Method of ”worship” in Vaishnava temples

Posted on Dec 17 2016 - 10:49am by srikainkaryasriadmin
|
Categorized as
2257

பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை
———————————————————————–

-மனுஷ்யப் பிறப்பு மிக முக்கியமானது.
கூன், குருடு, செவிடு போன்ற ஹீனங்கள், உடல் சரியான வளர்ச்சி இல்லாதது, மூளை சரியான வளர்ச்சி இல்லாதது—இப்படியெல்லாம் நேராமல், ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் ராமானுஜ தாசர்களாக, ஸ்வாமி தேசிகன் ஸம்ப்ரதாயத்திலோ, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸம்ப்ரதாயத்திலோ பிறப்பது மிக மிக விசேஷம்—பூர்வ ஜென்ம புண்யங்கள் அளவில்லாது செய்திருந்ததால்தான், இந்தப் பிறவியில் , இந்த சம்பிரதாயங்களில் பிறந்து இருக்கிறோம்.
இந்தமாதிரியான பிறவியில், நாம் இரண்டு யாத்ரைகளைச் செய்கிறோம்.
1. ஜீவன யாத்ரை
2. உஜ்ஜீவன யாத்ரை –
ஜீவன யாத்ரை என்பது, உடலை வளர்ப்பது, போஷிப்பது –அதற்கான
ஜீவனத்துக்கான படிப்பு ,பிறகு உழைப்பு,பிறகு ஸம்பாத்யம்
குடும்பத்தைக் காப்பது, உற்றார் உறவினர்களை உபசரிப்பது, ஆசார்யர்களை உபசரிப்பது, நண்பர்களை உபசரிப்பது இப்படிப் பல –இது லௌகீகம்
உஜ்ஜீவன யாத்ரை என்பது, உயிரை–ஆத்மாவை, நல்வழி நடத்துதல்,
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சாஸ்த்ரங்களில் விதித்தபடி, நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்தல், கோவிலுக்குச் சென்று வழிபடுதல்,
இப்படிப்பை பலப்பல —–
இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான்—யாத்ரை –எல்லாருடைய யாத்திரையும் இப்படிப்பட்டதுதான். இது ஒரு பயணம் –யாத்ரை
முதல் யாத்ரையில் ,வழியில் உழைப்பு, உணவு, குடியிருக்க இடம் ,
தண்ணீர் , ஆரோக்கியம் இப்படி
இரண்டாம் யாத்ரையில் கோவில்கள், அவை சம்பந்தப்பட்ட புராண வரலாறுகள், புஷ்கரணி ,உத்ஸவங்கள்,—-இப்படி
முதல் யாத்ரையில் , தாகத்துக்குத் தண்ணீர், பசிக்கு உணவு இப்படி—இதனால், யாத்ரை, பிறப்பு, மறுபடியும் பிறப்பு என்று சங்கிலியாகத் தொடர்கிறது.
இரண்டாம் யாத்ரையில் , துயரத்துக்கு விமோசனம், துக்கத்திலிருந்து விடுதலை—
இதற்கு பகவானுடைய கோவில்களில் தர்சனம் , அங்கு கைங்கர்யம்,
அதன் பலனால் சாத்வீக குணம், ஆச்சார்ய அநுக்ரஹம் , ஆசார்ய
உபதேசம், முமுக்ஷு நிலை, அதனால் பகவானின் க்ருபை, பிறகு மறுபிறவியில்லாமல் அவனது திருவடி.
இவற்றுக்கெல்லாம் முதற் காரணமாக இருப்பது கோவிலுக்குப் போவது ——.
Summary—-
Please have faith in ”Vedic Astrlogy”
Vedic knowledge is more important—than reciting ”vedas”
without digesting the actual meanings
Agnihotra ,if performed according to the ”dictum”
of vedas will purify as stated above
Vaishnavas should perform
Daily—-
brahma yajgam —-after ”Deva Rishi—Khanda Rishi—
Pithru Tharpana”
samithaadanam—to be performed by ”brahmacharis”
agni santhaanam—-to be performed by ”gruhastha”
oubasanam –continuation of ”agni santhanam”

Mere studies of ”plus2” , graduation, engineering, medical, etc etc
and also westernised education are not giving any good character,
conduct, respect to elders, good behaviour etc to many people .
This is what many elite persons say in their conversations.
On the other hand,
Performing ”Samithaadanam”. ”agni santhanam” ”oubhasanam”
will give all such of those good things, besides mental balance,
wealth (Agni Santhanam, Oubhasanam) and fine behaviour
Adiyen’s submission is that next generation has to be taught
all these treasures by our Vedic Pundits convincing their parents
and also their boys to perform all these,of course
without compromising to do nithya karmas such as ”thrikala sandya”

பகவான், நமக்கு இரண்டு கால்களைக் கொடுத்து இருக்கிறான்.
ஒருகாலை ,ஜீவனத்துக்காக எடுத்துவைத்தோமானால், இன்னொருகாலை, பகவானை அடைவதற்கான வழிக்காக எடுத்துவைக்கவேண்டும். இப்படி அடுத்தடுத்து, ஜீவன வாழ்க்கைக்கு ஒருகால் எடுத்துவைத்து நடந்தோமானால், உடனே எடுத்துவைக்கும் கால் உஜ்ஜீவனத்துக்காக இருக்க வேண்டும்.
உஜ்ஜீவனம்—-இதற்கு ,அடிக்கடி கோவில்களுக்குப் போய், பகவானைத்
தரிசிக்கவேண்டும். இது உஜ்ஜீவன வாழ்க்கையின் ஆரம்பம்.

ஆதி காலத்திலிருந்தே ,பற்பல இடங்களில் உள்ள கோவில்கள் –இவற்றிலும் ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த
க்ஷேத்ரங்கள் பெருமை உடையவை. அரசர்கள் அமைத்த கோவில்கள்,
ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்கள் என்று அர்ச்சாவதார எம்பெருமான்கள்
எழுந்தருளியுள்ள கோவில்கள், பிரசித்தி பெற்றவை.
நம்முடைய முன்னோர்கள், கோவில்களை நன்கு பராமரித்தார்கள்.
பூஜைகள், உத்ஸவங்கள் ஆகம முறைப்படி நடந்தன. அர்ச்சகர்கள்,
ஜனங்களின் நன்மையை உத்தேசித்து, ”ஸர்வே ஜனாஸ் ஸுகினோபவந்து”
என்று பூஜையின் முடிவில் தினமும் பகவானிடம் பிரார்த்தித்தார்கள்.

