ஸ்ரீ ஸம்மோஹன க்ருஷ்ண ஸ்லோகம்
==============================
ஸம்மோஹன கிருஷ்ண ச்லோகம் என்கிற இந்த ச்லோகம்
மிகவும் சக்தி உள்ள ச்லோகம்.
குடும்ப வாழ்க்கையில் மனநிம்மதி வேண்டுவோர் சொல்ல வேண்டிய ச்லோகம்
மகிழ்ச்சி நிலைத்திருக்கச் சொல்லவேண்டிய ச்லோகம் .
திருமணமான பெண்கள் தினந்தோறும் இந்த ச்லோகத்தைச் சொன்னால், இல்லற வாழ்வு
சந்தோஷமாக இருக்கும்.
திருமணமாகாத பெண்கள் தினமும் ,இந்த ச்லோகத்தைச் சொன்னார்களானால்,
எந்த கிரஹ தோஷமும் விலகும்; திருமணத் தடைகள் நீங்கும்.
நல்ல வரன் அமையும்.
” மரீசி ” என்கிற மஹரிஷி அருளிய மிகச் சக்தி வாய்ந்த அரிய மந்த்ரம் என்றே இதைச் சொல்லலாம்.
க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்
இஷீசாபம் வேணுவாத்தியம் ச தாரயந்தம் புஜாஷ்டகை:
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே |