ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –வ்யாக்யானம் —அவதாரிகை –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”

Posted on Mar 18 2020 - 1:13pm by srikainkaryasriadmin
Categorized as
860
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய  ஸாரம் –வ்யாக்யானம் —அவதாரிகை –ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ” (லேட்டஸ்ட்–18–3–2020 )
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம் —-  உருப்பட்டூர் ஸௌந்தரராஜன்     அவதாரிகை 

விஞ்ஜாபனம்  அமெரிக்க வாழ் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்காக,அடியேன், 2013ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் –தை மாதம் தொடங்கி 2015ம் ஆண்டு பிப்ரவரி தொடக்கம் வரை –காலக்ஷேபமாக skype ல் சொல்லிவந்த 
  ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய  ஸாரம் –வ்யாக்யானம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஏனெனில், இதில் ,ஸ்ரீ உத்தமூர் ஸ்வாமி, ஸ்ரீ மடம் 45 ம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கர் பூர்வாஸ்ரமத்தில் அருளியது, ஸ்ரீமத் பௌண்டரீகபுரம் ஆஸ்ரம வெளியீடு ( இதை அடியேனுக்கு அநுக்ரஹித்து , ஆசீர்வதித்து , காலக்ஷேபத்துக்கு ஊக்குவித்த ஸ்ரீமத் பரவாக்கோட்டை ஆண்டவனுக்கு அடியேன் அனவரதமும் கடமைப்பட்டுள்ளேன் ) ஸ்ரீ ஸேவா ஸ்வாமி அவ்வப்போது அருளியது—-இவையும் பிறவும் கலந்தே இருந்ததால்,  ஸ்வாமி தேசிகன் எடுத்தாண்ட திவ்ய ப்ரபந்தப் பாசுரங்களின் விரிவு நிரம்பி இருந்ததால், மிகுந்த வரவேற்பு இருந்தது. இதற்கான ”ஆடியோ ” இருந்தாலும், C D  ரூபமாக இருந்தாலும், எழுத்து வடிவத்தில் கொடுப்பது   மிகவும் தேவை என்று,ஆச்ரிதர்கள் அடிக்கடி முறையிட்டதால் , தட்டச்சு செய்ய முடியாவிட்டாலும்,   அடியேன் நித்யமும் தொழும்
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவன் திருவடி பணிந்து,ஆசார்யன்  ஸ்வாமி தேசிகன் ,பூர்வாசார்யர்கள் அஸ்மதாசார்யன் பாதாரவிந்தங்களை ,அகத்தில் நிறுத்தி வணங்கி ,எழுதத் தொடங்குகிறேன் இதில் குற்றமிருப்பின் பொறுத்து, குணத்தை நாடி , அடியேனை அநுக்ரஹிக்க வேண்டுகிறேன் .               ஸ்ரீமான் வேங்கட நாதார்ய : கவிதார்கிக  கேஸரீ  | வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||          முதலில், ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய  ஸாரத்தில்  ஸ்ரீ குருபரம்பரா ஸாரம்   அருளி உள்ளதை , விரிவான வ்யாக்யானமாக ,அடியேன் எடுத்துரைக்குமுன்பு  அவதாரிகை  என்பதை இங்கு உரைக்கின்றேன்      பகவானுடைய ச்ருஷ்டியில், கணக்கில்லாத  ஜீவாத்மாக்கள், உலகில் ஜனித்தும் , மரணித்தும் , உழன்று கொண்டிருக்கின்றன—   ஓரறிவு —மரம், செடி, கொடி  2 வது   அறிவு —-நத்தை,  சங்கு,   ஆமை  போன்றவை  3 வது  அறிவு—எறும்பு, கரையான்  போன்றவை  4 வது  அறிவு —நண்டு, வண்டு , பறவை போன்றவை   5 வது  அறிவு —ஆடு, மாடு, போன்ற விலங்கினங்கள்  6 வது  அறிவு—மனிதன் –ஜீவாத்மாக்கள்  7 வது  அறிவு —மஹரிஷிகள், முனிவர்கள்  8 வது  அறிவு–தேவர்கள், நவக்ரஹங்கள், பஞ்சபூதங்கள்  9 வது  அறிவு —ப்ரஹ்மா, சிவன், விநாயகர், தேவதாந்த்ரங்கள்    இப்படி இருக்கிற அறிவுகளில், 1, 2, 3, 4, 5,  அறிவுகளைத் தாண்டி,  6 வது அறிவை உடைய மனுஷ்யப் பிறவி கிடைத்து இருக்கிறது.   ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது ” என்பது தமிழ் மூதுரை. இப்படிப்பட்ட மனுஷ்யப் பிறவி கிடைப்பது அரிது; இதிலும், கூன், குருடு   செவிடு இல்லாமல்   பிறத்தல் அரிது.  இந்த மனுஷ்ய ஜென்மத்திலும் , இந்த ஜீவாத்மா , ப்ராம்மணனாக— ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பது அரிது. இந்தப் பிறப்பு, பூர்வத்தில் பற்பல ஜன்மங்களில் செய்த புண்யத்தால்  கிடைத்து இருக்கிறபோது, இப்பிறவியைக் ”கண்டதே காக்ஷி ,கொண்டதே கோலம் ” என்று வீணாக்கி, சாஸ்த்ர விரோதமான கார்யங்களைச் செய்து, பாபத்தைப் பெருக்கி ,மறுபடியும் பிறவிச் சுழலில்,  ஓரறிவு, இரண்டறிவு  என்று பிறந்து அல்லல்படலாமா  ? இந்த அல்லல்களைத் தவிர்க்கவேண்டாமா ? இப்போது கிடைத்திருக்கும் இந்தப் பிறவியைக் கொண்டு  பகவத், பாகவத கைங்கர்யங்களைச் செய்து, மறுபடியும் பிறப்பே இல்லாமல்,  நல்ல கதியை—   பகவானின் திருவடியை அடைய வேண்டாமா  ?   அடைய வேண்டும் , அடைய வேண்டும் என்கிற தாபத்தினால்தான்  ”ஸமாச்ரயணம் ”  செய்து கொள்கிறோம்; ”ப்ரபத்தி ” செய்து கொள்கிறோம்.    ஸமாச்ரயணம்  ஆனபிறகு, ”க்ரந்த சதுஷ்டயம் ” என்கிற நான்கு க்ரந்தங்களை, ஆசார்யனிடம் , ”காலக்ஷேப ” மாகக் கேட்கவேண்டும் என்று ஆசார்யர்கள்  கட்டளையிட்டு இருக்கிறார்கள்.  1. ஸ்ரீ பாஷ்யம்—ஸ்ரீ வ்யாஸரின்  ”ப்ரஹ்ம ஸுத்ர”த்துக்குஸ்ரீ உடையவரின்  வ்யாக்யானம் —உரை  2. ஸ்ரீ கீதா பாஷ்யம்—ஸ்ரீமத் பகவத் கீதைக்கு, ஸ்ரீ ராமானுஜர் அருளிய உரை                                          அதற்கு, ஸ்வாமி தேசிகன் ஸாதித்த ”தாத்பர்ய சந்த்ரிகை ” 3. பகவத்  விஷயம் –ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு , ஸ்ரீ ராமானுஜர்  கட்டளைப்படி, அவருடைய ஞான புத்ரர் ”திருக்குருகைப் பிரான் பிள்ளான் ” அருளிய வ்யாக்யானம் –ஆறாயிரப்படி –மணிப்ரவாள நடையில்  4. ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் —ஸ்வாமி தேசிகன்,  நாமெல்லோரும் நல்ல கதியை  அடையவேண்டுமென்று  விரும்பி , தனது அந்திம காலத்தில்,அருளிச் செய்த  க்ரந்தம்     இந்த நான்கும், மாறுபட்ட கருத்து ஏதுமில்லாமல், ஒரே குரலில், நமது ஸம்ப்ரதாயக்  கொள்கைகளைச் சொல்கின்றன. இதை ”உபய வேதாந்த ஐக கண்ட்யம் ” என்று சொல்வார்கள்.    நமது ஸம்ப்ரதாயத்தில்,  அடிப்படை விஷயங்களை அறிந்து தெளிவதற்கு,  ஆசார்யனின் —ஸ்வாமி தேசிகனின் —ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம்  சிறந்தது– இது ”ஸார சாஸ்த்ரம் ”—மூன்று ரஹஸ்ய மந்த்ரங்களின் ஆழ்ந்த அர்த்தங்களை விளக்கி, ப்ரபத்திக்கு அழைத்துச் செல்கிறது. க்ரந்த சதுஷ்டயத்தில் , முதல் மூன்றையும் காலக்ஷேபம் செய்ய இயலாவிட்டாலும்,  ஸ்வாமி தேசிகன் அருளிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற இந்தக்  கிரந்தத்தை  காலக்ஷேபம் மூலமாக அறிந்துகொண்டாலே ,ஸ்ரீ பாஷ்யம் , கீதா பாஷ்யம்  மற்றும் பகவத் விஷயம் காலக்ஷேபம் செய்வதற்குச் சமம்.. அதனால்தான், நமது பூர்வர்கள் அநேக தரம்   ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தை காலக்ஷேபமாகச் சாதித்து  இருக்கிறார்கள்.    மோக்ஷம் அடைவதற்குச் ”சரணாகதி ” அதாவது ”ப்ரபத்தி ” முக்கியம். அது எனக்கு ஆகிவிட்டது– மேற்கொண்டு எதுவும் தெரியவேண்டியதில்லை — என்று ப்ரபத்தி செய்துகொண்டவர்கள், சொல்லலாம். ஆனாலும், ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தைக் காலக்ஷேபமாகக் கேட்கும்போது, பல ஸுக்ஷ்ம  விஷயங்களை, அறிவு க்ரஹிக்கிறது–   ப்ரபத்திக்குப் பிறகு, ப்ரபன்னன் , ஜீவித  பர்யந்தம்  எப்படி வாழவேண்டும்  ப்ரபத்திக்குப் பிறகு, தெரிந்து செய்யும் பாவங்கள், அறியாமல்  செய்யும் பாவங்கள் எப்படி அழிகிறது— அஷ்டாக்ஷரம், த்வயம், சரமச்லோகம் இவற்றுக்கான அர்த்தங்கள், அவற்றைத் தொடர்ந்து ஜபிக்கவேண்டிய காரணம், விசிஷ்டாத்வைத சித்தாந்தம், முமுக்ஷு என்றால் யார், அவன் அறிய வேண்டியது என்ன, அர்த்த பஞ்சகம் என்கிறார்களே அது என்ன , மூன்று தத்வம் , தர்மபூத ஜ்ஞானம் , பகவானின் பர , வ்யூஹ , விபவ, அர்ச்சை , அந்தர்யாமி விவரம், பரதேவதை யார், ப்ரவ்ருத்தி மார்க்கம் எது, நிவ்ருத்தி மார்க்கம் எது, மோக்ஷத்துக்கு எது உபாயம் , பகவான் ப்ரபன்னனுக்குச் செய்யும் உபகாரம், ப்ரபத்தி செய்துகொள்ள என்ன யோக்யதை, ப்ரபத்தியின் அங்கங்கள் , ப்ரபத்திக்குப் பிறகு ப்ரபன்னனின் கடமைகள், இப்படிப்பலப்பல ரஹஸ்யங்களை ஸ்வாமி தேசிகன் , ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளியிருக்கிறார்.    ஸ்வாமி தேசிகன் கணக்கிலடங்காத க்ரந்தங்களை  அருளியிருக்கிறார்.  அப்படி அருளி இருந்தபோதும், அவருக்கு ஒரு குறை இருந்தது.   அதாவது, ”தத்வம், ஹிதம், புருஷார்த்தம் ” இவற்றை விரிவாகச்  சொல்லி,  ”திருமந்த்ரம் , த்வயம் , சரம ச்லோகம் ” மூன்று ரஹஸ்யங்களுக்கு ஆழ்ந்த அர்த்தங்களைச் சொல்லி, சேதநர்கள் இன்னுமறிந்துகொள்ளவேண்டிய சகல விஷயங்களையும்  போதிக்கவேண்டும் என்ற அவாவில், அவருடைய சரம தசையில்,  ( உலகில்  ஜீவித்த கடைசி காலத்தில் ) இந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய  ஸாரத்தை அருளி பரம உபகாரம் செய்து இருக்கிறார்.   இதற்குமேல் வரும் சந்தேகங்களுக்கும் பரிஹாரம் செய்யும் விதமாக,  ”விரோத பரிஹாரம் ” என்கிற ரஹஸ்யத்தையும் அருளி தன்னுடைய மனக்குறை  நீங்கப்பெற்றார்.   பகவான் , நமக்குப் பல பேருதவிகள் செய்திருக்கிறான். உபஹாரங்கள் செய்து இருக்கிறான். எல்லாவற்றிலும் மேம்பட்ட உபஹாரம் ஸ்வாமி தேசிகனை நமக்கு ஆசார்யனாக அருளியதுதான். அதற்காகப் பகவானுக்குப் பல்லாயிரம் கோடி க்ருதக்ஜதையைத்  தெரிவிக்க வேண்டும்; தெரிவிப்போம்.    இந்த ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்கிற க்ரந்தம் , தமிழும் ,ஸம்ஸ்க்ருதமும் கலந்த மணிப்ரவாள நடையில் உள்ள நூல். இந்தக் க்ரந்தம்  அவதரித்துப் பல நூற்றாண்டுகள் ஓடிவிட்டன. ஆழ்ந்த பொருள் பதிந்த விஷயங்கள் நிறைந்த நூல். நமக்கு இப்போது இருக்கும் அறிவுக்கு , அவைகளை அறிந்துகொள்ளும் திறன் கிடையாது. ஆதலால், இதற்கு வ்யாக்யானங்கள் தேவைப்பட்டன. திருக்குடந்தை தேசிகன் –ஸ்ரீ கோபாலார்ய மஹா தேசிகன் அருளிய ”ஸாரஸ்வாதிநி ” ஸ்ரீபாஷ்ய –ஸ்ரீநிவாஸாச்சார்யர் –‘ஸார தீபிகை ” பாரத்வாஜ –ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி–”ஸார ப்ரகாஸிகை” ஸ்ரீசைல  ஸ்ரீநிவாஸாச்சார்ய ஸ்வாமி—”ஸார விவரணி ” ஸ்ரீ பரகால ஸ்வாமி—”ஸார தீபிகா ஸங்க்ரஹம் ”   இப்படிப் பல வ்யாக்யானங்கள்– திருவஹீந்த்ரபுரம் –சேட்லுர்  ஸ்வாமி என்கிற  ஸ்ரீ ந்ருஸிம்ஹாசார்ய ஸ்வாமி –எளிய தமிழில் வ்யாக்யானம்  ஸ்ரீ இஞ்சிமேடு அழகிய சிங்கர் –”ஸாரபோதினி ” ஸ்ரீ சின்னமு பாட்டராசார்ய ஸ்வாமி உரை ( 1928 ) தேவநாகரி லிபியை முதன்முதலில் பயன்படுத்தி உரையிட்டவர்    ஸ்ரீ வில்லிவலம் அழகிய சிங்கர் பூர்வாஸ்ரமத்தில் அருளிய உரை  ஒப்பிலியப்பன் ஸந்நிதி ஸ்ரீ ஸ்ரீராம தேசிகாசார்ய ஸ்வாமி — பௌண்டரீகபுரம் ஆஸ்ரம வெளியீடு  ( 1960 ) இவற்றைத் தவிர இன்னும் வ்யாக்யானங்கள் இருக்கலாம்  அடியேனுக்குத் தெரிந்த அளவில் எழுதியிருக்கிறேன்       ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தைப் பற்றி இப்போது சொல்கிறேன்   இது  4 பாகம்—-32 அதிகாரங்கள்   1. அர்த்தாநு சாஸன பாகம் 2.ஸ்த்திரீகரண பாகம் 3. பதவாக்ய யோஜனா பாகம் 4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம்     அர்த்தாநு சாஸன பாகத்தில் –22 அதிகாரங்கள்        ஸ்த்திரீகரண பாகத்தில் —4      ”  பதவாக்ய யோஜனா பாகத்தில் — 3   ”  4. ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகத்தில்–3  ”       இப்போது ஸ்ரீ  குருபரம்பராஸாரம் என்பதைத் தொடர்ந்து எழுதுவேன்   கவிதார்க்கிக  ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே | ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :  ||    —————————————–தொடரும் ————- —

