ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல ? PART II

Posted on Feb 9 2020 - 6:34am by srikainkaryasriadmin
Categorized as
874

ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல ? –PART II

அடியேன் :–  
11.” தாயே ! இது அடியேன் செய்த பெரும் பேறு !மிகச் சுருக்கமாகச் சொல்கிறேன் அப்போது அடியேன் தாபத்தைத்  தாயாராகிய நீங்கள் உணர்வீர்கள் –“திருக்கோளூர் பெண்பிள்ளை :–     
12.சொல் ! சொல் ! எனக்கும் உன்வாயால் கேட்கவேண்டும் என்கிற தாபம் பொங்குகிறது ! ” 13. அடியேன் :–    
” தாயே ! 32 ஸ்தோத்ரங்களை ஸ்வாமி தேசிகன் அருளியிருக்கிறார் 
.பிற்காலத்தில்,வைணவர்களுக்கு மனஸ்ஸால்  த்யானம் செய்வது குறைந்துவிடும்.சரீரத்தால் செய்யப்படுவதான ஏகாதசி வ்ரதம் ,மற்ற பித்ரு கர்மா வ்யவஹாரங்களேகுறைந்துவிடும்
 பகவானுக்குச் செய்யும் சரீர கைங்கர்யங்களும்   குறைந்துவிடும் . வாக்கால் சொல்வது  அவ்வளவாகக் குறையாது. அதே சமயத்தில், வாக்கால் சொல்லப்படும் ஸ்தோத்ரங்களைச் சொல்வார்களேயானால், அவர்கள் பகவானின்  திருவடிகளை அடைய ஸ்தோத்ரங்கள் வழிவகுக்கும்.இவற்றை மனப்பாடம் செய்வதும் குறைந்துவிடும். கைகளில், ஓலை அல்லது அதற்குண்டான சாதனங்களில் , எழுதிவைத்துக்கொண்டு படிப்பார்கள். இந்த ஸ்தோத்ரங்கள் அவர்களுக்கு உற்ற துணையாக,  இடர்களைக்குறைக்கும் சாதனமாக இருக்கவேண்டும் என்றெல்லாம் சிந்தித்து,வேதங்களிலுள்ள அந்தந்தத் தெய்வங்களின் , பீஜாக்ஷரங்களை ஸ்தோத்ரங்களில் புகுத்தி, வேதம் ஓதா மங்கையரும், சிறாரும் ,பிறரும் (சிறுவர் சிறுமியர்  உட்பட)இவைகளைப் பக்தியுடன் சொல்லிப் பயனடைய வழிவகுத்தார்.தமிழிலும், பிரபந்தங்கள் அருளினார். தேசிக ப்ரபந்தம்  என்றே கொண்டாடப்படுகிறது.நீங்கள் ”கடிந்து அவனைக் கண்டேனோ திருமங்கை ஆழ்வாரைப்போலே ” என்று முப்பதாவது ரஹஸ்யத்தில் . திருமங்கை மன்னன், ”கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று சொல்லி ஆனந்தபரவசரானார்என்றும்,ஆசு,சித்திரம், மதுரம் என்று இப்படி நான்கு வேத சாரங்களையும் பாடியிருக்கிறார் என்றும் சொல்லியிருக்கிறீர்கள் . ஸ்வாமி தேசிகன் ,”கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் ”அறிவுதரும்  பெரிய திருமொழி என்றும்,ஒப்பற்ற திருக்குறுந்தாண்டகமென்றும்,விளங்குகிற திருநெடுந்தாண்டகமென்றும், சீர்மடல் என்றும் கொண்டாடி, ப்ரபந்தஸாரத்தில் திருமங்கை ஆழ்வாரைப் பாடியிருக்கிறார்.
ஆனால், தாயே !இந்த ஸ்தோத்ரங்களைச் சொல்பவர்கள் குறைந்து வருகிறார்கள். பத்துச்லோகங்களே  உள்ளதான ஸ்தோத்ரங்களைக்கூட நேரமில்லை என்று சொல்லி,  ஸம்ஸ்க்ருதம் படிக்கத்  தெரிந்தவர்பெரும்பாலும்  சொல்வதில்லை . ஸம்ஸ்க்ருதம் தெரியாது என்று சொல்பவர்களுக்கு இந்த ஸ்தோத்ரங்களைத்  தமிழில் கொடுத்தாலும் 
