Thaniyan–4

Posted on Jan 28 2017 - 9:33am by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்—தெளிவோம் —-4

—————————————————————–
தனியன்—தெரிவோம்—தெளிவோம் என்கிற வரிசையில்,

இது நான்காவது தனியன்

மாதா பிதா யுவதயஸ்தநயா விபூதி :
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம் |
ஆத்யஸ்ய ந : குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்கிரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
இது ஸ்ரீ நம்மாழ்வாருக்கான தனியன்
ஸ்ரீ ஆளவந்தார் அருளியது.இவருடையசரிதக்குறிப்பை முன்பே பார்த்தோம்.

இப்போது தனியனின் அர்த்தம்

ஸ்ரீநம்மாழ்வார்—”ஆத்யஸ்ய ந குலபதே —-”, ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர் .
”மதன்வயாநாம்—” ஆளவந்தார், தம்மைச் சேர்ந்தவர் எல்லாரையும்
சேர்த்துக்கொண்டு,ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே ”சரணம்” என்கிறார்.
எனக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும் எப்போதும் தாயாகவும், தகப்பனாகவும்,
பிள்ளைகள், ஆகவும், தன்னோடு ஸம்பந்தம் உள்ள –வித்யை,பிறப்பு —
அதாவது ”வித்யா வம்சம்” , ஜன்ம வம்சம்”—
வித்யா வம்சம் என்பது—ஆசார்ய சம்பந்தத்தால் வருவது—வளருவது.
ஆசார்யன் —அவனுக்கு ஸத்சிஷ்யர்கள் —அவர்கள், ஆசார்யர்களாகி ,
வித்யைகளைக் கற்றுக்கொடுத்து அடுத்த சிஷ்யர்களை உண்டாக்குவது–
என்று இப்படி வளருவது—-வித்யா வம்சம். எல்லா சிஷ்யர்களும்
சொல்லிக்கொள்ளும்படி இல்லாவிட்டால்கூட ,ஒன்றிரண்டு சிஷ்யர்களால்
இந்த ”வித்யா வம்சம் ”வளரும்.
”ஜன்ம வம்சம்”என்பது, தேஹ சம்பந்தத்தால் வருவது. ”க்ருஹஸ்தாஸ்ரமத்”தில்
இருந்து பிள்ளை பெண், பேரன் , பேத்தி, என்று தொடருவது இந்த வம்சம்.
இப்படி வளரும் இந்த வம்சம், எண்ணத்தொலையாத வம்சங்களைப் போல,
எவ்வித முக்யத்வமும் இன்றி இருப்பதுண்டு.
ஏதோ, சில தலைமுறைகளில் சொல்லிக்கொள்ளும்படியாக சில வம்சத்தவர் இருப்பதுண்டு.
இது, பெரும்பாலும் ”பித்ரு கடன்” தீர்ப்பதற்கே இருக்கும்
( அடியேன்–”கேட்பதும் சொல்வதும்” என்ற தலைப்பில் ”ஸ்ரீ காஞ்சி பேரருளாளன்
மாத ஆன்மீகப் பத்திரிகையில் 1008 விஷயங்களை எழுதி இருக்கிறேன்–
அதில் 449 மற்றும் 450 வது விஷயங்களில் எழுதி உள்ளதை
இங்கு கொடுத்திருக்கிறேன் )

இவைகளினால் தன்வம்சத்தைச் சேர்ந்த முன்னோர், பின்னோர், —
யாவருக்கும் பகவான் முதல் ஆசார்யன் . பொதுவானவன்.ஆனால் நமக்கு,
நாதமுனிகள் ஸம்ப்ரதாயம் —ஆதலால் ஆழ்வார் நமக்கு ”அஸாதாரணர் ”
பரதத்வத்தை நிச்சயிக்கும் நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள்,
எப்போதும் மாறாத உண்மையைச் சொல்கிறது.ஸாத்விகர் ஸமர்ப்பித்த
மகிழம்பூ –இவற்றை மாலையாக அணிந்தவர் .