—               ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய  ஸாரம் –வ்யாக்யானம்  —  உருப்பட்டூர்  ஸௌந்தரராஜன்   ——————————————————————————— ஸ்ரீமாந்  வேங்கட நாதார்ய : கவிதார்க்கிக  கேஸரீ |
வேதாந்தாசார்ய வர்யோமே  ஸந்நிதத்தாம்  ஸதா  ஹ்ருதி || விகாஹே நிகமாந்தார்யம் ,விஷ்ணுபாத ஸமுத்பவாம்  |
 ரஹஸ்யத்ரய ஸாராக்யாம்  த்ரிஸ்த்ரோதரஸம்  அகல்மஷாம்  || அவிஜ்ஞாதம்  விஜாநதாம் விஜ்ஞாதம்  அவிஜாநதாம் |
 ரஹஸ்யத்ரய ஸாராக்யம் பரம் ப்ரஹ்மாஸ்து  மே ஹ்ருதி  ||   சீரொன்று தூப்புல்  திருவேங்கடமுடையான்
பாரொன்று சொன்ன பழமொழியில் —-ஓரொன்று
தானே  அமையாதோ  தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப்  போமளவும்  வாழ்வு .

ஸ்ரீ குருபரம்பரா ஸாரம்
——————————————-


* குருப்யஸ்தத்குருப்யஸ்ய  நமோவாக மதீமகே  |
வ்ருணீமகே ச தத்ராத்யௌ  தம்பதீ  ஜகதாம்  பதீ   || அர்த்தம் —— அடியோங்களுடைய ஆசார்யன் ,அந்த ஆசார்யனின் ஆசார்யர்கள்—-
இவர்களுக்காக, அடிக்கடி நம என்று சொல்கிறோம்.
உலகுக்கெல்லாம் அதிபதியான ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ மஹாலக்ஷ்மி
திவ்ய தம்பதிகளை, அடியோங்கள் ,ப்ரார்த்திக்கிறோம்

* பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார்  தண்
                 பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன்  நம் பாணநாதன்
                  தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி
வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
                   மங்கையர் கோன்  என்று இவர்கள் மகிழ்ந்து பாடும்
செய்ய தமிழ் மாலைகள் நாம்  தெளிய ஓதித்
                   தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே

                                              ——————அதிகார ஸங்க்ரஹம்——- அர்த்தம்–   பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், மிக்க குளிர்ச்சியான
தாமிரவருணி நதிக்கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குருகேசன் )
விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வார், தூய உள்ளமுடைய
குலசேகர ஆழ்வார்நம்முடைய திருப்பாணாழ்வார் , தொண்டரடிப்பொடி ஆழ்வார் ,
திருமழிசையில் வந்து அவதரித்த, திருமழிசைப் பிரான், உலகம் எங்கும்
வேதங்களின் ஒலி ,சப்தம் விளங்க—வாள் ஆயுதமும், வில் ஆயுதமும்
ஏந்திய திருமங்கை மன்னன் –ஆகிய ஆழ்வார்கள்  மகிழ்ந்து பாடிய (அருளிய )
இனிமையான பாசுரங்களை  நாம் நன்கு தெளிந்து ஓதி, அத்யயனம் செய்து,எளிதில் பொருள் தெரிந்து கொள்ள இயலாத வேதங்கள், உபநிஷத்துக்கள் –இவைகளின் உண்மையான பொருள்களைத் தெரியாத இடங்களில்,   தெளிந்து(குழப்பமே இல்லாமல், தெளிவாக ) அறிந்தோம்

செய்ய தமிழ்மாலைகள்
1.
பொய்கை ஆழ்வார்—–முதல் திருவந்தாதி ——————————–100 பாசுரங்கள்
2.
பூதத்தாழ்வார் ——–2ம் திருவந்தாதி——————-————————–100 பாசுரங்கள்
3.
பேயாழ்வார் ———-3ம் திருவந்தாதி ———————————————100 பாசுரங்கள்
4.
ஸ்ரீ நம்மாழ்வார் —-திருவிருத்தம்–ருக் வேத ஸாரம் —————– 100 பாசுரங்கள்
                                —-
திருவாசிரியம் –யஜுர் வேத ஸாரம் ———-     7 பாசுரங்கள்
                            —
பெரிய திருவந்தாதி –அதர்வண வேத ஸாரம்–    87 பாசுரங்கள்
                            —
திருவாய்மொழி——ஸாமவேத ஸாரம் ———- 1102  பாசுரங்கள்
5.
பெரியாழ்வார் —-பெரியாழ்வார் திருமொழி —————————–     473 பாசுரங்கள்
6.
குலசேகரப் பெருமாள்—பெருமாள் திருமொழி ————————–    105 பாசுரங்கள்
7.
திருப்பாணாழ்வார் ——அமலனாதிபிரான் ———————————       10 பாசுரங்கள்
8.
தொண்டரடிப் பொடி ஆழ்வார் ————திருமாலை —————————45 பாசுரங்கள்
                                                      ———–
திருப்பள்ளியெழுச்சி ———     10 பாசுரங்கள்
9.
திருமழிசை ஆழ்வார் ——————நான்முகன் திருவந்தாதி ———-    96 பாசுரங்கள்
                                         ————
திருச்சந்த விருத்தம்————————   120 பாசுரங்கள்
10.
திருமங்கை மன்னன் ——————பெரிய திருமொழி ———————-1084 பாசுரங்கள்
                                       ——-    
திருக்குறுந்தாண்டகம் ———————-      20 பாசுரங்கள்
                                     ————
திருநெடுந்தாண்டகம் ————————-      30 பாசுரங்கள்
                                    —————
திருவெழுகூற்றிருக்கை ————–             1 பாசுரம்
                                   ————–
சிறிய திருமடல் —————————–           40 பாசுரங்கள்
                                   ————–
பெரிய திருமடல்———————-——–          78 பாசுரங்கள்                     ஆக ———————————————————————————–     3,708 பாசுரங்கள்   இந்தச் செய்யத் தமிழ் மாலைகள் 3708 பாசுரங்களை, அர்த்தங்கள் நன்கு புரியும்படி பாராயணம் (படித்து/சொல்லி ) செய்துவேதங்களும் ,உபநிஷத்துக்களும் சொல்லும் கடினமான அர்த்தங்களை ,நன்கு தெளிந்தோம் —என்கிறார் ,ஸ்வாமி தேசிகன்

* இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும் பேற்றில்                     இகழாத     பல்லுறவில் இராகமாற்றில் தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்                    தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் அன்பர்க்கே அவதரிக்குமாயனிற்க                    அருமறைகள் தமிழ்ச்செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும்                    தொல்வழியே நல்வழிகள்  துணிவார்கட்கே . அர்த்தம்—-   ஆயன்—-அன்பர்க்கே அவதரிக்கும் ஆயன் —பக்தர்களுக்காகவே அவதாரம் செய்பவன்
 
கண்ணன் , நிற்க—–ஸ்ரீ க்ருஷ்ணன்  தயாராக இருக்க —– எதற்கு—-? தனது பக்தர்கள்ளுக்கு ஆனந்தரூபமான அனுபவத்தைக்கொடுக்க
சரணம் என்று இறைஞ்சுபவரைக் காக்க புருஷார்த்தத்தை உணர்த்த இகழ்ச்சியே இல்லாத பலவித ஸம்பந்தத்தை உணர்த்த ,
உலக விஷயங்களில் வைத்துள்ள பற்றுதலை–அதாவது, தகாத விஷயங்களில் பற்றை அழிக்க, தன்  விஷயத்தில் பற்றுதலை உண்டாக்க
 
பாபங்களை ஒழிக்க கருணையை வெளிப்படுத்த. தத்துவ விளக்கங்களைச் சொல்ல
தன்னுடைய சுபாவத்தை அருள —ஆகியஇந்தப் 10 விஷயங்களுக்காகத்   தயாராக இருந்தான். ஆனாலும், அவரை ஏறெடுத்தும்  பாராமல், குற்றமில்லாக்  கவியான
மதுரகவி ஆழ்வார் , அறிவதற்கு மிகக் கடினமான
வேதங்களின் பொருளைத்  தமிழில் அருளிய ஸ்ரீ நம்மாழ்வாரின் திருவடிகளையே சரணமாகப் பற்றினார். இவர் துன்பற்ற மதுரகவி (குற்றமில்லா மதுரகவி ) இவருக்குத் தோன்றிய வழி— இதுவே தொல்வழி —தொன்மையான வழி/ பழமையான வழி — என்றும், நல்வழி–ஸம்ஸார பந்தத்திலிருந்து வெளியே வர மிக நல்ல வழி என்றும் நமக்கு காண்பித்தார் . யாருக்கு—? எது தொன்மையான வழி என்று துணிந்து வருவார்க்கும், ஸம்ஸாரம் என்கிற காட்டிலிருந்து விடுதலை பெறத் துணிந்தவர்கட்கும் நாயகன் கிருஷ்ணன் ,அருளுவதற்குத் தயாராக இருந்தாலும், மதுரகவிகள் நம்மாழ்வாரான ஆசார்யன்  திருவடிகளைச் சரணம் என்று வந்து அடைந்தார்– இதை அனுஷ்டித்து நமக்கு காண்பித்தார். மதுரகவி ஆழ்வார் அருளியது—கண்ணிநுண் சிறுத்தாம்பு–10 பாசுரங்கள். இந்தப் 10 பாசுரங்களின் பொருளை, இந்த ஒரே பாசுரத்தில் ஸ்வாமி தேசிகன் சொல்கிறார். இப்படிப் 10 விஷயங்களாலே ஸ்ரீ நம்மாழ்வார் , பகவானைச் சரணடைந்தார். மதுரகவிகளோ, ஆசார்யனை—ஸ்ரீ நம்மாழ்வாரைச் சரணடைந்தார்.   மோக்ஷத்துக்கு உபாயம் ஆசார்யனேஆசார்ய பரம்பரையை அநுசந்திக்க வேணும்

பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச    புண்டரீகச்ச புண்யக்ருத்  | ஆசார்யவத்தயா  முக்தெள  தஸ்மாத் ஆசார்யைவான்  பவேத்  ||   என்று ஆசார்யவத்தையே  ஸர்வருக்கும்  மோக்ஷ காரணமென்று அறுதியிட்டார்கள்  . முமுக்ஷுவுக்கு ஆசார்யவம்சம் பகவானானளவுஞ் செல்ல அநுசந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.