நாகரீகம் என்று ஒன்று நம்மைப் பிடித்துக்கொண்டது.
பூஜையில் ச்ரத்தை குறைந்தது.ஒழுங்கு முறையும் மறைந்துகொண்டு வருகிறது.
நல்லொழுக்கம் ,கேள்வி கேட்கும் நிலை; எங்கே என்று தேட வேண்டிய நிலை. அதனால், பல கஷ்டங்கள் தாங்க இயலாத கஷ்டங்கள்.
கோவிலுக்குப் போவது என்பது, நாம் இஷ்டப்பட்ட சமயத்தில்தான்.
கஷ்டம் வரும் சமயத்தில்தான். துன்பத்தை அனுபவிக்கும் சமயத்தில்தான்.சாதாரண சமயங்களில் கோவிலுக்குப் போவது, ஏதோ ”பிக்னிக் ”போல ஆகிவிட்டது .
அதுவும் கோவிலுக்குப் போவது என்பது, எப்படி வேண்டுமானாலும் போகலாம்.எந்த டிரஸ்ஸிலும் போகலாம். எந்த சந்நிதி கண்ணில் படுகிறதோ, அங்கு சென்று , எக்சிபிஷனுக்குப் போய்வருவதைப்போலப் போய்வரலாம் என்கிற , நிலைமை இப்போது இருக்கிறது.
Dear Asthikas
Adiyen studied the various e-mails sent by the Srivaishnavas regarding the enforcement of “dress-code”
Adiyen submits the following ( after some hesitation) :–
Loukikas are expected to have self-discipline in this aspect. They attended upanyasams. They got “panchasamskaram”
Even most of the Srivaishnavas would have done “baranyasam”. What they derived from these?
Is it not necesarry to go to temple with ” pancha-katcham” and panniru thiruman if they are “Grahasthal’ ?
Is it not necesarry to wear ” Veishti” and have “uththreeyam” if they are bachelors besides wearing thiruman ?
Is it not their “swaroopam” to have “madisar” if the ladies are married?
Is it correct to go to temples, asramams, wedding (thirumangalya dharanam time) etc
with “Sudithar” ” nighty” etc dresses for the married ladies?
Will their inner-voice not tell them to bring into “anushtanam” what they learnt?
Why the loukikas should not take vasthrams and “thiruman petti” along with other dresses , phaste brush mirror etc etc when they come to Chennai or other places on official duty, if they have a mind to offer pranams to Acharyan who is in sancharam there?
When these loukikas observe certain norms, silence, principles during the official meetings etc, why they should not give such of these codes in to effect when they attend and receive ” Theertham ” ” SAtari ” ” prasadam ” etc in temples, Asramams etc
Adiyen is pained to see the behaviour of some of our sampradaya asthikas,
when adiyen attends marriage functions, temple uthsavams, sancharams of our matathipathis etc.
There is neither conduct nor code( adiyen expressing all these in the writings, books etc )
Dear Srivaishnavas
The future of our “Sri Desika Sampradayam” is in your hands.
It is your duty to hand them over fully to your next generation without pollution

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது
ஆகம விதிகளின்படி மிகப் பழைய காலத்தில், அரசர்களால் கட்டப்பட்ட எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின்சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள்,மலைகள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.இது நார்த் போல், சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே
அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி.
இந்த மூலஸ்தான எம்பெருமான் சுயம்பூவாக இருக்கலாம்/ மஹரிஷிகள் பிரதிஷ்டை செய்ததாக இருக்கலாம்.
அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும் அது தான், கீழே இருக்கும் அந்த எனர்ஜியைஅப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
எல்லா கர்பகிரஹங்களும் மூன்று பக்கங்களும் மூடி,வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் வாசல் வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து எம்பெருமானை வணங்கும் ஸேவார்த்திகளுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.இது உடனே தெரியாமல் இருக்கும்
ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஸேவார்த்திகளுக்கு இது தெரியும்
ப்ரதக்ஷணம் — கோயிலின் பிரகாரத்தை வலம் வரும் காரணம் —–
எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் கர்பகிரஹத்தை ப்ரதக்ஷணம் செய்யும்போது, அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூடசேர்ந்து அப்படியே நமது உடம்பில் வந்து சேரும்.
இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜியைக் கொடுக்கிறது..
கர்பகிரஹத்தில் ஒரு விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக, மந்திரம் சொல்லும் போதும், மணி ஸேவிக்கும்போதும் அங்கே செய்யப்படும் திருமஞ்சனம் முதலியவை அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் கர்பகிரஹம்
இவ்வளவு திருமஞ்சனம் , கர்ப்பூர நீராஜநம் , தூங்கா விளக்கு எரிதல் இவற்றை, ஒரு 10க்கு 10 ரூமில் செய்து பார்த்தால் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு த்ரவ்யங்களைக் கொண்டுதிருமஞ்சனம் செய்தாலும் இந்த இடத்தில் கெட்ட வாஸனையே இராது. இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கச்செய்யும் . பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்),துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும்அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் — நோய் தடுப்பு
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் நமது உடம்பை/உள்ளத்தைப் பரிசுத்தமாக்க.இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான்இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும்ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்குஎந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான்கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும்இது தான் முக்கிய காரணம்
அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள்
உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியைவாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும்,ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி
ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம்ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்துஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.
நமது முன்னோர்கள், இந்தமாதிரியெல்லாம் இல்லை. கோவிலுக்குப் போவதை, நித்ய கடமைகளாக ஏற்படுத்திக்கொண்டார்கள். வாழ்க்கையில் நிம்மதியாக இருந்தார்கள்.
இப்போது இந்த விஷயங்களை , நமது முன்னோர்கள் அனுசரித்த விஷயங்களை, முக்கியமாக ஸ்நானம், கோவிலில் நடந்துகொள்ளும் முறை இவைகளை சுருக்கமாகப் பார்க்கலாம் .
முதலில் ஸ்நானம்—–
ஆறுகளில், குளங்களில், வீட்டில் ஸ்நான முறைகள்
வீடு, குளம், ஆறு, சமுத்திரம் பெண்கள்—-மாதாமாதம், வீட்டில் குளித்து விட்டு, கோவிலுக்குப் போவது அவ்வளவு சுத்தமில்லை—-குலங்களிலாவது, நதியிலாவது ஸ்நானம் செய்ய வேண்டும்.

வஸ்த்ரம்
மடி வஸ்த்ரம் நல்லது—–இப்போது வண்ணார maடி என்கிறார்கள் –சரியல்ல
கல்யாணம் ஆனவர்கள், கச்சம் வைத்து உடுத்திக்கொள்ள வேண்டும்
அங்க வஸ்த்ரம் அவச்யம்
மேல் சட்டை, பனியன் வேண்டாம்
கல்யாணமான பெண்கள்–ஒன்பது கஜப் புடவை—

நெற்றிக்கு இட்டுக்கொள்ளுதல்
பன்னிரு திருமண் –ஸமாச்ரயணம் ஆனவர்கள்—
குறைந்த பக்ஷம் ,நெற்றியில் ”திருமண் –ஸ்ரீசூர்ணம் ”

ஸந்த்யாவந்தனம் , ஜபம், ஆத்துப்பெருமாளின் அனுமதியுடன்
கோவிலுக்கு
கோவில்
தினந்தோறும் செல்லும்போது, ஒவ்வொரு சந்நிதிக்கும்
உபகாரங்கள் எடுத்துச் செல்வது—-
மிகவும் இடைவெளி விட்டுப் போகும்போது ,
தாயார், பெருமாள் சந்நிதிக்கு உபகாரங்கள்–வசதிக்கு ஏற்ப—-
பிளாஸ்டிக் வேண்டாம்—துணியில் வேண்டாம்–மரத்தட்டில்—

