தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—-20

Posted on Feb 28 2017 - 10:10am by srikainkaryasriadmin

தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—-20
————————————————————————–

தமே வ மத்வா பரவாஸுதேவம்
ரங்கேஸயம் ராஜவ தர்ஹணீயம் |
ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே ||

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களுக்கு திருமாலையாண்டான் அருளிய தனியன்.

உடையவருக்கு, திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களின் அர்த்தவிசேஷங்களை அருளும்போது, ”உன் அடியார்க்கு ஆட்படுத்தாய் பள்ளியெழுந்தருளாயே –”
என்கிற இடத்தில் மிகவும் ஈடுபட்ட திருமாலையாண்டான் ,இந்தத்
தனியனை அருளியதாகச் சொல்வர்.

இவர், கலி 4090, கி.பி.988, ஸர்வதாரி வருஷம், மாசிமாத மக நக்ஷத்ரத்தில்திருமாலிருஞ்சோலையில் அவதரித்தார்.மாலிருஞ்சோலை அழகனுக்கு, மாலைகள் தொடுத்து கைங்கர்யம்செய்ததால் ”ஸ்ரீ மாலாகாரர் ” என்று அழைக்கப்பட்டார்.
திருமாலிருஞ்சோலை அழகருக்கு அந்தரங்கர் .
திருமாலிருஞ்சோலை அழகனே , இவருக்குச் சிஷ்யனாக வந்து கைங்கர்யம்செய்யும் பேறு பெற்றவர்.ஆளவந்தாரிடம் திருவாய்மொழியின்
ஆழ்பொருளை நன்கு கற்றவர்.திருக்கோட்டியூர் நம்பிகளின்ஆணைப்படி,உடையவருக்கு திருவாய்மொழியின் உட்பொருளை உபதேசித்தவர்.
உடைவரிடமும், திருவாய்மொழியின் அர்த்தநுணுக்கங்களைக் கற்றவர்.
தன்னுடைய குமாரன் ”சுந்தரத் தோளுடையானை ” உடையவரிடம் சிஷ்யனாகச் சேர்த்தவர். இராமாநுசரை , ”சடகோபன் பொன்னடி” என்று பெயரிட்டு உயர்ந்தவர்.
இவர், 1078ம் ஆண்டு பிங்கள வருஷம் ஐப்பசி ,சுக்ல பக்ஷ ஏகாதசியில் திருநாடு அலங்கரித்தார்.

தனியனின் அர்த்தச் சுருக்கம்
————————————————

ராஜவ தர்ஹணீயம் ரங்கேஸயம் தம் பரவாஸுதேவம்——
இந்த எம்பெருமான்—பெரியபெருமாளாகிய ரங்கநாதன்,சக்ரவர்த்தித்திருமகனாலே ஆராதிக்கப்பட்டவன்—-அர்ச்சையிலும் ,”பீஷாஸ்மாத் —-”
என்பதாக பீதி உள்ளவர்களாலேயே ஆராதிக்கத் தக்கவன்
ரங்கேஸயம்——திருவரங்கத்து அரவணையில் பள்ளி கொள்பவன் இது, அம்புயத்தோன் அயோத்திமன்னர்க்கு அளித்த கோயில் —-
தம்—-செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் –ப்ரதமம் மற்றும் ப்ரதானம் ஆகிய கோயில்—-
பரவாஸுதேவம் ஏவ மத்வா —-இவன் வாஸுதேவ ரங்கேசன் –இவனே ரங்கராஜன்—இவனே பரவாசுதேவன் –இருவரும் ஒன்றே–
ய :ப்ராபோதகீம் யோக்ருத ஸூக்திமாலாம்—எந்த தொண்டரடிப்பொடிஆழ்வார், இந்த ஸூக்தி மாலாவான திருப்பள்ளியெழுச்சியைப்பாடினாரோ —பண்ணினாரோ—-
பக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே ————
எம்பெருமான் போலவே ஷாட்குண்ய பரிபூர்ணராய் விளங்குகிற தொண்டரடிப்பொடி ஆழ்வாரை ஸ்தோத்ரம் செய்கிறேன்—-

லோக உஜ்ஜீவனம் செய்ய நீ ,திருப்பள்ளி உணர்ந்தால் ,
உலகு யாவும் உணர்ந்து, உனக்கும் உன் அடியார்க்கும் ஆட்பட்டுஉஜ்ஜீவிக்கும் என்கிற திருவுள்ளத்தாலே, திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களை அருளிச் செய்தவரை மனத்தால் நினைத்துஉலகும் உஜ்ஜீவிக்கும் —என்று கருத்து—

This carries excellent wordings such as ”bhaktanghri renu—” the dust of Holy Ranganatha’s devotees —He is ”Thondaradippodi Azhvar ” who composed this garland of songs –thiruppalliyezhuchchi—(only 10 verses )
awakening Sri Ranganatha who has reclined on the serpent couch in Sriranga Divya Desam. He is ”Paravasudeva”—Supreme Lord—
richly deserving all adorations of an emperor

About the Author

Leave A Response