தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—24

Posted on Mar 8 2017 - 1:53pm by srikainkaryasriadmin
Categorized as
2020

தனியன்—-தெரிவோம்—-தெளிவோம்—24
——————————————————————–

அவிதித விஷயாந்தரஸ் சடாரே
ருபநிஷதா முபகா ந மாத்ர போக :
அபிசகுண வஸாத்த தேகசேஷீ
மதுரகவிர் ஹ்ருதயே ம மாவிரஸ்து

இது ஸ்ரீ மதுரகவிகளின் ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”க்கான தனியன்.
ஸ்ரீமந் நாதமுனிகள் அருளியது—
,திருக்குடந்தையில்,”ஆராவமுதே—” என்கிறதிருவாய்மொழி அநுஸந்திக்கும்போது,
அந்த ஆயிரம் பாசுரங்களையும் அநுபவிக்க ஆசைப்பட்டவராய்அதை அறிவதற்கு திருநகரிக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ வைஷ்ணவர்களைக்
கேட்டார். அவர்கள், ”நாம் அறியோம்—ஆனால் –கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களை உமக்குச் சொல்கிறோம்—பன்னீராயிரம் முறை இதை ஆவ்ருத்தி
செய்யும்போது ஆழ்வாரைத் தரிசிக்கலாம், வேண்டுவதை அடையலாம்”என்று சொல்லி, ஆழ்வார் திரு அவதாரம் முதலாக எல்லா திவ்ய சரிதங்களையும்
சொல்லி, மதுரகவிகள் ஆட்பட்டமை யாவும் சொன்னார்கள்.இங்ஙனம் ஆவ்ருத்தி செய்யும்போது, அந்த பிரபந்த அர்த்தத்தில் ஈடுபட்டு ,
இந்தத் தனியனும் இதற்கு அடுத்ததும் அருளியதாகச் சொல்வர் ——

இவரது சரிதம் ,தனியன்–3 மற்றும் 7 லும் கொடுக்கப்பட்டுள்ளது.
எனினும்,அவ்விவரங்கள் மீண்டும் இங்கே கொடுக்கப்படுகிறது–

ஸ்ரீமந் நாதமுநிகள்—வீரநாராயணபுரம் என்கிற காட்டுமன்னார்கோவிலில்சொட்டைக்குலத்திலகரான ஈச்வர முனிகளுக்கு, கலி 3985ல் ஸோபக்ருத் வருஷம்
ஆனி ,அநுஷத்தில் அவதாரம். வேதவேதாந்த விற்பன்னர் ;யோகரஹஸ்யம்நன்கு அறிந்தவர்.மறைந்துபோயிருந்த ”திருவாய்மொழி ”முழுவதையும் மற்றும்
மற்ற ஆழ்வார்களின் திவ்ய பிரபந்தங்களையும், ஆழ்வார் திருநகரிக்குச் சென்று,அங்கிருந்தவர் நியமனப்படி, ”கண்ணிநுண் சிறுத்தாம்பு”பாசுரங்களை,
ஸ்ரீ நம்மாழ்வார் சந்நிதியில் பன்னீராயிரம் தடவை அநுஸந்தித்து , தம்முடைய யோகதசையில் ஸ்ரீ நம்மாழ்வாரை ஸாக்ஷாத்கரித்து , அவரிடமிருந்து,
திருவாய்மொழியும் மற்ற எல்லாப் பிரபந்தங்களும் உட்பொருளுடன் அறிந்து,ரஹஸ்ய மந்த்ரங்களையும் உபதேசிக்கப் பெற்றார்.
பிரபந்தங்களை, இயலும் இசையுமாகத் தொகுத்தார். முதலாயிரம், பெரிய திருமொழி ,இயற்பா , திருவாய்மொழி என்று பிரித்து தன்னுடைய மருமான்களானகீழையகத்து ஆழ்வான், மேலையகத்து ஆழ்வான் இவர்களுக்கு, தேவகானமாகப்
பாடும்பாடி , பழக்கினார் ஆதலால், இவர் , தமிழ்மறை இன்னிசை தந்த வள்ளல்.
இவருடைய பேரன் ஸ்ரீ ஆளவந்தார்.
ஸ்ரீமந் நாதமுநிகள் அருளிய நூல்கள்—ந்யாய தத்வம், யோகரஹஸ்யம்இவருடைய சிஷ்யர்களில் ,உருப்பட்டூர் ஆச்சான் முக்கியமானவர்–இந்த உருப்பட்டூர் ஆச்சான் வம்சமே அடியேனின் பாக்யம்

