மனம்  –16 வகை

Posted on Jan 30 2018 - 8:59am by srikainkaryasriadmin
|
Categorized as
1778

23472827_1525848270802242_6265211562995765543_n என்கிறார்கள் 
———————————————–

1. ராகம்—-ஸ்த்ரீ விஷய ஸுகத்தில்  ஏற்படும் எண்ணம்
2. த்வேஷம்—கெடுதல் செய்தவனுக்குக் கேடு செய்யும் எண்ணம்
3. காமம்—வீடு , வயல், இப்படிப்பட்ட சொத்து வேண்டும் என்கிற ஆசை
4.வெறுப்பு–மேற்சொன்னவற்றை அடையத் தடை செய்பவரிடம் ஏற்படுவது
5. லோபம்–சம்பாதிப்பதில் ஒருவருக்கும் ஒன்றும் கொடாமலிருப்பது — —
6.மோகம்–சொத்து இருக்கிற கர்வத்தில், சாஸ்த்ர  ரீதியாகச்   செய்வது, செய்யக்கூடாதது என்கிற அறிவு இல்லாமை
7. மதம் —சொத்து இருப்பதால் வரும் திமிர் 
8. மாத்ஸர்யம் —தனக்குச் சமமாக சொத்து உள்ளவரைச்  சகித்துக்கொள்ளாமல் இருப்பது 
9. ஈர்ஷ்யை —-கஷ்டம் வரும்போது ,அவனுக்கு அதேமாதிரி வரவில்லையே ,நமக்கு ஏன் வருகிறது என்கிற எண்ணம்
10. அஸூயை —தனக்குச் சுகம் வந்து, அது பிறருக்கும் வந்தால் சகித்துக்கொள்ளாமை
11.டம்பம் —தர்மம் செய்வதால் ” புகழ் ” வரும் என்று எண்ணுவது
12.தர்ப்பம் –தனக்குச் சமமாக ஒருவரும் இல்லை என்கிற எண்ணம்
13.அஹங்காரம்—தானே வல்லவன் என்கிற எண்ணம்—சினம், செருக்கு என்றும் சொல்வர் 
14. பிடிவாதம்— தான் சொல்லுபவைதான் சரி என்கிற  வாதம் 
15. இச்சை—-எல்லாவற்றையும் தானே உண்ணவேண்டும் என்கிற ஆசை–எண்ணம் 
16.பக்தி ச்ரத்தை —-நல்லவர்கள், ஆசார்யன் தேவதை  தெய்வம் -பக்தி செலுத்த எண்ணுதல் மற்றும் 
                                      அநுஷ்டானங்களைச் செய்வதில் ச்ரத்தை வேண்டும் என்கிற எண்ணம் 

About the Author

Leave A Response