உற்றவன் நீயே —1உற்றவன் நீயே —2கிளிக்கண்ணி –10

Posted on Feb 10 2019 - 4:18am by srikainkaryasriadmin
Categorized as
1690

Soundararajan Desikan
February 10, 2017 at 1:46 PM ·
உற்றவன் நீயே —1
————————————

பற்றறுத்துப் பரமபதம் அளிக்கும்
பத்மநாபா ! பர வாஸுதேவா !
“மற்றவை நேரில் ” என்று, அடியேன்
நூற்றெட்டு தரம் சொன்னேன்.
ஊற்றத்துடன் உரைத்தேன் ! உன்
உள்ளம் இரங்கவில்லை .

நேரில் மற்றவை நேர்வது இருக்க
பாரில் செய்வது பலப்பல உளதென்று
சொல்வதன் பொருளா, உன் சுந்தரப் புன்னகை ?
அல்வழக்கல்ல ! தொல் வழக்கல்ல!
ஆதலால் அடியேன் அன்புடன் உன்னை
“உற்றவன் நீயே ” என எழுதத் துணிந்தேன்

இனி——-

உற்றவன் நீயே —-1

நீயே உற்றவன்—-ஏன் எனில்,
சுற்றமெலாம் பின்தொடரக்
கானகம் அடைந்தவன் !
நீ, அற்றவர்க்கு அருமருந்து !
கற்றவர்கள்தாம் வாழும்
கணபுரத்துக் கருமணி !
சிற்றவைதன் சொல் கண்டவன் !
சீராமன் !
( பெருமாள் திருமொழி )

சுற்றும் குழல் தாழச் சுரிகை அணைத்தவன் !
மற்றும்,
பலமாமணி பொன்கொடணிந்து
முற்றம் புகுந்து
முறுவல் செய்து நின்றவன் !
( பெரிய திருமொழி )

பற்றார் நடுங்கமுன் பாஞ்சசன்னியத்தை
வாய்வைத்த போரேறன் !
என் சிற்றார் சிங்கம் !
சீதை மணாளன் !
சிறுகுட்டச் செங்கண்மால் !
சிற்றுடையும் சிறுப் பத்திரமும் இவை
கட்டிலின்மேல் வைத்துப்போய்
கற்றாயரோடு நீ கன்று மேய்த்துக்
கலந்து உடன் வந்தவன் !
(பெரியாழ்வார் திருமொழி )

பற்றேலொன்றுமிலேன்,
பாவமே செய்து பாவியானேன் !
மற்றேலொன்று அறியேன் !
மாயனே ! எங்கள் மாதவனே !
கற்றேன்; பாய்ந்தொழுகும்
கமலச் சுனை வேங்கடவா !
அற்றேன் வந்தடைந்தேன்
அடியேனை ஆட்கொண்டருள் !
( பெரிய திருமொழி )

கண்ணபுரத்துறை அம்மானே !
மற்று எல்லாம் பேசிலும்
நின் திருவெட்டெழுத்தும் கற்று
மற்றுமோர் தெய்வம் உளதென்று
இருப்பரோடு உற்றிலேன் !
உற்றதும் உன்னடியார்க்கு அடிமை !
(பெரிய திருமொழி )

திருவிண்ணகரானே !
கொற்றவனே !எம்பெருமானே !
வற்றா நீள்கடல் சூழ்
இலங்கை இராவணனைச்
செற்றவனே !
மற்றோர் தெய்வம் எண்ணேன் !
உன்னை, என் மனத்துவைத்துப்
பெற்றேன் ! பெற்றதவும்
பிறவாமை.
( பெரிய திருமொழி )

வற்றா முதுநீரோடு
மால்வரை ஏழும்
துற்றா முன் துற்றிய
தொல் புகழோனே !
என் எந்தை பிரானே !
அற்றேன் , அடியேன்
உன்னையே அழைக்கின்றேன்
பெற்றேன் அருள்தந்திடு
( பெரிய திருமொழி )

மற்பொரும் தோளுடை வாசுதேவா !
வல்வினையேன் துயில்கொண்டவாறே
இற்றை இரவிடை யேமத்து என்னை
இன்னணை மேலிட்ட கன்று நீ போய் ,
அற்றை இரவும் ஓர் பிற்றை நாளும்
அரிவையரோடும் அணைந்து வந்தாய் !
எற்றுக்கு நீ என் மருங்கில் வந்தாய் ?
எம்பெருமான் ! நீ எழுந்தருள்க !
( பெருமாள் திருமொழி )

உற்றவா , சுற்றமே !
உன்னை ஆழ்வார்கள் துதித்தபடி
துதித்தேன்;
உனையல்லால்
கதி , யாருமில்லை என்றேன் !
உன் திருவடியை ,விடாது பிடித்து,
உன் திருவடிக்கீழ் அமர்ந்து புக,
உற்றவன் நீயே !
உளமுருகிப் பேசும் பேச்சுக்கள்
தொடருகின்றன —–

—இன்னும் வரும்——Soundararajan Desikan
February 10, 2017 at 3:21 PM ·
உற்றவன் நீயே —2
——————————

1.உளமுருகிப் பேசுகின்றேன்
உந்தன் உள்ளம் உருகாதோ ?
தளர்வின்றிச் சொல்கின்றேன்
தயை புரிய மாட்டாயோ ?

