-தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—17

Posted on Feb 26 2017 - 5:13am by srikainkaryasriadmin

-தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—17
————————————————————————-

தருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர் தீர
திருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன் வருமூர்
கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம் பதியே

திருமழிசைப் பிரானின் ,திருச்சந்தவிருத்தம் பாசுரங்களைச்சொல்வதற்கு முன்பு இந்தத் தனியனும், இதற்கடுத்ததனியனும், சொல்வர்.
திருக்கச்சி நம்பிகள் அருளிய தனியன் .இதை, திருச்சந்த
விருத்தத்தை ,கச்சிவெஹ்காவில் அநுஸந்தானம் செய்யும்போதுஇந்த இரு தனியன்களையும் ஸேவிக்குமாறு”பிள்ளான்” நியமித்ததாகச்
சொல்லப்படுகிறது.

இவரது சரிதச் சுருக்கம்

கலி 4105, கி.பி.1003ல் சோபக்ருது வருஷம், மாசி மாத
ம்ருகசீர்ஷ நக்ஷத்ரத்தில் ,பூவிருந்தவல்லியில் அவதரித்தார்.
இராமாநுசரின் தகப்பனாருக்கு மிகவும் நெருக்கமானவர்.
பூவிருந்தவல்லியில், நந்தவனம் அமைத்து,தினமும் பூக்களைக்கொய்து, மாலைகளாகக் கட்டி, தினந்தோறும் நடந்தேகச்சியம்பதிக்குச் சென்று, பேரருளாளனுக்குச் சமர்ப்பிப்பார் .
”ஸ்ரீ காஞ்சி பூர்ணர்” என்றும் ,”ஸ்ரீ கஜேந்திர தாஸர் ” என்றும்
அழைக்கப்பட்டார். மஹா பூர்ணர் என்கிற பெரியநம்பிகளின் சிஷ்யர்.
பேருளாளனின் அந்தரங்கர் .அவருக்கு ஏகாந்தமாக ”ஆலவட்டம்”கைங்கர்யம் செய்தவர்;அப்போதெல்லாம், பேரருளாளன் இவருடன் பேசுவதுண்டு.
இராமாநுசர் வேண்டுகோளை ஏற்று, அவருடைய கிருஹத்துக்குச் சென்றபோது, அவர், இவருக்கு ஆசனமிட்டுத் தெண்டனிட முயற்சிக்க,அதைத் தடுத்து,
ஸ்ரீ ஆளவந்தார் பாதத்தில் ஆச்ரயித்தவர் வர்ணாஸ்ரம தர்மங்களைமீறக்கூடாது
என்று தடுத்தவர்.ஆ்சார்யனாக இருக்க மறுத்தவர்.

திருக்கச்சிநம்பிகள் ,தனது இல்லத்துக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று இராமாநுசர் பலமுறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க,ஒருநாள் ”அப்படியே” என்று சம்மதித்தார்.
உடையவரும் ,இச்செய்தியை மனைவியிடம் சொல்லி
விருந்து தயாரிக்கச் செய்து , அன்றைய தினம், அவரை அழைத்துவரதெற்குத் திருவீதியாலே அவருடைய மடத்துக்குச் சென்றார்.
இந்தச் சமயத்தில், நம்பிகள், வேறொரு வழியாக இராமாநுசர் இல்லம்வந்தடைந்து, உடனே உணவு பரிமாற வேண்ட, உடையவரின் மனைவியும்
அவரைத் திண்ணையில் அமர்த்தி உணவு பரிமாற , நம்பிகள் உண்டுஎழுந்து, இலையை அவரே எடுத்துப்போட்டவுடன், உடையவரின் தேவிகள் ,
அவர் உண்ட இடத்தை நீர், பசுஞ்சாணி இட்டு மெழுகி, மீதி உணவைப்பிச்சைக்காரர்களுக்கு அளித்து, தானும் தலைக்கு நீராடி, ”ஆசாரம் குறைவற முடிந்தது”என்று மகிழ்ந்த வேளையில், இராமானுசர் திரும்பி வந்து,
நடந்ததை அறிந்து,
”சேஷ உணவுகூடக் ிட்டவில்லையே” என்று துக்கித்து,
மனைவியைக் கடிந்தார்.
திருக்கச்சிநம்பிகளின் பெருமை, இன்னும் உளது—-