வீட்டுக்கு மிக அருகில் இருந்தால், நடந்து செல்வது—காலில் செருப்பு இல்லாமல்–ஏதாவது ஒரு ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டே நடந்து செல்வது
ஊர் வம்பு பேசாமல்—
கோவிலுக்குச் சென்றதும்—-
புஷ்கரணி இருந்தால், படிக்கட்டில் இறங்கி ,முதலில் காலை தீர்த்தத்தில்
வைக்காமல், மேல்படியில் நின்றுகொண்டு ,புஷ்கரணி தீர்த்தத்தை வலது
உள்ளங்கையில் எடுத்து தலையில் புரோக்ஷித்துக்கொள்ளவேண்டும் ,
பிறகு, ,புஷ்கரணியில் இறங்கி கை கால்களை சோதித்து ,ஆசமனம்
த்வஜஸ்தம்பத்துக்கு அருகில் ,அதன் வலது (வடப் ) பக்கம் ,நான்கு தடவையாவது
சாஷ்டாங்கமாக ஸேவிக்கவேண்டும் .
ஆசார்யன் சந்நிதி ,ஸ்வாமி தேசிகன் சந்நிதி ஸ்ரீ உடையவர் சந்நிதி , ஆழ்வார்கள்
சந்நிதி என்று இப்படிக் க்ரமமாக சேவிக்கவேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தால், அந்தந்த ஆழ்வார்களின் தனியன்/ வாழித் திருநாமம்
ஸம்ஸ்க்ருதமோ ,தமிழோ சொல்லலாம்.
உதாரணமாக , ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில்,
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேன மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந :குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

——————–
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண்பொருநல் என்றும்—அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே ! தெரிந்து
இவைகளை சொல்லலாம்.
ஸ்ரீ உடையவர் சந்நிதியாக இருந்தால்,
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ :
ராமாநுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே ||

—————————-
முன்னை வினையகல மூங்கிற்குடி அமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் —என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்
——————————————–
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுநி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் , கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே !
—————————-
சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம ! இராமாநுச ! இதென் விண்ணப்பமே .

——————————
ஸ்வாமி தேசிகன் சந்நிதியில்
ராமாநுஜதயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

——————————
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் —–ஓரொன்று
தானேயமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

—————————–

பிறகு தாயார் ஸந்நிதி
ப்ராகாரத்துக்கு வெளியே 4 தடவையாவது ஸேவியுங்கள்
த்வாரபாலகர்களைப் பார்த்து, கை கூப்பி, தாயார் ஸந்நிதிக்குள் செல்லுங்கள்.
தாயாரை—ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்ரம்/ ஸ்ரீஸ்துதி சொல்லி ஸேவியுங்கள்
அர்ச்சகர், அர்ச்சனை செய்யும்போது, தாயாரைக் கண்ணாரத் தரிசியுங்கள்.
தாயாரின் இடது திருக்கரம் –நம்மை வரவேற்கிறது—-
வலது திருக்கரம் அநுக்ரஹிக்கிறது
கற்பூரஹாரத்தியின்போது ,தாயாரின் ப்ரஸன்ன வதனம், –புன்சிரிப்புத்
திருமுக மண்டலம், —நன்கு ஸேவியுங்கள் .
தீர்த்தம் , சடாரி ,மஞ்சக்காப்பு ,குங்குமம் —ப்ரஸாதங்கள் —இவைகளைப்
பணிவுடன் பெற்றுக்கொள்ளுங்கள்

1. கந்தர்வ ஸ்திரீகள் , பூலோகத்தில் பிராட்டிக்கு அர்ச்சனை செய்தார்கள். அவர்கள் உலகம் போகபூமி. பகவானை ,தாயாரை அர்ச்சிக்க ,இங்குதான்
வந்தாகவேண்டும்.. அப்படி அர்ச்சிக்கும்போது,பிராட்டியின் திருவடியில், மாலையை சமர்ப்பித்து , “மெட்டி தேவி ” முழுகும் அளவுக்கு புஷ்பங்களாலும் , குங்குமத்தாலும் அர்ச்சித்தார்கள். பிறகு, இந்தப் பிரசாதங்களை எடுத்துக்கொண்டு,கொண்டு ,அவர்களுடைய உலகத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது , துர்வாசர் எதிரே வந்தார்.
இவரைப் பார்த்ததும், கந்தர்வ ஸ்திரீகள் பயந்தார்கள் .துர்வாச மஹரிஷி ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் —என்கிற பயம் .
“உங்கள் கையில் இருப்பது என்ன ? ” துர்வாசர் கோபத்துடன் கேட்டார்.
“தாயாருக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை எடுத்து வருகிறோம் ”
என்று பணிவுடன் சொன்னார்கள்.
” கொடுங்கள் ” என்று சொல்லி, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
“தந்யோஸ்மி—நாங்கள் போகிறோம் ” என்று கந்தர்வ ஸ்திரீகள் சொல்ல,
துர்வாசர் புன்னகைத்துத்தலையசைத்தார் . தாயாரின் அனுக்ரஹ ப்ரசாதம் கையில் இருந்ததால், கோபம் வரவில்லை. இதை எங்கே வைக்கலாம் ,யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, எதிரே
ஐராவதம் என்கிற பட்டத்து யானையின்மீது, இந்திரன் பவனி வந்து கொண்டிருந்தான் . ஜன்மதின உத்ஸவம்.
பிரசாதம் இவனுக்குத் தகும் என்று நினைத்து, “இந்த்ரா –இந்த்ரா என்று கூப்பிட்டார் . இந்த்ரனிடம் “மஹாலக்ஷ்மி ப்ரசாதம் –ஸ்வீகரி–” யானைமீதிருந்த இந்த்ரன் , யானையைக் குத்தும்ஈட்டியைக் கீழே நீட்டினான். துர்வாசருக்கு வந்த கோபம் நொடியில் மறைந்தது.
பிரசாதம் ,அவர் கையிலிருந்து இந்த்ரனுக்குப் போய் , இந்த்ரன்
பிரசாதத்துக்கான மரியாதையைக் கொடுக்காததால், பிரசாதம்
இவர் கையை விட்டு அகன்றதும் , கோபம் கொப்பளிக்க , சபித்தார்.

2. எந்தப் பரமபதம் ,ஒரு பக்தனுக்கு,மனதிற்குக்கூட எட்டாத தொலைவில் உள்ளதோ, எது மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ , எந்த இடம் மிக மிக வியக்கத்தக்கதோ, எந்தத் திருநாடு ,எந்தக் காலமாறுபாட்டுக்கும் உட்படாததோ , மாறுபாடு அடையாததோ ,எந்தத் திவ்யதேசத்துக்குச் செல்பவனுக்கு , தேவர்கள் நகரமான அமராவதி, சிவனின் கைலாசம் , ப்ரஹ்மலோகம் — இவை நரகமோ , எந்த இடம் பகவானுக்கு ஒத்ததோ , எது அடியேன் கற்பனைக்கும் , சொற்களுக்கும் எட்டாததோ , அந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற பரமபதத்தை , பிராட்டியின் ப்ரஸாதம் கொடுத்துவிடும்.