2.ஆயிரம் , ஆயிரம் நின்னோடு
அடியேனுக்கு உற்றவன் நீ !
பாயிரம் பல உரைத்தேன் ,
பரிவு காட்ட மாட்டாயோ !

3.அத்தாணிச் சேவகத்துக்கு
அனவரதமும் அடியேனிருக்க,
உத்தாரணம் செய்தவனே
உரிமை காட்ட மாட்டாயோ !

4.உற்றவன் நீ, உடுத்துக் களைந்த
பொற்துகில் பெற்றதுண்டு !
கற்றவன் நீ ! கடையன் நான் !
கருணை காட்ட மாட்டாயோ !

பெரியாழ்வார் திருமொழி
——————————————

5.சீதக்கடலுள் அமுதுன்ன தேவகி
கோதைக் கழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்களுக்கு உற்றவன் நீ !

6.முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருக்க, நீ, எனக்கு உற்றவன் நீ !

7.பணைத்தோளின வாய்ச்சி பால்பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்த இப்பிள்ளை
இணைக்காலில் வெள்ளித்தளை நின்றிலங்கும்
கணைக்கால் பெற்றவனே, உற்றவன் நீ !
———————————————————
8.மாணிக்குறளனே !மாமாயா !
மன்மதனின் மன்மதனே !
ஆணிப்பொன் தொட்டில்
ஆலிலையாய் ! உற்றவன் நீ !

9.உலகமுண்ட மணி வயிறா !
உய்விக்க வந்த பரம்பொருளே !
குலத்துக்குக் கொழுந்தே !
கோவிந்தா ! உற்றவன் நீ !

10.காயமலர் நிறத்தாய் !
கருமுகில் போலுருவாய் !
ஆய ! எத்திறம் ! எத்திறம் !!
அடியேனுக்கு உற்றவன் நீ !

11.நப்பின்னை மணவாளா !
நம்பினோர்க்கு நாராயணா !
தப்பில்லை, தவறு திருத்தி ,
தலைவைத்தேன் ,உற்றவன் நீ !

12.பஞ்சவர் தூதனாய் பலகாதம் கடந்து,
நஞ்சுமிழ் கெட்டவரை நலிவடையச் செய்த
அஞ்சன வண்ணனே !அடைக்கலம் நீயே !
அச்சுதா ! அனந்தா ! உற்றவன் நீயே !

13.அரவணையாய் ! அமரர் ஏறே !
ஆராவமுதே !அடியேனுன்னைக்
கரம்கூப்பித் தவிக்கின்றேன் ,
காரணன் நீ ! எனக்குற்றவன் நீ !

———தொடரும்—————Soundararajan Desikan
February 10, 2014 at 6:13 PM ·
கிளிக்கண்ணி –10
1.கிளிக்கண்ணி வேண்டுமென்று
கேட்பவர் ஏராளம் ; தாராளம்
ஆட்கொண்ட அச்சுதன் —கிளியே
அருட் கொடையே இதுவன்றோ !

2.சொந்தபந்தம் துறந்து
சோகத்துடன் உழன்றும்
செய்வது என்ன, என்ன?—கிளியே
சொல்வது என்ன என்ன?

3.சொந்த பந்தம் வாழ்த்த
சூழ்கின்ற நல்வினைகள்
செய்வது நல்ல செயல்–கிளியே
சொல்வது நல்ல பொருள்

4.வெல்வது வாழ்க்கைதான்
வீழ்வது தீவினைகள்
அச்சுதன் பாதம் பற்று –கிளியே
அனைத்தும் உன் வசமாகும்

5.எப்படியும் வாழலாம்
இப்படியும் வாழலாம்
கைப்பிடி பகவான் பாதம்–கிளியே
காலன்தான் நெருங்குவானோ !

6.உலகத்தை அன்றளந்த
உத்தமன் பாதம் பற்றி
பலவகை க்ஜானம் பெற்றுக்–கிளியே
பகலவன் போல வாழ்வாய்

7.யார் இனி உனக்கு நிகர் ?
தார்வேந்தர் நிகரில்லை
தாரணியில் வாழ்ந்திருந்து –கிளியே
தரும் பரமபதம் சேர்

8.பரமபதம் சொந்த இடம்
பரந்தாமன்தான் சொந்தம்
விருந்துக்கு வந்ததுபோல் –கிளியே
இருந்துவிட்டுப் போய்விடு

9.பருந்துகள் வட்டமிடும்
மருந்துகள் சுற்றிவரும்
அறுத்து விடு அவற்றைக் –கிளியே
அச்சுதனை நம்பி விடு

10.இப்போது இருப்பவர்கள்
எப்போதும் இருப்பாரோ ?
இதற்கு முன் எங்கிருந்தார்?–கிளியே
ஏன் அதற்கு விடை இல்லை ?

11.அப்போதைக்கு அப்போது
அச்சுதனை நினைத்து விடு
தப்பாமல் அவர் வருவார்–கிளியே
தயங்காமல் அணைத்திடுவார்

தொடரும் ….

Image may contain: one or more people and people standing

Image may contain: one or more people

About the Author

Leave A Response