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை எளிமையாகத் தெரிந்துகொள்ளக்
காரணமாயும், அப்போதே பகவானின் திருவுள்ளத்துக்கு உகப்பைக்
கொடுக்கக்கூடியதாயும், மதுரகவி முதலான ஸம்ப்ரதாய ப்ரவர்த்தகர்கள்
புகழ்ந்தும், ஸ்ரீமந் நாதமுநிகளுக்கு பகவானின் ஸங்கல்பத்தினால்
யோகதசையில் ஆவிர்ப்பவித்து, எல்லா வேத ,உபநிஷத்துக்களுக்கும்
ஸாரமான அர்த்தங்களை உபதேசித்தவராயும்,தாய், தகப்பன் ,ஸஹோதரன்
எல்லாமே ,ஸ்ரீமந் நாராயணனே என்கிற உபநிஷத் வாக்கியத்தில் சொல்லப்படுகிற
பகவானுடைய ஸ்வபாவத்தை உடையவராகத் தெரிந்து, தெளிந்து,ஸ்ரீ ஆளவந்தார் இந்தத்
தனியனின் மூலமாக ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளில் ஸேவிக்கிறார் .
ப்ரணமாமி மூர்த்நா —தலையால்—சிரஸ்ஸால் வணங்குகிறேன் என்கிறார்–
விபூதி—வேலைக்காரர்கள், தாஸர்கள் ,பணம், ரத்நம் ,எல்லாமும்—விபூதி –செல்வம்.
இவையெல்லாமிருந்தும் , .
இந்தத் திருவடியே,,நம்மால் அபேக்ஷிக்கப்படுகிற பலன்.
இப்படிப் பகவானின் திருவடி வேண்டுமென்றால், ஆசார்யனின் க்ருபை வேண்டும்,
ஆசார்ய க்ருபை இருப்பின் அச்யுதனின் நிக்ரஹத்தையும் சமன் செய்துவிடலாம்.

பாஷ்யம்(வ்யாக்யானம் ) இப்படிக் கூறுகிறது—-

ஈச்வருகிருபா அநாதிரபி ஆசார்யக்ருபாம் அபேக்ஷதே லீலாரஸ ஸஹசரிதா ச
ஆசார்யக்ருபாது தந்நிக்ரஹமபிசமயதி . அநுக்ரஹைக ரஸா ச . ஈச்வரஸ்ய
க்வசித் அதோ நீநீஷாபிவர்த்ததே அஸாது காரயித்ருத் வம் ச . ஆசார்யஸ்தது
ஸர்வத்ர உந்நிநீஷைவ ஸ ஸாத்வேவ காரயதி —
எம்பெருமானின் தயை ,ஆசார்யனின் தயையை அபேக்ஷித்தே
நமக்கு நன்மையைச் செய்கிறது.சிலபேர்விஷயத்தில், ஈச்வரன் நிக்ரஹமும்
செய்வன் . கெட்ட செயல்களைச் செய்யஇடமளிப்பான்.ஆசார்யனின் க்ருபை
அநுக்ரஹத்தையே செய்யும்.நன்மையையே விளைவிக்கும்.

பகவானுக்குச் சில விஷயங்களில், சிலருக்கு (அஸுரர்களுக்கு ) சாஸ்த்ர வ்ருத்தமான
அர்த்தங்களை ஏற்படுத்தி,பாபகார்யங்களைச்செய்யவைத்து,கீழே தள்ளிவிடும்
ஆசையும் உண்டு. ஆசார்யனுக்கோ,எல்லா சிஷ்யர்களும் உஜ்ஜீவிக்கவேண்டும்
என்கிற ஆசைதான். எந்தச் சமயத்திலும் .சாஸ்த்ர விரோதமான பேச்சே இராது–