3. தைத்த்ரீயத்தில் ஒரு செய்தி—–
கூர்மாவதாரம் செய்து, உலகைத் தாங்கி வருகின்ற பரமபுருஷனை ப்ரஹ்மா கேட்டாராம்
” நான் இதுவரை ச்ருஷ்டித்தவைகளில் , உம்மைப்போல் யாரையும் சிருஷ்டிக்கவில்லையே –நீர் யார் ? ”
அதற்குப் பகவான்,
நான் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டவன் –உன்னையும் சகல சேதன , அசேதனங்களையும் , ஸ்ருஷ்டித்தவன் — ” என்றாராம்
இதற்கு நிரூபணம் ,எம்பெருமானின் திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டிதான் !

பிறகு பெருமாள் சந்நிதி
கருடன் சந்நிதிக்கு அருகில், ஸேவிப்பதற்கு இட சௌகர்யம் இருந்தால்,
—சேவிக்கலாம்- கைகூப்பலாம்.
பிறகு, த்வாரபாலகர்களைத் தர்சித்து ,கைகூப்பி கர்பக்ரஹத்துக்குள் சென்று,பெருமாளைச் ஸேவிக்க வேண்டும்.. அர்ச்சனைக்கு, பழம் புஷ்பம்,கற்கண்டு இவைகளை அர்ச்சகரிடம் கொடுக்கவேண்டும். அவர், அர்ச்சனை செய்யும்போது பகவானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை
நன்கு பாதாதிகேசம் ஸேவியுங்கள். பிறகு, கேசாதிபாதம் ஸேவியுங்கள் திருவடிகளை, நன்கு மனத்தில் பதியவைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஸேவிக்கும்போது , அந்த திவ்ய தேசத்து எம்பெருமானைப் பற்றிய ச்லோகத்தை மனதுக்குள் சொல்லுங்கள்.
உதாரணமாக , திருவஹீந்த்ரபுரம் க்ஷேத்ரமாக இருந்தால்,

ப்ரணத ஸுர கிரீட ப்ராந்த மந்தார மாலா
விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த : |
பசுபதி விதி பூஜ்ய :பத்ம பத்ராய தாக்ஷ :
பணிபதி புரநாத : பாதுமாம் தேவநாத : ||

—————————
மஞ்சுலாவு சோலைசூழ் அயிந்தை மன்னு மன்னு சீர்
வரையடுத்து நிரையளித்த மாசில் வாஸுதேவனே !
செஞ்சொல் அன்பர் சிந்தைகொண்டு தீதிலாத தூதனாய்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ தெய்வநாயக
வெஞ்சொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுந்து அழிந்து நான் அயர்ந்து வீழ்வதற்கு முன்ன நீ
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அளிக்கவேண்டும் அச்சுதா
அடியவர்க்கும் அருளியக்கும் அடியவர்க்கு மெய்யனே !

———————————
பெருமாள் சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது
சுமார் 4 அல்லது 5 அடிகள் பின்னோக்கி வந்து, பிறகு திரும்புங்கள்.
ப்ருஷ்ட பாகத்தைக் காட்டக்க்கூடாது.
முன்காலத்தில்,கருடன் சந்நிதிவரை ,இப்படி வருவார்கள்.
பிறகு, குறைந்தது 4 தடவையாவது ப்ரதக்ஷணம் செய்யுங்கள். முகுந்த மாலா ( ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளியது—-நம்முடைய முன்னோர்கள்
அனுஷ்டித்தது—-)பிறகு, கருடன் சந்நிதி அருகே ஸேவித்தல் —-
எல்லாக் கோவில்களிலும், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி இருக்கும். அங்கும் ஸேவியுங்கள் தெரிந்தால் கோதா ஸ்துதி சொல்லுங்கள்.
பிறகு, வெளியே வரும்போது, த்வஜஸ்தம்பத்தின் அருகே மறுபடியும்
ஸேவியுங்கள் . புஷ்கரணிப் படித்துறை அல்லது அமைதியான இடத்தில் sarru நேரம் அமர்ந்து ,ஸேவித்த மூர்த்திகளை மனக்கண்ணில் கொண்டுவந்து தியானியுங்கள்.
அர்ச்சனைப் ப்ரஸாதமாகக் கொடுத்ததை, சிந்தாமல் எடுத்துவந்து,
பெரியவர்களிடம் கொடுத்து, அவர்களைச் ஸேவியுங்கள்
புருஷர்களுக்கு அவர்கள் கழுத்தில் சாற்றிய மாலை/ புஷ்ப சரம்
போன்றவைகளை, வீட்டில் பகவானின் படங்களுக்குச் சாற்றாதீர்கள்.
கோவில்களில் செய்யத்தகாதவை
பெருமாள் கோவில்களில் வழிபடும் முறை
———————————————————————–

-மனுஷ்யப் பிறப்பு மிக முக்கியமானது.
கூன், குருடு, செவிடு போன்ற ஹீனங்கள், உடல் சரியான வளர்ச்சி இல்லாதது,
மூளை சரியான வளர்ச்சி இல்லாதது—இப்படியெல்லாம் நேராமல்,
ஸ்ரீ வைஷ்ணவ பரம்பரையில் ராமானுஜ தாசர்களாக, ஸ்வாமி தேசிகன்
ஸம்ப்ரதாயத்திலோ, ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸம்ப்ரதாயத்திலோ
பிறப்பது மிக மிக விசேஷம்—பூர்வ ஜென்ம புண்யங்கள் அளவில்லாது
செய்திருந்ததால்தான், இந்தப் பிறவியில் , இந்த சம்பிரதாயங்களில் பிறந்து
இருக்கிறோம்.
இந்தமாதிரியான பிறவியில், நாம் இரண்டு யாத்ரைகளைச் செய்கிறோம்.
1. ஜீவன யாத்ரை
2. உஜ்ஜீவன யாத்ரை –
ஜீவன யாத்ரை என்பது, உடலை வளர்ப்பது, போஷிப்பது –அதற்கான
ஜீவனத்துக்கான படிப்பு ,பிறகு உழைப்பு,பிறகு ஸம்பாத்யம்
குடும்பத்தைக் காப்பது, உற்றார் உறவினர்களை உபசரிப்பது, ஆசார்யர்களை
உபசரிப்பது, நண்பர்களை உபசரிப்பது இப்படிப் பல –இது லௌகீகம்
உஜ்ஜீவன யாத்ரை என்பது, உயிரை–ஆத்மாவை, நல்வழி நடத்துதல்,
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சாஸ்த்ரங்களில் விதித்தபடி
, நித்ய கர்மானுஷ்டங்களைச் செய்தல், கோவிலுக்குச் சென்று வழிபடுதல்,
இப்படிப்பை பலப்பல —–
இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்ததுதான்—யாத்ரை –எல்லாருடைய
யாத்திரையும் இப்படிப்பட்டதுதான். இது ஒரு பயணம் –யாத்ரை
முதல் யாத்ரையில் ,வழியில் உழைப்பு, உணவு, குடியிருக்க இடம் ,
தண்ணீர் , ஆரோக்கியம் இப்படி
இரண்டாம் யாத்ரையில் கோவில்கள், அவை சம்பந்தப்பட்ட புராண வரலாறுகள்,
புஷ்கரணி ,உத்ஸவங்கள்,—-இப்படி
முதல் யாத்ரையில் , தாகத்துக்குத் தண்ணீர், பசிக்கு உணவு இப்படி—இதனால்,
யாத்ரை, பிறப்பு, மறுபடியும் பிறப்பு என்று சங்கிலியாகத் தொடர்கிறது.
இரண்டாம் யாத்ரையில் , துயரத்துக்கு விமோசனம், துக்கத்திலிருந்து விடுதலை—
இதற்கு பகவானுடைய கோவில்களில் தர்சனம் , அங்கு கைங்கர்யம்,
அதன் பலனால் சாத்வீக குணம், ஆச்சார்ய அநுக்ரஹம் , ஆசார்ய
உபதேசம், முமுக்ஷு நிலை, அதனால் பகவானின் க்ருபை, பிறகு மறுபிறவியில்லாமல்
அவனது திருவடி.
இவற்றுக்கெல்லாம் முதற் காரணமாக இருப்பது கோவிலுக்குப் போவது ——.
Summary—-
Please have faith in ”Vedic Astrlogy”
Vedic knowledge is more important—than reciting ”vedas”
without digesting the actual meanings
Agnihotra ,if performed according to the ”dictum”
of vedas will purify as stated above