  காலத்தின்மீது பழிபோட்டுச் சொல்வதில் அசிரத்தை காட்டுகிறார்கள் .ஆனால், சாஸ்த்ர விரோதமான கார்யங்களைஆசையுடன் செய்கிறார்கள். இவைகளைச் செய்ய , நேரம் இவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான், ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல என்று தாபப்படுகிறேன் திருக்கோளூர் பெண்பிள்ளை :–       
14 ஆஹா ! கலியன் உரை கருத்து  உடையவரா ஸ்வாமி தேசிகன் !.மகிழ்ச்சியாக இருக்கிறது  ! அடுத்தது ?  ” 
அடியேன் :—15.ரஹஸ்ய க்ரந்தங்கள் 32 அருளியிருக்கிறார்  . ஸம்ப்ரதாயம் , தத்வம், ஸாரம் ,தீபம்,உபகாரம் , திருக்கோளூரில் அவதரித்தாரே மதுரகவிகள்—அவரைப்பற்றிய மதுரகவி ஹ்ருதயம்  என்றெல்லாம் அருளியிருக்கிறார். நீங்கள், ”பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப்போலே ”என்று பதினொன்றாவது ரஹஸ்யத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.பரமபக்தி நிலையில் எம்பெருமானுக்குப்  பரமபதத்தில் கைங்கர்யம் செய்வதே சாஸ்வதம் ;பேரின்பப்பெருவாழ்வு என்பதை பேதைப்பருவத்திலேயே  ஆண்டாள், நமக்கெல்லாம் உபதேசித்து  பிஞ்சிலே பழுத்தவளாக  ஆனாள் என்பதை இந்த ரஹஸ்யத்தில் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள்
ஸ்வாமி தேசிகன் , தமக்குப் பிற்காலத்தில் வைணவர்கள் ”உண்டியே உடையே என்று வாழ்வார்கள் என்றும் அவர்கள்  ஸதாசார்யர்களை வயது முதிர்ந்த பிறகு அணுகினால் கூட,  இந்த ரஹஸ்ய க்ரந்தங்கள் அவர்களை ப்ரபத்தி மார்க்கத்தில் இட்டுச் செல்லும் என்று தீர்மானித்து  இவற்றை அர்த்தத்துடன் அநுஸந்தானம் செய்ய வழிவகை செய்தார். ஆனால், அப்படி இதில் இழிபவர்   அருகி வருகின்றனர்.இந்த ஸந்ததியே இப்படி இருந்தால், அடுத்த ஸந்ததியர் அப்படியே மறந்துவிடுவர் என்கிற தாபத்தால்,   ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல என்று தாபப்படுகிறேன்   
திருக்கோளூர் பெண்பிள்ளை :–    16.மதுரகவி   ஹ்ருதயம் —கேட்கும்போதே என் ஹ்ருதயம் மகிழ்கிறதே !
அடுத்தது ?
அடியேன் :—  
17.எட்டு காவ்யங்கள் படைத்திருக்கிறார் . யாதவாப்யுதயம், ஹம்ஸசந்தேசம் ஸுபாஷிதநீவி ,ரகுவீர கத்யம் போன்ற காலத்தை வென்ற காவியங்கள் அவை.நீங்கள், ”அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப்போலே ” என்று முதல் ரஹஸ்யத்திலும்,””அகம் ஒழித்துவிட்டேனோ விதுரரைப்போலே ”என்று 2 வது ரஹஸ்யத்திலும் ”தேகத்தை விட்டேனோ ,ரிஷி பத்னியைப்போலே ” என்று 3 வது  ரஹஸ்யத்திலும் ”பிணவிருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப்போலே ” என்று 6 வது  ரஹஸ்யத்திலும்,இப்படிப்பல ரஹஸ்யங்களை ஸ்ரீ கிருஷ்ணாவதார சம்பந்தமாக ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளதைச் சொல்லியிருக்கிறீர்கள்.அதைப்போலவே ,”தசமுகனைச்செற்றேனோ  பிராட்டியைப்போலே ” என்று 4 வது ரஹஸ்யத்திலும்,”தாய்க்கோலம் செய்தேனோ அநுசூயையைப்போலே ” என்று 7 வது ரஹஸ்யத்திலும் ” முதலடியைப் பெற்றோனோ  அகலிகையைப்போலே ” என்று 10 வது ரஹஸ்யத்திலும், , ”அடையாளம் சொன்னேனோ கபந்தனைப்போலே ” என்று 17 வது ரஹஸ்யத்திலும் ,இப்படியாகச் சில ரஹஸ்யங்களை ஸ்ரீமத் ராமாயணத்தில் உள்ளதைச் சொல்லியிருக்கிறீர்கள்.