Posted on Jan 2 2017 - 5:35am by srikainkaryasriadmin
|
Categorized as
1183

கலியும் , காலனும் .

லௌகீகமும், வைதிகமும்
——————————————–

ப்ராம்மணர்களுக்கு ,லௌகீகமும், வைதிகமும்கலந்ததுதான் வாழ்க்கை.
வைணவர்களுக்கும் இப்படியே.
லௌகீகமாக ,உத்யோகத்திலோ வேறு சொந்தத் தொழிலிலோ இருப்பவர்கள்,
நல்லது கெட்டது எல்லாவற்றுக்கும் வைதீகர்களை நாடுகிறார்கள்.
வீட்டில் நடைபெறும் சிறிய சுபச் சடங்கு முதல், கல்யாண மண்டபங்களில்
நடைபெறும் விவாஹம், சஷ்டியப்த பூர்த்தி, எல்லாவற்றுக்கும்,
வைதீகர்கள் தேவை.
வைதீகர்களுக்கும் , கோவில் கைங்கர்யபரர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்—
லௌகீகர்கள் இப்படி ஆதரித்தால்தான் ,வருமானம்.
குடும்பத்தை நடத்த முடியும்.
லௌகீகர்களிடம் , குடும்பத்துக்கு தேவையான gas , ரேஷன் கார்டு ,
சில சர்டிபிகேட்டுகள் இப்படியாக அலைய வேண்டியிருக்கிறது.
அப்போது,லௌகீகர்கள் ”கை ” ஓங்கிவிடுகிறது.
வைதிகர்களும்,கோவில் அர்ச்சகர் போன்றவர்களும், , நாம்தானே எல்லா
வைதீககாரியங்களையும் நடத்துகிறோம் –கோவிலுக்கு வந்தால்
அர்ச்சனை எல்லாம் செய்து வைக்கிறோம்–
நமக்கு ,உரிய மரியாதை கொடுத்து, முதலில் வேலையை முடித்துக்கொடுக்க
வேண்டாமா என்று கோபப்படுகிறார்கள் –சிலர்–சிலர்தான்–எல்லோருமல்ல !

சரி—லௌகீகர் ,தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி முடித்துக்கொடுக்கிறார்
என்று வைத்துக்கொள்வோம்—இதே லௌகீகர், ”நம்முடைய சௌகர்யத்துக்கு
வைதீகர் வீட்டுக்கு வந்து, கார்யங்களை இந்த வைதீகர் செய்து வைக்க வேண்டுமென்று
எதிர்பார்க்கிறார். இந்த லௌகீகர்,கோவிலுக்குப் போனால்,
அர்ச்சகர், தன்னை விசேஷமாகக் கவனித்து, ஸேவை செய்துவைக்கவேண்டுமென்று
எதிர்பார்க்கிறார். இல்லாவிடில், கோபப்படுகிறார்—இதுவும் சிலர்—சிலர்தான்–எல்லோருமல்ல .

இப்படி இருக்கும் சூழ்நிலையில்,
லௌகீகர்களிடம் ,வைதீகர்கள் படும் பாடும், வைதீகர்களிடம் லௌகீகர்கள்
படும் பாடும் விசித்திரமானது.

உதாரணத்துக்குச் சிலவற்றைப் பார்ப்போம்

1.பெண்ணின் விவாஹம் என்று வைத்துக்கொள்வோம்—-
பெண்ணைப் பெற்றவன், ஆடி ஓடி அலைந்து, வாத்யாரைப் பிடித்து,
அவர் சொல்வதற்கெல்லாம் சம்மதித்து, தலையாட்டி,மொத்தமாக ஒரு தொகைக்கு
ஒப்புக்கொள்கிறான்.
வாத்யார், விவாஹம் முடியும் வரை இவனை ஆட்டி வைக்கிறார்.
இது ஒரு விதம்
இன்னொரு விதம்—
மொத்தமாக ஒரு தொகையைக் கொடுக்க ஒப்புக்கொண்ட பெண்ணைப் பெற்றவர்,
வாத்யார் சொன்னதற்கெல்லாம் ,
”சரி—சரி—ஒன்றும் ப்ராப்ளம் இல்லை—உமக்கு ஸம்பாவனை ,நீர் த்ருப்திப்படும்
அளவுக்கு இருக்கும்” என்று சொல்லி விட்டு, கல்யாணம் முடிந்ததும்,
இவ்வளவுதான் கையில் இருக்கிறது–நிறைய செலவழிந்து விட்டது—
வேறொரு சந்தர்ப்பம் வருகிறது–சேர்த்துத் தந்து விடுகிறேன்–”
என்று சொல்வதும் உண்டு. வாத்யார் பைத்தியமா என்ன—
அடுத்த சந்தர்ப்பத்திலும் இந்த லௌகீகரிடம் மாட்டிக் கொள்வதற்கு—–