Vaishnavas should perform

Daily—-
brahma yajgam —-after ”Deva Rishi—Khanda Rishi—
Pithru Tharpana”

samithaadanam—to be performed by ”brahmacharis”
agni santhaanam—-to be performed by ”gruhastha”
oubasanam –continuation of ”agni santhanam”

Mere studies of ”plus2” , graduation, engineering, medical, etc etc
and also westernised education are not giving any good character,
conduct, respect to elders, good behaviour etc to many people .
This is what many elite persons say in their conversations.

On the other hand,
Performing ”Samithaadanam”. ”agni santhanam” ”oubhasanam”
will give all such of those good things, besides mental balance,
wealth (Agni Santhanam, Oubhasanam) and fine behaviour
Adiyen’s submission is that next generation has to be taught
all these treasures by our Vedic Pundits convincing their parents
and also their boys to perform all these,of course
without compromising to do nithya karmas such as ”thrikala sandya”

பகவான், நமக்கு இரண்டு கால்களைக் கொடுத்து இருக்கிறான்.
ஒருகாலை ,ஜீவனத்துக்காக எடுத்துவைத்தோமானால், இன்னொருகாலை,
பகவானை அடைவதற்கான வழிக்காக எடுத்துவைக்கவேண்டும்.
இப்படி அடுத்தடுத்து, ஜீவன வாழ்க்கைக்கு ஒருகால் எடுத்துவைத்து
நடந்தோமானால், உடனே எடுத்துவைக்கும் கால் உஜ்ஜீவனத்துக்காக
இருக்க வேண்டும்.
உஜ்ஜீவனம்—-இதற்கு ,அடிக்கடி கோவில்களுக்குப் போய், பகவானைத்
தரிசிக்கவேண்டும். இது உஜ்ஜீவன வாழ்க்கையின் ஆரம்பம்.

ஆதி காலத்திலிருந்தே ,பற்பல இடங்களில்
உள்ள கோவில்கள் –இவற்றிலும் ஆழ்வார்கள் மங்களாசாஸனம் செய்த
க்ஷேத்ரங்கள் பெருமை உடையவை. அரசர்கள் அமைத்த கோவில்கள்,
ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்கள் என்று அர்ச்சாவதார எம்பெருமான்கள்
எழுந்தருளியுள்ள கோவில்கள், பிரசித்தி பெற்றவை.
நம்முடைய முன்னோர்கள், கோவில்களை நன்கு பராமரித்தார்கள்.
பூஜைகள், உத்ஸவங்கள் ஆகம முறைப்படி நடந்தன. அர்ச்சகர்கள்,
ஜனங்களின் நன்மையை உத்தேசித்து, ”ஸர்வே ஜனாஸ் ஸுகினோபவந்து”
என்று பூஜையின் முடிவில் தினமும் பகவானிடம் பிரார்த்தித்தார்கள்.

நாகரீகம் என்று ஒன்று நம்மைப் பிடித்துக்கொண்டது.
பூஜையில் ச்ரத்தை குறைந்தது.ஒழுங்கு முறையும் மறைந்துகொண்டு வருகிறது.
நல்லொழுக்கம் ,கேள்வி கேட்கும் நிலை; எங்கே என்று தேட வேண்டிய நிலை.
அதனால், பல கஷ்டங்கள் தாங்க இயலாத கஷ்டங்கள்.
கோவிலுக்குப் போவது என்பது, நாம் இஷ்டப்பட்ட சமயத்தில்தான்.
கஷ்டம் வரும் சமயத்தில்தான். துன்பத்தை அனுபவிக்கும் சமயத்தில்தான்.
சாதாரண சமயங்களில் கோவிலுக்குப் போவது, ஏதோ ”பிக்னிக் ”போல ஆகிவிட்டது .
அதுவும் கோவிலுக்குப் போவது என்பது, எப்படி வேண்டுமானாலும் போகலாம்.
எந்த டிரஸ்ஸிலும் போகலாம். எந்த சந்நிதி கண்ணில் படுகிறதோ,
அங்கு சென்று , எக்சிபிஷனுக்குப் போய்வருவதைப்போலப் போய்வரலாம்
என்கிற , நிலைமை இப்போது இருக்கிறது.
Dear Asthikas
Adiyen studied the various e-mails sent by the Srivaishnavas regarding the enforcement of “dress-code”
Adiyen submits the following ( after some hesitation) :–
Loukikas are expected to have self-discipline in this aspect. They attended upanyasams. They got “panchasamskaram”
Even most of the Srivaishnavas would have done “baranyasam”. What they derived from these?
Is it not necesarry to go to temple with ” pancha-katcham” and panniru thiruman if they are “Grahasthal’ ?
Is it not necesarry to wear ” Veishti” and have “uththreeyam” if they are bachelors besides wearing thiruman ?
Is it not their “swaroopam” to have “madisar” if the ladies are married?
Is it correct to go to temples, asramams, wedding (thirumangalya dharanam time) etc
with “Sudithar” ” nighty” etc dresses for the married ladies?
Will their inner-voice not tell them to bring into “anushtanam” what they learnt?
Why the loukikas should not take vasthrams and “thiruman petti” along with other dresses ,
phaste brush mirror etc etc when they come to Chennai or other places on official duty,
if they have a mind to offer pranams to Acharyan who is in sancharam there?
When these loukikas observe certain norms, silence, principles during the official meetings etc,
why they should not give such of these codes in to effect when they attend and receive ” Theertham ”
” SAtari ” ” prasadam ” etc in temples, Asramams etc
Adiyen is pained to see the behaviour of some of our sampradaya asthikas,
when adiyen attends marriage functions, temple uthsavams, sancharams of our matathipathis etc.
There is neither conduct nor code( adiyen expressing all these in the writings, books etc )
Dear Srivaishnavas
The future of our “Sri Desika Sampradayam” is in your hands.
It is your duty to hand them over fully to your next generation without pollution

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது
ஆகம விதிகளின்படி மிகப் பழைய காலத்தில், அரசர்களால் கட்டப்பட்ட எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்
கோயில்களுக்கு மட்டும் தான் இது.

