இருந்தும், கிடந்தும்,நின்றும்—–
பரமபதத்தில் இருந்தான்—அமர்ந்தான்
(அமர்ந்த –உட்கார்ந்த திருக்கோலம் )
எம்பெருமான் —பரமாத்மா—
நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள்—
அவனது குழந்தைகள்—-
நமது இருப்பிடமான, பரமபதத்தை விட்டு , பூலோகத்தில்
பரிதவிக்கிறோம்.மேலும், மேலும், பல எண்ண இயலாத
ஜென்மங்களை இங்கு எடுத்து, இதுவே பரம சுகம் என்று உழல்கிறோம்.
சேதனர்களாகிய —ஜீவாத்மாக்களாகிய –நம்மை, அவனது குழந்தைகளைத் திரும்பவும் தன்னிடத்துக்கு அழைத்துக்கொள்ள, அறிவைக் கொடுத்தும் ,
கைங்கர்யம் செய்ய அவயவங்களைக் கொடுத்தும் ,சாஸ்த்ரங்களைக் கொடுத்து அவற்றைத் தெளிய இந்த்ரியங்களைக் கொடுத்தும்,
சமித்தைத் தறிக்கக்கொடுத்த கத்தியின் மூலம் பசுவின் வாலைத் துணிப்பாரை ப் போலும்,
வயலில் களையெடுக்கக் கொடுத்த கோலைக்கொண்டு கண்களைக் கிளறிக்கொள்வாரைப் போலும்,
ஆற்றைக் கடக்கக்கொடுத்த தெப்பத்தை ,ஆற்றுப்போக்கிலே விட்டு, கடலில் புகுவாரைப் போலும்,
சேதனர்களாகிய நாம்,
இவ்வுலக விஷய லாவண்யங்களில் ஈடுபட்டு இருப்பதால் , வருந்தி,தனது வாத்ஸல்யாதி குணங்களைக் காட்டி, நம்மை வாரிப் பிடித்துப் போகத்
தானே மத்ஸ்ய ,கூர்ம, வராஹ என்று பற்பல அவதாரங்கள் எடுத்தும் ,நாம் அவரைக் கிட்டாமல் இருப்பதைக் கண்டு மேலும் வருந்தி,
மானைக் காட்டி மானைப் பிடிப்பாரைப் போல,
ராம பிரானாகவும் க்ருஷ்ணனாகவும் அவதரித்தார்.
ஜீவாத்மாக்களாகிய நாம், இவரை ஸர்வ சக்தன், ஸர்வ பந்து என்று அறியாமல் நின்றோம்
.
எம்பெருமான் ,தனது சொத்தாகிய நம்மை ,எப்படியும் திரும்பப் பெற்றுக்கொள்ள வேணும் என்கிற
ஆர்வத்தில், சர்வ ப்ரகாரத்தாலும் –எல்லா விதங்களிலும் இவர்களுடன் கலந்து இருந்து இவர்களை மீட்க வேணும் என்று தீர்மானித்து, தன்னுடைய ”தேவி, பூஷண ஆயுதங்களையும் வைநதேயன், ஆதிசேஷன் போன்ற நித்ய ஸூரிகளையும் எல்லா வர்ணத்திலும் ( ஜாதி)
பிறப்பித்து,நம்மை ஆத்ம உத்தாரணம் செய்யச் சொல்ல,
அவர்களும்,ஆழ்வார்களாக அவதரித்து நம் போன்ற ஜீவாத்மாக்களை த் திருத்தி நல்வழிப்படுத்த
முயன்றார்கள்.
