மற்றவை நேரில்–12 ,

Posted on Dec 6 2018 - 5:58am by srikainkaryasriadmin
Categorized as
1165

மற்றவை நேரில்–12 ,

ஹே ,நாராயணா , ஹே, தேவ தேவ திவ்ய மகிஷி

புதிய கோணத்தில் ஒரு பார்வை

நடுவில் ” டிவைடரே ” இல்லாத
நானூறு அடி சாலை , வழவழப்பான தார்ச்சாலை .
வாகனங்கள் அதிவேகமாக வழுக்கிக்கொண்டு பறக்கும் சாலை
ஒவ்வொருவர் பார்வையிலும் இதை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை ,இப்போது சொல்கிறேன்

1.ஒரு ப்ரொமோட்டர் இதைப்பார்த்தவுடன் , சாலையின் இருபுறமும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டி , விற்றால்
பல தலைமுறைகளுக்கு தேவையானதை இப்போதே சம்பாதித்து விடலாம் என்று ஆசைப்பட்டார்

2.ஒரு வழக்கறிஞர் இதைப்பார்த்தவுடன் , இந்த நானூறு அடி இடத்துக்கான சொந்தக்காரர்கள் வந்தால், அரசுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து
நிறைய சம்பாதிக்கலாம் என்று கற்பனையில் மிதந்தார்
3.ஒரு டாக்டர் இதைப் பார்த்தார்
பக்கத்தில் நர்சிங் ஹோம ஆபரேஷேன் தியேட்டர் என்று கட்டினால்
நிறைய வருவாய் வரும் என்று கணக்குப் போட்டார்

4.ஒரு பொறியாளர் இதைப் பார்த்தார்
இப்படிப்பட்ட ரோடு போடும்போது , நாம் சிவில் பொறியாளராக இருந்திருந்தால் நிறைய பணம் கிடைத்து இருக்குமே
என்று ஏக்கம் அடைந்தார்

5.ஒரு அரசியல்வாதி இதைப் பார்த்தார்
ரோடு போட்ட சமயத்தில் , நாம் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இல்லாது போய்விட்டோமே என்று
வருத்தப்பட்டார்
6கிராம ஏழை மக்கள் பார்த்தார்கள்.
நானூறு அடிச் சாலையின் .இரு பக்கத்து கிராம ஏழை மக்கள் பார்த்தார்கள்– ,
இந்த ரோட்டில் நடந்தால் அர்ரெஸ்ட் செய்து விடுவார்களோ என்று பயந்தனர்
ஹே, பரந்தாமா,
7.உன் பக்தன் இதைப் பார்த்தான்
உன்னைத் தேரில் எழுந்தருளப்பண்ணி , இந்த நானூறு அடிச் சாலையில் பல்லாயிரம் பக்தர்கள் தேரை இழுத்து , தேர் ஆடி ஆடி
அசைந்து வர ,சாலையில் வழுக்கிக் கொண்டு நகர்ந்து வர ,
பக்தர்கள் ” கோவிந்தா “, கோவிந்தா என்று உரத்த குரலில் அழைக்க ,
உன்னைத் தரிசித்தால் , இதுவே பெரிய பாக்கியம் என்று எண்ணி பரவசப்பட்டான்

வெள்ளத்தனைய மலர் நீட்டம் : மாந்தர்தம்
உள்ளத் தனையதுயர்வு
மற்றவை நேரில்

About the Author

Leave A Response