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின்
சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள்,
மலைகள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.
கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்.
இது நார்த் போல், சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில்
வீற்றீருக்கும்.
அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே
அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி.
இந்த மூலஸ்தான எம்பெருமான் சுயம்பூவாக இருக்கலாம்/ மஹரிஷிகள் பிரதிஷ்டை செய்ததாக
இருக்கலாம்.
அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள்
பதிக்கப்பட்டிருக்கும் அது தான், கீழே இருக்கும் அந்த எனர்ஜியை
அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
எல்லா கர்பகிரஹங்களும் மூன்று பக்கங்களும் மூடி,
வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.
இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் வாசல் வழியாக
அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து எம்பெருமானை
வணங்கும் ஸேவார்த்திகளுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.
இது உடனே தெரியாமல் இருக்கும்
ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஸேவார்த்திகளுக்கு இது தெரியும்
ப்ரதக்ஷணம் — கோயிலின் பிரகாரத்தை வலம் வரும் காரணம் —–
எனர்ஜியின் சுற்று பாதை இது தான்
அதனால் தான் கர்பகிரஹத்தை ப்ரதக்ஷணம் செய்யும்போது, அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட
சேர்ந்து அப்படியே நமது உடம்பில் வந்து சேரும்.
இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும்
மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜியைக் கொடுக்கிறது.
.
கர்பகிரஹத்தில் ஒரு விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும்
அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும், மணி ஸேவிக்கும்போதும்
அங்கே செய்யப்படும் திருமஞ்சனம் முதலியவை
அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு
அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் கர்பகிரஹம்
.
இவ்வளவு திருமஞ்சனம் , கர்ப்பூர நீராஜநம் , தூங்கா விளக்கு எரிதல் இவற்றை,
ஒரு 10க்கு 10 ரூமில் செய்து பார்த்தால் இரண்டே நாளில் அந்த இடம்
சாக்கடை நாற்றம் எடுக்கும். ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும்
எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம்,
மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு த்ரவ்யங்களைக் கொண்டு
திருமஞ்சனம் செய்தாலும் இந்த இடத்தில் கெட்ட வாஸனையே இராது.
இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கச்செய்யும் . பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்),
துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து
அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும்
அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.
இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம்.
இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் — நோய் தடுப்பு
இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் நமது உடம்பை/உள்ளத்தைப் பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும்
ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான்
இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும்
ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.
கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு
எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும்
மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம்
அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து
அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான்
கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும்
அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது
உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.
கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும்
இது தான் முக்கிய காரணம்
அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள்
உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும்
காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை
வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால்
அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம்.
இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள்
இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட்.
எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும்
அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும்,
ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும்
சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு
ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம்.
கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான்
ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம்
கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி
ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும்
இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம்
ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.
இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து
ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.
நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின்
உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில்
கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.
கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும்
இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே
உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள்
நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

நமது முன்னோர்கள், இந்தமாதிரியெல்லாம் இல்லை. கோவிலுக்குப் போவதை,
நித்ய கடமைகளாக ஏற்படுத்திக்கொண்டார்கள். வாழ்க்கையில் நிம்மதியாக
இருந்தார்கள்.
இப்போது இந்த விஷயங்களை , நமது முன்னோர்கள் அனுசரித்த விஷயங்களை,
முக்கியமாக ஸ்நானம், கோவிலில் நடந்துகொள்ளும் முறை
இவைகளை சுருக்கமாகப் பார்க்கலாம் .
முதலில் ஸ்நானம்—–
ஆறுகளில், குளங்களில், வீட்டில் ஸ்நான முறைகள்
வீடு, குளம், ஆறு, சமுத்திரம்
பெண்கள்—-மாதாமாதம், வீட்டில் குளித்து விட்டு, கோவிலுக்குப்
போவது அவ்வளவு சுத்தமில்லை—-குலங்களிலாவது, நதியிலாவது ஸ்நானம்
செய்ய வேண்டும்.

வஸ்த்ரம்
மடி வஸ்த்ரம் நல்லது—–இப்போது வண்ணார மாடி என்கிறார்கள் –சரியல்ல
கல்யாணம் ஆனவர்கள், கச்சம் வைத்து உடுத்திக்கொள்ள வேண்டும்
அங்க வஸ்த்ரம் அவச்யம்
மேல் சட்டை, பனியன் வேண்டாம்
கல்யாணமான பெண்கள்–ஒன்பது கஜப் புடவை—

நெற்றிக்கு இட்டுக்கொள்ளுதல்
பன்னிரு திருமண் –ஸமாச்ரயணம் ஆனவர்கள்—
குறைந்த பக்ஷம் ,நெற்றியில் ”திருமண் –ஸ்ரீசூர்ணம் ”

ஸந்த்யாவந்தனம் , ஜபம், ஆத்துப்பெருமாளின் அனுமதியுடன்
கோவிலுக்கு
கோவில்
தினந்தோறும் செல்லும்போது, ஒவ்வொரு சந்நிதிக்கும்
உபகாரங்கள் எடுத்துச் செல்வது—-
மிகவும் இடைவெளி விட்டுப் போகும்போது ,
தாயார், பெருமாள் சந்நிதிக்கு உபகாரங்கள்–வசதிக்கு ஏற்ப—-
பிளாஸ்டிக் வேண்டாம்—துணியில் வேண்டாம்–மரத்தட்டில்—

வீட்டுக்கு மிக அருகில் இருந்தால், நடந்து செல்வது—காலில் செருப்பு இல்லாமல்–
ஏதாவது ஒரு ஸ்தோத்ரம் சொல்லிக்கொண்டே நடந்து செல்வது
ஊர் வம்பு பேசாமல்—
கோவிலுக்குச் சென்றதும்—-
புஷ்கரணி இருந்தால், படிக்கட்டில் இறங்கி ,முதலில் காலை தீர்த்தத்தில்
வைக்காமல், மேல்படியில் நின்றுகொண்டு ,புஷ்கரணி தீர்த்தத்தை வலது
உள்ளங்கையில் எடுத்து தலையில் புரோக்ஷித்துக்கொள்ளவேண்டும் ,
பிறகு, ,புஷ்கரணியில் இறங்கி கை கால்களை சோதித்து ,ஆசமனம்
த்வஜஸ்தம்பத்துக்கு அருகில் ,அதன் வலது (வடப் ) பக்கம் ,நான்கு தடவையாவது
சாஷ்டாங்கமாக ஸேவிக்கவேண்டும் .
ஆசார்யன் சந்நிதி ,ஸ்வாமி தேசிகன் சந்நிதி ஸ்ரீ உடையவர் சந்நிதி , ஆழ்வார்கள்
சந்நிதி என்று இப்படிக் க்ரமமாக சேவிக்கவேண்டும்.
உங்களுக்குத் தெரிந்தால், அந்தந்த ஆழ்வார்களின் தனியன்/ வாழித் திருநாமம்
ஸம்ஸ்க்ருதமோ ,தமிழோ சொல்லலாம்.
உதாரணமாக , ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில்,
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்
ஸர்வம் யதேவ நியமேன மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந :குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||