குழந்தையை —
தாயார்—தன் த்ரேகம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சுமந்து, பெற்று வளர்க்கிறாள்;
எவ்வளவு அலக்ஷ்யம்செய்தாலும் ,அன்பைச் செலுத்துகிறாள் .
தகப்பனார், —-பேச ஆரம்பிக்கும்போது, எடுத்துக் கொஞ்சி, நல்லொழுக்கம், வேதம் ,புராணம் ,
இதிஹாசம் முதலியவற்றைப் போதிக்கிறார் .
மனைவி—யௌவன வயதில் தாய் தந்தைக்கும் மேலாக உதவி, அமைச்சனாகவும்
இருந்து உதவுகிறாள்
பிறக்கும் மக்கள்—-வயதானபோது, அரவணைத்து, ஆதரவு நல்குகிறார்கள் .
இப்படி இவர்கள் எல்லோருடைய மூலமாக சுகங்களும்,(இடர்களையும் சேர்த்து) சேர்ந்து அனுபவிக்க
பந்துக்களும், நண்பர்களும், வேண்டும்;
இவை எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது ”தனம்”—சொத்து.இது ப்ரஜைகளுக்கு
அந்தந்த சமயங்களில் தேவைப்படும்.
ஆனால்,
வித்யா வம்சம், ஜந்ம வம்சம் ஆகிய இரண்டு வம்சங்களில், முன்னேயும் பின்னேயும்
சம்பந்தப்பட்டவருக்கும் ஆசார்ய ,ப்ராசார்ய என்று சம்பந்தப்பட்டவர்கட்கும்,வேண்டிய தனம் —
முதல் குலபதி —-ஸ்ரீ நம்மாழ்வார்
குலபதி எனில் , பரம்பரை, பரம்பரையாக பல கிளைகளாக வித்யைகள்
பெருக , மூலகாரணமாக இருப்பவர். முதல் ஆசார்யன் எம்பெருமானாக இருந்தாலும்,
பரம்பரை என்று சொல்லப் புகுந்தால், ஸ்ரீ சடகோபனே மூல புருஷராவார் .

அதனாலேயே அவர் ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தர்.
அவரது திருவடிகளைத் தலையாலே வணங்குகிறேன்.
ப்ரணமாமி மூர்த்நா —-
தலையால் வணங்குவது என்பதற்கு, வ்யாக்யானம் செய்யத் தொடங்கினால் ,
இந்தப் ப்ரணாமம் , பஞ்சாங்க ப்ரணாமம், ஷடங்க ப்ரணாமம், அஷ்டாங்க ப்ரணாமம்,
த்வாதசாங்க ப்ரணாமம்,, ஷோடசாங்க ப்ரணாமம், ஸுக்ருத் ப்ரணாமம், தண்டாங்க ப்ரணாமம்,
மஸ்திஷ்க ப்ரணாமம்,, ஸம்புட ப்ரணாமம், ப்ரஹ்வாங்க ப்ரணாமம்என்று பலவகையாக
இருக்கிறது இருப்பினும், மிகவும் அனுஷ்டானத்தில் உள்ள,
”அஷ்டாங்கப் ப்ரணாமத்தைச் சொல்ல வேண்டி வருகிறது.
ஸ்ரீ பாஷ்யகாரர் நித்ய க்ரந்தத்தில்
மனம், அறிவு, எண்ணம், இவைகளுடன் ஆமையைப் போன்று இருகைகளையும்
தரையில் பதியவைத்து,இருகால்களையும் நன்கு நீட்டி,
தலையால் வணங்குவது அஷ்டாங்க ப்ரணாமம் எனச் சொல்லப்படுகிறது.
ஸ்வாமி தேசிகன், நித்ய வ்யாக்யானாதிகாரத்தில்,
மார்பு, தலை, சொல், மனம்,அறிவு, கன்னங்கள், கால்கள், கைகள், —என்று எட்டு
அங்கங்கள் சொல்கிறார்.

