சிந்தனைகள்—
———————-
ஏடு எடுத்தவன் எல்லாம் பாட்டு எழுத முடியாது
வீடு எடுத்தவன் எல்லாம் சொந்தமென்றால் முடியாது
நாடு பிடித்தவன் எல்லாம் நாடாள முடியாது.
ஓடு எடுத்தவன் எல்லாம் பரதேசியாக முடியாது.
காவி உடுத்தவன் எல்லாம் சந்நியாசி ஆக முடியாது
பாவி என்பவன் எல்லாம் பாவியாக முடியாது
தூவித் துதிப்பவன் எல்லாம் பக்தனாக முடியாது
ஆவி துறந்தவன் எல்லாம் அவனடி அடைய முடியாது.