——————–
திருவழுதி நாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினிய வண்பொருநல் என்றும்—அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய் நெஞ்சே ! தெரிந்து
இவைகளை சொல்லலாம்.
ஸ்ரீ உடையவர் சந்நிதியாக இருந்தால்,
யோநித்ய மச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாய மேனே |
அஸ்மத்குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ :
ராமாநுஜஸ்ய சரணெள சரணம் ப்ரபத்யே ||

—————————-
முன்னை வினையகல மூங்கிற்குடி அமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும் —என்னுடைய
சென்னிக்கு அணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு
என்னுக் கடவுடையேன் யான்
——————————————–
நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதன்றி நண்ணினர்பால்
சயந்தரு கீர்த்தி இராமாநுசமுநி தாளிணைமேல்
உயர்ந்த குணத்துத் திருவரங்கத்து அமுது ஓங்கும் அன்பால்
இயம்பும் , கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே !
—————————-
சொல்லின் தொகை கொண்டு உனதடிப்போதுக்குத் தொண்டு செய்யும்
நல்லன்பர் ஏத்தும் உன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம ! இராமாநுச ! இதென் விண்ணப்பமே .

——————————
ஸ்வாமி தேசிகன் சந்நிதியில்
ராமாநுஜதயாபாத்ரம் ஜ்ஞாந வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

——————————
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழமொழியுள் —–ஓரொன்று
தானேயமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு

—————————–

பிறகு தாயார் ஸந்நிதி
ப்ராகாரத்துக்கு வெளியே 4 தடவையாவது ஸேவியுங்கள்
த்வாரபாலகர்களைப் பார்த்து, கை கூப்பி, தாயார் ஸந்நிதிக்குள் செல்லுங்கள்.
தாயாரை—ஸ்ரீ லக்ஷ்மி ஸ்தோத்ரம்/ ஸ்ரீஸ்துதி சொல்லி ஸேவியுங்கள்
அர்ச்சகர், அர்ச்சனை செய்யும்போது, தாயாரைக் கண்ணாரத் தரிசியுங்கள்.
தாயாரின் இடது திருக்கரம் –நம்மை வரவேற்கிறது—-
வலது திருக்கரம் அநுக்ரஹிக்கிறது
கற்பூரஹாரத்தியின்போது ,தாயாரின் ப்ரஸன்ன வதனம், –புன்சிரிப்புத்
திருமுக மண்டலம், —நன்கு ஸேவியுங்கள் .
தீர்த்தம் , சடாரி ,மஞ்சக்காப்பு ,குங்குமம் —ப்ரஸாதங்கள் —இவைகளைப்
பணிவுடன் பெற்றுக்கொள்ளுங்கள்

1. கந்தர்வ ஸ்திரீகள் , பூலோகத்தில் பிராட்டிக்கு அர்ச்சனை செய்தார்கள்.
அவர்கள் உலகம் போகபூமி. பகவானை ,தாயாரை அர்ச்சிக்க ,இங்குதான்
வந்தாகவேண்டும்.. அப்படி அர்ச்சிக்கும்போது,பிராட்டியின் திருவடியில்,
மாலையை சமர்ப்பித்து , “மெட்டி தேவி ” முழுகும் அளவுக்கு
புஷ்பங்களாலும் , குங்குமத்தாலும் அர்ச்சித்தார்கள். பிறகு, இந்தப்
பிரசாதங்களை எடுத்துக்கொண்டு,கொண்டு ,அவர்களுடைய உலகத்துக்குத்
திரும்பிக்கொண்டிருந்தபோது , துர்வாசர் எதிரே வந்தார்.
இவரைப் பார்த்ததும், கந்தர்வ ஸ்திரீகள் பயந்தார்கள் .துர்வாச மஹரிஷி
ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் —என்கிற பயம் .
“உங்கள் கையில் இருப்பது என்ன ? ” துர்வாசர் கோபத்துடன் கேட்டார்.
“தாயாருக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை எடுத்து வருகிறோம் ”
என்று பணிவுடன் சொன்னார்கள்.
” கொடுங்கள் ” என்று சொல்லி, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டார்.
“தந்யோஸ்மி—நாங்கள் போகிறோம் ” என்று கந்தர்வ ஸ்திரீகள் சொல்ல,
துர்வாசர் புன்னகைத்துத்தலையசைத்தார் . தாயாரின் மெட்டியின் அனுக்ரஹ
ப்ரசாதம் கையில் இருந்ததால், கோபம் வரவில்லை. இதை எங்கே
வைக்கலாம் ,யாருக்குக் கொடுக்கலாம் என்று யோசித்தபோது, எதிரே
ஐராவதம் என்கிற பட்டத்து யானையின்மீது, இந்திரன் பவனி வந்து
கொண்டிருந்தான் . ஜன்மதின உத்ஸவம்.

பிரசாதம் இவனுக்குத் தகும் என்று நினைத்து, “இந்த்ரா –இந்த்ரா –”
என்று கூப்பிட்டார் . இந்த்ரனிடம் “மஹாலக்ஷ்மி ப்ரசாதம் –ஸ்வீகரி–”
யானைமீதிருந்த இந்த்ரன் , யானையைக் குத்தும்ஈட்டியைக் கீழே
நீட்டினான். துர்வாசருக்கு வந்த கோபம் நொடியில் மறைந்தது.
பிரசாதம் ,அவர் கையிலிருந்து இந்த்ரனுக்குப் போய் , இந்த்ரன்
பிரசாதத்துக்கான மரியாதையைக் கொடுக்காததால், பிரசாதம்
இவர் கையை விட்டு அகன்றதும் , கோபம் கொப்பளிக்க , சபித்தார்.

2. எந்தப் பரமபதம் ,ஒரு பக்தனுக்கு,மனதிற்குக்கூட எட்டாத தொலைவில்
உள்ளதோ, எது மூலப்ரக்ருதிக்கு அப்பாற்பட்டதோ , எந்த இடம் மிக மிக
வியக்கத்தக்கதோ, எந்தத் திருநாடு ,எந்தக் காலமாறுபாட்டுக்கும்
உட்படாததோ , மாறுபாடு அடையாததோ ,எந்தத் திவ்யதேசத்துக்குச்
செல்பவனுக்கு , தேவர்கள் நகரமான அமராவதி, சிவனின் கைலாசம் ,
ப்ரஹ்மலோகம் — இவை நரகமோ , எந்த இடம் பகவானுக்கு ஒத்ததோ ,
எது அடியேன் கற்பனைக்கும் , சொற்களுக்கும் எட்டாததோ ,
அந்த ஸ்ரீவைகுண்டம் என்கிற பரமபதத்தை , பிராட்டியின் ப்ரஸாதம்
கொடுத்துவிடும்.

