திருப்பாவை —ஒவ்வொரு பாசுரமும் உணர்த்துவது என்ன ?
திருப்பாவை உபந்யாஸத்தில் ,உபந்யாஸகர்கள்
( அடியேன் உட்பட ) ஒவ்வொரு பாசுரத்துக்கும் வ்யாக்யானம் சொல்லும்போது ,நிறைவாக
‘ஸ்வாபதேசம் ”—-அந்தப்பாசுரத்தின் உட்பொருள் –உள்ளர்த்தம் –சொல்வது மரபு.
இந்த ”ஸ்வாபதேசம்” என்பதை ,ஓரிரு வார்த்தைகளில் சொல்வதென்றால்,சொல்லலாம்—ஆனால், அதைப் புரிந்துகொள்ள , ஸம்ப்ரதாயம் நன்கு
தெரிந்திருக்க வேண்டும். அல்லது, ஆசார்யன், அதற்கான உட்பொருளை விளக்க வேண்டும்.
அந்த ஓரிரு வார்த்தைகள் இதோ—–
1. மார்கழிக்கு…..ப்ராப்ய, ப்ராபகம்.
2. வையத்து……. க்ருத்ய அக்ருத்ய விவேகம்.
3. ஓங்கி…….திருநாம சங்கீர்த்தனம்.
4. ஆழிமழை……பாகவத ப்ரபாவம்.
5. மாயனை……வித்யா ப்ரபாவம்.
6. புளளும்…….அர்ச்சாவதாரம்.
7. கீசுகீசு…….சேஷத்வ ஞானம்.
8. கீழ்வானம்……பாரதந்த்ர்யம்.
9. தூமணிமாடம்……. பாரதந்த்ர்யம்.
10. நோற்று……ஸித்த தர்மம்.
11. கற்று…….அநுஷ்டானம்.
12. கனைத்திளம்……அநுஷ்டானம்.
13. புள்ளின்வாய்……ஸ்வரூப ஞானம்.
14. உங்கள்…….ஆத்மகுண பூர்த்தி.
15. எல்லே……பாகவத ஸ்வரூபம்.
16. நாயகனாய்…….ஆசார்ய ப்ரபாவம்.
17. அம்பரமே…..ஸ்வகத ஸ்வீகாரம்.
18. உந்து…..பிராட்டி.
19. குத்துவிளக்கெரிய …புருஷகார.
20. முப்பத்துமூவர்…..வைபவம்.
21. ஏற்ற கலங்கள் ….ஸ்வரூபக்ருத தாஸ்யம்.
22. அங்கண்மா…..அநந்யார்ஹ சேஷத்வம்.
23. மாரிமலை……பகவத் க்ருபை.
24. அன்றிவ்வுலகம்….. மங்களாசாஸனம்.
25. ஒருத்தி…….தத்வ த்ரயம்.
26. மாலே…..ஸாரூப்யம்.
27. கூடாரை ….ஸாயுஜ்யம்
28. கறவைகள் …ப்ராபகம் (உபாயம்)
29. சிற்றஞ்சிறு……ப்ராப்யம் (உபேயம்)
30. வங்கக்கடல்…..பலச்ருதி.
ஒவ்வொரு பாசுரமும், படிக்கப் படிக்க, கேட்கக் கேட்க, புதுப் புது அர்த்தங்களை , அவரவர் பாண்டித்யத்துக்கு ஏற்ப வாரி வழங்கும்.பூர்வாசார்யர்கள் அருளியுள்ள நெறியை மீறாமல், அர்த்தங்கள் சொல்ல வேண்டும். ஸம்பிரதாய மீறல் கூடாது.
வெள்ளத்தனையது மலர் நீட்டம் —-என்று திருவள்ளுவன் சொன்னதை போல, உபந்யஸிப்பவர்களின் பாண்டித்யம் இதில் வெளிப்படும். ஆனால், இது பாண்டித்யத்தை வெளிப்படுத்தும்
”சதஸ்” அல்ல.
திருப்பாவைப் பாசுரங்களை ,உபந்யாஸத்தில்
கேட்டு அநுபவிப்பவர்கள், ஸ்ரீ ஆண்டாள் பிராட்டியின்
அழகுத் தமிழை, பிராட்டியார் கூறிய பக்திச் சுவையை , இதயத்தில் ஏற்றி, அவர்களும் அந்த ஆனந்த அநுபவத்தைப் பெற விரும்புவர் அதனால்தான் , ஒரு பாசுரத்தையும் அடுத்த பாசுரத்தையும் அர்த்தங்களால் இணைத்து, முப்பது பாசுரங்கள் என்கிற மலர்களைப்
பக்தி என்கிற வாழை நாரால் தொடுத்து, வாசமிகு மாலையாக அரங்கனுக்குச் சூட்டி இருக்கிறாள்.
உபந்யாஸகர் , மிகுந்த ஈடுபாட்டுடன் ,கோதை நாச்சியாரிடம் அத்யந்த பக்தியுடன் ,அர்த்தங்களை சொல்லும்போது, கேட்பவர்கள் ஒவ்வொருவரும்
தாங்களே ,அந்த வாசமிகு மாலையைச் சூட்டுவதாக உணர்வர்
இப்படி உணர்வதை ,கேட்பவர் மனத்தில் ஏற்படுத்துபவர் ,எந்த உபன்யாஸகரோ , அவர் பாராட்டப்படவேண்டும்.
—
Sarvam Sree Hayagreeva preeyathaam
See Translation