—————————————-
1. இல்லை—நீயில்லா இடமில்லை
இல்லை—நீயில்லால் நானில்லை
இல்லை—–நானில்லால் நீயில்லை
இல்லையென்பது இல்லையாகுமே
2.இல்லை–புவியெல்லா யெவர்க்குமிலை
இல்லை–உனைப்பணியாதா ரெவருமிலை
இல்லை–உனைத் துதிக்கா ரெவருமிலை
இல்லையென்பது இல்லையாகுமே
3.இல்லை–எனதுடைமை எதுவுமிலை
இல்லை—எனக்கென்று ஏதுமிலை
இல்லை—என்னை வெறுப்பா ரெவருமிலை
இல்லையென்பது இல்லையாகுமே
4. இல்லை—உனைப் பணிந்தார்க் குறையில்லை
இல்லை—உனைத் துதித்தார்க் குறையில்லை
இல்லை—உனையடைந்தார்க் குறையில்லை
இல்லையென்பது இல்லையாகுமே
5. இல்லை–உனக்கொன்றும் குறையில்லை
இல்லை—எனக்கொன்றும் குறையில்லை
இல்லை—எவர்க்குமது இல்லையில்லை
இல்லையென்பது இல்லையாகுமே