3. தைத்த்ரீயத்தில் ஒரு செய்தி—–
கூர்மாவதாரம் செய்து, உலகைத் தாங்கி வருகின்ற பரமபுருஷனை
ப்ரஹ்மா கேட்டாராம்
” நான் இதுவரை ச்ருஷ்டித்தவைகளில் , உம்மைப்போல் யாரையும்
சிருஷ்டிக்கவில்லையே –நீர் யார் ? ”
அதற்குப் பகவான்,
நான் சிருஷ்டிக்கும் அப்பாற்பட்டவன் –உன்னையும் சகல சேதன ,
அசேதனங்களையும் , ஸ்ருஷ்டித்தவன் — ” என்றாராம்
இதற்கு நிரூபணம் ,எம்பெருமானின்
திருமார்பில் நித்ய வாஸம் செய்யும் பிராட்டிதான் !

பிறகு பெருமாள் சந்நிதி
கருடன் சந்நிதிக்கு அருகில், ஸேவிப்பதற்கு இட சௌகர்யம் இருந்தால்,
—சேவிக்கலாம்- கைகூப்பலாம்.
பிறகு, த்வாரபாலகர்களைத் தர்சித்து ,கைகூப்பி கர்பக்ரஹத்துக்குள் சென்று,பெருமாளைச்
ஸேவிக்க வேண்டும்.. அர்ச்சனைக்கு, பழம் புஷ்பம்,கற்கண்டு இவைகளை அர்ச்சகரிடம்
கொடுக்கவேண்டும். அவர், அர்ச்சனை செய்யும்போது பகவானின் திவ்ய மங்கள விக்ரஹத்தை
நன்கு பாதாதிகேசம் ஸேவியுங்கள். பிறகு, கேசாதிபாதம் ஸேவியுங்கள் திருவடிகளை, நன்கு மனத்தில்
பதியவைத்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஸேவிக்கும்போது , அந்த திவ்ய தேசத்து எம்பெருமானைப் பற்றிய ச்லோகத்தை மனதுக்குள்
சொல்லுங்கள்.
உதாரணமாக , திருவஹீந்த்ரபுரம் க்ஷேத்ரமாக இருந்தால்,
ப்ரணத ஸுர கிரீட ப்ராந்த மந்தார மாலா
விகளித மகரந்த ஸ்நிக்த பாதாரவிந்த : |
பசுபதி விதி பூஜ்ய :பத்ம பத்ராய தாக்ஷ :
பணிபதி புரநாத : பாதுமாம் தேவநாத : ||

—————————
மஞ்சுலாவு சோலைசூழ் அயிந்தை மன்னு மன்னு சீர்
வரையடுத்து நிரையளித்த மாசில் வாஸுதேவனே !
செஞ்சொல் அன்பர் சிந்தைகொண்டு தீதிலாத தூதனாய்
தேருமூர்ந்து தேசுயர்ந்த செல்வ தெய்வநாயக
வெஞ்சொலாளர் காலதூதர் வீசு பாசம் வந்தென்மேல்
விழுந்து அழிந்து நான் அயர்ந்து வீழ்வதற்கு முன்ன நீ
அஞ்சல் அஞ்சல் அஞ்சல் என்று அளிக்கவேண்டும் அச்சுதா
அடியவர்க்கும் அருளியக்கும் அடியவர்க்கு மெய்யனே !

———————————
பெருமாள் சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது
சுமார் 4 அல்லது 5 அடிகள் பின்னோக்கி வந்து, பிறகு திரும்புங்கள்.
ப்ருஷ்ட பாகத்தைக் காட்டக்க்கூடாது.
முன்காலத்தில்,கருடன் சந்நிதிவரை ,இப்படி வருவார்கள்.
பிறகு, குறைந்தது 4 தடவையாவது ப்ரதக்ஷணம் செய்யுங்கள். முகுந்த மாலா
( ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அருளியது—-நம்முடைய முன்னோர்கள்
அனுஷ்டித்தது—-)பிறகு, கருடன் சந்நிதி அருகே ஸேவித்தல் —-
எல்லாக் கோவில்களிலும், ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி இருக்கும். அங்கும் ஸேவியுங்கள்
தெரிந்தால் கோதா ஸ்துதி சொல்லுங்கள்.
பிறகு, வெளியே வரும்போது, த்வஜஸ்தம்பத்தின் அருகே மறுபடியும்
ஸேவியுங்கள் . புஷ்கரணிப் படித்துறை அல்லது அமைதியான இடத்தில்
நேரம் அமர்ந்து ,ஸேவித்த மூர்த்திகளை மனக்கண்ணில் கொண்டுவந்து
தியானியுங்கள்.
அர்ச்சனைப் ப்ரஸாதமாகக் கொடுத்ததை, சிந்தாமல் எடுத்துவந்து,
பெரியவர்களிடம் கொடுத்து, அவர்களைச் ஸேவியுங்கள்
புருஷர்களுக்கு அவர்கள் கழுத்தில் சாற்றிய மாலை/ புஷ்ப சரம்
போன்றவைகளை, வீட்டில் பகவானின் படங்களுக்குச் சாற்றாதீர்கள்.
கோவில்களில் செய்யத்தகாதவை
உடம்பை வஸ்த்ரத்தால் மூடிக்கொண்டு ,சந்நிதிகளில் ஸேவிக்கக்கூடாது
அப்படிச் செய்தால் குஷ்ட ரோகம் வரும்.
கோவிலுக்குள், நகம், மயிர், எலும்பு இவைகளை எறியக்கூடாது.
அப்படிச் செய்தால் ”;ஈ ” யாகப் பிறவி
கோவிலுக்குள் எச்சில் துப்பக்கூடாது; காரி உமிழக்கூடாது.
அப்படிச் செய்தால், ”ஸ்லேஷ்மதகம்” என்கிற மரமாகப் பிறவி
மலம் கழித்தால், மலப்புழுவாகப் பிறவி
சிறுநீர் கழித்தால், நரகத்தில், தலைகீழாக விழ நேரிடும்
தாம்பூலத்தைத் துப்பினால், நாயாகப் பிறவி
மலஜலம் கழித்தால், பன்றியாகப் பிறவி.
கோவிலுக்குள் தூங்கினால், நீரில்லாத காட்டில் தனி மரம்.
ஈரவேஷ்டியுடன் கோவிலுக்குள் போகக்கூடாது ( அங்கப் ப்ரதக்ஷண சமயம் தவிர)
ஒற்றைத் துணி கூடாது.
கறுப்புத் துணி அணியக்கூடாது.
ஊர்வம்பு பேசக்கூடாது.
தெய்வ நிந்தனை கூடாது.
தற்புகழ்ச்சி கூடாது.
பகவான் பக்கமாக, காலை நீட்டக்கூடாது.
பகவானுக்குப் பின்பக்கத்தைக் காட்டிக்கொண்டு அமரக்கூடாது
திருமண் ,சங்கு சக்ரம் உள்ள உத்தரீயத்தை இடுப்பில் கட்டக்கூடாது
(பிருஷ்ட பாகத்தில் படுகிறது )
பகவானுக்கு நெய்வேத்யம் செய்யாதவற்றைச் சாப்பிடக்கூடாது.
பூஜைக்கு விலக்காக உள்ள புஷ்பங்களை, அர்ச்சகரிடம் கொடுக்கக்கூடாது.
ச்ராத்த தினத்தில் கோவிலுக்குப் போகக்கூடாது.
ப்ரேதம் சுமந்த தினத்திலும் போகக்கூடாது.
பகவத் ஸ்மரணம் அவச்யம்

images

About the Author

Leave A Response