”வைச்வதேவம்”

Posted on Mar 14 2017 - 2:33pm by srikainkaryasriadmin
|
Categorized as
2688

”வைச்வதேவம்” என்றால் என்ன?

——————————————————–

நமது சனாதன தர்மத்தின் விசேஷமான ஒரு அம்சத்தை பறைசாற்றுகிற ஒரு நித்ய கர்மா இது.

அதை சற்று பார்ப்போம்.

வைஸ்வதேவம் என்பது க்ருஹஸ்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு நித்ய கர்மா ஆகும்.

மாத்யாஹ்னத்திற்கு பிறகு செய்ய வேண்டியதாகும் இது. சில க்ருஹ்ய ஸூத்ரங்களின்ப்படி

விவாஹமான 15 நாட்களுக்குள் குருமுகமாக ஆரம்பிக்க வேண்டும்.

இக்கால நவ நாகரிகம் என்று சொல்கிற நாம், இதை அனுஷ்டிப்பது கஷ்டம்தான்.

இருந்தாலும் இதை பற்றி சிறிதாவது நாம் தெரிந்துக்கொள்ள முயற்சிப்பது விசேஷம்தான்.

”பஞ்சஸூனா க்ருஹஸ்தஸ்ய வர்தந்தே” :

நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ’பஞ்ச ஸூனா’ எனும் ஐந்து தோஷங்கள்

நமக்கு வந்து சேருகின்றன. அந்த தோஷ நிவர்த்தியாகத்தான் இது செய்யப்படுகின்றது.

கண்டினீ, பேஷணீ, சுல்லீ, உதகும்பம், உபஸ்கரம் ஆகியவைகள்தாம்

இந்த ஐந்து விதமான தோஷங்கள். அவைகளை சுருக்கமாக இங்கு பார்ப்போம்.

* கண்டினீ: அரிவாமனை உரல் போனறவைகளை உபயோகப்படுத்தும் போது

ஏற்படும் க்ருமி முதலியவைகளின் அழிவு

* பேஷனீ: அம்மி, குழவி, இக்காலத்தில் க்ரைண்டர், மிக்ஸீ மூலம் ஏற்படுகின்ற ஜீவஹிம்ஸை

* சுல்லீ: அடுப்பு (காஸ் ஸ்ட்வ்வாகவும் இருக்கலாம்) மூட்டுகிறோம் அல்லவா!

அப்போதும் கண்ணுக்குத் தெரியாத சில க்ருமிகள் நாசமடைவதற்கு வாய்ப்புண்டு.

* உதகும்பம்: ஜலம் நிரப்பி வைக்கும் பாத்திரங்கள் மூலம் ஏற்படுவது

* உபஸ்காரம்: அன்றாடம் துடப்பத்தினாலோ அல்லது மற்ற உபகரணங்களினாலோ

‘க்ளீன்’ செய்யும்போது நடக்கும் ஜீவஹிம்ஸை.

தான்யத்திலிருந்து அன்னமாகும் வரை பலவிதமான தோஷங்களை

போக்குவதற்கும் வைஸ்வதேவம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

காஞ்சிப் பெரியவர் என்று போற்றப்பட்ட மஹாஸ்வாமிகள்

இதைப் பற்றிச் சொன்னவை இதோ:

“யோசித்துப் பார்த்தால் இத்தனை ஜீவராசிகளுக்கு உபத்ரவத்தை உண்டாக்கிக் கொண்டு

வயிற்றை வளர்க்கிறோமே என்று துக்கம் உண்டாகிறது.

ஆனால் இதெல்லாம் நம்மால் தவிர்க்க முடியாத விஷயங்கள்.

நாம் வேண்டுமென்று இவற்றைக் கொல்லவில்லை.

எனவே நம்மை மீறிச் செய்கிற இந்தத் தோஷங்களுக்குப் ப்ராயச்ச்சித்தம் உண்டு.

அப்படி செய்கிற ப்ராயச்ச்சித்தமே வைஸ்வதேவம் என்பது”

வைஸ்வதேவம் செய்வது இக்காலகட்டத்தில் அவ்வளவு சுலபமல்ல.

நியமங்கள் நிறைய உண்டு. வைஸ்வதேவத்தை ஜ்வலிக்கின்ற ஹோம அக்னியில் செய்ய வேண்டும்.

ஒளபாஸன அக்னியில் செய்வது ஒரு சம்ப்ரதாயம்.

தனியாகவும் ஒரு குமிட்டி அடுப்பில் (விறகுக்கு கறியடுப்பு ) அனுஷ்டிப்பதும் வழக்கத்தில் உள்ளது.

வைஸ்வதேவத்தில் தேவர்கள், மனிதர், பித்ருக்கள் ஆகியவர்களுக்கும்,

14 விதமான பிராணிகளுக்கும் பலிதானம் செய்யப்படுகின்றது.

அதுமட்டுமல்ல. குயர்கள், ஸித்தர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், பன்னகர்கள்,

வித்யாதரர்கள், பிசாசர்கள் என்ற 8 தேவ கணங்களுக்கும்,

ஊர்ந்து செல்வன, வானரர்கள், நான்கு கால் பிராணிகள், பக்ஷிகள், மிருகங்கள்

ஆகியவைகளுக்கும், 14 கணங்களுக்கும் மரங்களுக்கும் பலிதானம் செய்யப்படுகின்றது.

