Sri Godha Sthuthi—

Posted on Jul 26 2017 - 5:48am by srikainkaryasriadmin

ஸ்ரீ கோதா ஸ்துதி—
———————————–

இன்று 26–07–2017—- ”சூடிக்கொடுத்த சுடர்க்கொடி –கோதா நாச்சியாரின் —திருநக்ஷத்ரம்

2014ம் வருடத்தில், ஆடி மாதத்தில் திருவாடிப்பூரத்தைச் சேர , ஸ்வாமி தேசிகன் அருளியுள்ள ஸ்ரீ ஆண்டாளின் –கோதா ஸ்துதிக்கு —-
மிகச் சுருக்கமாக வ்யாக்யானம் எழுதி , ஈ –மெயிலிலும் FACE –BOOK அனுப்பினேன்

பிறகு சென்ற வருடம் –2016 ஆகஸ்டில் —–ஸ்ரீ கோதா ஸ்துதி —–அர்த்தானுபாவம் ஸமர்ப்பித்தேன் —-

அந்த அர்த்தானுபவம் இப்போது இங்கு மீண்டும் கொடுக்கப்படுகிறது——

ஸ்ரீ கோதா ஸ்துதி
——————-
ஆடி மாதம் துவங்கி விட்டது. சூடிக்கொடுத்தவள் அவதரித்த திருவாடிப்பூரம் ,
இம்மாதம் 21 ம் தேதி ,அதாவது 5–8–2016 வெள்ளிக் கிழமை ஸ்ரீ ஆண்டாள் திருவவதார தினம்.
வைகுண்டவாஸி ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் , ஸ்ரீ கோதா ஸ்துதி உபன்யாஸம் நடைபெறும்.
பரம போக்யமாக இருக்கும். ஸ்வாமி தேசிகன் அருளிய மிக அருமையான ஸ்தோத்ர நூல்.
ஒவ்வொரு ச்லோகத்துக்கும், வியாக்யானம் சொல்லும்போது, ஸ்ரீ ஸேவா ஸ்வாமியின் சொல்லாற்றலை வியப்பதா…. ஸ்வாமி தேசிகனின் கவித்வத்தை வியப்பதா என்று திக்கு முக்காடிப் போவோம் .ஆசார்யன் ஸ்வாமி தேசிகன் அருளிய கோதா ஸ்துதியை அனுசந்தித்தால்,
ஸ்ரீ ஆண்டாள் அருள் நிச்சயம் அந்த அச்யுதன் அருளும் நிச்சயம் என்கிற
அர்த்தவிசேஷத்தை , அழகாக எடுத்துச் சொல்வார் எவ்வளவோ இன்னல்களுக்கிடையில், அங்கங்கு சென்று ஆதரவு திரட்டி, ஆசார்யன் அருளிய ஸ்தோத்ரங்களை அர்த்தத்துடன் அச்சிட்டு ,இலவசமாக விநியோகித்தவர்.
.இது கோதா பரிணயம் …விவாஹத்தில் வரும் முக்ய விஷயங்கள் இதில் சொல்லப்படுகின்றன …..கன்னிப் பெண்கள் ,கோதா ஸ்துதியை அந்தரங்க சுத்தியுடன் பாராயணம் செய்து , நல்ல இல்வாழ்க்கையில் ஈடுபட்டு , அடுத்தடுத்த சந்ததிகளுடன் நலமுற வாழ்வதும் , மாதர்கள் இதைப் பாராயணம் செய்து நன்மைகள் பெற்றதையும் அடியேன் பார்த்து வருகிறேன்.
.
ஸ்ரீ ஸேவா ஸ்வாமியை மானசீகமாகத் தெண்டனிட்டு,அடியேனின் மந்த புத்திக்கு எட்டியவரை ,
ஸ்ரீ கோதா ஸ்துதியைச் சொற்ப வரிகளில் விளக்குகிறேன்

ஸ்ரீ மான் வேங்கடநாதார்ய : கவிதார்க்கிக கேஸரீ |
வேதாந்தசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||

ஸ்ரீகோதா ஸ்துதி
———————————-
1. ஸ்ரீ விஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீ ரங்கராஜ ஹரி சந்தன யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமி வாந்யாம்
கோதாமநந்ய சரண : சரணம் ப்ரபத்யே ||

ஸ்ரீ பெரியாழ்வாரின் குலத்தில் தோன்றிய கற்பகக்கொடி ; அழகிய மணவாளனாகிய ஹரி சந்தன மரத்தைத் தழுவி விளங்கும் கொடி ;; பூமிப் பிராட்டியின் அவதாரம்; கருணையே உருவாகி, பெரிய பிராட்டியைப் போல இருப்பவள்; இப்படிப்பட்ட கோதா பிராட்டியை ,எந்தப் புகழும் இல்லாத அடியேன் சரண் அடைகிறேன்
ஸ்லோகத்தின் முதல் வரி, ஸ்ரீ ஆண்டாளின் அவதாரத்தையும் ,இரண்டாவது வரி, அவளது திருக் கல்யாண விசேஷத்தையும் ,மூன்றாவது வரி, ஸ்ரீ மஹா லக்ஷ்மியைப்போலக் கருணையே உருவானவள் என்றும், அப்படிப்பட்ட கோதா தேவியைப் புருஷகாரமாகப் பற்றி சரணம்
அடைகிறேன் என்று நாலாவது வரியிலும் சொல்கிறார்
She is the kalpaka creeper in the flower garden of sri Vishnu Chiththa which is seen entwined with Sri Rangaraja ,the Harichandana tree . She is Bhoodevi and appears to be another Goddess Lakshmi because of Her mercy guna
I, who have no other refuge seek refuge in such Goddess-Gotha

2.வைதேசிக : ச்ருதிகிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே |
இத்தம் விதந்தமபி மாம் ஸஹசைவ கோதே
மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ் த்வதீயா ||

