——————–
ஸம்பந்தம் செய்துகொண்டவர்கள்——ஸம்பந்தி
என்ன ஸம்பந்தம் ?
கொடுத்து, வாங்கி ஸம்பந்தம் —-!
என்ன கொடுப்பது–? பணமா, காசா ?
இதைக் கொடுத்து வாங்கினால் ஸம்பந்தமா —?
இது ஒருவித ஸம்பந்தம்—
கொடுப்பது வாங்குவதும் தீர்ந்து விட்டால்,
இந்த ஸம்பந்தமும் அத்தோடு தீர்ந்து விடுகிறது—
ஏன், இதற்கு முன்பு ஸம்பந்தம் இல்லையா ?
ஸம்பந்தி என்று சொல்வதற்கு —-?
இரண்டு வெவ்வேறு கோத்ரகாரர்கள்
ஸம்பந்தம் செய்து கொள்வது—-
அந்த ஸம்பந்தத்தின் உறவு ஸம்பந்தி—-!
பிறகு, எது நிரந்தர ஸம்பந்தம் —?
பெண்ணைக் கொடுப்பது,
பிள்ளையை மாப்பிள்ளையாகப் பெறுவது—
பிள்ளையைக் கொடுப்பது ,
பெண்ணை–மருமகளாக–இன்னொரு மகளாகப் பெறுவது
இந்த ஸம்பந்தி உறவு —–
அறுக்க முடியாத உறவு—
அமாவாஸ்யை, மாதத் தர்பணம் செய்பவர்களைக்
கேட்டால், இது தெளிவாகத் தெரியும்
—