வைஸ்வதேவம் செய்வதின் மூலம் அனைத்து ஜீவராசிகளுக்கும் பலி அளித்த பலனையும்,

புண்யத்தையும்கூட வைஸ்வதேவம் அனுஷ்டிப்பவருக்கு கிடைக்கின்றது.

வைச்வதேவம் செய்வதற்கு பிரயோக விதிகள் பொதுவல்ல

. ஸூத்ரத்தின் அடிப்படையில் அனுஷ்டானம் மாறும்.

அன்னத்தினால் வைஸ்வதேவம் செய்ய முடியாத நிலையில் ஜலத்தால் தர்ப்பணரூபமாக செய்யலாம்.

அதுவும் முடியாத சந்ந்தர்ப்பகளில் வைஸ்வதேவ மந்திரங்களையாவது படனம் செய்யலாம்

என்பது சில ரிஷிகளின் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
——————————————————————————————————————————————————————————————————————————————————————-

வைச்வதேவத்தைப்பற்றி நமது ஆஹ்நிக கிரந்தங்கள் விரிவாகச் சொல்கின்றன.
நமது பூர்வாசார்யர்கள் அனுஷ்டித்து வழிகாட்டியதை ,பின்னோர் அனுஷ்டிக்க வேண்டும்.

வைத்யநாதீயம்–த்ரி மதஸ்தர்களுக்கும் பொது—-ஆனால், நமது ஸம்ப்ரதாய
அநுஷ்டானபரர்கள், ஆஹ்நிகத்தில் அருளி இருப்பதே நமக்கெல்லாம் அநுஷ்டிக்கத்
தக்கது.

வைத்யநாதீயத்தில்,
விச்வே தேவா : | ஸர்வ தேவா 😐 தத்தைவத்யம் இதம் வைச்வதேவம் |
என்று சொல்லப்படுகிறது.

எல்லாத் தேவர்களையும், தேவதைகளாக ,உபாஸிக்கும்
கர்மா என்று பொருள்—-இங்கு , நமது பூர்வாசார்யர்கள் , தேவதைகளுக்கு எல்லாம்

அந்தர்யாமியான பகவான் –இவனை உபாஸிப்பது–என்று வ்யாக்யானமிட்டிருக்கிரார்கள்.

முமுக்ஷூ தர்ப்பண வ்யாக்யானம் சொல்கிறது—-
விச்வ தேவார்த்த : வைச்வதேவ :

அதாவது தேவர்கள் எல்லாரையும் உத்தேசித்துச் செய்யப்படும் கர்மா –ஆதலால் இது
வைச்வதேவம்.

நமது ஸம்ப்ரதாயத்தில், இஞ்ஜை திருவாராதனம் முடித்து வைச்வதேவமும் ,
பஞ்ச மஹாயஞ்ஜமும் செய்யவேண்டும் என்றும்

செய்யாதுபோனால்பகவந்நிக்ரஹம்
ஏற்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸாயம் ப்ராதர் வைச்வதேவ : கர்த்தவ்யோ பலி கர்ம ச |
அநச்ந தாபி ஸததம் அந்யதா கில்பிஷீ பவேத் ||

க்ருஹஸ்தன், இதை த் தினமும் காலையிலும் மாலையிலும் செய்யவேண்டும்.
ஏகாதசி வ்ரத தினங்களிலும் செய்யவேண்டும்.

பஞ்ச ஸு நா :க்ருஹஸ்தஸ்ய சுள்ளீ பேஷண் யுபஸ்கரீ |
கண்டிநீ சோதகும்பச்ச —||

க்ருஹத்தில் 5 இடங்களில் ப்ராணிகளை ஹிம்சிக்கிறோம் ; அழிக்கிறோம்
1. அடுப்பு 2. அம்மி, குழவி 3. முறம் இத்யாதி 4.உரல், உலக்கை அரிவாள் மணை
5.தீர்த்த பாத்ரம்
( இவை இப்போதும் வேறு பெயர்களில் தளிகை அறையில் புழங்குகிறது )
இவற்றால் வரும் பாபங்களைப் போக்க வைச்வதேவம் செய்யவேண்டும்.
இது செய்வது புருஷார்த்தம். அன்னத்தினால் செய்யவேண்டும்.

இல்லாவிடில்,
க்ருஹஸ்தன் எடுத்துக்கொள்ளும் பழம், இலை தீர்த்தம் , இவற்றில் ஏதாவது ஒன்றாலும்
செய்யலாம்.

அபாவே யேந கேநாபி பலசா கோதகா நிபி : |
ஹஸ்தே நாந்நாதிபி : குர்யாத் அத்பிரஞ்ஜலிநா ஜலே ||

கால்களை அலம்பி, இரண்டு தரம் ஆசமனம் ,மூன்று தரம் ப்ராணாயாமம் செய்து
சங்கல்பம் செய்துகொண்டு, ஸாத்விகத் தியாகத்துடன் தொடங்கவேண்டும்

இதை முடித்துவிட்டுப் பிறகு பஞ்ச மஹா யஞ்ஜம் செய்யவேண்டும்.

அநுஷ்டிக்கும் முறை அதற்கான மந்த்ரங்கள்—இவைகளை விரிவுக்கு அஞ்சி
எழுதவில்லை

அடியேன்
உருப்பட்டூர் ஸௌந்தரராஜன் ஸ்வாமி

About the Author

Leave A Response