வ்யாக்யானம் :—– ஸ்ம்ருதி சொல்கிறது—பாபிஷ்ட்ட : க்ஷத்ரபந்துச்ச    புண்டரீகச்ச புண்யக்ருத்  |
ஆசார்யவத்தயா  முக்தெள  தஸ்மாத் ஆசார்யைவான்  பவேத்  || மிகவும் பாபியான க்ஷத்ரபந்து, மிகவும் புண்ணியனான புண்டரீகன் இருவருடைய சரிதத்தை மேற்கோள் காட்டி, அவர்கள் இருவருமே ஆசார்யனின் அநுக்ரஹத்தால்தான் மோக்ஷம் அடைந்தார்கள் என்று ஸ்ம்ருதி சொல்கிறது க்ஷத்ர பந்து சரிதம் :—- ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் சொல்லப்படுகிறது ——– க்ஷத்ரபந்து ஒரு அரசன்–எப்போதும் பாபச் செயல்களையே செய்துவந்தான். அதனால் ராஜ்யத்தைவிட்டு விலக்கி வைக்கப்பட்டதால் காட்டில் வாழ்ந்து வந்தான். பிறரைத் துன்புறுத்தி ,ஜீவ  ஹிம்ஸை செய்வதே வழக்கமாக இருந்தது. ஒருநாள், நட்ட நடுப்பகல் உச்சி வெய்யிலில், வழிதவறி வந்த முனிவரைப் பார்த்து, இரங்கினான். தண்ணீர் தாகத்தால் தவித்த அவர், தண்ணீர் அருந்த அருகில் உள்ள குளத்தில் இறங்கும்போது அதில்  விழுந்துவிட, க்ஷத்ரபந்து அவரைக்காப்பாற்றி, அவரது பசிக்குத் தாமரைக் கிழங்குகளைக் கொடுத்து, உபசரித்தான். முனிவர் , அவனது வ்ருத்தாந்தத்தைக் கேட்க, அவன் தனது பாப  கார்யங்களை எல்லாம் சொல்லித் திருந்தவும் இயலாத நிலையில் இருப்பதாகச் சொல்ல, அந்த முனிவர், ”கோவிந்தா, கோவிந்தாஎன்றாவது சொல்லிக்கொண்டிரு என்று புத்திமதி சொன்னார். க்ஷத்ரபந்துவும், அப்படியே சொல்லக் சொல்ல, பாபச் செயல்களை ஒழித்து, மோக்ஷத்துக்கான உபாயத்தைச் செய்து மோக்ஷம்  அடைந்தான். உபதேச பரம்பரையில் உள்ளது——-
க்ஷத்ரபந்து ஒரு  கெட்ட அரசன். கெட்ட நடத்தை உடையவன். உறவினர்கள்,அரசனைக்  காட்டில் தள்ளி விட்டார்கள். அங்கும் கெட்ட வழியில் முனிவர்களைத் துன்புறுத்தினான். ஒரு நாள், அந்த வழியில் நாரதர் வந்தார்.அவரைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவர், ”ஹே —அரசனே–உன்குடும்பத்தாரைக் காப்பாற்ற, நிறைய பாபச் செயல்களை செய்கிறாய் ; இதில் ஒரு பங்கையாவது உன் குடும்பத்தார் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்வார்களா — என்று கேட்டு வா என்று சொல்லி அனுப்பினார். நாரதரின் தர்சனத்தால் ,சிறிதளவு ஞானம் உண்டான க்ஷத்ரபந்து, அப்படியே செய்கிறேன் என்று சொல்லிச் சென்றான். திரும்பி வந்த அரசன், ”எல்லோரும் மறுக்கிறார்கள்; நிறையப் பாபங்களைச் செய்திருக்கிறேன்; என்னைக் காத்தருள்க —என்று நாரதரை வேண்ட, அவர், அவனுக்கு மோக்ஷ உபாயங்களை உபதேசித்து, அவன் மோக்ஷம் அடையுமாறு செய்தார்.


புண்டரீகனின் சரிதம் :— ஸ்ரீ பாத்மோத்தர  புராணம் சொல்கிறது—— இவன் ப்ராம்மணன் —பெரிய செல்வந்தன். வேதாத்யானம் செய்தவன். பெற்றோர்களுக்குப் பணிவிடை செய்தவன். புண்ய தீர்த்தங்களில் நீராடியவன். பக்தி யோகத்தில் இழிந்தும், பகவானின் அருள் கிட்டவில்லை.ஒரு சமயம் நாரதரைத் தரிசிக்க, அவர் அவனுக்கு அஷ்டாக்ஷர மந்த்ரத்தை உபதேசித்து, நல்வழிகாட்ட, இந்த பிராம்மணன் , அஷ்டாக்ஷர மந்த்ர ஜபத்தால், பகவானின் அருளை பெற்று மோக்ஷம் அடைந்தான்.இப்படியாக, ஆசார்யன் அருளினால்தான் மோக்ஷம் சித்திக்கும் என்று தெளிந்தது.மோக்ஷம் அடையத் தீராத ஆசை உடையவன், தனது ஆசார்ய பரம்பரையை ,பகவான் வரையிலும் சொல்ல வேண்டும்.

பகவான் ஸ்ரீமந்  நாராயணனே முதல் ஆசார்யன் தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும்  என்றும், மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : என்றும் , த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ என்றும், குருரஸி கதிச்ச  ஸி ஜகதாம்  என்றும் , சொல்லுகிறபடியே ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் —- 1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் 2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா : என்னும்படி  பண்ணி , அவர்கள் முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் , 3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் , 4.க்ருஷ்ணத்வைபாயனம்  வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும், மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து   மகாபாரத சாரீரகாதிகளை  ப்ரவர்த்திப்பித்தும், 5. ஹம்ஸ   மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று   தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் , 6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு முதலிப்பித்தும் 7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம்  என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை: ஸவகர்மஸு  ஸாத்வதம்  விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன  ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே  ஆதெள  கலியுகஸ்ய  ச  என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்  8. பூர்வேத்பன்னேஷு  பூதேஷு  தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய   குருதே யத் ஸமீகிதமச்யுத :  என்கிறபடியே பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே  வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும் 9. இப்படி  தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு   ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக , ஏ சாட்ஷாத்  நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம்  தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும் 10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து :
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு  ச பூரிச : தாம்ரபர்ணீ நதீ யத்ர  க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான் வ்யாக்யானம்– எம்பெருமானே , எல்லா உலகங்களுக்கும் முதல் ஆசார்யன் –பரமாசார்யன் என்பதை பல உதாரணங்களிலிருந்து உணரலாம்.

தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யை பிதரம் குரும் (மஹாபாரதம்–ஸபா பர்வம்) எல்லாக் கல்யாண குணங்கள் உள்ளவனும், முதலாவதாகப் பூஜிப்பதற்குத் தேவையான குணங்களைப்  பெற்றிருப்பவனும்,தகுதி உடையவனும், பிதாவும், ஆசார்யனும் , பூஜிக்கத்தகுந்தவனும் ஆன ,இந்தக் க்ருஷ்ணனை பூஜிக்கலாம் —-சம்மதியுங்கள்— ( ராஜ ஸுய யாகத்தில் ,முதலில் யாருக்கு அக்ர பூஜை செய்யவேண்டும் என்கிற கேள்வி எழுந்தபோது, ஸஹதேவன் , அங்குள்ள சபையில் கூடி இருந்தவர்களைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் —-ப்ரஹ்ம வித்யையை உபதேசிப்பவன் –ஆசார்யன் . வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவன் –குரு ) மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு : —-விஷ்ணு புராணம் (5–1–14) எல்லா  உலகங்களுக்கும் குருவான நாராயணன், எனக்கும் குரு —ஸ்ரீ விஷ்ணு சித்தீயம் சொல்கிறது—–தனக்கென்று ,எந்த ஆசார்யனும் இல்லாத , பரமாசார்யன் –நாராயணன்.
 (
இங்கு குருவும் அவனே;ஆசார்யனும் அவனே ). த்வமேவ பந்துச்ச குரும்த்வமேவ —–நீரே  பந்து–எல்ல உறவும். நீரே குரு –காந்தாரி,
 
க்ருஷ்ணனைப் பார்த்துச் சொல்லும் வாக்யம் குருரஸி கதிச்ச  ஸி ஜகதாம்—-ஸ்தோத்ர ரத்னம் (60 ) பிதா த்வம் மாதா த்வம், தயிததநயஸ்த்வம்  , ப்ரியஸுஹ்ருத் த்வமேவ ,த்வம் பந்து: குருரஸி  கதிஸ்சாஸி  ஜகதாம்  | த்வதீயஸ்  த்வத் ப்ருத்ய : தவ பரிஜநஸ் த்வத்கதிரஹம் ப்ரபந்நஸ் ச  ஏவம் ஸதிஅஹமபி  தவைவாஸ்மி  ஹி பாரா : ||
ஸ்தோத்ர ரத்னம் (60 ) முழு ச்லோகம்
 
எல்லா உலகங்களுக்கும், நீரே பிதா ;நீரே மாதா; பிரியமான புத்ரன்;இஷ்டமான மித்ரன்; எல்லா  பந்துவும்;அக இருள் நீக்கும் ஆசார்யன் ;அடியோங்கள் அடையும் பேறு . பகவானுக்கும் , நமக்கும்  நவவித ஸம்பந்தம் –ஒன்பதுவிதமான உறவுகள் பகவான்                                                       நாம் 1.பரமாத்மா                                                 ஜீவாத்மா 2.யஜமானன்                                                கிங்கரர்கள் –வேலையாட்கள் 3.பிதா                                                            புத்ரன் /புத்ரி 4.ஆசார்யன்                                                  சிஷ்யன் 5.பதி                                                               பத்னி 6.போக்தா –அனுபவிப்பவன்                      போக்யம் –அனுபவிக்கப்படும் பொருள் 7.ரக்ஷிப்பவன்                                                ரக்ஷிக்கப்படுபவர் 8.நியமிப்பவன்                                             நியமிக்கப்படுபவன் 9.சேஷீ                                                            சேஷன் –சேஷபூதன்   இப்படிப்பட்ட எல்லா லோகங்களுக்கும் பரமாசார்யனான எம்பெருமான்,
 
நமக்குச் செய்த உபாயங்களை, ஸ்வாமி தேசிகன் இப்போது சொல்கிறார். 1. ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும் அவற்றுக்கு அபகாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும் இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும் —-
வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவுக்குத் தொடக்கத்திலே வேதங்களைக் கொடுத்தான், ,காணாமல்போன வேதங்களைக் கண்டுபிடிப்பதாக வாக்குக் கொடுத்து, அப்படியே கண்டுபிடித்து, வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, அவன் மூலமாகவே , வேத சாஸ்த்ர ஞானத்தை உலகத்தாருக்கு வழங்கியும்,

. 2. இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை ,ஸ்வபமாகதவிஜ்ஞானா நிவ்ருத்திம் தர்மமாஸ்திதா :  (பாரதம்–சாந்தி பர்வம் )என்னும்படி  பண்ணி , அவர்கள்
முகங்களாலே ஹிதப்ரவர்த்தனம் பண்ணுவித்தும் ——,   வ்யாக்யானம் —
ப்ரஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர்கள் ,—இவர்கள்–தானாகவே ஞானிகள், நிவ்ருத்தி தர்மத்தில் இழிபவர்கள்—–இவர்கள் மூலமாக நன்மைகளைச்  செய்தும்,       3. இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மகர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும் ,

வ்யாக்யானம் —- மற்றும், நாரதர், பராசரர், சுகப்ரம்மம் , சௌனகரிஷி இன்னும் பல மஹரிஷிகள் மூலமாக, அத்யாத்ம ஸம்ப்ரதாயமான ஜீவாத்மா –பரமாத்ம விஷயமான உபதேச க்ரமம் அழியாதபடி செய்தும்,

4.க்ருஷ்ணத்வைபாயனம்  வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? என்றும், மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அனுப்ரவேசித்து   மகாபாரத சாரீரகாதிகளை  ப்ரவர்த்திப்பித்தும்,

வ்யாக்யானம் —–
.
க்ருஷ்ணத்வைபாயனம்  வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் , கோ ஹ்மன்யோ
பூமி மைத்ரேய மகாபாரத க்ருதவேத் ? (விஷ்ணு புராணம் ) க்ருஷ்ணத்வைபாயனர்  என்று கொண்டாடப்படும் வ்யாஸ மஹரிஷி —ஸ்ரீமந் நாராயணனே  !ஹே—-மைத்ரேயரே , மஹாபாரதம் என்கிற இதிஹாசத்தை இயற்ற, இவ்வுலகில் வேறு எவரும் இல்லை.
மஹஷை : கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம : ப்ராஞ்ஜ்ஜலி அப்ரவீத் (மஹாபாரதம் —ஆதிபர்வம் ) மஹர்ஷியான , வ்யாஸரின் திருநாமத்தைச் சொல்லும்போது, பீஷ்மர், கைகளைக் கூப்பியவண்ணம் பேசினார். பகவான் நாராயணன், வ்யாஸாதி மஹரிஷிகளிடம் அநுபிரவேசித்து, சாரீராதிகளை—- மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் முதலியவைகளைப் படைத்தும்,     5. ஹம்ஸ   மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத்யவாதாரங்களாலே தானே வெளினின்று   தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும் ,