உனது மஹிமை ,வேதங்களுக்கும் எட்டாதது; என்போன்றவர்களின் வார்த்தைகளால் அது எப்படி
சொல்லத்தகும்; இவ்வுண்மையை அறிந்த என்னையும், உனது குணப்ராபங்கள் என் மௌனத்தைக் கலைத்து, தேவரீரைப் பற்றிப் பேச வைத்துவிட்டது.த்ரி விக்ரமாவதாரத்தை ஒரு உருவில் அடக்கி விடலாம்; உனது மஹிமையை ஒருவராலும் அடக்க இயலாது; நானே பேசினால் ” முகரதை” என்கிற குற்றம் வந்து விடும் ( பலர் வாய்க்கு வந்தபடி பேசுவது) ஆனால் உன் குணங்கள் என்னைப் பேசவைக்கின்றன
hey…Goda Devi! your glory is far beyond even the countless Vedic tests; Though adiyen is fully aware of this, the attributes of you which are haters of silence on my part make me to praise you ( speak about you)

3.த்வத் ப்ரேயஸ : ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீய மணிநூபுர சிஞ்ஜிதாநாம் |
கோதே த்வமேவ ஜனனி த்வத பிஷ்ட வார்ஹாம்
வாசம் ப்ரஸன்ன மதுராம் மம சம்விதேயா ; ||
கோதே …நீ வாக்கை அளிப்பவள்…உனது நாதனுடைய செவிகளுக்கு அமுதம் போன்று இருக்கும்படியாயும், உனது திருவடிகளில் அணிவிக்கப்பட்டிருக்கும் ரத்னச் சலங்கையின் ஓசைகளுக்கு நிகராக இருக்கும்படியாயும் உன்னைத் துதிக்கும் சொற்கள் தெளிவும், இனிமையுமாக அடியேனிடமிருந்து வெளி வரும்படியாக ,அருள்வாயாக
உன் திருவடிகளில் அணிந்திருக்கும் நூபுர மணி நாதத்தை, இரு செவிகளாலும் ஆதரித்து அனுபவிக்கிறான்,அரங்கன். அப்போதே உன் கரத்தலம் பற்றத் தீர்மானி த்தானோ !
Mother Goda !You alone should confer on me the lucid and sweetest words, which will be delightful like netar
to the sacred ears of your Nathan, which will be equal to the beautiful and sweet sounds of your anklets studded with very fine stones and which are very competant to adequately praise you

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

4. க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுநாநுபாவம்
தீர்த்தைர் யதாவத வகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடாக்ஷத்
வாச : ஸ்ப்புரந்தி மகரந்தமுச : கவீநாம் ||

க்ருஷ்ண சம்பந்தத்தினால் , உனது வாக்காகிய சரஸ்வதி , யமுனையாகவும் ஆகிறது.
இந்த யமுனைத் துறைகளில் இறங்கியவர்கள், உனது கிருபையால் மேதா விலாசம் வரப்பெற்று, மஹா கவிகளாக மாற்றப்பட்டு, அபார க்ஜானத்தை அடைகிறார்கள். அவர்களுடைய வாக்குகள் தேனைத் தெளிப்பதுபோல் உள்ளது.
அந்த சரஸ்வதி ,அங்கு—கங்கையும் ,யமுனையும் கலக்குமிடத்தில் — அந்தர்வாஹினி
உனது சரஸ்வதி (வாக்கு) யமுனையாகத் தோன்றுகிறது. அதனால், சரஸ்வதிக்கும் துறைகள் ஏற்பட்டன ( இறங்கி நீராடும் துறைகள்) அதில் இறங்கி ஸ்நானம் செய்பவர்கள் உனது கடாக்ஷத்தால், கவிகளாக ஆகி, அவர்களுடைய வாக்குகள் தேனைப் பொழிகின்றன.

Goda ! your words ( Thiruppaavai, Naachchiyaar thirumozhi ) have acquired the glory of the ever sacred river Yamuna because of their affection with Sri Krishna. Poets immerse in them with the anugraha of acharyas and subsequently their intellectual beauty begin to blossom through which honey showers

5. அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரதீக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த : |
தன்னஸ்சிதம் நியமிதஸ் தவ மௌளி தாம்நா
தந்த்ரீ நிநாத மதுரைஸ் ச கிராம் நிகும்பை : ||

என்போன்ற அபராதிகள், பகவானுக்கு பிரதிகூலமே செய்தாலும், எங்களுக்கு முகுந்தன் கருணை செய்கிறான். அப்படி செய்யக் காரணம், ஒன்று , தன்னைக்காட்டிலும் பெரியதொரு சக்திக்குக்கட்டுப்பட்டு அடங்கி இதைச் செய்வது ;இரண்டாவது, முகுந்தனைக் கட்டிப்போட்டுக்
கையெழுத்து வாங்குவார் இருக்க வேண்டும். நீ, உனது திருமுடியில் சூடிக் கொடுத்த பூமாலைகளாலும் , உன்னுடைய பாமாலைகளாலும், முகுந்தனை வசப்படுத்தி வைத்திருக்கிறாய்.

Goda ! Sri Mukundan very quickly extends His anugraha NOW even to jeevas like us who have been been committing harmful misdeeds from countless janmas. This anugraha must certainly be the result of His being bound by your crest i.e. flower garlands and by your sweet poems on Him

6.சோணா தரேபி குசயோரபி துங்கபத்ரா
வாசாம் ப்ரவாஹ நிவஹேபி ஸரஸ்வதீத்வம் |
அப்ராக்ருதைரபி ரஸைர் விரஜா ஸ்வபாவாத்
கோதாபி தேவி கமிதூர் நநு நர்மதாஸி ||

தாயே…..உன்னை சேவிக்கும்போது, வார்த்தைகள் வெள்ளம்போல் வருகின்றன. ஏனென்றால் நீயே வெள்ளமாக இருக்கிறாய்.உனது திருநாமமே கோதா…அதாவது.. கோதா ( கோதாவரி ) ஆனாலும்,
உன் திருவதரத்தை சேவித்தால், சிவந்த ஜலத்தை உடைய சோணையாறாகத்( சோண பத்ரா )
தோன்றுகிறாய். சொல் வளத்தில் ஸரஸ்வதி நதி, அந்தர் வாஹினியாக இல்லாமல், பஹிர் வாஹினியாக ஆகிறாய். திவ்யமான ச்ருங்கார ரஸங்களினால் (ஜலம்—தீர்த்தம்) ஸ்வயம் வ்ரஜை நதி ஆகிறாய் –வ்ரஜை —குற்றமற்றவள்–. உன் கணவனுக்கு, நர்மதை ( இன்பம் தருபவள்– பரிஹாச வார்த்தைகளைச் சொல்லி மகிழ்விப்பவள்– நர்மதை நதி ) ஆகிறாய். மார்பகங்களில் , நீ , துங்கபத்ரை —துங்கமான தன்மை, பத்திரமான தன்மை —துங்கபத்ரை நதியாக ஆகிறாய்.

