ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1

Posted on Oct 9 2017 - 9:44am by srikainkaryasriadmin
|

1526417_617297665004626_1836024530_n

இந்த ஸ்தோத்ரம் ஸ்ரீ விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது—-

50 ச்லோகங்கள்

இந்த ஸ்தோத்ரம் எதற்காகச் சொல்ல வேண்டும் –?

கஷ்டங்கள் வரும்போது—அவை எந்தக் கஷ்டமாகவும் இருக்கலாம்

பாபக் கிரஹங்களின் கொடிய பலன்கள் , பொசுங்கிப்போக

அமங்கலச் சொற்களைக் கேட்க நேரிட்டாலோ,அமங்கலம் வீட்டில் நேர்ந்தாலோ

நேருமோ என்கிற அச்சம் ஏற்பட்டாலோ

துஸ்வப்னம் நேர்ந்தாலோ, நேரும் என்கிற பயம் வந்தாலோ,

ஒரு சுப கார்யத்தைத் தொடங்க உத்தேசிக்கும்போது—-

இந்த ஸ்தோத்ரத்தைச் சொல்லிக்கொண்டுவந்தால் ,என்ன பலன்

மேற்கூறிய ஆபத்துக்கள், கஷ்டங்களிலிருந்து பகவான் நம்மைக் காக்கிறான்

நம்முடைய சகல பாபங்களையும் அழிக்கிறான்

நாம் ப்ரார்த்திக்கும் ,சகல போகங்களையும் பகவான் அருள்கிறான்

பரலோக ப்ராப்தியையும் அருள்கிறான்

மேற்கூறிய பலன்கள் எப்போது கிடைக்கும்

இந்த ஸ்தோத்ரத்தை ,ஒரு நல்ல நாளில், ஸ்நானம் செய்து நித்ய கர்மாக்களை முடித்து,

ஆசார்யன் மூலமாக , அறிந்துகொண்டு ,ஜபம் செய்ய ஆரம்பித்த உடனேயே

அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

செய்யும் நல்ல செயல்கள் , பலமடங்கு பலன்களை அளிக்கும்

இது ஸ்தோத்ர படனம்

இதைத் தொடர்ந்து மனதை ஒருமுகப்படுத்திச் சொல்லிவர– இது கவசம்

பெண்களுக்கு—-

தினமும் சாயங்கால வேளையில் , வீட்டில் உள்ள பூஜை அறையில்

விளக்கேற்றிவைத்து, இந்த ஸ்தோத்ரத்தைச் சொல்லிக்கொண்டு வந்தால், எடுத்த கார்யங்கள்

தடையின்றி நிறைவேறும்;நோயற்ற வாழ்வு கிடைக்கும்;மாங்கல்ய பலம் பெருகும்;

வீட்டில் மங்கள கார்யங்கள் நடைபெறும்;

குழந்தைகளுக்கு, நோய் போன்ற துன்பம் நேராது; கல்வி வளரும்;வீட்டில் செல்வம் பொங்கும்.

இந்த ஸ்தோத்ரம்

ஸ்ரீ தால்ப்யர் என்கிற மஹரிஷி கேட்க,

ஸ்ரீ புலஸ்த்ய மஹரிஷி சொல்வதாக, விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ளது.

இது, ஸ்ரீமந் நாராயணின் பரத்வத்தையும், அவனே ஜகத் காரணன் என்பதையும்,

அனைத்துப் பாபங்களையும் ,த்வம்சம் செய்யும் திவ்ய மங்கள தேவதை அவன் என்றும்

இவ்வுலகத்தில் மட்டுமல்லாமல், கலங்காப் பெருநகரான வைகுண்டத்திலும்

ஸகல ஸௌபாக்கியங்களையும் அளிப்பவன் என்றும், உபதேசிக்கிறது—-

பகவானின்

ஸ்ரீ வராஹாவதாரம்,

ஸ்ரீ ந்ருஸிம்ஹாவதாரம்

ஸ்ரீ வாமனாவதாரம்

ஸ்ரீ மத்ஸ்யாவதாரம்

ஸ்ரீ பரசுராமாவதாரம்

ஸ்ரீ ராமாவதாரம்

ஸ்ரீ க்ருஷ்ணாவதாரம்

இவற்றை

ஓரிருச்லோகங்களில் சொல்லி, அப்படிப்பட்ட ”ஹரி ”