வ்யாக்யானம்—- பகவான் நாராயணனே, ஹம்ஸ , மத்ஸ்ய ,ஹயக்ரீவ,நரநாராயண, கீதாசார்ய க்ருஷ்ண அவதாரங்கள் எடுத்து, தத்வங்களையும்,ஹிதத்தையும், புருஷார்த்தத்தையும் ப்ரகாசமாக எடுத்துச் சொல்லியும்—— ஹம்ஸாவதாரம்—-ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—– ப்ரஹ்மாவின் மானஸ புத்ரர்கள்—ஸநகாதிகள்—– இவர்கள், தங்களுடைய பிதாவான, ப்ரஹ்மாவிடம் ,ஸூக்ஷ்மயோகத்தை விளக்கும்படி ப்ரார்த்தித்தார்கள்.இந்த யோகத்தை இதுவரை அறியாத அவர் , மிகவும் வேண்டி, எம்பெருமானைத் த்யானித்தார்.பகவான் மிகவும் கருணையுடன் ஹம்ஸரூப அவதாரமெடுத்து, ப்ரஹ்மாவின் முன்பு தோன்றி, அவருக்கும் ஸநகாதி முனிவர்களுக்கும், விசிஷ்டாத்வைத தத்வமான ஜீவபர—சரீரஆத்மபாவ ரூபத்தை உபதேசித்தார்.   மத்ஸ்யாவதாரம் —–இந்த அவதாரமும் ஸ்ரீமத் பாகவதத்தில் சொல்லப்படுகிறது—–
ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், ப்ரஹ்மா நித்திரை வசப்படுவார். அப்போது, நைமித்திகப் ப்ரளயம் ஏற்படும். உலகங்கள் யாவும் ,கடலில் மூழ்கி எங்கும் ஜலம் காக்ஷி அளிக்கும். நித்திரை வசப்பட்ட ப்ரஹ்மாவின் வாயிலிருந்து வேதங்கள் வெளிப்பட,அப்போது, அருகே இருந்த ஹயக்ரீவன் என்கிற அசுரன், அவற்றை அபகரிக்க,பகவான் இதை அறிந்தார். ஸத்யவ்ரதன் என்கிற ராஜரிஷி க்ருதமாலா என்கிற நதியில் நித்ய அநுஷ்டானங்களைச் செய்துகொண்டிருந்தபோது, அவர், ஜலதர்ப்பணம் செய்யும் சமயத்தில், அவருடைய உள்ளங்கையில் சிறிய மத்ஸ்யமாக (மீன் )அவதரித்து, அவராலேயே, கமண்டலு, தொட்டி,குளம், நதி இவற்றில் விடப்பட்டு, ஒவ்வொரு நிலையிலும் மிகப் பெரிய மீனாக வளர்ந்து,கடைசியில் ஸமுத்ரத்தில் அவராலேயே விடப்பட்டார். இந்த ஆச்சர்யத்தைக் கண்டு ,அனுபவித்து, மெய்சிலிர்த்த  ஸத்யவ்ரதன் இவர் எம்பெருமானே என்று நிச்சயித்து, அவரைத் துதித்து ,ஆசார்யனாக இருந்து தத்வங்களை உபதேசிக்க வேண்டினார். எம்பெருமானும் தத்துவங்களை உபதேசித்து, மத்ஸ்ய புராண சம்ஹிதையையும் சொல்லி, ஹயக்ரீவன் என்கிற அந்த அசுரனை வதைத்து, வேதங்களைக் காப்பாற்றி மீட்டு, ப்ரஹ்மாவுக்கே மீண்டும் கொடுத்தார் ஹயக்ரீவாவதாரம் —-மஹாபாரதம் சொல்கிறது— ப்ரளய காலம் —-எங்கும் ஜலம்.ஜீவாத்மாக்கள், கருப்பான மெழுகில் தங்கத்தூள்கள் ஒட்டுவதுபோல, மூல ப்ரக்ருதி என்கிற சூக்ஷ்ம ரூபத்தில் ஒட்டிக்கொண்டு, அறிவிழந்து இருக்கிறார்கள். பகவான் ப்ரளய ஜலத்தில், பள்ளிகொண்டு இருக்கிறான்;யோக  நித்ரைஇப்படியே பல காலம் கழிகிறது. யோக  நித்ரையில் , பகவான் மறுபடியும் உலகங்களை ஸ்ருஷ்டிக்கவும், ஜீவாத்மாக்களை மறுபடியும் உயிர் பெற்று எழச் செய்துஅவர்கள் உய்வதற்கு வழிகாணவும் யோசித்து, தன்னுடைய நாபியிலிருந்து, தாமரை மலரையும்,
அதில் ப்ரஹ்மாவையும் ஸ்ருஷ்டிக்கிறான் . தாமரை மலர் ஸ்ருஷ்டி ஆவதற்கு முன்பே தாமரை இலையில் இரண்டு நீர்த்துளிகள் ,அவனுடைய சங்கல்பத்தாலேயே உண்டாகின. இதில் ஒரு நீர்த்துளி ,மது என்கிற அஸுரனாகவும் , இன்னொரு துளி ,கைடபன் என்கிற அஸுரனாகவும் ஆகி,தாமரைத் தண்டின் உள்ளே புகுந்து ,ப்ரஹ்மா அமர்ந்துள்ள மலருக்கு வந்தனர் எம்பெருமான், ப்ரஹ்மாவுக்கு , சிருஷ்டித்தொழிலை உபதேசித்து, அதை நன்கு தெளிய நான்கு வேதங்களையும் அருள்கிறான். ப்ரஹ்மா, நான்கு வேதங்களையும் நான்கு அழகான குழந்தைகளாக ஆக்கும் சமயத்தில், தாமரை மலருக்கு வந்த , மது கைடபர் என்கிற இந்த இரண்டு அஸுரர்களும் ,அழகிய நான்கு வேதங்களையும்( குழந்தைகள் ) அபஹரித்துக்கொண்டு பாதாள லோகத்துக்குச் சென்று , அங்கு மறைத்துவைத்தனர். ப்ரஹ்மா பதறினான்; நான்கு வேதங்களின் உதவி இல்லாமல், ஸ்ருஷ்டி செய்ய இயலாமல்தவித்தான். எம்பெருமானைத் துதித்தான், பகவான் அநிருத்தனாகி , ஹயக்ரீவ அவதாரமெடுத்து, பாதாள லோகத்துக்குச் சென்று, ”உத்கீதம்என்கிற ஸ்வரத்தை எழுப்ப, இரண்டு அஸுரர்களும் சப்தம் வந்த திசையை நோக்கிப் போகும்போது, ஹயக்ரீவனாக அவதரித்த பகவான், வேதங்களை மீட்டு, ப்ரஹ்மாவிடம் கொடுத்து, மறுபடியும் யோக  நித்ரை செய்யலானார். அசுரர்கள், ஹயக்ரீவ அவதார எம்பெருமானிடம் சண்டையிட, பகவான் அவ்வஸுரர்களை வதைத்து, ஸ்ருஷ்டி செய்வதற்கான ஞானத்தை ப்ரஹ்மாவுக்கு அருளினார். கதம்பமாலா  என்கிற அடியேனின் புத்தகத்தில்,ஸ்ரீ ஹயக்ரீவரைப்பற்றி, எல்லா  விவரங்களும்அனைத்து ஸ்துதிகளும்–ஹயக்ரீவ   கல்பம்,,ஹயக்ரீவ உபநிஷத் போன்றவை 32 )உள்ளன   நரநாராயணாவதாரம் —-ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ளது– தக்ஷ ப்ரஜாபதியின்  பெண் மூர்த்தி என்பவள்–அவள், தர்ம ப்ரஜாபதியைத் திருமணம் செய்துகொண்டு, பகவானின் ஸ்வரூபமாக, நர நாராயணர்களைப் பெற்றெடுத்தாள் .நாராயண ரிஷி, பத்ரிகாஸ்ரமத்தில் நாரதர் முதலானவர்களுக்கு , ஆத்ம ஸ்வரூபமான கர்ம  யோகத்தை உபதேசித்தார் இவரால், தன்னுடைய இந்த்ர பதவி பறிபோய் விடுமோ என்று இந்த்ரன் அஞ்சி,இவருடைய தபஸ்ஸைக் கெடுக்க, அப்ஸரஸ்களை அனுப்ப, நாராயண  ரிஷியோ,தனக்குப் பணிவிடை செய்யும் அதிரூப சுந்தரிகளை  அவர்களுக்குக்  காண்பித்து, இவர்களில் உங்களுக்கு ஒத்த அழகுள்ளவர் இருப்பின், நீங்கள் அவளை இந்த்ர லோகத்துக்கு அழைத்துச் செல்லலாம் என்று சொல்ல, அவர்களும் ,மிகவும்  வேண்டி, ஊர்வசியை அழைத்துச் சென்று ,இந்த்ரனிடம் சொல்ல, இந்திரன் மிகவும் நடுங்கியதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது. நரநாராயணர்கள்தான், திருவஷ்டாக்ஷரம், அதன் பொருள், மஹிமை, அநுஷ்டானமுறை இவற்றையெல்லாம் வெளியிட்டவர்கள் .( பத்ரிகாஸ்ரமத்தைப் பற்றியும் , நரநாராயணர்களைப்பற்றியும் திவ்ய தேச வைபவம்என்கிற புத்தகத்தில் சொல்லியிருக்கிறேன் .)

கீதாசார்யன் —– குருக்ஷேத்ர யுத்தத்தில், அர்ஜுனனுக்கு, பகவான் அருளிய உபதேசங்கள்—18 அத்தியாயங்கள்– பகவத் கீதை என்கிற  மிக உயர்ந்த, தத்வ விளக்கம்–இதனாலும் பகவான் ஆசார்யன்


  6. தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீ பீஷ்மர் முதலான ஞானாதிகரையிட்டு மூதலிப்பித்தும்   வ்யாக்யானம்——– தான் அருளிய எல்லாவற்றையும், பீஷ்மர் முதலான ஞானிகள் மூலமாக வெளியில்  பரவச்  செய்தான்


  7. பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம்  என்கிறபடியே அடியிலே தான் அருளிச் செய்த பகவஞ்சாஸ்த்ரத்தை ப்ராம்மணை : க்ஷத்ரியை : வைச்யம்ச்சூத்ரச்ச க்ருதலக்ஷணை : அர்ச்சனீயச்ச சேவ்யச்ச நித்யயுக்தை: ஸவகர்மஸு  ஸாத்வதம்  விதிமஸ்தாய கீத சங்கர்ஷிணேன  ய : த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே  ஆதெள  கலியுகஸ்ய  ச  என்கிறபடியே அவஸரங்களிலே ஆவிஷ்கரித்தும்

வ்யாக்யானம்–விளக்கம்–
பாஞ்சராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணாஸ்வயம் —-மஹாபாரதம்—சாந்தி பர்வம்– பகவான் நாராயணனே, பாஞ்சராத்ர சாஸ்த்ரம் முழுவதையும் , சொன்னான்.
இந்த சாஸ்த்ரம் மறைந்தபோது, த்வாபர யுகத்தின் முடிவில், கலியுகத் தொடக்கத்தில்அவனே மறுபடியும் உபதேசித்தான். நான்கு வர்ணத்தவர்களும், அவரவர்களுக்கு உரிய முறையில், பகவானுக்குக் கைங்கர்யம் செய்ய, ஸங்கர்ஷணாகி ,உபதேசித்தான். இவர்கள், தத்தம் ஆசார்யனிடம் பஞ்ச சம்ஸ்காரம்செய்துகொண்டு, தன்னை ஆராதிக்குமாறு செய்தான்.