இது ஆறாவது ஸ்லோகம். ஆறுகளைப் பற்றியே நிரூபணம். ஆறு ஆறுகள்—கோதாவரி,
சோணையாறு, சரஸ்வதி நதி, வ்ரஜா நதி ,நர்மதா, துங்கபத்ரா …….

Oh,,,Devi… You are Goda—godavari river. … though your lips are sona river, your words are sarasvathi river. By your celestial nature , you are vraja river and by enjoyment by your Husband you are narmada and thungabatra
Adiyen salute You

7.வல்மீ கத : ச்ரவணதோ வஸூதாத் மனஸ் தே
ஜாதோ பபூவ ஸ முநி ; கவிஸார்வபௌம ; |
கோதே கிமத்புதமிதம் யதமீ ஸ்வதந்தே
வக்தாரவிந்த மகரந்த நிபா : ப்ரபந்தா : ||

நீ கோதை ! உன் வாக்கு மிகப் போக்யமானது. நீ பூமியே வடிவானவள். புற்று என்று சொல்கிறார்களே அது உன் செவி போல் உள்ளது. அதற்கு வல்மீகம் என்று பெயர். அதிலிருந்து உண்டானவர் வால்மீகி .ஆதிகவி உனது செவியிலிருந்து பிறந்தவருக்கே எவ்வளவு வாக்கு வன்மை. கவித்திறன். அப்படியிருக்கும்போது, உன் திருவாக்கிலிருந்து, நேராகவே அவதரித்த பாசுரங்கள் ,தேனினும் இனியதாக இனிப்பதற்குக் கேட்பானேன் ! இது அத்புதம்; அதி அத்புதம்.

.Goda ! The Maharishi, who emerged from the ant–hill, which is your ear, became Mahaakavi —emperor among all
kavis. This is true and there is no wonder in these honey–like pasurams (prabandas)flowed from your lotus face

8 போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணய பாவநயா க்ருணந்த : |
உச்சாவசைர் விரஹ ஸங்கமஜை ருதந்தை :
ச்ருங்கார யந்தி ஹ்ருதயம் குரவஸ் த்வதீயா : | |

பகவான் உனக்கு மிக மிகப் பிரியமானவன் அவனை உன்னைப் போல் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாருக்கும் வந்துவிட்டது.உள்ளம் கனிந்து ,அவனையே நினைத்துப் பேசுகிறார்கள். ப்ரேமத்தை வெளிப்படுத்துகிறார்கள். ப்ரேமமும் பக்தி தானே. பக்தி ச்ருங்காரமாக மாறிவிட்டது.அவர்கள் ஆண்களாகப் பிறந்தாலும், பகவானிடம் ஈடு பட்டு, அனுபவிக்கும் வழியை உன்னிடம் கற்றுக்கொண்டார்களோ ! உனக்குப் பின் வந்தவர்கள், இப்படிச் செய்தால் உன்னிடம் கற்றுக் கொண்டார்கள் எனலாம்;ஆனால், உன் திருத் தகப்பனார் கோஷ்டியில் சேர்ந்த வர்களே இவ்வாறான நிலையை அடைந்தார்கள் என்றால், அது ,அதிசயம் அல்லவா !

Hey….Goda….. with the desire to enjoy your beloved Lord ,like you, your elders transmute their bakthi into the prema
indulging in various ways such of those born of seperation , and union

9. மாத : ஸமுத்தி தவதீ மதி விஷ்ணுசித்தம்
விசவோ பஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் |
தாபச்சிதம் ஹிம ருசேரிவ மூர்த்தி மந்யாம்
ஸந்த : பயோதி துஹிது : ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||

வாக்கைக் கொடுத்த தாயே ! நீயே பெரிய பிராட்டி. அவளுக்கும், உனக்கும் வேற்றுமை இல்லை. விஷ்ணுவின் ஹ்ருதாயத்தில் சந்த்ரன் தோன்றினான்; நீயும் விஷ்ணுவைச் சித்தத்தில் கொண்டவளாய்த் தோன்றினாய்; சந்திரனைப்போல் சந்தோஷப் படுத்துகிறாய்; நீ சந்திர சஹோதரி ஆகிறாய்; உலகம் வாழ அமுதப் பாசுரங்களை அளித்தாய்; உனக்கு அம்ருத சம்பந்தம் உள்ளது; பாற்கடலில் உதித்த ,பிராட்டிக்கு உள்ள தன்மைகள் எல்லாம் உன்னிடம் உள்ளன; அதனால், பிராட்டியின் உடன்பிறந்தவள் என்றே கூறுகின்றனர்; தகப்பனாரோ விஷ்ணுசித்தர் —விஷ்ணுவிடம் சித்தத்தை உடையவர். பெரியாழ்வார் . நீங்கள் இருவரும் உலகங்கள் உய்யுமாறு அமுதத்தை, கிரணங்களாலும், வாக்குகளாலும் வாரி வழங்குகிறீர்கள்

Oh mother you are not different from Periya Piraatti. Moon appeared from the mind of Vishnu. You are having Vishnu in your mind…You are sister of Chandra . You have given sweet pasurams You and your father Vishnuchiththar are giving amrutha through rays and speeches (pasuram) for the salvation of the entire world

10.தாதஸ் து தே மதுபித : ஸ்துதிலேச வச்யாத்

கர்ணாம்ருதை : ஸ்துதி சதை ரந வாப்த பூர்வம் |
த்வந்மௌளி கந்த ஸு பகா முப ஹ்ருத்ய மாலாம்
லேபே மஹத்தர பதா நுகுணம் ப்ரஸாதம் ||

ஹே….கோதா….உன் பெருமை அளவிடற்கு அரியது. உன் நாதனாகிய பகவான் ,ஸ்துதி ப்ரியன்.
மது என்கிற அசுரனை மாய்த்தவன். உன் தகப்பனார் , பகவானைப் பலப் பலப் பாசுரங்களால் பாடினார்.அப்போதெல்லாம் அவருக்குப் பலன் கிட்டவில்லை. உன் கூந்தலில் சூடிய மாலைகளைக் களைந்து , அவனுக்கு அணிவித்த பிறகுதான் அவருக்குப் பெரியாழ்வார் என்கிற விருதைக் கொடுத்தான்.

