர்ச்சி
———————————————————————————————
—-மூன்று வகை ஐந்து பீஜங்கள் ——-
1. பரமாத்மா நமாதாய யோஜயே துத்யேன து |
ப்ரதானம் ஸம்ஸ்ப்ருசேத் பூய : பரம் பீஜம் து பஞ்சமம் ||
2. ஸுர்ய முத்தாம காலாட்யம் ஸுக்ஷ்மம் தத் பீஜ முச்யதே |
ஸப்ராணம் புவனாதாரம் ரக்ஷோ துரித மர்தனம் ||
3. ஸ்தூலம் து பஞ்சமம் பீஜம் ஸௌதர்ஸன மனுத்தமம்
———————————————————————————————–
மூன்று ஆறுவகை பீஜங்கள் :—-
4.யத்தத் ஸங்கர்ஷணம் கோரம் லாங்கலம் பரமாயுதம்
5.யோஜயேத் ப்ரமேயேண சந்த்ரிகா கேவலேன ச |
பரம் தத்பரமம் ஷஷ்டம் தீப்தி ஸாலி ஸுதர்ஸனே ||
6.ஸர்வ ஸாஸ்த்ராத்த கூடஸ்தமிதி தேஜோ அப்ரமேயகம் |
ஷஷ்டே பரா ஸ்திதிர் பீஜஸேயம் நாரத ! தர்ஸிதா ||
7.தத்புல்ல நயனாகாரம் புல்லைர்யன் நயனைர் வ்ருதம் |
ப்ரதிதம் ப்ரதமாக் ராந்தம் விஸ்வாப்ய யக்ருது ஜ்வலம் ||
8.ஸுக்ஷ்மம் ஷஷ்டம் ஸமுத்திஷ்டம் பீஜம் ஸௌத்ர்ஸணம் பரம் |
யஸ்மான்னயதி ஸன்மார்க்க சித்வா அகம் பாஹ்யாமாந்தரம் ||
9.ப்ரததே ச முஹீர்வ்ருத்யா விஸ்வாமாப்யாய யத்ய பி |
இயம் தே மத்யமாவஸ்தா ஸுக்ஷ்மா ஷஷ்டி ப்ரதர்மிதா ||
10.ஸ்வேதாக்யா வ்யாபகா க்ராந்தா ஆஹ்லாதேன து கேவலம் |
ஷஷ்டி ஸ்தூலா ஸமுத்திஷ்டா விதா நாரத | தே முனே ||
11.ஸ்தாணும் சித்வா யதா தக்த்வா பூர்வம் கேதாரகாரக : |
பலப்ராபண பீஜானி ப்ரதயித்வா ச வாரிணா ||
12.ஆப்யாய்ய சாந்த ஸந்தாப: வ்யாப்னுவன் விவிதம் பலம் |
ஆஹ்லாதம் லபதே அதீவ ஸேயம் ஷஷ்டி பராமுனே ||
இதி தே தர்ஸிதா ஸஸ்வத் ஸக்தி : ஸா ஷோடஸாக்ஷரி
இந்த ரஹஸ்ய மந்த்ரங்கள் , மிக அருமையான மந்த்ரங்கள்.
ஸ்ரீ ரங்கநாத பாதுகாவின் ஸம்பாதகர் சொல்கிறார்–
எங்கும் வ்யாபித்து, மூவுலகின் எந்த சக்தியும் தானேயாய் இருந்த ஹிரண்யனை ஸம்ஹரிக்க பகவான் மூவுலக வ்யாபியான தன் சக்தி மூர்த்தியான ஸ்ரீ ஸுதர்ஸன ரூபத்தையே நரசிங்கமாக்கிக்கொண்டு அவதரித்தார். ——-
எல்லா அவதாரங்களுமே ஸ்ரீ ஸுதர்சன மூர்த்தியின் வெளிப்பாடுதான் என்று அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை ஸ்பஷ்டமாகச் சொல்கிறது
வ்யாக்யான கர்த்தாக்களான பண்டிதர்கள், இந்த பீஜாக்ஷரங்களுக்கு, வ்யாக்யானங்கள் அனுக்ரஹித்து இருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
சக்ர காயத்ரியுடன் இதை நிறைவு செய்கிறேன்
———————————————————————————-
1.ஹ்ருதயம் சாய சக்ராய வித்மஹே பதமாதிமம் |
மந்த்ர நாதஸ்ய நேத்ராதி பதம் ஸுக்ஷ்மோ அத தீமஹி ||
2.காயத்ரயா ஆகனவமே ததஸ்தைவா அநிவாரிதி : |
தத ஸமஸ்த ரூபம் து காயத்ரியா வஸமம் பதம் ||
3.உதிதா சக்ர காயத்ரி ஸம்பத விம்சதி கீர்த்திதா |
அத ஸௌதர்ஸன அஸ்த்ராணாம் மந்த்ரா நேதா விபோதமே ||
——————————————————————————————
இந்த சக்ர காயத்ரி என்பது மிக சக்தி வாய்ந்த மந்த்ரம்—-உபதேசமாகப் பெற்று ஜபித்து வந்தால் ,
பில்லி, சூந்யம் , வைப்பு , புத்திமாறாட்டம்,எல்லாவித ரோகங்கள்காணாமல் அழிந்துவிடும்.
அளப்பரிய பலன் இம்மையிலும் , மறுமையிலும் கிடைக்கும்
—