”ஸ்ரீ” உள்ளவராக, இளையபெருமாளாகிய லக்ஷ்மணன் ,கஜேந்த்ரன் போன்றோரைச்
சொல்கிறோம். எதனால் —பகவத் கைங்கர்யத்தில் எப்போதும் இழிந்து இருந்ததால்.
அவ்வாறே,
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டுமென
அருளினார். திவ்யதேசம் தோறும் நடந்து , பாடி, கும்பிட்டு, நர்த்தனமாடவேண்டுமென
அருளினார். அதனால் இவரும்”ஸ்ரீ” உள்ளவரே . இது இவருக்கு அழியாச் செல்வம்.
இதற்கு அழியா மணமுள்ள ”மகிழ் மாலை ” யும் பூண்டு அழியாச் செல்வமாயிற்று.
எம்பெருமானுக்கு ”துளஸி ” எப்படியோ, அவ்வாறு, ஆழ்வாருக்கு ”மகிழம்பூ ”

ஆழ்வாருக்கு உண்ணும் சோறு, தின்னும் வெற்றிலை பருகும் நீர் -எல்லாமே கண்ணன்.
நமக்கு, இவை எல்லாமே ஸ்ரீ நம்மாழ்வார் திருவடி .ஆசார்ய பரம்பரையில் வரும்
ஸ்ரீமந் நாதமுநிகளும் ,மற்றோரும் அவரது திருவடியே.
ஆழ்வார் குலபதி ஆவதால், அவரது திருவடி, நமக்கு, மாதா பிதா எல்லாமே
என்பதாம்.
ஸ்ரீ ஆளவந்தார் ,வாழ்ந்த காலத்தில் அவரது திருமாளிகையில், ஸ்ரீ நம்மாழ்வாரின்
திருவடி நிலைகள் ”மகிழ்மாலை” சார்த்தப்பட்டு.ஆராதிக்கப்பட்டது என்பதும் குருபரம்பரைச் செய்தி.

அபிநவ தசாவதாரம்
————————————-

பகவானின் பூர்வோத்தர அவதாரங்களுக்கும் ஆழ்வார்களின்
ப்ரத்யேக அவதாரங்களுக்கும் ”ஸாரூப்யம்” பொருந்தி இருப்பதை பூர்வாசார்யர்கள்
அனுபவித்து இருக்கிறார்கள்.
”பராங்குச பரகாலாதி ரூபத்தாலே ”என்று எடுத்து இருக்கிறார்கள்.
பகவானின் அவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் வாமனாவதாரம்
மச்ச, கூர்ம, வராஹ ,ந்ருஸிம்ஹ ,வாமந —-
அபிநவ தசாவதாரத்தில்ஐந்தாவது, பராங்குச அவதாரம்.
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார்
——வாமனனே ,பராங்குசனாக–நம்மாழ்வாராக
அவதரித்தார் என்பது ஸம்ப்ரதாய ப்ரஸித்தம் .
(அடியேனின் உபன்யாசம்–விசிஷ்டாத்வைதம் –என்கிற தலைப்பில்தசாவதாரம்,
அபிநவ தசாவதாரம் இரண்டையும் இணைத்துச் சொல்லி இருக்கிறேன்–you –tube ல் உளது )
காரியாரும் (ஸ்ரீ நம்மாழ்வாரின் திருத் தகப்பனார்)அவர் பத்நி உடையநங்கையும்
திருக்குறுங்குடி நம்பியை ஸேவித்து ,புத்ரப்ராப்தி வேண்ட, நம்பியும்
”நாமே உம்மிடம் வந்து அவதரிக்கிறோம்—-” என்று வரம் அருளி அப்படியே
நம்மாழ்வாராக அவதரித்தார் என்பது ஸம்ப்ரதாயம்
வ்யாக்யான கர்த்தாக்கள், ”நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை —-” என்கிற
பாசுரத்தின் பகுதியை வ்யாக்யானம் செய்யுமிடத்தில், ஈடு முப்பத்தாறாயிரத்தில் ,
”உடைய நங்கையார் நம்பியை ஆச்ரயித்து ஆழ்வாராய்த் திருவயிறு வாய்த்தார் –”
என்று அருளி இருப்பதை இங்கு சொல்வது பொருத்தமாக இருக்கும்.
தவிரவும், இவ்விவரம் ”திவ்ய ஸூரி ”’சரிதத்தில் காணப்படுகிறது.
கைசிக புராணத்தில்,
—-” திருக்குறுங்குடி தான், ஸித்தாச்ரமம் என்றும்,வாமனபுரி என்றும் புராணாதி ப்ரஸித்தம் ”
என்று உள்ளது.
” முன்பு நீரும் நாமும் குறுங்குடியாகக் கட்டியிருந்த ஆச்ரமத்திலே—-” என்கிறார் பட்டர்.
ஸ்ரீ மதுரகவிகள் பாசுரங்களில், ”தென்குருகூர் நம்பி என்னக்கால் ”என்றும்
”குருகூர் நம்பி” என்றும், ”வண்குருகூர் நகர் நம்பிக்கு” என்றும், பெரும்பாலும் ”நம்பி” என்றே
ஸ்ரீ நம்மாழ்வாரை அழைப்பர் .ஆகவே ஆழ்வார் ,நம்பி யின் அபிநவதாரம் என்றே கொள்ளலாம் .
மூன்று அடிகளில், இருவருக்குமே ”மோஹம்”. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்—