அப்படிப்பட்டவை யாவும் இன்ன பிறவற்றையும்  ஸ்வாமி தேசிகன் யாதவாப் யுதயம் , ரகுவீராகத்யம் போன்றவற்றில் சொல்லியிருக்கிறார்.,     வைராக்ய பஞ்சகம் ஒன்று போதும்,ஸ்வாமி தேசிகனின் பற்றற்ற நிலையை அறிந்துகொள்ள ! ஆனால், அந்தோ !தேசிகனடியார்கள் பலருக்கு இந்தக் காவ்யங்களைப் பற்றியே தெரியாது ”பணம், பணம் ” என்று பணத்தின்பின்னால் ஓடுகிறார்களே , இவர்களைத் தடுத்து நிறுத்தி,இவர்களுக்கு வைராக்யத்தை ஏற்படுத்தி, ஸ்வாமி தேசிகனின் காவ்யங்களைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்ய முடியவில்லையே என்பதால் ,  ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல என்று தாபப்படுகிறேன்     
திருக்கோளூர் பெண்பிள்ளை :–    18.என்ன ? எம்பெருமானார் காலத்தில் வசித்த வைணவர்களுக்கு இருந்த வைராக்யம் 
ஸ்வாமி தேசிகன் காலத்திலேயே குறைந்து விட்டதோ  ? அதனால்தான் ,ஸ்வாமி தேசிகன் வைராக்ய பஞ்சகம் அருளினாரோ ?இப்போது நீ சொல்லும் விவரத்தைப் பார்த்தால், ஸம்ப்ரதாயஸ்தர்கள் ,ஆழ்வார் அருளியதைப்போல , ”உண்டியே , உடையே ”என்று வாழ்கிறார்களோ  ? கலியின் கொண்டாட்டம் அதிகரித்துவிட்டதோ  ? சரி, மேலே சொல்வாயாக ! 
அடியேன் :—    
19. ஸ்வாமி தேசிகன் 24 தமிழ் பிரபந்தங்களை அருளியிருக்கிறார். பெயர்களைக்கேட்டாலே சந்தோஷப்படுவீர்கள். அடைக்கலப்பத்து,பன்னிருநாமம், அர்த்தபஞ்சகம் , திருச்சின்ன மாலை என்று இப்படி 24 பிரபந்தங்கள். இவற்றைப் படித்தோ, அறிந்தவர்களிடம் கேட்டோ,ஸம்ப்ரதாயத்தில் ஈடுபடவேண்டும் என்கிற எண்ணமே ,பல தேசிக பக்தர்களுக்கு இல்லை.ஸ்வாமி தேசிகன் அருளியவற்றை அறிந்துகொண்டு அந்த மஹாசார்யனின் சிஷ்யர்கள் என்று பெருமைப்படலாம்;புதிதாக வேறு ஒரு நூலும் இயற்ற வேண்டியதில்லை ஸ்வாமி தேசிகன் எல்லாவற்றையும் அருளி இருக்கிறார். ஆனால், இவர்களைப்போல் உள்ளவர்களைப் பன்னிப்பன்னி அழைத்தாலும் பதுங்கித் திமிறி ஓடுகிறார்களே தவிர ,  நாடி வருதல் இல்லை.   அதனாலேயே, ஸம்ப்ரதாயம் வளர்த்தேனோ ஸ்வாமி தேசிகனைப்போல என்று தாபப்படுகிறேன்   
20. திருக்கோளூர் பெண்பிள்ளை :–     ஸ்வாமி தேசிகனைப்போல, அகத்தியர் தமிழில் அருமையான பாடல்களை –பாசுரங்களைப் படைத்தோர் ,ஆழ்வார்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?தேசிக பக்தர்கள் என்று சொல்லி, ஸம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள்கூட, அழகுத்  தமிழில் ஆசார்யன் அருளியதை அநுஸந்திக்கலாமே ?  இதுவும் கலியின்தாக்கமோ ? சரி, மேலே சொல் !21.  அடியேன் :— To Be Contd –III                                                  —————–தொடருகிறது—-


Sarvam Sree Hayagreeva preeyathaam

About the Author

Leave A Response