மங்களங்களை அருள்வாராக என்று வேண்டப்படுகிறது—

பலச்ருதி –கடைசி 7 ச்லோகங்கள்

இந்த ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் என்கிற ஸ்தோத்ரம் ,

ஆண் ,பெண் , குழந்தைகள் என்கிற வித்தியாசமின்றி , தினமும் பாராயணம் செய்து,

அன்றாட வாழ்க்கையில் அல்லல் தவிர்த்து

,அனைத்து ஸௌபாக்கியங்களையும் பெற்றிட , அருமையான ஸ்தோத்ரம்

ஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம்
—————————————–

ஸ்ரீ தால்ப்ய :——-

1 மற்றும் 2. கார்யாரம்பேஷு ஸர்வேஷு து : ஸ்வப்னேஷு ச ஸத்தம |

அமங்கள்யேஷு த்ருஷ்டேஷு யஜ்ஜ்ப்தவ்யம் ததுச்யதாம் ||

யே நாரம்பாச்ச ஸித்த்யந்தி து :ஸ்வப்நச்சோப சாந்தயே |

அமங்களாநாம் த்ருஷ்டாநாம் பரிஹாரச்ச ஜாயதே || –

தால்ப்யர் சொல்கிறார் ———

ப்ரஹ்மத்தை உணர்ந்தவருள் மிகப் பெரியவரே —-
கார்யங்களைத் தொடங்கும்போதும், துஸ்வப்னம் மற்றும் அமங்களம் நேரும்போது
எதை ஜபிக்க வேண்டும் ? தொடங்கும் கார்யங்கள், எதனால் இனிமையாக
நிறைவேறுகின்றன ? கெட்ட கனவுகள் எதனால் பலனற்றுப் போகின்றன ?
யாம் காணுகின்ற அசுபங்களுக்குப் பரிஹாரம் எதனால் உண்டாகிறது ?

ஸ்ரீ புலஸ்த்ய :——

3. ஜநார்தநம் பூதபதிம் ஜகத்குரும் ஸ்மரந் மநுஷ்யஸ் ஸததம் மஹாமுநே |

துஷ்டாந்யசேஷாண்ய பஹந்தி ஸாதயதி அசேஷ கார்யாணி ச யாந்யபீப்ஸதி ||—-2

ஸ்ரீ புலஸ்த்யர் பதில் :—

மஹாமுனிவரே ——பிறவிச் சங்கிலியை அறுக்கவல்லவரும், எல்லா உலகங்களிமுள்ள
எல்லாப் பொருள்களுக்கும் சொந்தக்காரரும் ,மிக உயர்ந்தவரும் ஆன எம்பெருமானை
த்யானித்துக்கொண்டிருக்கும் மனுஷ்யன் , தீயவற்றையெல்லாம் போக்கி, தான்விரும்பிச் செய்யும்
எல்லாச் செயல்களும் நற்பயன் அளிக்கும்படி , எம்பெருமானால் ,அருளப்படுகிறான்

4. ச்ருணுஷ்வ சாந்யத் கததோ மமாகிலம் வதாமியத்தே த்விஜவர்ய மங்களம் |

ஸர்வார்த்த ஸித்திம் ப்ரததாதி யத் ஸதா நிஹந்த்யசேஷாணி ச பாதகாநி ||

ஹே –ப்ராஹ்மண ச்ரேஷ்டரே —-எது உமக்கு சுபமளிக்க வல்லதோ , எது
வேண்டிய பலன்களை யாவும் கொடுக்க வல்லதோ, எது தீவினைகள் எல்லாவற்றையும்
அழிக்க வல்லதோ, அத்தகைய ஸ்தோத்ரத்தை உமக்குச் சொல்கிறேன் —
அதை முழுவதுமாகக் கேட்பீராக

5. ப்ரதிஷ்டிதம் யத்ர ஜகத் சராசரம் ஜகத்த்ரயே யோ ஜகதச்ச ஹேது ; |
ஜகத் ச பாத்யத்தி ச யஸ்ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