Goda…..your father had not got before, the title of “Periyaazhvaar” from the Bhagavan inspite of submitting hundreds and hundreds of pasurams . But after you garlanded Him with flower and thulsi garlands and after your submission of sweet pasurams your father –Vishnuchiththar —became “Periyaazhvaar”

11.திக் தக்ஷிணாபி பரி பக்த்ரிம புண்ய லப்யாத்
ஸர்வோத்தரா பவதி தேவி தவா வதாராத் |
யத்ரைவ ரங்கபதிநா பஹூ மாந பூர்வம்
நித்ராளு நாபி நியதம் நிஹிதா : கடாக்ஷா : ||

ஹே தேவி….நீ அவதரித்ததால், இந்தத் தக்ஷிண தேசமே ஸர்வோத்தரமாக ஆகிவிட்டது
ஸ்ரீ ரங்க பதியான ரங்கநாதன், உறங்குகிறவன் போல, தெற்குத் திக்கையே நோக்கி
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உன் அவதாரத்தை எதிர் நோக்கும் கருத்துடையான் ஆனான்

hey Devi….By your avathara in the south, the direction, though known as south became north of everything Srirangapathi’s looks even when He sleep are permanently fixed in that direction

12. ப்ராயேண தேவி பவதீ வ்யபதேச யோகாத்
கோதாவரீ ஜகதிதம் பயஸா புநீதே |
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதீ ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா : ||
கோதாப் பிராட்டியே——-கோதாவரி நதி உன் பெயரைத் தாங்கி உள்ளதால் அல்லவா, இந்த உலகத்தைத் தன்னுடைய தீர்த்தத்தால் நனைத்துப் புனிதமாக்குகிறது. கங்கை முதலிய நதிகளும் இங்கு கோதாவரி நதியில் வந்து தங்கித் தன பாவங்களைக் களைந்து ,புண்ய நதியாக ஆகிறது.
கோதா என்கிற உன் திருநாமத்தின் பெருமை வர்ணிக்க இயலாதது.

The river Godavari purifies the world by its theerththa as it bears your name “Goda’. The rivers such as Ganga mingles with the river Godavari at times and stay there long time to wash out papas and thereby become pure as sacred river The reason for all these is the importance of your “Nama” as Goda .

13. நாகேசய ஸுதநு பக்ஷிரத : கதம்தே
ஜாத : ஸ்வயம் வரபதி :புருஷ : புராண : |
ஏவம் விதா : ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா ;
ஸந்தர் சயந்தி பரிஹாஸகிர :ஸகீநாம் ||

அழகான மெல்லிய திருமேனியை உடையவளே …”..நீ வரித்த புருஷன், பாம்பில் படுக்கிறான்;
பக்ஷியின் மீது அமர்ந்து செல்கிறான்; புராண புருஷன் …..மிக மிக வயதானவன்; நீ ,எப்படி இந்த வரனைத் தேர்ந்தெடுத்தாய் ….” என்று உன் தோழிகளின் பரிகாசப் பேச்சுக்கு ஆளாகி இருக்கிறாயே
இவைகளைக் கேட்டு நீ பூரிக்கிறாய். குணமாகவே எடுத்துக் கொள்கிறாய். இவையெல்லாம் தத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றன என்று உன் அன்பை வெளிப்படுத்துகிறாய்

Goda Devi….. Your sahis make fun and mockery telling that your bride-groom -elect reclines on a serpent , flying on a bird and a purana purusha You take all these as His virtues and that these denote “thatva” You show utmost affection on this Purusha

14.த்வத் புக்த மால்ய ஸூர பீக்ருத சாறு மௌளே :
ஹித்வா புஜாந்தர கதாமபி வைஜயந்தீம் |
பத்யுஸ் தவேச்வரி மித : ப்ரதிகாத லோலா :
பர்ஹா த பத்ர ருசி மார சயந்தி ப்ருங்கா : ||

லோகேச்வரீ …நீ சூடிக் களைந்து , எம்பெருமான் அணியக் கொடுத்த மாலை, அவன் திருமுடிமேல்
அமர்ந்து வாசனை வீசுவதை உணர்ந்த வண்டினங்கள், அவன் அணிந்திருந்த வைஜயந்தி மாலையை விட்டு விட்டு, மேலே பறந்து ஒன்றுக்கொன்று தள்ளிக் கொண்டு ,வட்டமிட்டு, எம்பெருமான் திருமுடிக்கு மேலே மயில் தோகையால் ஆன குடை போல ஆகி அவனது திருமுடிக்கு நிழலைக் கொடுக்கிறது.

Hey, Goddess …honey–bees which were squeezing honey from Vaijayanthi garland adorned by the Lord in His chest ,
dashed upwards ,smelling the fragrance from the garland of yours which is now on His head competing one another and formed as a circle of peacock-feathers protecting His head as an umbrella

15.ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங் கமாபி
ராகாந் விதாபி லளிதாபி குணோத்தராபி |
மௌளி ஸ்ரஜா தவ முகுந்த கிரீட பாஜா
கோதே பவத்ய தரிதா கலு வைஜயந்தீ ||

கோதா பிராட்டியே ——நீ , மலர் மாலையை, உன் திருமார்பில் சூடிப் பிறகு அதைக் களைந்து, எம்பெருமான் சூடிக் கொள்ளச் செய்தாய் .அவன் அதைத் திருமுடியில் கிரீடத்தில் அணிந்தான். இப்போது மணம் செய்துகொண்ட இளையாளைத் தலையாலே ஏற்று, மூத்தாளான வைஜயந்தியை மார்பிலேயே வைத்துவிட்டான். உன்னுடைய மாலை, வைஜயந்தி மாலை இரண்டுமே மணம் மிக்கவை; இரண்டிலுமே சிகப்பு உண்டு; இரண்டுமே அழகு; இரண்டுமே ம்ருதுவானவை; இவ்வளவு விஷயங்கள் பொதுவாக இருந்தும், உனது மாலை அவன் திருமுடியில் ஏறியுள்ளது ,உன் பெருமையைச் சொல்கிறது.