8. பூர்வேத்பன்னேஷு  பூதேஷு  தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய   குருதே யத் ஸமீகிதமச்யுத :  என்கிறபடியே பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி , மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி ஸர்வோபஜீயமான தண்ணீராக உமிழுமா போலே  வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும்

வ்யாக்யானம்—விளக்கம்–
பூர்வேத்பன்னேஷு  பூதேஷு  தேஷு தேஷு கலௌ ப்ரபு : அனுப்ரவிச்ய   குருதே
யத் ஸமீகிதமச்யுத —-விஷ்ணு தர்மம் சொல்கிறது— கலியுகத்தில் அந்தந்த ஜீவன்களுக்குள் புகுந்து, அச்யுதன், தனக்கு விருப்பமானத்தைச் செய்கிறான், என்பதற்கு ஏற்ப, பராங்குச (நம்மாழ்வார் முதலாக )பரகால ( திருமங்கை ஆழ்வார்) என்கிற பத்து அவதாரங்களை எடுத்தான். ( விசிஷ்டாத்வைதம் –என்கிற தலைப்பில், பகவானின் பத்து அவதாரங்களும் ஆழ்வார்களின் பத்து அவதாரங்களில் பொருந்தும் மேன்மையை, விரிவாக உபன்யாஸமாகச்  சொல்லி இருக்கிறேன் ) இப்படி, பகவான் செய்த உபகாரம் என்ன ? மேகங்கள், சமுத்ரத்திலிருந்து, நீரை உறிஞ்சி எடுத்து, அந்த நீரை, எல்ல ஜீவன்களுக்கும் மழையாகப் பொழியுமாப்போலே ,வேதங்களின் சாரத்தை எல்லாம் எடுத்து, எல்லோருக்கும் எளிதில் புரியும்படி, நாலாயிர திவ்ய ப்ரபந்தமாகத் தமிழில் அளித்தான்.     9. இப்படி  தான் ப்ரவர்த்திப்பித்த ஸத்பதத்துக்கு   ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால், உபரோதம் வாராமைக்காக , ஏ  ஸாக்ஷாத்    நாராயணோ தேவ : க்ருத்வா மர்த்யமயீம்  தனும் மக்னான் உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ என்றும் வ்யாக்யானம்—–விளக்கம் — இப்படியாகத் தான்  ஸங்கல்பித்த –ஏற்படுத்திய நல்ல பாதைக்கு, நாராயணனை, மற்ற பரிவார தெய்வங்களோடுச் சமமாக நினைப்பவர்கள்,வேதநெறிப்படையாக  வாழ்க்கையை வாழாத- பாஷாண்டிகள்,நாராயணனைத் தாழ்வாக எண்ணுபவர்கள், —இவர்களைப்போல் உள்ளவர்களால், இடைஞ்சல்–தடங்கல் ஏற்படாதிருக்க, பகவான் செய்தது என்னவெனில் ?
ஏ சாக்ஷாத்   நாராயணோ தேவ :க்ருத்வா மர்த்யமயீம்  தனும் மக்னான்
 
உத்தரதே லோகான் காருண்யாஸ்சாஸ்த்ர பாணினா ஏ ——— (ஜயாக்ய  ஸம்ஹிதை )  நாராயணன்மனுஷ்ய சரீரத்தை எடுத்து, ஸம்ஸாரத்தில் மூழ்கி இருக்கிற ஜீவாத்மாக்களை, சாஸ்த்ரம் என்கிற கையினால், கருணையுடன், தானே , கரையேற்றுகிறான்.       10. பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்யஸேவிதமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான் . இத்தைக் கணிசித்து : வ்யாக்யானம்—-விளக்கம் —– ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து , என்னுள்ளே பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து, போதில்கமல வன்னெஞ்சம் புகுந்து என்சென்னித்திடரில் பாதவிலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே                                        ————பெரியாழ்வார் திருமொழி அவன் பகவான், நாராயணன்—பீதாம்பரதாரி—என்னுள்ளே வந்தான்—எப்படி ? பிரமகுருவாக வந்தான் —வந்து ஹ்ருதயத்திலே புகுந்தான்— புகுந்தவன் , என் சிரஸ்ஸில் திருவடியை வைத்து , அது  அழியாத அடையாளமாக ஆயிற்று— என்று இப்படி விவரிக்கிறார்—பகவான், ஆசார்ய ரூபமாக வந்து, ப்ரஹ்மோபதேசம் செய்கிறானாம்.  
கலௌ . கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா : கசித் க்வசித் மகாபாகா த்ரமிடேஷு  ச பூரிச : தாம்ரபர்ணீ நதீ யத்ர  க்ருதமாலா பயகிதீ காவேரீ ச மகாபாகா ப்ரதீசீ ச மகாநதீ என்று மகரிஷி அருளிச் செய்தான்
வ்யாக்யானம் —விளக்கம்   ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது—- இந்தக் கலியுகத்தில், நாராயணனையே உபாயமாகவும் உபேயமாகவும்
கொண்ட விஷ்ணு பக்தர்கள், தமிழ் பேசும் பிரதேசத்தில் ,தாமிரவருணி, வைகை,பாலாறு, காவேரி, மேற்கே கடலில் கலக்கும் மகாநதி (பெரியாறு ) இந்த நதிகளின் கரைகளில் பிறப்பார்கள். ஸ்ரீ உடையவர் வரை ஆசார்ய பரம்பரை   இவ்வாசார்யர்களில் , ஈச்வரமுனிகள் பிள்ளை நாதமுனிகள் . இவர் ந்யாயதத்துவமென்கிற சாஸ்த்ரமும் யோக ரஹஸ்யமும் அருளிச் செய்தார். இவருக்கு ஸ்ரீ மதுரகவிகள் முதலாக ஸம்ப்ரதாயபரம்பரையாலும்,  திருவாய்மொழி முகத்தாலும் யோகதசையிலே ஸாக்ஷாத்க்ருதராயும் நம்மாழ்வார் ஆசார்யரானார் . நாதமுனிகள் பிள்ளை ஈச்வர பட்டாழ்வான் . ஈச்வரப்பட்டாழ்வான் பிள்ளை ஆளவந்தார்.  இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஆகமப்ராமாண்யமும் புருஷநிர்ணயமும் , ஆத்ம ஸித்தி–ஈச்வர ஸித்தி –ஸம்வித் ஸித்தி என்கிற ஸித்தித்ரயமும்    ,   கீதார்த்த ஸங்க்ரஹமும்   ,சதுச்லோகியுமாக எட்டு.ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான் . என்னாச்சான் பிள்ளைகள் நால்வர். இவர்களில் ஒருவர் பிள்ளையப்பர்.பிள்ளையப்பர்  பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப்   பெண்பிள்ளைகள் இருவர். வ்யாக்யானம்—-விளக்கம்—- கலியுகத்தில் ,நதிதீரங்களில் ,ஆசார்யர்கள் ,அவதரிப்பார் என்று ஸ்ரீமத் பாகவதம் சொன்னதை ,மேற்கோள் காட்டியவர், இப்போது ஆசார்யர்களைப் பற்றிக் கூறுகிறார். முதலில் ஸ்ரீமந் நாதமுனிகள் . இவர் ஈச்வரமுனியின் குமாரர். இவர், ந்யாயதத்வம், யோகரஹஸ்யம் என்கிற இரண்டு பொக்கிஷ க்ரந்தங்களை அருளினார். இவருக்கு, மதுரகவி ஆழ்வாரின் உபதேச பரம்பரையும், திருவாய்மொழியை உபதேசமாகப் பெற்று, யோகத்தில் இழிந்ததால், நேரிடையாகவே ஸ்ரீ நம்மாழ்வாரை ,ஆசார்யனாகப் பெரும் பாக்யத்தைப் பெற்றார். நாதமுனிகள் குமாரர் ஈச்வர பட்டாழ்வான். இவருடைய பிள்ளை ஆளவந்தார். ஸ்ரீ ஆளவந்தார் அருளியவை–ஆகமப்ரமாண்யம்,புருஷ நிர்ணயம், ஆத்ம ஸித்தி ,ஈச்வர ஸித்தி ,ஸம்வித் ஸித்தி , கீதார்த்த ஸங்க்ரஹம் , ஸ்தோத்ர ரத்னம் சதுஸ்லோகி –ஆகிய எட்டு.   பிள்ளை , சொட்டை நம்பி. சொட்டை நம்பியின் பிள்ளை  எண்ணாச்சான்.இவரது பிள்ளைகள்  நால்வர். அதில்  ஒருவரான பிள்ளையப்பரின் குமாரர் தோழப்பர். இவருக்கு இரண்டு  பெண்கள்.

நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள்,உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன்,
உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான்
, வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் என்பர் .உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார், மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் , ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை.  மணக்கால் நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர் .அவர்களாகிறார், ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத்
திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி வ்யாக்யானம்—விளக்கம்—
ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள்  என்றால், அவரது திருவடிகளைப் பற்றிய சிஷ்யர்கள் என்று பொருள்.   நாதமுனிகளை ஆச்ரயித்தவர்கள்–உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், உருப்பட்டூர் ஆச்சான்பிள்ளை,
நம்பிகருணாகரதாஸர் , ஏறுதிருவுடையார் , திருக்கண்ணமங்கையாண்டான் , வானமாதேவி ஆண்டான்,சோகத்தூர் ஆழ்வான் ஆகிய எண்மர் ( அடியோங்கள்–உருப்பட்டூர் ஆச்சான் வம்ஸம்  ) உய்யக்கொண்டாரை ஆச்ரயித்தவர்கள்—-மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளரையர்,சேட்டலூர் செண்டலங்காரர் , ஸ்ரீ புண்டரீக தாஸர் , உலகப் பெருமாள் நங்கை ஆகிய ஐவர் மணக்கால் நம்பியை ஆச்ரயித்தவர்கள்—-ஸ்ரீ ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன் , சிறுபுள்ளூர் ஆவுடைய பிள்ளை, ஆச்சி ஆகிய ஐவர்

ஆளவந்தார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் பதினைவர் .அவர்களாகிறார், பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான், சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர்

  வ்யாக்யானம்—-விளக்கம்–   நாதமுனிகள் திருப்பேரரான ஆளவந்தாரை -ஆச்ரயித்தவர்கள்—-பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார் , திருமலை நம்பி, ஈசாண்டான் , தெய்வவாரியாண்டான்,சிறியாண்டான் , திருமோகூரப்பன் ,திருமோகூர் நின்றார் , தெய்வப்பெருமாள், திருமங்கையாளியார் . பிள்ளை திருமாலிருஞ்சோலை தாஸர் , மாறனேர் நம்பி, ஆள்கொண்டி ஆகிய பதினைவர் . பெரியநம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் அறுவர். அவர்களாகிறார், எம்பெருமானார், மலைகுனிய நின்றார்,
 ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி வ்யாக்யானம்—-விளக்கம்–   பெரியநம்பிகளை ஆச்ரயித்தவர்கள்—-எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,மலைகுனிய நின்றார், ஆர்ய ஸ்ரீ சடகோப தாஸர் ,அணியரங்கத்தமுதனார் , திருவாய்க்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பிகள் ஆகிய அறுவர் .   எம்பெருமானார்  திருக்கோட்டியூர் நம்பி ஸ்ரீபாதத்திலே ரகஸ்யார்த்தங்களை சிக்ஷித்தார்.திருமாலையாண்டான் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழி கேட்டார்.ஆளவந்தாராழ்வார் ஸ்ரீபாதத்திலே திருவாய்மொழியும் ஓதி ஸ்தோத்ராதிகளும், அருளிச் செய்யும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார்.திருமலைநம்பி ஸ்ரீபாதத்திலே ஸ்ரீமத் ராமாயணம் கேட்டருளினார். இவர் அருளிச் செய்த ப்ரபந்தங்கள் ஸ்ரீபாஷ்யமும், தீபமும், ஸாரமும் , வேதார்த்த ஸங்க்ரஹமும் , ஸ்ரீ கீதாபாஷ்யமும் சிறிய கத்யமும், பெரிய கத்யமும் ஸ்ரீ வைகுண்ட கத்யமும் ,நித்யமும் ஆக ஒன்பது. இவர் ஸ்ரீபாதத்தில் ஆச்ரயித்த முதலிகளை, தம் தம் ஸம்ப்ரதாயப்படிகளிலே அறிந்து கொள்வது வ்யாக்யானம்—–விளக்கம் —
எம்பெருமானார் என்று கொண்டாடப்படுகிற ஸ்ரீ ராமாநுஜர் ,திருக்கோட்டியூர் நம்பிகளிடம் ரஹஸ்யார்த்தங்களையும் , திருமாலையாண்டானிடத்திலே திருவாய்மொழிஅர்த்தங்களையும்,கற்றார்.ஆளவந்தாராழ்வார் பக்கலில்  திருவாய்மொழியும்  , ஸ்தோத்ர ரத்னம், அருளிச் செயலும், கற்றார்.  திருமலை நம்பிகளிடம் , ஸ்ரீமத் ராமாயணத்தைக்  கேட்டார். இவர் அருளிய க்ரந்தங்கள் —— ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம் , வேதார்த்த ஸங்க்ரஹம் , கீதா பாஷ்யம், ஸ்ரீரங்க கத்யம் ( சிறிய  கத்யம் ), ஸரணாகதி கத்யம் ( பெரிய கத்யம் ), ஸ்ரீவைகுண்ட கத்யம்,நித்யம் ஆக ஒன்பது க்ரந்தங்கள் . எம்பெருமானாரின் சிஷ்யர்களை, அவரவர் ஸம்ப்ரதாயத்துக்கு ஏற்ப அறிந்துகொள்ளவேண்டும்.


