தனியன்—தெரிவோம்—தெளிவோம்—-21
————————————————————————-
மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர்
தொண்டரடிப்பொடி தொன்னகரம் —-வண்டு
திணர்த்த வயல் தென்னரங்கத்தம்மானைப் பள்ளி
யுணர்த்தும் பிரான் உதித்த ஊர்
இந்தத் தனியனும், திருவரங்கப் பெருமாள் அரையர் அருளியது.
இவரது சரிதம், பகுதி 19ல் சொல்லப்பட்டுள்ளது.
தனியனின் அர்த்தச் சுருக்கம்
வேதாந்த சாரமறிந்த பெரியோர்கள், சொல்வர்—
வண்டுகள் ரீங்காரமிடும் வயல்சூழ்ந்த தென்னரங்கத்திருப்பதி —
யெம்மானான பெரியபெருமாள் —ரங்கநாதன் —திருப்பள்ளி
கொண்டதை உணர்த்திய —-அவனுக்குப் பள்ளி எழுச்சி பாடிய—
மஹா உபகாரரான, ஸ்திரமான கல்யாண குணங்களை
உடையவரான, தொண்டரடிப்பொடி ஆழ்வார் அவதரித்த
திருமண்டங்குடி என்பர் .
இதனால், ஆழ்வாரையும் அவர் அவதரித்த அவ்வூர்த் திருநாமத்தையும் ,
கேட்பது, சகல புருஷார்த்தத்தையும் கொடுக்கும்——என்று பொருள்படும்
Mandangudi—–place of Sri Thondaradippodi Azhvar–(near Pullamboothangudi)
This Azhvar composed ”Thiruppalliyezhuchchi” —–Subrapatham—
to awaken Sri Ranganatha from His serpent bed at Srirangam—which is
surrounded by rich paddy fields consist of hosts of honey–bees