தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—18
———————————————————————-
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
புலவர் புகழ்க் கோலால் தூக்க—-உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
வைத்தெடுத்த பக்கம் வலிது
இந்தத் தனியனும் , திருக்கச்சி நம்பிகள் அருளியதே—
இவருடைய சரிதச் சுருக்கம், இதற்கு முந்தைய பகுதியில் (17)
கொடுக்கப்பட்டுள்ளது
இந்தத் தனியனின் அர்த்தச் சுருக்கம்
——————————————
உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்—–
மேற்சொன்னவாறு,உலகும், புகழ் பெற்றதிருமழிசையும்
, இவற்றையெல்லாம் மனத்தால் உணர்ந்து,
புலவர் புகழ்க் கோலால் தூக்க —-
பார்க்கவ மஹாகவிகள் தங்களுக்குள்ளே கீர்த்தியென்கிற
”துலா”–துலாக்கோல்–தராசு—நிலைநிறுத்த –தூக்கி நிறுத்த
உலகுதன்னை வைத்தெடுத்த பக்கத்தும்—-
இவ்வுலகத்தை ,தராசின் ஒரு தட்டில் வைத்து எடுத்த
பக்கத்தைக் காட்டிலும்,
மாநீர் மழிசையே வைத்தெடுத்த பக்கம் வலிது–
மஹாதீர்த்த ஸம்ருத்தியுள்ள திருமழிசையை வைத்து எடுத்த பக்கமே நன்கு கனமானது—வலிது—
தக்ஷிண தேசத்தில் ,ஆழ்வார் அவதரித்த திருமழிசை எனும் க்ஷேத்ரம் மிக வலிமை மிக்கது—பக்திஸாரர் அவதாரத்துக்கு, இது ”மஹீஸார” க்ஷேத்ரமாயிற்று—-
இவ்வளவான ப்ரபாவத்தை வெளியிட்டு அருளின திருக்கச்சி நம்பிகள்,மணக்கால்நம்பிகளிடம் மந்த்ர ஸம்பந்தம் பெற்றவர் ;ஆளவந்தாரிடம், மந்த்ர அர்த்த, ஸம்பந்தமான எல்லா விசேஷ
அர்த்தங்களையும் பெற்றவர்;இவர் ”பிள்ளை திருமாலிருஞ்சோலைதாஸரை”ப்போல , திருமந்த்ர ஸம்பந்தத்தால் ”பெரியநம்பி திருவடிகள்”
என்று ஸ்வாமி தேசிகன் அருளினார்.
ஸ்வரூப சிக்ஷை திருமந்த்ரார்த்தம் முதலான ஸம்பந்தத்தால்,ஆளவந்தார் திருவடிகள் என்று ”தீர்த்தப்பிள்ளை”அருளினார்.