அடுத்து–மிகச் சுருக்கமாகச் சொல்வதென்றால்–
தாயார்—தகப்பனார்—மனைவி—-புதல்வர்—பணிசெய்வோர் —செல்வம் –இவை யாவும்
இம்மை மறுமைப் பயன்கள்—-அவற்றுக்கு சாதனமாயும், நாதமுனிகள் ஸம்ப்ரதாயத்தைச்
சேர்ந்த நமக்கும் சாதனமாயும் நம் பின்னோருக்கும் சாதனமாயும், இருப்பது—
ப்ரபந்நஜன ஸந்தான கூடஸ்தரான ஆழ்வாருடைய மகிழம்பு வாசனையைப் பெற்ற
இரண்டு திருவடிகளே—-
இவை, இம்மையிலும், மறுமையிலும் பற்றுக்கோடாகி, ஒன்றோடு ஒன்று இணைந்து,
மிக அழகாக இரு தெய்வங்களாய் உள்ளன இந்த இரு திருவடிகளையும், மிகுந்த
பக்தியுடன், மனத்தாலும், வாக்காலும், தலையாலும் வணங்குகிறேன். –

-For me and also to those with me , Sri Nammaazhvaar is always the Mother, Father, Progeny,
wife and all wealth.
At the most beautiful pair of the Holy–Divine Feet of the Emperor of our group of relatives ,friends &race,
Swamy ,the Acharyan,Nammazhvar adorned with fragrant vakula flower garland –adiyen salute
the Divine feet and bear them on my head—-
(Sri Nammazhvar is supposed to be the ”Shataari—-the bridge between Sriman Narayanan and us –the jeevathmas)

அடுத்தது——5 வது —தொடருகிறது—-
பூதம் ஸரஸ்ச மஹ்தாஹ்வய பட்டநாத
ஸ்ரீ பக்திஸார குலசேகர யோகிவாஹாந் |
பக்தாங்க்ரி ரேணு பரகால யதீந்த்ர மிச்ராந்
ஸ்ரீமத் பராங்குஸ முநிம் ப்ரணதோஸ்மி நித்யம் ||

——————தொடருகிறது————————-

FEATURED IMAGE–SRI NAMMAZHVAR
ANOTHER IMAGE: SRI ALAVANDAR
Sri Alavandar-images

About the Author

Leave A Response