ஸ்வாமி தேசிகன் அதிகார ஸங்க்ரஹத்தில் ———

காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசைதந்த வள்ளல்
மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே
நாளும் தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நானிலத்தே

என்கிறார்

யதிராஜ ஸப்ததியில் —

நாதேந முநிநாதேந பவேயம் நாத வாநஹம் |
யஸ்ய நைகமிகம் தத்வம் ஹஸ்தாமலகதாம் கதம் ||

வேதங்களில் உள்ள ஆழ்ந்த அர்த்தங்களை ஆய்ந்து எடுத்து, உள்ளங்கை நெல்லிக்கனிபோலக் காட்டிய ,நாதமுனிகளை ,நமக்கு நாதனாகப் போற்றுவோம்.

முநித்ரயம்
நாதமுநி
யாமுனமுநி
ராமாநுஜ முநி

இந்த த்ரயத்துக்கு ,ப்ரதம முநி இவரே—–
கி.பி. 917ல் தாது வருஷம் மாசி மாதத்தில் சுக்லபக்ஷ ஏகாதசியில் ,கங்கைகொண்ட சோழபுரத்துக்கு அருகே ”சம்போடை”என்கிற சொர்க்கப் பள்ளத்தில்
திருநாடு அலங்கரித்தார்.

தனியனின் சுருக்கமான அர்த்தம்

சடாரே: அவிதித விஷயாந்தர : ————-
நம்மாழ்வாரைக்காட்டிலும் வேறு ஒருவரை, ”ஸ்துத்ய தேவதையாக ”அறியாதவர்.
சடாரே: உபநிஷதாம் உபகாந மாத்ர போக : ———
ஆழ்வாரின் உபநிஷத் ரூபமான திவ்ய பாசுரங்களையே போகமாகக் கொண்டவர்—போக்யமாகக் கொண்டவர்.
சடாரே:குண வஸாத் ததேகசேஷீ —————–
ஆழ்வாரின் அவதாரம் முதல் அவருடைய ,வணங்கத்தக்க கல்யாண குணங்களையும் கேட்டு தம்மிடத்தில் அநுக்ரஹித்த விசேஷமான குணங்களையும் அனுபவித்து, ஆழ்வாருக்கே ”சேஷபூதராக ”ஆனவர்.
மதுரகவி——–
ஆறிய நல்லன்புடனே குருகூர் நம்பிக்கு அனவரதம் அந்தரங்க அடிமைசெய்து
மாறனையல்லால் என்றும் மறந்தும் தேவுமற்றறியேன் என்று இருந்தவர் –மதுரகவிகள் .

மம ஹ்ருதயே ஹ்ருதயே ஆவிரஸ்து —–
அப்படியான பெருமை பொருந்திய மதுரகவிகள், என் மனஸ்ஸில் ஆவிர்ப்பவிக்கட்டும் –இதனால், மதுரகவிகளை விட்டுப் பிரியாத நம்மாழ்வாரும் ஆவிர்பவிப்பர் என்றும் கருத்தாகும் –இந்தப்
ப்ரார்த்தனைப்படியே நம்மாழ்வாரும் மதுரகவிகளோடு எழுந்தருளி,நாலாயிரத்தையும் திருமந்த்ரார்த்தங்களையும் நாதமுனிகளுக்கு யோகதசையில்உபதேசித்து அருளினார்
இப்படியாக, மதுரகவிகளை வேண்டி, அவரையே சரணமாக அடைகிறார் —–

mathurakavikal knew sri sadagopar –nammaazhvaar as his only true preceptor and he knew none other than him..He became very happy by singing these pasurams which are holy upanishad meanings .He hailed Nammaazhvar as his supreme master because of his unparalelled qualities and virtues
May this saint Mathurakavikal appear in my heart and bless me—–

About the Author

Leave A Response