ஆசார்ய பக்தி வேண்டும்; மந்த்ர அர்த்தங்களை மறைத்தலும் வேண்டும்   குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன  கோபயேத் அப்ரகாசப்ரகாசாப்யாம்  க்ஷீயதே ஸம்பதாயுஷீ    என்றார்கள் குருவை ஒருவன் ப்ரகாசிப்பிக்கிறதவும்   ஒருவன் ப்ரகாசிப்பியாதொழிகிறதுவும் குரு  பக்தியில் தாரதம்யத்தாலேயிறே .  பகவத் விஷயத்தில் போலே குருவிஷயத்திலும் பரையான பக்தியுடைவனுக்கு அபேக்ஷிதார்த்தங்கள்  எல்லாம் ப்ரகாசிக்கும் என்னுமிடம் கட —ஜாபாலாதி ச்ருதிகளிலும்
ஸஞ்சயாதி வ்ருத்தாந்தங்களிலும் ப்ரஸித்தம் . இங்ஙனல்லார்க்கு  இப்படி ஞான ஸம்பத்து உண்டாகாது என்னுமிடம் சிஷ்யர்களுடைய ஞானதாரதம்யத்தாலே  கண்டுகொள்வது. மிகவும் குணாதிகரனான சிஷ்யர்களுக்கும்  கடுக அத்யாத்ம விஷயங்களை ப்ரகாசிப்பியாதார்க்கு  நிஷ்ட்டை குலையாது என்னுமிடம் ரைக்வாதி வ்ருத்தாந்தங்களிலே ப்ரஸித்தம் .  பெற்றது குணமாக உபதேசித்தால் , சிஷ்ய பாபம்  குரோரபி  என்கையாலே ஆசார்யனுக்கு நிஷ்ட்டை குலையும்படியாமென்னுமிடம் , வருவது விசாரியாதே இந்த்ரனுக்கு  உபதேசித்துத் தானும் ப்ரஹ்மவித்யையை  மறந்து , தன் சிஷ்யனான நாரத பகவானை இட்டு  ஸர்வேச்வரன் உணர்த்துவிக்க வேண்டும்படியிருந்த  சதுர்முகன் பக்கலிலே கண்டுகொள்வது. இப்படி, அப்ரகாசப்ரகாசாப்யாம்  என்கிற இரண்டுக்கும் க்ஷீயதே ஸம்பதாயுஷீ  என்கிற பலங்களை ஒளசித்யத்தாலும் ப்ரமாண ப்ரஸித்தியாலும் க்ரமத்தாலே உதாகரித்தவித்தனை,  இரண்டிலும் இரண்டு அந்வயித்தாலும் வாக்யத்தில் வரும் விரோதம் இல்லை. ஆகையால், சர்வாவஸ்தையிலும் குருபக்தியின் பரீவாகமாக குருவை ப்ரகாசிப்பிக்கவும் மகாரத்னகர்ப்பமான மாணிக்கச் செப்புப்போலே இருக்கிற திருமந்த்ரத்தினுடைய சீர்மையும் தன் நிஷ்ட்டையும் குலையாமைக்காக சிலவான ப்ரயோஜனங்களைப் பற்ற சிஷ்யகுணபூதிம் இல்லாத சபலர்க்கு வெளியிடாதே , 
மந்த்ரத்தை மிகவும் சேமிக்கவும் ப்ராப்தம் . இவ்விடத்தில் குரு சப்தம் பரமகுருக்களுக்கும் உபலக்ஷணம்  ஸாமான்யமாகவுமாம் மந்த்ர சப்தம்   மந்த்ரார்த்தம்  முதலான ரகஸ்யங்களுக்கும் ப்ரதர்சனபரம் .  தான் இந்த ரகஸ்யங்களை அநுஸந்திக்கும்போதெல்லாம் ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கையும் விதிபலப்ராப்தம் . இவ்வாசார்யர்களுடைய அநுஸந்தானம் , ஸம்பாஷ்ய புண்யக்ருதோ  மனஸா த்யாயேத்  என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்

வ்யாக்யானம்——விளக்கம்—- சேஷ ஸம்ஹிதை கூறுகிறது. குரும் ப்ரகாசாயேத் தீமான் மந்த்ரம் யத்னேன  கோபயேத்
 
அப்ரகாசப்ரகாசாப்யாம்  க்ஷீயதே ஸம்பதாயுஷீ புத்திசாலியானவன் , தனது ஆசார்யனைப் பற்றிப் பிறரிடம்  புகழ்ந்து பேசவேண்டும். அவர் உபதேசித்த மந்த்ரங்களைப் பொக்கிஷம்போலப் பாதுகாக்க வேண்டும். இப்படியாக, ஆசார்யனின் பெருமையைப் பேசாமலும், மந்த்ரத்தைப் பாதுகாக்காமலும் இருந்தால், ஐச்வர்யம் குறையும்; ஆயுளும் குறையும். ஒரு சிஷ்யன், இப்படித் தன் குருவைப் புகழ்வதும் புகழாமலும் இருப்பதும், குருவிடம் அவன் வைத்துள்ள  அதிக  பக்தியும், குறைந்த பக்தியுமே  காரணமாகிறது.
 