Hey—-goda—-Vaijayanthi garland is always full of fragrance;it’s always nearer to the heart of Emperuman; it’s having plenty of colour flowers ;it’s very beautiful; But, it has been lowered by your flower garland which is adorned on the crown of Emperumaan . This speaks your glory

16. த்வந்மௌளி தாமநி விபோ : சிரஸா க்ருஹீதே
ஸ்வச்சந்த கல்பித ஸபீதி ரஸ ப்ரமோதா : |
மஞ்ஜூஸ்வநா மதுவிஹேர விதது : ஸ்வயம் தே
ஸ்வாயம்வரம் கமபி மங்கள தூர்ய கோஷம் ||

கோதா தேவியே—–உன் மாலையை, எம்பெருமான் சிரஸா ஏற்றுக்கொண்டான். தேனைத் தேடும் வண்டுகள், அந்த மாலையில் உள்ள ரஸங்களைத் தங்களுடைய ஆசைக்கு ஏற்பப் பருகி, அதிக ஆனந்தத்துடன் ,ரீங்காரமிட்டு அழகாகப் பாடுகின்றன. அந்த ரீங்கார ஓசையே ஸ்வயம்வரத்துக்கான வாத்திய கோஷம் போல் உள்ளது. நீ சூடிக் கொடுத்த மாலையில் , மாலை மாற்றுதலும், அதற்கான வாத்திய கோஷமும் —ஆஹா —-

The honey–suckers —bees—are having honey from the garland that you offered to Emperumaan. . With utmost joy, the sweet-voiced bees played the unparallelled and auspicious divine music at your svayamvara that includes exchange of garlands between both of You

17.விச்வாயமாந ரஜஸா கமலேந நாபௌ
வக்ஷஸ் ததலே ச கமலா ஸ்தந சந்த நேந |
ஆமோதி தோபி நிகமைர் விபுரங்க்ரி யுக்மே
தத்தே நதேந சிரஸா தவ மௌளி மாலாம் ||

தாயே—-கோதா—-
பகவானிடம் மூன்று மணங்கள் உள்ளன ; பகவானின் திருநாபியில், கமலப் பூவின் மணம் ;அதில் உள்ள ஒவ்வொரு மகரந்தப் பொடியும், ஒவ்வொரு உலகம்; அனந்த ப்ரஹ் மாண்டங்களையும் நாபியில் வைத்துள்ளான் என்பது ப்ரமாணமல்லவா ! அவனது திரு மார்பில் ,வக்ஷஸ்தலத்தில்,
மஹா லக்ஷ்மி இருப்பதாலே அவளது திருவடியில் சாத்திய செம்பஞ்சுக் குழம்பின் ரஸம், அவளது திருமார்பில் சாத்திய திவ்ய சந்தனத்தின் மணம் —மூன்றாவது, அவனின் திருவடியின் மணம் . வேதங்களின் மணம் , திருவடிகளில் மணக்கிறது; இரண்டு திருவடிகள்—தமிழ், வடமொழி வேதங்களின் மணம் என்றும் புகழ்ந்து உரைப்பர். இப்படி,மும்மணம் பொருந்திய மணவாளன்—-அழகிய மணவாளன்—இம்மணங்களைஎல்லாம் விட்டு, நீ சூடிக் கொடுத்த மாலைகளின் மணத்தைத் திருமுடியாலே ஏற்றான் இங்கிதம் தெரிந்தவன் என்கிறார் ,ஸேவா ஸ்வாமி ..அவனோ நெடுமால்; நீயோ சிறு பெண்;உனக்குத் தலை குனிந்து, உன் மாலையை ஏற்றுக் கொண்டானே —உனக்குத் தலை வணங்கிய பெருமை உனக்கா ? அவனுக்கா?

He is the Supreme ruler—-He is having 3 fragrants—fragrant in His navel by the lotuses whose pollen dust becomes universe , fragrant in His chest by the sandal-paste on Mahalakshmi’s bosom, and fragrant in His twin feet
by the Vedhas —( tamil and sanskrit Vedas also)
But, ignoring all the three, He took your flower garland with His bent head . Is it glory to you ? or to Emperumaan?

18.சூடா பதேந பரிக்ருஹ்ய தவோத்தரீயம்
மாலாமபி த்வதளகை ரதி வாஸ்ய தத்தாம் |
ப்ராயேண ரங்கபதிரேஷ பிபர்த்தி கோதே
ஸௌபாக்ய ஸம்பதபிஷேக மஹாதிகாரம் ||

கோதாப்பிராட்டியே….நீ சாத்திய பட்டு வஸ்த்ரத்தைத் தலையில் அணிந்து இருக்கிறான்; உன் கூந்தலினால் வாசனை சேர்க்கப்பட்ட மாலையையும் மேலே திருமுடியில் அணிந்து இருக்கிறான்;
அதாவது உன் மேலாடையை ,அவன் திருமேனியின் முடியிலே கட்டி வைத்துக்கொண்டான். அவன் உடுத்துக் களைந்தது ,எங்களுக்குப் போக்யம்; நீ உடுத்திய மேலாடை அவனுக்குப் போக்யம்
–ஆடையை அவனே எடுத்துக் கொண்டான்; மாலையை நீ அளித்தாய்; இரண்டும் அவன் திருமுடியிலே ! இத்தனை நாள் இல்லாத ஸௌபாக்யம் ,ரங்கபதிக்குக் கிடைத்தவுடன், புதியதோர் மிடுக்கும், செல்வமும், அதிகாரமும் பெற்றுப் பிடிபடாத பெருமையில் இருக்கிறான்