சேதனர்களாகிய நாம், அவர்கள் பிடியில் அகப்படாமல் திமிறியோட ,ஆழ்வார்கள், இங்கிருக்கும் நம்முடன் கூடி வாழ வெறுப்பு அடைந்துத் , திரும்பவும் வைகுந்தம் ஏகினர்
எம்பெருமான் திருவுள்ளம் தளர்ந்தானில்லை–
நம்மாழ்வார் முதற்கொண்டு, ஆசார்ய பரம்பரை என்னும் ஸ்வர்ண ,ரத்ன ஹாரத்தில் மத்தியில் இருக்கும் ஒளி வீசும் ரத்னமாக ஸ்ரீ பாஷ்யகாரரையும் ,ஹாரத்தின் அடியில் ரத்னப் பதக்கமாக ஸ்வாமி தேசிகனையும் ——-
இப்படிப் பல ஆசார்யர்களை இவ்வுலகில் அவதரிப்பிக்கச் செய்து,அவர்கள் மூலமாக, –அவர்களின் அநுஷ்டானம் , நியமம், க்ரந்த வ்யாக்யானம்,உபதேசம் இவற்றையெல்லாம் செய்யச் சொல்லியும் ,
சேதனர்களாகிய நாம் உண்டியே—உடையே –உல்லாசமே என்று பொழுதைக் கழித்து ,
மறுபடியும் மறுபடியும் இந்த பூமியில் பிறப்பதைக் கண்டு திருவுள்ளம் உருகினான் .
பரமபதத்தில் அமர்ந்தான் (இருந்த திருக்கோலம் )
சேதனர்களாகிய நம்மை , அவன் குழந்தைகளை— எதிர்பார்த்து ,பரமபதத்தில் அமர்ந்தான்.
ஆழ்வார்களுக்கும் ,ஆசார்யர்களுக்கும் , இவ்வுலகில்,தலையைக் காட்டுவதும் ,மறைந்து ஓடுவதுமாக இருந்தோம். நம்முடைய நித்ய ாசஸ்தலம் ”பரமபதம்” என்று தெளிந்தோமில்லை.
நம் குழந்தைகள், இங்கு வரவில்லையே என்று எண்ணி, திருப்பாற்கடலுக்கு வந்தான்
திருப்பாற்கடலில் கிடந்தான்
திருப்பாற்கடல் ,தேவர்கள், ப்ரஹ்மா, ருத்ரன் இப்படி எல்லோரும் வந்து கூப்பாடு போடும் இடம்.
அவர்களின் கஷ்டங்களை எடுத்துரைக்கும் இடம் .
பகவான், கூப்பாடு கேட்கும் இடம்.
இந்த இடத்தில் கிடப்போம் ( சயன திருக்கோலம் ) இங்கே, நமது குழந்தைகள் ஆசார்யர்களின்
நல்வார்த்தைகளைக் கேட்டு வருகிறார்களா என்று பார்ப்போம் என்று திருப்பாற்கடலில் கிடந்தான்.
சேதனர்களாகிய நாம் இங்கு வரவில்லை.
உலகங்களை எல்லாம் இயக்குபவன்; சர்வ வ்யாபி: பரந்து எங்கும் கரந்து உறைந்தவன் ;
அனைத்துக் கல்யாணகுணங்களும் நிரம்பியவன் : ஆயிரமாயிரம் திருநாமமுடையவன் :
கருணா ஸாகரம் : அப்படிப்பட்டவன் க்ஷீர ஸாகரத்தில் கிடந்தும் ,சேதனர்களாகிய நாம்,கிட்டே கூடப் போகவில்லை
யோசித்தான் —– நாம் சர்வ வ்யாபி; பரந்து எங்கும் கரந்து உறைந்தாலும், ஸ்வயம்வக்த க்ஷேத்ரங்களிலும் , ஆழ்வார்கள் ,தேடித்தேடி மங்களாசாஸனம்
செய்த திவ்ய தேசங்களிலும், சேதனர்களுக்கு ( நாம்தான்)—அவர்கள் ஸேவிக்க வரும்போது,
நமது அர்ச்சாரூப,திவ்யமங்கள ஸ்வருபத்தை ஸேவிக்கச் செய்து, உங்களால், நம்மை ஒழிக்க ஒழியாது;எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் உற்றவன் ;
மற்ற காமங்களை விடு என்று நமது ஸௌசீல்ய , ஸௌலப்ய—-இத்யாதி குணங்களைக்
காட்டுவோம் என்று திருவுள்ளம் பற்றினான்.
—— ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவான பகவானுக்கும் உள்ள இந்தஒழிக்க ஒழியா உறவு ——–
ஸாளக்ராமத்தில் —–வந்து நின்றான்—–
இந்தச் செய்தி இன்னும் வளரும்