பகவானிடம் எவ்வளவு பக்தியுடன் இருக்கிறானோஅதைப்போன்று ஆசார்யனிடமும் பக்தியோடு இருக்க வேண்டும். அப்போது எல்லா ஞானமும் வந்து சேரும் ; ஆசார்யன் உபதேசிக்காத அர்த்த விசேஷங்களும் ஆசார்யபக்தி பரிவாஹத்தால்  ஸ்புரிக்கும் என்று ச்வேதாச்வதரம் சொல்கிறது.
ஆத்ம விஷயமான ஞானம், இப்படிப் பக்தி உள்ளவனுக்கு ஏற்படும் என்று, ,கடோபநிஷத்தும் ,ஜாபால உபநிஷத்தும் கூறுகின்றன..சிஷ்யர்கள் மிக  குணவான்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஆசார்யன் தத்வங்கள் முழுவதையும் உபதேசிக்கவில்லையென்றாலும், ஆசார்யனுக்கு ,அதனால் எந்தக் குறையும் வராது. சாந்தோக்ய உபநிஷத்தில் ஜாபாலையின் குமாரன்–ஸத்யகாமனின் சரிதத்தை ஸ்வாமி தேசிகன் இங்கு உதாஹரிக்கிறார். ஜாபாலை என்கிற ஸ்திரீயின் குமாரன்–ஸத்யகாமன் . இவன், ப்ரஹ்மவித்யைக் கற்க ஆசார்யரை அணுகினான்  விவரம்  அடியேன் எழுதியுள்ள வேதோபாஸனாஎன்கிற நூலில் உள்ளது .அதன் விவரம் இதோ —                                    n\hlrfy g;uA;ktpj;ia !j;a fhkd; vd;fpw kAhp\papd; tuyhW brhy;yg;gLfpwJ. !j;a fhkd; Mrhh;aiuthpf;fg; nghtjw;F Kd;g[ jd; jhahhplk; nfhj;uj;jpd; bgaiuf; nfl;lhd;. nfhj;uk; vJbtd;W bjhpahJ vd;W brhd;d jhahh;/ Mrhh;adplj;jpy; vd; jhahh; #hghiy.ehd; !j;a fhkd; vd;W brhy;  vd;whs;. !j;a fhkd; bfsjk-Ahhpj;Ughjh; vd;fpw hp\paplk; brd;W   ,ijr;  brhy;y/  FUt[k;   ,tid m’;fPfhpj;J,isj;j 400 gRf;fis tsh;j;Jtur; brhd;dhh;. mtw;iw btF rpukg;gl;L gy tU\’;fs; tsh;j;J Mapuk; gRf;fshf;fpdhd;. mtw;wpy; xU fhis !j;a fhkDf;F g;ufhrth vd;fpw ghjj;ij cgnjrpj;J/mjw;F ehd;F mtat’;fs; vd;W Twp/ mf;dp cdf;F ,d;bdhU ghjj;ijr; brhy;Yk;;                   vd;W brhy;ypw;W. kWehs; !kpjhjhdk; bra;a[k; rkaj;jpy;/ mf;dp mde;jthd; vd;fpw ghjj;ija[k;/ mjd; ehd;F ghf’;fisa[k; cgnjrpj;jJ. Ak;!k; cdf;F _d;whtJ ghjj;ijr; brhy;Yk vd;wJ. kWehs; khiy mன்னத் ;jplk #;nahjp\;khd;    vd;fpw    ghjj;ija[k;/   mjd;    ehd;Fghf’;fisa[k; mwpe;jhd;. md;dk;/ kw;bwhU ghjj;ij ePh;g;gwit brhy;Yk; vd;wJ. mjw;fLj;j kWehs; khiy ePh;g;gwitaplk;Majdthd vd;fpw ghjj;ija[k;/ mjd; ghf’;fisa[k; mwpe;jhd;.,g;goahff; fw;W ed;F mwpe;j Mrhh;aidg; nghd;w nj#!;; Kfj;jpy; bjhpa Mapuk; khLfisa[k; Xl;of; bfhz;L Mrhh;ahplk; brd;whd;.  Mrhh;ah; ,tidg; ghh;j;J g;uA;kj;ij mwpe;jtdhf cd; Kfk; brhy;fpwJ.ahh; cdf;F brhd;dJ? vd;W nfl;f/!j;a fhkd; vy;yhtw;iwa[k; brhy;yp / ,Ue;jhYk; Mrhh;a Kfkhf cgnjrk; bra;antz;Lkvd;W g;uhh;j;jpf;f kdk; re;njh\k; mile;J Mrhh;aDk; cgnjrk; bra;jhh;.(,uz;L cgnjrKk;-mjhtJ vy;yhk; xd;whf ,Ue;jd).  cgnfh!y tpj;ia. ,e;j !j;a fhkdpd; rp\;;ad; cgnfh!yd;. gd;dpuz;L tUlk; Mrhh;adpd;itjPf mf;dpiag; ghJfhj;J te;jhd;. Mrhh;ad; ,tDld; ,Ue;jkw;w rp\;ah;fSf;F cgnjrk; Kjypatw;iw Koj;jth; cgnfh!yDf;Fxd;Wk; brhy;ytpy;iy. Mrhh;aUila kidtp g;uhh;j;;jpj;Jk; vJt[k; brhy;yhky;/ Mrhh;ad; btspa{h; brd;W tpl;lhh;. gd;dpuz;L  tU\ fhyk; ghJfhj;J te;j mf;dp ,tdplk; fUiz bfhz;Lfk vd;gJ ekJ Rfk;/ tk; vd;gJ ,e;j;hpak; my;yJ thdk; nghd;wJ vd;Wk;/g;uhzd; g;UA;kk;/ fk;-g;UA;kk; (tk;) vd;W cgnjrpj;jhd;. gpwF mf;dp tpj;iaiacgnjrpj;J ,jw;F nky; cdf;F Mrhh;ad; cgnjrpg;ghh; vd;W mf;dp brhd;dhd;. btspa{h; brd;wpUe;j Mrhh;ad; jpUk;gp te;jhh;. rp\;adpd; Kfj;ijg;   ghh;j;jhh;.                      g;uA;k nj#!; g;ufhrpf;fpwnj? ahh; cgnjrpj;jJ? vd;W nfl;lhh;. cgnfh!yd; ele;j cz;ikiar; brhd;dhd;. Mrhh;ad; re;njh\kile;Jnkw;bfhz;L cgnjrk; bra;jhh;. mjhtJ Mj;khthdJ j;nufj;jpy; ,Ug;gJ.Mj;khtpw;F mHpt[ fpilahJ. ,ij ed;F bjhpe;J bfhz;lhy; ghgk;Mj;khtpy; xl;lhJ vd;W Muk;gpj;J gytw;iwa[k; cgnjrpj;jhh;.   ,t;thW cgh!dk; bra;jtd; KKB@thf ,Ug;gjhy; ,td; kuzkile;j gpwF,tDf;F bra;antz;oa rl’;Ffs; bra;ahtpl;lhYk;,td; Mj;kh mh;r;rpuhjp khh;f;fk; vd;fpw njtahd khh;f;fj;jhny g;uA;kj;jplk; nrh;f;fg;gLthd;.,jd; gpwF Jf;fk; vd;gnj fpilahJ  vd;W cgnjrpj;jhh;. ஜானஸ்ருதி  ஒரு அரசன். இவன் பலமுறை வேண்டிக்கொண்ட பிறகே , பலபரீக்ஷைகள் செய்து,   இவனுக்கு, உபதேசித்தார். ரைக்வர் .இதுவே ரைக்வ வித்யை.      – iuf;;t tpj;ia   ,J !k;th;f;f   tpj;ia   vd;Wk;brhy;yg;gLk;. #her;Ujp vd;gth; kpft[k; jh;kp\;lh;. tPLfs;/ rj;jpu‘;fs; fl;o vy;yh ,l’;fspYk;md;djhdk; Kjypa vy;yh jhd’;fisa[k; r;uj;ijnahL bra;gth;.xU ehs; ,utpy; mth; jd;Dila khspifapd; nky; khoapy; gLj;jpUf;Fk;nghJ/mtUf;F nkny  Mfhaj;jpy; md;d’;fs; gwe;jd. mjpy; Kd;nd nghFk; md;dj;ij/ gpd;nd bry;Yk; md;dk;/ cdf;F fz;zpy;iyah ? jh;kp\;ldhd#her;Uj gLj;jpUf;f mtd; nkyhf gwe;J nghfpwhna? vd;W nfl;lJ. Kd;nd bry;Yk; md;dk;/ tz;oa[ld; vg;nghJk; trp;f;Fk; iuf;utuh ,th;? vd;W nfl;lJ. mJ ahh;? tz;onahL ,Uf;Fk; iuf;th; vd;W/ gpd;dhy; bry;Yk; md;dk; nfl;lJ. Njhl;l’;fspy; f;Ujk  vd;fpw Ml;lk; bjhpe;jth; vy;yh Ml;l’;fSk; bjhpe;jjw;Fr; rkk;.ரைf;th; vy;yhk; mwpe;jth;. me;j bgUik ,e;j #her;;Ujpf;F VJ? vd;W Kd;nd bry;Yk; md;dk; brhy;ypw;W.,ijf; nfl;Lf; bfhz;oUe;j #her;Ujp /fhiyapy; vGe;J iuf;th; v’;fpUf;fpwhh;? vd;W mwpa vy;yh gf;f’;fspYk;Vtyh;fis mDg;gpdhh;. gy ngh; fhztpy;iy vd;W jpUk;gp tu/xUtd; kl;Lk; Xhplj;jpy; tz;oapd; moapy; rpu’;Ffisr; brhwpe;J bfhz;L mkh;e;jpUf;fpwhh vd;W brhd;dhh;. #her;Ujp gRf;fs;/ Fjpiufs; ,tw;iw Vuhskhff; bfhz;Lngha; iuf;thplk; bfhLj;J mogzpe;J njtjhf;”hdk; cgnjrpf;f g;uhh;j;jpj;jhh;.  iuf;th; kWj;jhh;.kWgoa[k;Vuhskhdசெல்வங்களையும் மற்றும்  தன் புத்ரியையும் கொடுத்துஉபதேசிக்குமாறு ப்ரார்த்தித்தார் ,g;nghJ    kdk;     fdpe;J/     iuf;th;   cgnjrpj;jJjhd; iuf;ttpj;ia.   ஆனால்  சிஷ்யனை முழுவதும் அப்படியே உடனே ஏற்றுக்கொண்டு உபதேசித்தால் அந்தத் தகுதியில்லா சிஷ்யன் செய்த பாபங்கள் ஆசார்யனுக்குச் சேர்கின்றன. இந்த்ரன் தனக்குச் சிஷ்யனாகக் கிடைத்தான்  என்று அதைப் பெருமையாக நினைத்து, ப்ரஹ்மாஅவனிடம் சிஷ்ய லக்ஷணம் இருக்கிறதா என்பதை ஆராயாமல், உபதேசித்தார். இதன் பலன் அவருக்கு, பாஞ்சராத்ர அர்த்தங்கள் மறந்து போயின. பிறகு நாரதர், அவற்றை ப்ரஹ்மாவுக்கு நினைவு படுத்தினார். பிறகு, ப்ரஹ்மா, பாஞ்சராத்ரத்தை சிவன் முதலியோருக்கு உபதேசித்தார்—என்று, ப்ருஹந்நாரதீய வாக்கியமாக , ஸாரஸங்க்ரஹத்தில் சொல்லப்படுகிறது. ஸஞ்ஜய விஷயம்—-இவர், தன்  ஆசார்யரான வ்யாஸ ரிஷியிடம் ,எம்பெருமானிடம் உள்ள பக்தியைப்போலப் பக்தி கொண்டவர். அதனாலேயே, ஸ்ரீ க்ருஷ்ணன் ,குருக்ஷேத்ரத்தில் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை மட்டுமல்லாது,போர்க்களத்தில் நடந்தவற்றையெல்லாம் வ்யாஸ மஹரிஷியின் அருளாலே காணப்பெற்று த்ருதாஷ்டிரனுக்கு  சொன்னவர். அரசே—நான் ஆசார்யனின் பெருமையைப் பரப்பாமல் /புகழாமல் இருந்தாலும், நேர்மாறான வழியில் மந்த்ரத்தை வெளியே சொன்னாலும், செல்வம் மங்கும்;ஆயுள் குறையும். ஒருவனுக்கு ஆசார்ய பக்தி மிகவும்  அவச்யம்; சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய லக்ஷணங்கள் இல்லாதவனுக்கு, ஆசார்யன் உபதேசிக்கலாகாது; சிஷ்யன் மந்த்ரங்களை ஜெபிக்கும்போது, குருபரம்பரையை அவச்யம் த்யானிக்கவேண்டும் .\ ஸம்பாஷ்ய புண்யக்ருதோ  மனஸா த்யாயேத்  என்கிறபடியே ப்ரதிஷிசம்பாஷணத்துக்கு ப்ராயச்சித்தமுமாம்——கௌதம தர்ம ஸுத்ரம் -சொல்கிறது- பேசக்கூடாதவர்களிடம் பேச நேர்ந்துவிட்டால்,அப்போது புண்யம் செய்த ஆசார்யர்களை  மனதில் த்யானிக்கவேண்டும்.   என் உயிர் தந்து அளித்தவரைச் சரணம் புக்கி          யான் அடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப் பின் அருளால் பெரும்பூதூர் வந்த வள்ளல்         பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி நன்னெறியை அவர்க்கு உரைத்த உய்யக்கொண்டார்         நாதமுனி சடகோபன் சேனைநாதன் இன் அமுதத் திருமகள்        என்றிவரை முன்னிட்டு   எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே வ்யாக்யானம் —விளக்கம் இந்த ஆத்மா, எம்பெருமானுக்கு சேஷன்என்கிற ஞானத்தைக் கொடுத்து, ஆத்மாவைக் காப்பாற்றிய என் ஆசார்யனை சரணம் என்று அடைந்துஅவரது ஆசார்யர்களை வரிசைக் க்ரமமாக நமஸ்கரித்து, பின்பு கருணையுடன் ஸ்ரீ பெரும்பூதூரில் அவதரித்த வள்ளலான ஸ்ரீ பாஷ்யகாரர் , பெரியநம்பி ஆசார்யன், ஆளவந்தாராகிய ஆசார்யன் , மணக்கால்நம்பி என்கிற ஆசார்யன், ப்ரபத்தி மார்க்கத்தை மணக்கால் நம்பிக்கு உபதேசித்த உய்யக்கொண்டார், அவரது ஆசார்யன் நாதமுனிகள், அவரது ஆசார்யன் சடகோபன் என்கிற ஸ்ரீ நம்மாழ்வார், பிறகு ஸ்ரீ விஷ்வக் ஸேனர் ,இனிமையான அமுதம் போன்ற பெரியபிராட்டியார், இவர்களை முற்பட நமஸ்கரித்து, எம்பெருமானின் திருவடிகளை அடைகின்றேன் ஏதே மஹ்யம்  அபோட மன்மத  ஸார  உன்மாதாய நாதாதய : த்ரய்யந்த  ப்ரதிநந்தனீய  விவித உதந்தா : ஸ்வதந்தாமிஹ | ஸ்ரத்தாதவ்ய சரண்ய  தம்பதி  தயா திவ்யாபகா  வ்யாபகா : ஸ்பர்த்தா  விப்லவ  விப்ரலம்ப  பதவீ  வைதேஸிகா தேஸிகா : || வ்யாக்யானம்—விளக்கம் வேதாந்தங்கள் கொண்டாடும்படியான தூய்மையான சரிதம் உடையவர்களும் , கல்யாணகுணங்கள் நிறைந்தவர்களும்  , திவ்ய தம்பதிகளின் கருணை என்னும் கங்கா ப்ரவாஹத்தைநம்மிடம் பரவும்படி செய்தவர்களும்,வஞ்சித்தல்,போட்டி இவற்றுக்கெல்லாம் எதிராக உள்ளவர்களும், சரணம் என்று அடைவதற்கு ஹேதுவாக இருப்பவர்களும் இப்படிப்பட்ட  இவர்கள்,  (மேற்சொன்ன ஆசார்யர்கள்)மன்மதன்  பிடியிலிருந்து என்னை விலக்கி , பரமபதத்தை அடைந்து, ஆனந்தமடைய , இந்த ஆசார்யர்கள் மூலமாகக் கிட்டும்படி அநுக்ரஹம் செய்ய வேண்டும் . ஹ்ருத்யா ஹ்ருத்பத்ம ஸிம்ஹாஸநரஸிக —  ஹயக்ரீவ ஹேஷோர் மிகோஷ—  க்ஷிப்தப்ரத்யர்த்தி த்ருப்திர்ஜயதி  பஹுகுணா பங்க்திரஸ்மத்குரூணாம்  |  திக்ஸௌதாபத்தஜைத்ரத்வஜபட பவந — ஸ்பாதிநிர்த்தூததத்தத்  — ஸித்தாந்தஸ்தோமதூலஸ்த பகவிகமந — வ்யக்த ஸத்வர்த்த நீகா   || வ்யாக்யானம்—-விளக்கம் ஸ்ரீ  ஹயக்ரீவன் , நமது ஆசார்யர்களின் ஹ்ருதயங்களில் வீற்றிருந்து, நமது உடையவர் சித்தாந்தத்தை  எதிர்ப்பவர்களை,அவர்களின் கர்வத்தை  அடக்க உதவுகிறான்.