Soundararajan Desikan
23 December 2015 ·
ப்ரணவம்
————————-
1.”அ ” எழுத்தானவன் அவனே அச்சுதன்
அடியினைப் பணி மனமே
2. ‘உ ” எழுத்தானவன் உயர்ந்தவன் அவனே
உருகினால் மனத்தினில் உறைவான்
3. “ம ” எழுத்தானவன் மலர்மிசை உறைபவன்
மலர்ந்திடும் மனமே அவனால்
4. “அ உ ம” வைச் சேர்த்தால் இருப்பானங்கே
அதுவே “ஓம் ” எனும் ப்ரணவம்
5. “அ ” வே திருமால், “உ ” வே திருமகள்
அவளே மார்பில் உறைபவள்
6. “ம ” வே ஆத்மா,ஜீவன் என்பர்
மூன்றும் சேர்ந்தது ப்ரணவம்
7. “ஓம் ” எனும் சொல்லே ஓங்காரமாகும்
நாமம் இதைத் தொடரும்
8. “ஓம் ” எனும் சொல்லே மந்திரமாகும்
ஓயாது சொல்லின் வளமாகும்
9. “ஓம் ” சொலல் மிகவும் உத்தமமாகும்
உத்தமர் ஆடவர்கட்கே
10. இந்தச் சொல்லே “அம் ” எனவாகும்
ஏந்திழை சொல்லப்போகின்