Goda! by receiving your upper cloth ( or taken by Him ) and fragrant flower garland , Sri Rangapathi appears to have qualified Himself for being crowned on the throne of abundent wealth and prosperity . His cloth is bhagyam to us and your upper cloth is bhagyam to Him

19. துங்கை ரக்ருத்ரிமகிர : ஸ்வய முக்த மாங்கை :
யம் ஸர்வகந்த இதி ஸாதர முத்வ ஹந்தி |
ஆமோத மந்யமதி கச்சதி மாலிகாபி :
ஸோபி த்வதீய குடிலாளக வாஸி தாபி : ||

கோதா மாதா! அநாதியான வேதங்களின் சிரஸ் என்று சொல்லப்படும் உபநிஷத்துக்கள், பகவானை “ஸர்வ கந்தமயன்” , “ஸர்வகந்தன் ‘ என்று கொண்டாடி தங்கள் சிரஸ்ஸில் தரிக்கின்றன.
அத்தகைய முழுதும் மணம் கமழும் எம்பெருமான், நீ, உனது சுருண்ட கூந்தலில் சாத்திக் கொண்டுப் பிறகு சமர்ப்பிக்கப்பட்ட மாலைகளைத் தன சிரஸ்ஸில் வகித்து
, விலக்ஷ்ணமான , பரம போக்யமான , வாசனையை அடைகிறான்.

The Vedas, by their lofty heads, i.e. upanishads , hail on their own accord the Bhagvan, as the all-fragrant Being,
He is “Sarvaghanthan” While so, He attains further fragrance by the garlands rendered by you by keeping them in His head . Parama bhogyam…..parama bhogyam.

20. தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே
த்வந்மௌளி மால்யபர ஸம்பரணேந பூய : |
இந்தீரவ ஸ்ரஜ மிவாதததி த்வதீ யாநி
ஆகேகராணி பஹூ மாந விலோகி தாநி ||

ஸமஸ்த லோக நாயகனான —எல்லா உலகங்களுக்கும் பிதாவான, ரங்கநாதனின் உத்தம அங்கமானது, நீ, உன் உத்தமாங்கத்தில் தரித்து சமர்ப்பித்த மாலையால் –அதைத் தரித்ததால்,
தந்யமாயிற்று மேலும், நீ, அடங்காத காதலுடன் அரைக்கண்களால் , பார்வையை அவன்மீது வீசுகிறாய். அந்தப் பார்வை அலை அலையாக எழுந்து, அவன் கழுத்தில் நீலோற் பல (கருநெய்தல்)
மாலைபோல் அமைந்துள்ளது. தலை குனிந்து நீ நாணி நிற்கிறாய்; ஆனால், அவனோ, நீ அவனைப் பார்க்கவேண்டும் என்கிற ஆசையில், நீ ஸமர்ப்பித்த எல்லாவற்றையும், திருமுடியில் ஏந்தி இருக்கிறான்

He is ” Lok Nayak ” He is the father of all the worlds. His head is highly blessed because of your fragrance garland which you adorned ,before your submission to Him.
The loving side long glances of your half-closed eyes place another garland of blue lotuses on Him,

21. ரங்கேச்வரஸ்ய தவ ச ப்ரணயாநு பந்தாத்
அந்யோந்ய மால்ய பரி வ்ருத்தி மபிஷ்டு வந்த : |
வாசால யந்தி வஸூதே ரஸிகாஸ் த்ரி லோகீம்
ந்யுநாதிகத்வ ஸமதா விஷயைர் விவாதை : ||

பூமியில் அவதரித்த கோதா தேவியே…..நீயும் ரங்கநாதனும், மாலைகளை ஒருவருக்கொருவர்
பரிமாறி, மாலை மாற்றிக்கொள்ளும்போது, சூழ இருக்கும் ரஸிகர்கள் /பக்தர்கள், உங்களில் ஒருவரைத் தாழப் பேசியும், ஒருவரை உயர்த்திப் பேசியும், இருவரையும் சமமாகப் பேசியும், இந்த ஆரவாரம் , உலகம் முழுவதும் பரவி, எதிரொலிக்கச் செய்கிறார்கள்.

hey…Bhoodevi…..The mutual exchange of divine garlands between Sri Ranganatha and you , as a result of extreme affection/love between both of you, is highly praised by rasikas, who, by doing so, fill the entire worlds with words of praise resultng in a debate, about the inferiority ,superiority and equality between both of you

22.
தூர்வாதள ப்ரதிமயா தவ தேஹ காந்த்யா
கோரோசநா ருசிரயா ச ருசேந்திராயா : |
ஆஸீதநுஜ்ஜித சிகாவள கண்ட்ட சோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரி

ஹே…கோதாப் பிராட்டியே,,, பெரிய பிராட்டியின் நிறம் பொன் நிறம்; உன்னுடைய நிறம் அருகம்புல் பச்சை; பகவானின் நிறம் நீலம் ; பகவானை சேவிப்பவர்கள், திருமேனியில் ,
மயில் கழுத்து நிறம் —-அதாவது, பொன் நிறம், அருகம்புல் நிறம் மற்றும் நீல நிறம் சேர்ந்து—மயில் கழுத்துச் சாயல் —திருமேனியில் விளங்கிட, மங்கலத்தைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. திருக்கல்யாணோத்ஸவம் முடிந்து ,நீங்கள் ஏக ஆஸனத்தில் எழுந்தருளி இருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறது.