இப்படிப்பட்ட ஆசார்யர்களின் புகழ் , திசைகள்தோறும் உள்ள வெற்றித் தூண்களின்மீது கட்டப்பட்டுள்ளது.அந்தத் தூண்களில் உள்ள கொடிகள், மற்றவரின் வாதங்களை பஞ்சுக் கொத்துக்களைக் காற்று விரட்டுமாப்போலே விரட்டித்த தள்ளுகின்றன. விமரிசையாக இருக்கிற ,நல்மார்க்கதர்ஸிகளான நமது ஆசார்யர்களின் வரிசை இப்படியாக மேன்மையுற்று விளங்குகிறது.   ஆரணநூல் வழிச்செவ்வை அழித்திடும் ஐதுகர்க்கு  ஓர் வாரணமாயவர் வாதக்கதலிகள்  மாய்த்த பிரான் என்றநகீர்த்தி இராமாநுசமுனி  இன்னுரைசேர் சீரணி சிந்தையினோம் சிந்தியோம்  இனித்தீவினையே வ்யாக்யானம்—-விளக்கம் வேதங்களின்உட்கருத்தை   விளக்கும் நூல் ப்ரஹ்மஸுத்ரம் ”. அது கூறும் உண்மையான வழியை ,தவறான வாதங்களை சொல்லிப் பலரும் அழித்தபோது, அவற்றையெல்லாம்,வாழைத் தோப்பை  நாசம் செய்யும் ஒப்பற்ற யானையைப் போல , உபகாரகர் , உலகுக்கு பொருத்தமான அலங்காரமான சிறந்த புகழை உடைய இராமாநுச முனி என்னும் ஸ்ரீ பாஷ்யகாரர் இனிமையான தன்னுடைய ஸ்ரீ ஸூக்திகளால்  சாய்த்தார்.ஸ்ரீ பாஷ்யகாரரின் இன்சொற்களிலும் அவரது சிறந்த குணங்களிலும் எங்கள் மனம் முழுதும் ஈடுபட்டுள்ளது . இனி நாங்கள், வேறு  சாஸ்த்ரங்களையும்கர்மாக்களையும் ,தீயச்  செயல்களையும் மனதால்கூட நினைக்கமாட்டோம் . நீளவந்தின்று விதிவகையால்  நினைவொன்றிய நாம் மீள வந்தின்னும்    வினையுடம்பொன்றி விழுந்துழலாது ஆள வந்தாரென வென்று   அருள்தந்து விளங்கிய சீர் ஆளவந்தாரடியோம்  படியோம்        இனி அல்வழக்கே வ்யாக்யானம்—-விளக்கம் நாம்நீண்ட நெடுங்காலமாக சம்ஸாரப் பிடியில் சிக்கி   இருக்கிறோம்.இந்தப் பிறவிக்குப் பிறகும் கர்மவினையின் காரணமாக ,வேறொருப் பிறவியை எடுத்து அல்லல்படாமல், நம்மைக்காக்க ,ஆளவந்தார் அவதரித்தார்.அவர் எதிர்வாதம் செய்பவர்களை வென்று, கருணை புரிந்தார்  , அத்தகு கல்யாணகுணங்களை உடைய ஆளவந்தாருக்குத் தாஸரான நாம், இனிமேலும் ஸத்தில்லாத –அஸத்தான சாஸ்த்ரங்களைப் படிக்கமாட்டோம் . காளம் வலம்புரியன்ன நற்காதலடியவர்க்குத் தாளம் வழங்கித் தமிழ்மறை  இன்னிசை தந்த வள்ளல் மூளும் தவநெறி மூட்டிய நாதமுனி கழலே நாளும் தொழுதெழுவோம் நமக்கார்நிகர் நானிலத்தே வ்யாக்யானம்—விளக்கம் திருச்ச்சின்னம் வாத்யம்போலும் ,வலம்புரிச் சங்குபோலும் நல்ல பக்திமான்களான கீழையகத்தாழ்வான் ,மேலையகத்தாழ்வான் ஆகிய இரண்டு சிஷ்யர்களுக்கு, தாள வித்யையைச் சொல்லிக்கொடுத்து, தமிழ்வேதமெனப் போற்றப்படும் திவ்யப்ரபந்தத்தின் இனிமையான கானத்தையும் உபதேசித்து, மஹா உதாரகுணவள்ளலும் யோகமார்க்கத்தை உலகில் பரவச் செய்தவருமான ஸ்ரீமந் நாதமுனிகளின் திருவடிகளைத் தினமும் ஸேவித்து வாழ்வோம் .  நான்கு வகையான இந்தப்பூமியில் நமக்குச் சமமானவர்  யார் உள்ளார்கள் ? எவருமில்லை !   ——————————————————————————————————-   சுருக்கம் மோக்ஷத்தில் விருப்பமுள்ள ஒவ்வொரு சேதனனும் /முமுக்ஷுவும் , தகுந்த ஒரு ஆசார்யனைப் பெறவேண்டும்.ஆசார்யர்களுக்கு எல்லாம்,, பரமாசார்யனான எம்பெருமான் வரை ,ஆசார்ய பரம்பரையை அநுஸந்திக்கவேண்டும் –இது சாஸ்த்ரம் விதிப்பது.எம்பெருமானே, முதல் ஆசார்யன்;அவனுக்கென்று ஓர் ஆசார்யனில்லை .ஜீவாத்மாக்களாகியநாம் சேதனர்கள் யாவரும் அவனுடைய குழந்தைகள்.நம்மைக் கடைத்தேற்றித் தம்மிடம் அழைத்துக்கொள்ள பற்பல முயற்சிகளை எடுத்துக்கொள்கிறான்.ப்ரஹ்மனைப்படைத்து , வேதங்களை உபதேசிக்கிறான் அப்படி  உபதேசித்த வேதங்களை,ப்ருஹ்மாவிடமிருந்து .அசுரர்கள் திருடிச் சென்றபோது எம்பெருமானே அவதாரமெடுத்துமீட்டுக்கொடுக்கிறான்.ப்ருஹ்மாவின் மூலமாக, சாஸ்த்ரங்களை உலகத்தாருக்குப் பிரசாரம் செய்கிறான்.ப்ருஹ்மாவின் புத்ரர்களான ஸநத்குமாரர் ,ஸநகர் ,ஸநந்தனர் ,ஸநாதனர் –இவர்களைக்கொண்டுநல்ல க்ரந்தங்களைப் படைக்குமாறு செய்கிறான்.நாரதர்,பராசரர்,ஸுகப்ரம்மம் ,ஸௌனகர் போன்ற மஹரிஷிகள் மூலமாக,வேதாந்தக் கருத்துக்கள் பரவி ,அவை நிலைத்து நிற்குமாறு செய்கிறான்.வ்யாஸர் முதலிய மஹரிஷிகளுக்குள் ஆவேசித்து,மஹாபாரதம், ப்ரஹ்மஸுத்ரம் –இவைகளைக் கொடுக்கிறான் .தானே, ஹம்ஸ ,மத்ஸ்ய ,ஹயக்ரீவ ,நரநாராயண , கீதாசார்ய , முதலான அவதாரங்கள் எடுத்து,தத்வ ,ஹித உபதேசங்களை அருளுகிறான் தான் அருளிய தத்வ ,ஹித உபதேசங்களை பீஷ்மர் போன்ற ஞானிகள் மூலமாக  செய்கிறான்.தன்னால் அருளப்பட்ட பாஞ்சராத்ரம் க்ருத யுகத்தில் மறைந்துவிடும்போது, தானே , அதைத்வாபர யுகா—கலியுக சந்தியில் மறுபடியும் உபதேசிக்கிறான் தானே, பத்து ஆழ்வார்களாக அவதாரமெடுத்து, வேதங்களின் சாரத்தை எடுத்து ப்ரபந்தங்களாகக் கொடுக்கிறான்.தானே காட்டிய நல்ல வழி, பிறமதங்களால் நசிந்துவிடாமல் இருக்க, பற்பல ஆசார்யர்களாக அவதரிக்கிறான் .  இப்படி ,நம்முடைய ஆசார்ய பரம்பரை என்பது எம்பெருமான் முதலாக, பெரிய பிராட்டியார் ,விஷ்வக்ஸேனர் ,நம்மாழ்வார்,நாதமுனிகள் ,உய்யக்கொண்டார், மணக்கால்நம்பி ,ஆளவந்தார்,பெரியநம்பி, ஸ்ரீராமாநுஜர் –வரையில் தொடருகிறது ஸ்ரீபாஷ்யகாரர் என்கிற உடையவருக்கு, பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி,திருமாளையாண்டான் ,ஆளவந்தாராழ்வார் ,திருமலைநம்பி –ஆக ஐந்து ஆசார்யர்கள் .(ஸ்ரீ உடையவருக்குப் பின்பு, ஆசார்ய பரம்பரை திருமடைப்பள்ளியாச்சான் ,கிடாம்பி ராமாநுஜப்பிள்ளான் , கிடாம்பி ரங்கராஜாசார்யர், அப்புள்ளார்,ஸ்வாமி தேசிகன் . ) ஒவ்வொரு  சிஷ்யனும், ஆசார்யனைப் ப்ரகாசிப்பிக்கவேண்டும் . ஆசார்யன் உபதேசித்த மந்த்ரங்களையும்,அவற்றின் அர்த்தங்களையும் ,ரஹஸ்யமாய் மனதில் வைத்துப் போற்றவேண்டும்.இவற்றைச் சொல்லத் தொடங்கும்போதெல்லாம், ஆசார்யபரம்பரையை அவச்யம் சொல்லவேண்டும். பேசக்கூடாத மனிதர்களிடம் பேசிவிடில் அதற்குப் ப்ராயச்சித்தமும் ஆசார்யபரம்பரையைத் த்யானிப்பதே .   அடியேனின் வ்யாக்யானம்—-தொடர்கிறது  இந்தக் குருபரம்பரா த்யானத்தில், ஆழ்வார்கள் அருளிய தமிழ்மாலைகளைத் தெளிய ஓதி, தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்   , மதுரகவிகள் காட்டும் தொல்வழியே நல்வழி என்றும் தெளிந்தோம் . இன்பத்தில் இறைஞ்சுதலில் —-பாசுரத்தில் ,எம்பெருமானிடம் ,நம்மாழ்வார்  ஈடுபட்ட பத்து அனுபவங்களைத் தெரிந்துகொண்டோம் . அதைப்போலவே, நம்மாழ்வாரிடம் ,மதுரகவிகள் ஈடுபட்ட ”கண்ணிநுண் சிறுத்தாம்பு—-”பாசுரங்களில், மதுரகவிகள்,ஸ்வாமி நம்மாழ்வாரைப் பற்றினார்.இந்தப் பாசுரங்களில் பத்து அனுபவங்களைத் தெரிந்துகொண்டோம். இவை ஆசார்ய பக்தியின் அவச்யத்தைச் சொல்கிறது. க்ஷத்ரபந்து,புண்டரீகன் வ்ருத்தாந்தங்களைப் பார்த்தோம்.எம்பெருமானே முதல் ஆசார்யன்  என்பதை,ஹம்ஸ , ஹயக்ரீவ நரநாராயண அவதாரங்களில் பார்த்தோம். இவன்தான் ”புருஷன்”. ”புரிசயனாத்  புருஷ : ”—எல்லாப் பதார்த்தங்களிலும் ,”பகவான்”இருந்தாலும் அவற்றின் குணதோஷங்கள் பகவானை ஒட்டுவதில்லை. ”பஹுதானாத்புருஷ :” —எல்லாவற்றையும் கொடுப்பவன்.நம்மால் நினைத்துப் பார்க்க முடியாதவற்றையும் வழங்கும் திறமை உள்ளவன் ”புராணத்வாத் புருஷ : ”–பழமையிலே ,புதுமையானவன்.  ஆதியும் இல்லை; அந்தமும் இல்லை. ”பூர்ணாவாத் புருஷ : ”—குறைவே இல்லாது, நிறைந்து விளங்குபவன் ( குறையொன்று மில்லாக் கோவிந்தன் ) ஆசார்ய பரம்பரையில் அடுத்து ,பெரிய பிராட்டியார் என்றும் பார்த்தோம்., ஞானம் , சக்தி,பலம், ஐச்வர்யம் வீர்யம் ,தேஜஸ், –ஆறு குணங்களும் ,-எம்பெருமானுக்கு-பகவானுக்கு –இருப்பதைப்போலவே தாயாருக்கு இயற்கையாகவே இருக்கிறது.  இருவருக்கும்,ஏற்றத்தாழ்வு இல்லை. பகவானும் ”சேஷீ ”.  பிராட்டியும் ”சேஷீ ”. ”பகம் ”  என்றால் ஆறு குணங்கள் –ஆறு முக்ய குணங்களை உடையவன் பகவான். அனந்தகல்யாணகுணங்களும் ,இந்த ஆறு குணங்களில் அடக்கம். குணம் உள்ளவன்—குணவான் தனம் உள்ளவன்–தனவான் பகம் –ஆறு குணங்களை உடையவன், பகவான். 1.ஞானம்—அளவில்லா அறிவு 2.சக்தி —ஆதார சக்தி—உலகங்களில்,எல்லாமும் அதன் அதன் இடத்தில் நிலை பெறுத்தும்படியான சக்தி 3.பலம் —சங்கல்ப மாத்ரத்திலேயே எல்லாவற்றையும் தாங்கும் பலம் 4.ஐச்வர்யம்—நித்ய விபூதி (வைகுண்டம் ), லீலா விபூதி ( எல்லா உலகங்கள் )  யாவும் சொந்தம் 5. வீர்யம்—உயர்ந்த பராக்ரமம் –எல்லாவற்றையும் அடக்கி ஆளுகின்ற ஆதார குணம் 6. தேஜஸ்–ஒளிப்பிழம்பு ஸ்ரீ என்கிற திருநாமம் பிராட்டியைச் சொல்லும். ”ஸ்ரீ ”—என்கிற பதத்துக்கு ”ஆறு அர்த்தங்கள் ” 1.நம்முடைய தோஷங்களைத் தீர்ப்பவள் 2.பகவானின் க்ருபை,நமக்குக் கிடைக்குமாறு செய்பவள். 3.நாம் ப்ரார்த்திப்பதை /நம் குறைகளைப் பொறுமையாகக் கேட்பவள். 4.நம் குறைகளை/ ப்ரார்த்தனைகளைப் பகவான் கேட்கும்படி செய்பவள். 5.பகவானுடைய சரணாரவிந்தத்தை ,எப்போதும் ஆச்ரயிப்பவள் 6.நாம் ஆச்ரயிக்கத் தயாராக இருந்து, நம்மை ரக்ஷிப்பவள் . அந்த ”ஸ்ரீ ” என்கிற திருநாமத்தையே தன்னுடைய திருநாமத்துக்கு முன்பாகச் சேர்த்துக்கொண்டு,பகவான் பெருமைப்படுகிறான். ”ஸ்ரீயபதி ”  என்பதில்  பெருமை .ஸ்ரீயத்வத்தைப் பார்த்தால்,  பகவானைப்போல,பிராட்டிக்கும்  ,எல்லாம் உள்ளது என்றாலும், பகவானைத் திருத்தும் சக்தி பிராட்டிக்கே உண்டு. அதுதான் ”புருஷகாரத்வம் ”. பகவான் ,பிராட்டியை விட்டுப் பரிபாலனம் செய்வதோ , பிராட்டிபகவானைவிட்டுப் பரிபாலனம் செய்வதோ இல்லை. இவள்,  தானே விரும்பி ,பகவானுக்கு சேஷனாகிறாள் .நித்ய விபூதி ,லீலா விபூதி எல்லாவற்றிலும் பகவானுடன் சேர்ந்து ”சேஷீ ” ஆகிறாள். இப்படி மிதுனமாக, இரட்டையாக ஸேவை சாதிக்கிற –திவ்ய தம்பதிகள் –ஆசார்யர்கள் -பிறகு- விஷ்வக்ஸேனர்  என்கிற ”சேனை முதலியார்” இவருக்குப் பிறகு, இந்நிலவுலகில்,ஸ்ரீ சடகோபன் என்கிற நம்மாழ்வார்  ஆசார்யன் .இவர் ஆழ்வார் கோஷ்டியிலும்  ஆசார்ய கோஷ்டியிலும்   வருகிறார். பிறகு ஸ்ரீமந் நாதமுனிகள், ஈஸ்வரமுனி , , ஸ்ரீ உய்யக்கொண்டார் என்கிற புண்டரீகாக்ஷர் ,ஸ்ரீ குருகைக்காவலப்பன், ஸ்ரீ மணக்கால் நம்பி, ஸ்ரீ ஆளவந்தார்,திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், பெரிய நம்பிகள்,திருக்கச்சி நம்பிகள்,மாறனேரி நம்பி, கூரத்தாழ்வான்,ஸ்ரீ  ராமானுஜர் ,குருகேசர்,எங்களாழ்வான், நடாதூர் அம்மாள், கிடாம்பு அப்புள்ளார், ஸ்வாமி தேசிகன் —– (மிக முக்கியமான ஆசார்யர்களின்  திருநாமங்கள் ) இந்த ஆசார்ய பரம்பரை ,பல்கிப் பெருகியுள்ளது   ——————-ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தில் ,”ஸ்ரீ குருபரம்பரா ஸாரம் ”பூர்த்தி ——  கவிதார்க்கிக  ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே | ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம :  ||    
About the Author

Leave A Response