தனியன்—தெரிவோம்–தெளிவோம்—9

Posted on Feb 14 2017 - 1:00pm by srikainkaryasriadmin

தனியன்—தெரிவோம்–தெளிவோம்—9

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத —-வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.

இதுவும் பாண்டிய பட்டர் அருளிய தனியன் என்று கூறப்படுகிறது.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

வல்லபதேவ பாண்டியன் என்கிற பாண்டிய அரசன், ”பரதத்வ நிர்ணயம் ”
செய்ய ”பட்டர்பிரான்” என்கிற ஸ்ரீவிஷ்ணு சித்தர் –பெரியாழ்வார் –விஜயம்
செய்ததை விவரித்து , ஸ்தோத்ரம் செய்து பரதத்வ நிர்ணயம் செய்து ஜயத்தை
அடைந்ததை , பலவிதமான சங்கங்களைக் கையில் எடுத்து, அடியார்கள்
சங்கநாதம் செய்ய,
வேண்டிய வேதங்கள் ஓதி—–என்பதால்
வேதங்கள் போற்றும் ப்ரஹ்மத்தையும் —-அதாவது, ஸ்ரீமந் நாராயணனே
”பரதத்வம்” என்று ஆராத்ய தெய்வத்தையும், ஆராதன க்ரமத்தையும்,
ஆராதந நியமத்தையும் வேதங்கள் வெளியிடுவதை உபந்யஸித்து
அந்த நிர்ணயத்தாலே , விரைந்து –பொற்கிழி கட்டியிருந்த கழி ,விரைந்து
தழைய
கிழியறுத்தான் —-
பொற்கிழியை எடுத்தான்—அவன்தான் பட்டர்பிரான்

பாதங்கள் யாமுடைய பற்று——
அவருடைய திருவடிகளே நமக்கு உடைத்தான ரக்ஷகம் —பற்றுக்கோல் .

பல்லாண்டு பாடியவர் திருவடிகளைப் பற்றினால் , நாமும் பல்லாண்டு
பாடலாம் . தட்டில்லை

ஸ்ரீ விஷ்ணு சித்தர் ”பரதத்வ நிர்ணயம்” செய்ய வல்லப தேவ பாண்டியன்
தலைநகரான மதுரைக்குச் சென்று அரசவையில், அங்கு வல்லபதேவ அரசன்
கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று அடியார்கள் சங்கங்களை எடுத்து
முழங்க ,”பரதத்வ நிர்ணயம்” செய்ய , வேதங்களில் , அதற்கான பகுதிகளை
(வேண்டிய வேதம் ) எடுத்து, விரித்து, உரைத்து, ஸ்ரீமந் நாராயணனே
பரதத்வம் என்று ஸ்தாபிக்க, முன் தனியனில் சொல்லியபடி ,சுல்கமாகக்
கழியில் கட்டியிருந்த பொற்கிழி விரைந்து தாழ்ந்து வர, அதை பஹுமானமாக
எடுத்து, பரதத்வத்தை நிர்ணயித்த பட்டர்பிரான் என்று கொண்டாடப்படும்
ஸ்ரீவிஷ்ணு சித்தரின் திருவடிகளே நமக்குத் பற்றுக்கோல் —என்று
வ்யாக்யானம் இடுகிறார்கள்.

இவற்றை ஸேவித்த பிறகு ( சொன்ன பிறகு ), பெரியாழ்வார் திருமொழி,
திருப்பல்லாண்டுத் தொடக்கம் — .
இப்படி ஸேவிக்கும்போது 20 திவ்ய தேச எம்பெருமான்களை பெரியாழ்வார்
மங்களாசாஸனம் செய்த பாசுரங்கள் யாவும், ஸேவித்து முடிப்பர்.

அடுத்து——திருப்பாவைத் தனியன்——

About the Author

Leave A Response