The colour of Emperuman (blue) by mingling with the lustre of your colour (doorva grass) and with the charming splendour of Mahalakshmi ( Gorochana) acquired the inseparable loveliness of the neck of beautiful peacock . This darshan gives auspiciousnesswhich shows that you are by the side of Emperuman along with Periya Piraatti in ” Ekaasanaa” after your divine marriage

23.
அர்ச்சயம் ஸமர்ச்சய நியமைர் நிகம ப்ரஸூநை
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதஸ் சிரம் நிரவிசந் நிஜ மாதிராஜ்யம்
மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே ||

கோதாப் பிராட்டியே….நீ, ரங்கநாதனை அடைந்தபிறகு, அவன் உன்னோடும், எப்போதும் பிரியேன் என்று சொன்ன பெரிய பிராட்டியோடும் கூடி நின்று, அனைவர்க்கும் நாதன் ஆனான். எல்லாரும் ஆராதிக்கும்படி, அர்ச்சாவிபவத்தில் , எழுந்தருளி இருக்கிறான். இக்ஷ்வாகு வம்ஸத்தைச் சேர்ந்த,
மனு, மாந்தாதா முதலிய ராஜாக்கள்–மகான்கள், நியமத்தொடு வேதங்களாகிய மந்திர புஷ்பங்களினால், உன்னை அர்ச்சித்து, பெரியதான ராஜ்யத்தை அடைந்தார்கள். காலத்தினால், ரங்கநாதன் முன்னும், நீ பின்னும் எண்ண வேண்டாம். பூமியின் உருவில் நீ என்றும் ரங்கநாதனுடன் இருப்பவளே!

Hey…mother Goda….those highly placed kings of Manu, Manthaathaa enjoyed and ruled the earth for long periods ,only after worshipping Sri Ranganatha with your company and with Kamala. with flowers of vedhas… You are earth … you are Goda You are ever with Sri Ranganatha with Periya Piraatti.

24
ஆர்த்ரா பராதிநி ஜநேப்ய பிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமாநே |
பார்ச்ச்வே பரத்ர பவதீ யதி தத்ர நாஸீத்
ப்ரா யேண தேவி வதநம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||

ஹே…தேவி.. நீ எங்களைக் காப்பாற்றுகிறாய் …ஜீவன், கணக்கிலாப் பாவங்களைச் செய்து, பெரிய பாவியாகி கஷ்டப்படுகிறான். அவன் செய்த பாவங்கள் , அவனைத் துன்புறுத்தும்போதே, அவனைக் காப்பாற்றுங்கள் என்று பெரிய பிராட்டி எம்பெருமானின் வலதுபுறம் நின்று விண்ணப்பிக்கிறாள் .
அது தகாத வேண்டுகோளாகப் படுகிறது; எதிரே திருமுக மண்டலத்தைத் திருப்புகிறான்; பகவானுக்கு எதிரே அபராதிகள்; அவர்களைப் பார்க்க மனம் இசையவில்லை ; இடது பக்கமாக முகத்தைத் திருப்புகிறான்; ஹே…கோதா.. நீ அங்கே நின்று , நீயும் அவனை வேண்டுகிறாய்;நீ, அங்கு , நித்ய வாஸம் செய்வதால்தான் —பகவானுக்கு இடப்புறம் நின்று பகவானை வேண்டுவதால்தான்,
அந்தக் கார்யம் அனுகூலமாகிறது; நாங்கள் ,பகவானின் க்ருபையைப் பெற்றோம்.

Devi……Mahalakshmi pleads with Emperumaan standing by His right side to protect us from the countless sins
He ignores and stares straightly where sinners( we) are standing; He shows His face left side where you are pleading with Him to protect us . He ,then , determines to protect us . Hey..Gotha…This is due to your krupa

https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

25
கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போக ரஸானுகூல : |
கர்மாநுபந்தி பல தாந ரதஸ்ய பர்த்து :
ஸ்வாதந்த்ர்ய துர்வ்யஸந மர்ம பிதா நிதாநம் ||

கோதே….. தாயே….நீ புருவத்தை நெறிக்கும்போது ,அது உனக்கும் உன் நாதனுக்கும் ,பெரியதொரு போகத்தைக் கொடுக்கிறது. அவன் புருவ நெறிப்பு , உலகங்களை நடுங்கச் செய்கிறது; எங்களின் பாபங்களைப் பொறுக்கமாட்டேன் என்கிறான்; அந்த சமயத்தில், உனது புருவ நெறிப்பு ,அவனுடைய புருவ நெறிப்பை அடக்கி விடுகிறது. அவன் உனக்கு நாதன்; உலகங்களுக்கு எல்லாம் நாதன்; தன்னைக் குறைசொல்லாவண்ணம் காத்துக் கொள்கிறான்; அதற்காக அவன் ஏற்படுத்திக்கொண்ட சங்கல்பம், அவரவர் கர்மாக்களுக்கான பலனை அளிப்பது; இதில் அவன் ஸ்வதந்த்ரனாக இருந்தாலும்,உன் புருவ நெறிப்பு , அவனை அடக்கி விடுகிறது. என்ன பாக்யம், எங்களுக்கு!

Goda….. The knitting of your eye-brows is enjoyable to both to You and Emperuman. But His knitting gives fruits according to our karma…He is “Nathan” to you and to all worlds… But your knitting of eye-brows is helpful to us
because He wipes out our sins ,because of You.

26.
ரங்கே தடித்குணவதோ ரமயைவ கோதே
க்ருஷ்ணாம்புதஸ் கடிதாம் க்ருபயா ஸூவ்ருஷ்ட்யா |
தௌர்கத்ய துர்விஷ விநாச ஸூதாநதீம் த்வாம்
ஸந்த : ப்ரபத்ய சமயந்த்யசிரேண தாபாந் ||

ஸ்ரீ ஆண்டாள் அமுத நதி; எப்படிஎன்றால், திருவரங்கச் செல்வன் ஒரு கார்முகில்; அதில் பெரியபிராட்டி மின்னல்கொடி; இந்த இரண்டுமாக அருள் என்கிற மழை பொழிகிறது; இது வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் போது, மேடுபள்ளங்களில் நிறைந்து, அங்கு சிக்கித் தவிக்கும் சேதனர்களின் சம்சார தாபத்தை——அந்தத் தீய விஷத்தை, அடித்துத் தூரத் தள்ளி , மிகவும் தெளிந்த அமுத நதியாக இருக்கிறது— அது — ஹே கோதா—நீயே உன்னை அடைந்து சேதனர்கள், தங்கள் தாபங்களைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