ஒரு சமயம், உடையவர் திருக்கச்சிநம்பிகளிடம் பல சந்தேகங்களைக் கேட்டு அதற்குப் பேரருளாளனிடம் நிவர்த்திக்க இயலுமா என்று சொல்ல,
நம்பிகளும் ,ஆலவட்ட கைங்கர்யம் செய்யும்போது இதை தேவப்பெருமாளிடம் விண்ணப்பிக்க, அவர்,
நம்பி—-இராமானுசர் சிறந்த சாஸ்த்ரக்ஞர், அவர் அறியாதது இல்லை, அவர்
உம்மிடம் கேள்விகளை சொல்லவில்லை, நாம் பதில்களைச் சொல்கிறோம் —
அவற்றைத் தெரிவியும்—என்றார் .அவை—–
1. பரத்வம் நாமே——
2. பேதமே தர்சனம் —-
3.உபாயமும் ப்ரபத்தியே —
4. அந்திம ஸ்ம்ருதி வேண்டாம்—-
5. சரீர அவஸானத்திலே மோக்ஷம்–
6. பெரியநம்பி திருவடிகளிலே ஆச்ரயிப்பது—

இவை–இந்த ஆறு வார்த்தைகள், குருபரம்பரையில் முக்கியமானவை
இவற்றின் பொருள் வருமாறு—–

1.நாமே –நாராயணனே சகலத்துக்கும் உயர்ந்த சத்யமான மூலப்பொருள் )

2.ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் அவசியமான பேதம் உண்டு, என்பதே உண்மையான தத்துவம்
3.என்னை அடைய ஒரே நேரான வழி, நம்மிடம் சரணாகதி அடைவதே

`4. இப்படி வாழ்பவன் உயிர் ,உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில் நம்மை நினைக்க வேண்டியதில்லை

-5.உயிர், உடலைவிட்டுப் பிரிந்ததும் இந்த ஜீவாத்மாவாகிய ப்ரபன்னன் ,நம்மிடம் சேர்ந்து, நிரந்தர ஆனந்தத்தை அடைவான்

6.இவன் –இராமாநுசன் –ஆளவந்தாரின்
சீடரான பெரியநம்பி திருவடிகளைப் புகலிடமாக அடையட்டும்

இவற்றை, திருக்கச்சிநம்பிகள், இராமாநுசரிடம் சொன்னதும் ,உடையவர் மிகவும் மனத் தெளிவு அடைந்தார்.உடையவரின் ஆசார்யர்களில் . பெரியநம்பிகளும் ஒருவர்பேரருளாளன் இராமாநுசருக்கு ஸன்யாஸ ஆஸ்ரமம் அளித்து,
திருக்கச்சிநம்பிகளை அழைத்து, உடையவரைத் தக்க மடத்தில் இருத்தும் என்று அருளினார்.நம்பிகளும் அப்படியே செய்தார்.
நம்பிகள்”ஸ்ரீ வரதராஜ அஷ்டகம்” அருளியுள்ளார்.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

கருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்
அகிலும் சந்தனமும் எங்கும் சூழ்ந்து ஓங்கி வளர்ந்து,
மணம் பரப்பும் ,
தருச்சந்தப்பொழில் தழுவு தாரணியின் துயர்தீர —-
இது பொழில்-உத்யானவனம்—சந்தன வ்ருக்ஷ உத்யானம்–
அதனால் பூர்ணமாகத் தழுவப்பட்ட தாரணி–உலகம்-
சந்தனம் ,முழுதும் குளிர்ச்சி இது சூழ உள்ள உலகத்தோர்க்கு
துக்கம் தீர —குளிர்ச்சி இருக்குமிடத்தில் வெப்பத்தூக்கம்
இராதல்லவா—-
திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப் பரன் வருமூர்—-
ஸ்வரூப, ரூப , உபாய புருஷார்த்தங்களைச் சொல்கிற
திருச்சந்த விருத்தத்தை செய்து அருளிய ஆழ்வாரான
திருமழிசைப்பிரான் –தவிரவும், சந்தனமரங்களின் வாஸனை ,
வ்ருக்ஷங்களின் புஷ்ப வாஸனை –நிரம்பியிருக்கும்
விருத்தம்—
திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே—
திருச்சந்த—-பெரியபிராட்டியாருக்கு நித்யவாஸமாக இருக்கும்
திருமழிசை என்கிற —வர்ணாஸ்ரம தர்மத்தை எப்போதும் வளர்க்கும்—-
பதியே—நகரமே–தேசமே—
இந்தத் தனியனில், திருமழிசை என்கிற தேசத்தின் ப்ரபாவத்தைச் சொல்கிறார்.

About the Author

Leave A Response