மூன்று உலகங்களிலும் , எவர் ஜங்கம ,ஸ்தாவர ரூபங்களுக்குக் காரணமோ ,
எவரிடத்தில், இவை கீழே விழாது நிலைத்துத் தாங்கப்படுகிறதோ,
எவர் இவற்றையெல்லாம் ரக்ஷிக்கிறாரோ, ப்ரளய சமயத்தில் , எவர் இவற்றையெல்லாம்
உணவைப்போலத் தனக்குள் ஒடுங்கும்படி செய்கிறாரோ அனைத்துப் பாபங்களையும்
போக்கும் அந்த ஹரி , மங்களங்கள் பொங்கிப் பெருக ,எனக்கு அருள்வாராக

6.வ்யோமாம்பு வாய்வக்நி மஹீஸ்வரூபை : விஸ்தாரவாந் யோணுதரோணு பாவாத் |
அஸ்தூல ஸூக்ஷ்மஸ் ஸததம் பரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

நீர், நிலம், காற்று, நெருப்பு , ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களால் , தம்மைப்
பெருக்கிக்கொண்டவரும் , சிறிய பொருட்களிலெல்லாம் மிகச் சிறிய நுட்பமானவரும் ,
சிறிய, பெரிய என்று உள்ள அளவில்லாப் பொருட்களில் இருந்து வேறுபட்டு , தனித்
தன்மை உள்ளவருமான ஹரி எல்லாக்காலத்திலும் எனக்கு மங்களங்கள் பெருக
அருள்வாராக

7. யஸ்மாத் பரஸ்மாத் புருஷா தநந்தாத் அநாதிமத்யா ததிகம் ந கிஞ்சித் |
ஸ ஹேது ஹேது : பரமேச்வரேச்வரோ மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||
||

காலம்,இடம், குணம், இவற்றாலெல்லாம் அளவிட முடியாதவரும், பிறப்பு இல்லாதவரும் ,
முடிவு இல்லாதவரும், தம்மிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லாதவரும் படைத்தல் தொழில்
செய்பவரையும் படைப்பவரும், தேவர்களுக்கு எல்லாம் தேவரான ஹரி
எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

8. ஹிரண்ய கர்ப்பாச்யுத ருத்ர ரூபி ஸ்ருஜத்யசேஷம் பரிபாதி ஹந்தி |
குணாக்ரணீர் யோ பகவான் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

ப்ரஹ்மாவுக்கு அந்தராத்மாவாக இருந்து, உலகங்களைப் படைத்தும்,
தானே அச்யுதனாக இருந்து அவற்றையெல்லாம் காத்தும், ருத்ரனுக்கு ஆத்மாவாக
இருந்து, எல்லாவற்றையும் அழித்தும், முதல் குணசாலியாகவும் , அளப்பரிய ஞானம்,
படைக்கும் பொருளாக ஆகும் ஆற்றல், எல்ல உலகங்களையும் தளர்ச்சி இல்லாமல்
தாங்கும் வலிமை ,எல்லோரையும் தன இஷ்டப்படி இயக்கும் மிடுக்கு, பிற பொருள்கள் எல்லாவற்றையும்,
ஸூர்ய ஒளியில் விளக்கு பிரகாசிப்பது போல, பேரொளி உடையவரும்
குற்றம் என்பதே இல்லாதவருமான ஹரி எனக்கு எப்போதும் சுபங்கள் பெருக அருள்வாராக

9. பரஸ் ஸுராணாம் பரமோஸுராணாம் பரோ யதீநாம் பரமோ முநீநாம் |
பரஸ் ஸமஸ்தஸ்ய ச யஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

தேவர்கள், அஸுரர்கள் , துறவிகள், முனிவர்கள் இப்படி எல்லாருக்குமே மிகமிக
உயர்ந்தவரான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

10. த்யாதோ முநீநா மபகல்மஷைர் யோ ததாதி முக்திம் பரமேச்வரேச்வர : |
மனோபிராம :புருஷஸ் ஸ ஸர்வதா மமாஸ்து மாங்கள்ய விவ்ருத்தயே ஹரி : ||

எல்லாக் காலங்களிலும் தன்னையே நினைத்து குற்றமில்லா உள்ளத்தால்
சதா சிந்தனை செய்து இருப்பவர்களுக்கு மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அளிப்பவரும்,
உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் வனப்புள்ளவரும் எல்லாப் பலன்களையும்
தர வல்லவருமான ஹரி எனக்கு மங்களங்கள் பெருக அருள்வாராக

தொடருகிறது—–

About the Author

Leave A Response