Goda Devi—–you are the river ” amrutha” ; this is fed by copious rains of mercy falling from the cloud –Sri Rangapathi– coupled with the fine lightening –Periya piraatti— this is powered to destroy deadly poison of samsaara to alleviate the sufferings of chethanas

27.
ஜாதாபரா தமபி மா மநுகம்ப்ய கோதே
கோப்த்ரீ யதி த்வமஸி யுக்தமிதம் பவத்யா : |
வாத்ஸல்ய நிர்ப்பரதயா ஜநநீ குமாரம்
ஸ்தந்யேந வர்த்தயதி தஷ்ட பயோதராபி ||

அடியேன் பலகாலும் குற்றம் செய்தவன்; குற்றமே செய்துகொண்டு இருப்பவன்; என்றாலும், நீ, என்னைப் புறக்கணிப்பதில்லை . காக்கின்றாய். இது உனக்கு ஏற்ற செயல். தாயார், குழந்தையிடம், அளவில்லா அன்பு கொண்டவள். அதன் பசி அறிந்து, பாலூட்டுபவள். ஆனால், குழந்தைக்கு, தாயார் செய்யும் உபகாரமும், தாயாரின் அன்பும் பாசமும், எப்படித் தெரியும் ? ஸ்தன்ய பானம் செய்யும்போது , குழந்தை கடித்தாலும், இதற்காக அந்தக் குழந்தையைத் தாயார், தூக்கி எறிந்து விடுவதில்லையே ! வேறு உபாயத்திலும் இறங்குவது இல்லையே !முன்போலவே அல்லவா, ஸ்தன்ய பானம் கொடுக்கிறாள் . ஆஹா , இது உனக்குத் தகுந்ததே !

Goda…Eventhough adiyen is most sinner, you sympathise and protect A mother, though bitten by her child, while sucking the breast-milk, nourishes the child again and again with motherly affection and never discard the child

28.
சதமக மணிநீலா சாரு கல்ஹார ஹஸ்தா
ஸ்தநபர நமிதாங்கீ ஸாந்த்ர வாத்ஸல்ய ஸிந்து : |
அளகவிநிஹி தாபி : ஸ்ரகபி ரா க்ருஷ்ட நாதா
விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித் தாத் மஜா ந : | |

த்யான ச்லோகம்

இந்த்ர நீலக்கல் போல நீல வர்ணம் உடையவள்; அழகான கருநெய்தல் புஷ்பத்தைத் தன் கரத்திலே வைத்திருப்பவள்; ஸ்தனங்களின் பாரத்தினால் வணங்கிய திருமேனி உடையவள்;அடர்த்தியான அன்புக்கடல்; முடியில் ,முன்னுச்சியில் மாலைகளை அணிந்து, கணவனை—ரங்கபதியைத் தன் வசப்படுத்திக்கொண்டவள்; விஷ்ணுசித்தரின் அருமைக் குமாரத்தி; கோதை—-நமது மனத்தில் என்றும் விளங்குவாளாக

Goda…..the blue colour of the “sapphire” known as ” Indra mani”. Goda….holding a lovely water-lily in Her hand. Goda—whose thirumeni is slightly bent by the weight of Her breasts. Goda….an ocean of maternal love. Goda–attracted the Lord Sri Ranganatha wearing fragrent garlands in her fore-head…..[
May Goda, the beloved daughter of Vishnuchiththa , ever shine in our hearts

29.
இதி விகஸித பக்தே ருத்திதாம் வேங்கடேசாத்
பஹூ குண ரமணீயாம் வக்தி கோதாஸ் துதிம் ய : |
ஸ பவதி பஹூ மாந்ய : ஸ்ரீமதோ ரங்க பர்த்து :
சரண கமல ஸேவாம் சாச்வதீ மப்யுபைஷ்யந் ||

பக்தியின் பெருக்காக, வேங்கடேச கவியிடமிருந்து, பற்பல காவ்யங்களின் குணங்களை உடைய
இந்த கோதா ஸ்துதியைப் பாராயணம் செய்பவன், ஸ்ரீ ரங்கநாதனின் திருவடியில், அவ்வுலகில் நீண்ட காலம்
கைங்கர்யம் செய்வதோடு மட்டுமல்லாமல், இவ்வுலகிலும் அவனுடைய க்ருபைக்குப் பாத்ரமாவான்

He, who utters this ” Goda Stuti” which is very beautiful by possessing various qualities , and given by Sri Venkatesa Kavi, becomes permanently a kainkaryaparan at the lotus feet of Sri Ranganatha ever associated withMahalakshmi at Paramapatham and also gets krupa of Sri Ranganatha here in this world

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே |
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குருவே நம : ||

ஸூபம்

ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்வாமி தேசிகன் அருளியுள்ள ஒவ்வொரு ஸ்துதியும் ,ஆச்சர்யமான ,நுட்பமான பற்பல விஷயங்களை உள்ளடக்கியது.” பூ ஸ்துதி “என்பதாக, பூமிப் பிராட்டியை ஸ்தோத்ரம் செய்தவர், பூமிப் பிராட்டியின் அவதாரமான கோதையை இங்கு 28 சுலோகங்களால் ஸ்தோத்ரம் செய்கிறார். இது கோதா பரிணயம் என்பர்,ஆன்றோர்
இவள் ஸ்ரீ ஆண்டாள் ; ரங்கநாதனையே மலர்மாலை சூடிக் கொடுத்து ஆண்டவள்; ஆடி மாதம் பூர ( பூர்வ பல்குனி ) நக்ஷத்ரத்தில் அவதரித்தவள். பூமிப் பிராட்டியே ,கோதாப்பிராட்டி.
பூமிப் பிராட்டியை ஸ்தோத்தரித்தால், இந்த ஸ்தோத்ர மணிகளில், பெரிய பிராட்டி ரங்கநாயகியையும்,
ஸ்ரீரங்கச்செல்வனாகிய ரங்கநாதனையும் ஸ்தோத்ரம் செய்ததற்கு ஒப்பாகும்.

————————————————————————————————————————————-.


Sarvam Sree Hayagreeva preeyathaam

Dasan
Uruppattur Soundhararaajan
Srikainkarya
10411156_584452805020364_4214647355546699159_n

About the Author

Leave A Response