மற்றவை நேரில்–11

Posted on Dec 5 2018 - 9:35am by srikainkaryasriadmin
Categorized as
1150

மற்றவை நேரில்–11

ஹே , திவ்ய தம்பதியரே

அடிக்கடி , அடியேனின் பக்கலிலே ஆன்மீக விஷயங்களைக் கேட்டு அனுபவிக்க அனேக ஆஸ்திகர்கள் வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர் நிரம்ப படித்தவர் சம்பிரதாய விஷயங்களில் ஆர்வம் உடையவர்

அவர் ஒரு முறை கேட்ட கேள்வி இது

பரமாத்மா வாகிய நீங்கள் , ஒவ்வொருவர் உள்ளத்திலும் இருக்கிறீர்கள் . ஆனால், உங்களை எப்படி அறிந்துகொள்வது ?

அடியேனின் பதில்

மனம் சலனமற்று இருக்கவேண்டும் .

குளத்தின் கரையில் நிற்கிறீர்கள். காற்று வீசுகிறது . குளத்தின் தண்ணீரில் காற்று பட்டு அலைகள் தொடர்ந்து ஏற்படுகின்றன

அப்போது உங்கள் உருவம் தண்ணீரில் தெளிவாகத் தெரியாது

அதைப்போல உங்கள் மனத்தில் கவலை போன்ற சலனங்கள் இல்லாமல் இருக்கவேண்டும்

மனம் குழப்பமில்லாமல் இருக்கவேண்டும்

குடத்தில் தண்ணீர் இருக்கிறது . ஆனால் ஆற்றில் அன்று வந்த வெள்ளம் போல கலங்கலாக இருந்தால் , அந்தக் குடத்தில்

உங்கள் முகத்தைப் பார்க்க முடியுமா ? முடியாது

அதைப்போல , உங்கள் மனத்தில் ஆசா பாசங்கள் இல்லாமல் இருக்க வேண்டும்

மனம் ஒரே சிந்தனையில் இருக்கவேண்டும்

குளத்தில் ஆகாயத் தாமரை அமோகமாக வளர்ந்து , ஊரில் உள்ள குப்பை கூளங்கள் எல்லாம் கொட்டப்பட்டு துர் நாற்றம் வீசினால்

அப்போது அருகில் இருக்கும் நீங்கள் எப்படி உணர்வீர்கள் ?

மனம் அப்படிப்பட்ட பல்வேறு சிந்தனைகளில் இருந்தால் , பயன் இல்லை

ஆக , மனம் சலனமற்று , குழப்பம் அற்று ,பகவானைப் பற்றிய ஒரே சிந்தனையில் இருக்கவேண்டும் என்று சொன்னேன்

பதில் சரிதானா

மற்றவை நேரில் ,

About the Author

Leave A Response