இன்னொன்று—-

. லௌகீகன் தர்ப்பணம் செய்ய வேண்டும்— செய்து வைக்கும் ”வாத்யார்”
சீக்கிரமே லௌகீகன் வீட்டுக்கு வந்தால், இவர் தூங்கிக்கொண்டு இருப்பார் .
அகத்துக்காரி, ”ராத்ரி ரொம்ப லேட்டா ,ஆபீஸிலிருந்து வந்தார்–இதோ எழுப்புகிறேன் ”
என்பாள்.
வைதீகரோ, இப்படி நாலு இடத்துக்குப் போய் ,செய்துவைத்தால்தான் அன்று வருமானம்.
இவர் எப்போது எழுந்திருப்பது ,பல் தேய்த்து ஸ்நானம் செய்து, வேஷ்டி உடுத்திக்கொண்டு,
ஸந்த்யை செய்து( செய்பவராக இருந்தால்) ரெடியாவது என்று எண்ணும் வைதீகர்,
”ரெடியாகச் சொல்லுங்கோ —தோ வந்துடறேன் —”என்று சொல்லிவிட்டு
மோட்டார்பைக்கில் சென்று விடுவார்.
இந்த லௌகீகன், பிறகு அவர் வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான்
இது, ச்ராத்தத்துக்கும் பொருந்தும்.
இவைபோன்றவை, லௌகீகன் படும் கஷ்டங்கள்.

இவை போன்றவற்றை, அடியேன் consumer welfare council தலைவராக இருந்தபோது,
ஒரு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணி இருசாராரையும் வரவழைத்தோம் —
இவர்களை பற்றி அவர்கள் குறைகளை சொல்ல, அவர்களை பற்றி இவர்கள்
குறைகளை அடுக்கப் பற்பல விஷயங்கள்,தர்மவிரோதமான கார்யங்கள், இரண்டு பக்கத்திலிருந்தும்,.
public ஆக அலசப்பட்டன—-ஏன் இப்படிப்பட்ட மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்தோம்
என்று ஆகிவிட்டது.

லௌகீகர்களும், வைதீகர்களும் ஒருவருக்கு ஒருவர் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு
அனுசரித்து இருப்பது, மிக மிகக் குறைந்து வருகிறது.கிராமங்களில் கேட்கவே வேண்டாம்—
லௌகீகம்தான்–அங்கு வைதிகத்தைக் காண்பது மிகவும் அரிது.–
வைதிகர்கள் வேண்டுமென்றால்,
பட்டணத்துக்கு – பெரிய பெரிய க்ஷேத்ரங்களுக்குப் போய்த் தேட வேண்டும்
என்கிற நிலையில் கிராமத்து லௌகீகர்கள் இருக்கிறார்கள். இந்தமாதிரி இடங்களில்
உள்ள –இவைகளை செய்துவைப்பதற்காக உள்ள இடங்களில்,
மொத்தமாகக் காசைக்கொடுத்துவிட்டு ”தெண்டமே” என்று கார்யங்களைச்
செய்துகொண்டு போகிறார்கள்.
இவற்றால், பித்ரு கடன்கள் சரிவரச் செய்யப்படுவதில்லை
இதனால், தலைமுறைக்குத் தலைமுறை ”கஷ்டங்கள்” அதிகரிக்கின்றன.
ஊனமுள்ள சந்ததி, புத்தி ஸ்வாதீனமில்லாத சந்ததி, நாஸ்திக புத்தி உள்ள சந்ததி—-
என்று இப்படி வளர்ந்துகொண்டே போகிறது.
லௌகீகர்கள், வைதிகர்கள் –,’பெரும்பாலாரிடம் ‘ஸ்ரத்தை”குறைந்துகொண்டு வருகிறது.
ஆசாரம் குறைகிறது—பெரியோர்களிடம் பணிவு, மரியாதை–வித்வத்துக்கு மரியாதை–
இவையும் குறைகிறது–
அனுஷ்டானம் குறைகிறது—”ஸந்த்யை ” செய்பவர்களை ப் பார்ப்பதே அரிதாகி வருகிறது–
இதுவும், கலியின் ,காலனின் கோலாஹலமோ !

About the Author

Leave A Response