மற்றவை நேரில் 18–

Posted on Dec 12 2018 - 5:32am by srikainkaryasriadmin
Categorized as
1555

மற்றவை நேரில் 18–

ஹே, பரமாத்மா !பரம காருண்ய ரூபிணி !
அடியேன் இப்போது ”மஹா ஆத்மா ” வைப் பற்றி அடியேனுக்கு ஸ்புரித்ததைச்
சொல்கிறேன்—-
மஹா ஆத்மா

இவ்வுலகில் எண்ணற்ற , அளவிட இயலாத , ஜீவ ராசிகள் வாழ்கின்றன .
இவ்வுலகில் மட்டுமல்ல , ஈரேழு பதிநான்கு உலகங்களிலும்
ஜீவராசிகள் இருக்கின்றன.
இவை ஜீவன் அல்லது ஜீவாத்மா எனப்படுகின்றன.

இவை எல்லவற்றையும் படைத்து , காத்து , அழிக்கின்றவர் பகவான் ; நீரேதான் !
நீரே பரமாத்மா

ஆக , ஆத்மா இரண்டு வகை .
ஒன்று, ஜீவாத்மா ; இன்னொன்று பரமாத்மா (இவர் ஹ்ருதயத்தில் இருந்தால் அந்தராத்மா )

ஆனால், இந்த இரண்டையும்விட வேறான , அதென்ன,
மஹா ஆத்மா என்று கேட்கத் தோன்றுகிறது !

ஆத்மா , மஹத்தான (பெரிய,பெருமைப் படக்கூடிய, புகழக் கூடிய )
குணங்களைக் கொண்டிருக்க வேண்டும்
மஹத்தான காரியங்களைச் செய்து இருக்க வேண்டும்
அப்படி இருந்தால், மஹாத்மா என்று அழைக்கப் படலாம் அல்லவா !
காந்திஜியை, மகாத்மா காந்தி என்று புகழ்கிறோம்

அப்படி, பெருமையுடன் அழைக்கப்பட , குணங்களும் , காரியங்களும் எப்படி இருக்க வேண்டும்

1. சாத்விக உணவுகள் வேண்டும். இவைதான் நல்ல குணங்களைக் கொடுக்கின்றன
2 ஏகாதசி விரதம் வேண்டும்
3 புலனடக்கம் வேண்டும்
4 பஞ்சமா பாதகங்கள் அறவே தவிர்த்தல் வேண்டும்.
5 பிறரிடம் உள்ள நல்ல குணங்களையே பேச வேண்டும்
6 கோபம் கட்டாயம் தவிர்த்தல் வேண்டும்
7 வித்யா கர்வம், தன கர்வம் , குல கர்வம் தவிர்த்தல் வேண்டும்
8. பகவானிடம் அத்யந்த பக்தி வேண்டும்
9 ஆசார்ய பக்தி அவசியம் வேண்டும்
10 செய்நன்றி (க்ருதஜ்ஞதை ) எப்போதும் வேண்டும்
( இவற்றில் எவை எவை உங்களிடம் இல்லை என்பதை நீங்களே தெரிந்துகொள்ளுங்கள் .
ஒன்றுமே இல்லையா ? ஒவ்வொன்றாக ஸ்வீகரியுங்கள் ! பத்தாவது மிக முக்கியம்.
இப்போது பெரும்பாலோரிடம் இது இல்லை )

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் , இந்த ”10 வேண்டும்” களை , வாழ்க்கையில்
செயல் படுத்தினால் , அந்த ஜீவாத்மாக்கள் , மகாத்மாவாக முடியாதா என்ன ?

மற்றவை நேரில்

About the Author

Leave A Response